Pages

Friday, October 15, 2021

மகிஷாசுர வதைப் படலம் பாடலாக இளையராஜா இசையில் பாடகி M.R.விஜயா

இசைஞானி இளையராஜா அளித்த பாடல்களில் ஒவ்வொரு பண்டிகைக்கும் , சிறல்பு தினங்களுக்கும் தனித்துவமான பாடல்களும் சிறப்பாக இடம்பிடித்திருக்கின்றன. குறித்த தினங்கள் வரும்போதெல்லாம் வானொலி ஊடகங்கள் இவற்றை ஒலிபரப்பிச் சிறப்பிப்பர். 

தற்போது நிகழ்ந்து வரும் நவராத்திரி காலத்தில் "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ" என்ற பாடலைப் பகிராத வானொலி அரிது எனலாம். 

"பத்ரகாளி" திரைப்படத்துக்காக பாடகி எம்.ஆர் விஜயா குழுவினர் பாடிய "ஆனந்த பைரவி அகிலாண்ட நாயகி" பாடல் தனியே சக்தியைப் போற்றித் துதிக்கும் பாடலாக மட்டுமன்றி இந்தப் பாடலில் நவராத்திரியோடு ஒட்டிய விஜயதசமியின் உட்கருத்தைப் பகிரும் "மகிஷாசுர வதம்" வில்லுப்பாட்டு வடிவில் பாடலோடு இனிமையாகப் பொருந்தி விளங்குகின்றது. வெறும் 3 நிமிடங்கள் 45 விநாடிகள் அமையும் இந்தப் பாடலில் இரத்தினச் சுருக்கமாக இந்த நிகழ்வை அழகிய பாடலாக்கியிருக்கின்றார் இசைஞானி இளையராஜா.

https://www.youtube.com/watch?v=d7AT4GOLjnA

கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் சாஸ்திரிய இசைப்பாடகி எம்.ஆர்.விஜயா குழுவினரின் குரலினிமையும், இசைஞானி இளையராஜாவின் இசை வார்ப்பில் அழகாக வந்திருக்கின்றது.

எம்.ஆர்.விஜயா அவர்கள் சாஸ்திரிய இசை போன்றே திரையிசையிலும் செழுமையான பங்களிப்பை வழங்கியிருக்கின்றார். பக்திப் படங்களில் அதிலும் அம்மனுக்கான பாடல்கள் இவருக்குச் சேர்ந்திருப்பது கொடுப்பினை.

டி.ஆர்.பாப்பா இசையில் “மறுபிறவி” படத்தில் இவர் பாடிய

“ஏடி பூங்கொடி ஏனிந்தப் பார்வை”

https://www.youtube.com/watch?v=Cs0F8zK4tDE

 பாடலை இவர் என்று அறியாமலேயே ரசித்துக் கேட்ட பசுமை நிறைந்த காலங்கள் 

வி.குமார் இசையில் “கட்டிலா தொட்டிலா” படத்தில்

அம்மா அப்பா சண்டையிலே

https://www.youtube.com/watch?v=IBz237DNq_0

குன்னக்குடி வைத்ய நாதன் இசையில் 

“அன்னை அபிராமி படத்தில்

நாக தெய்வமே

https://www.youtube.com/watch?v=ab1Qhybmsy4

திங்கள் முடி சூடும் மலை

https://www.youtube.com/watch?v=zmtRUfVuVQ0

 “திருமலை தென்குமரி” படத்தில்

மதுரை அரசாளும் மீனாட்சி

https://www.youtube.com/watch?v=jmUw-2dHemM

“ராஜராஜசோழன்” படத்தில்

“மாதென்னைப் படைத்தான்”

https://www.youtube.com/watch?v=CDNkV8yYNEg

தெய்வம் படத்தில்

“வருவாண்டி தருவாண்டி”

https://www.youtube.com/watch?v=PlOKFsEtkmw

அகத்தியர் படத்தில்

“தலைவா தவப்புதல்வா”

https://www.youtube.com/watch?v=xch9lq_VNxw

டி.கே.ராமமூர்த்தி இசையில்

சக்தி லீலை படத்தில்

உறங்கக் கூடாது கண்ணே

https://www.youtube.com/watch?v=4ZayiE3wgys

கே.வி.மகாதேவன் இசையில்

“குறத்தி மகன்” படத்தில் “சீனா கூனா” 

என்று கூட்டுப் பாடல்களிலும் பாடிப் பரிணமித்திருக்கின்றார்.

அவருக்கு தனியான ஃபேஸ்புக் கணக்கும் இங்கே https://www.facebook.com/M.R.Vijaya கிடைக்கின்றது. 

"ஆனந்த பைரவி அகிலாண்ட நாயகி 

அருள் சார்ந்த திருச்சபையில் வீற்றிருந்தாள்"

http://www.youtube.com/watch?v=gjEyT0lG5BM&sns=em


0 comments: