Pages

Monday, August 2, 2021

இசையமைப்பாளர் V.தட்சணாமூர்த்தி நினைவில் எட்டு ஆண்டுகள்

தொண்ணூறுகளின் இறுதியில் பிரபலமாக இருந்த சன் டிவி "சப்தஸ்வரங்கள்" பாடற் போட்டி நிகழ்ச்சியின் வழியாகத் தான் V.தட்சணாமூர்த்தி என்ற இசையமைப்பாளரை அறிந்து கொண்டேன். அதற்கு முன்னர் அவரின் இசையில் வெளிவந்த ஓரிரு தமிழ்ப்படங்களில் குறிப்பாக "நந்தா என் நிலா" https://www.youtube.com/watch?v=YycTcCH9rPk  என்ற பாடலை இலங்கை வானொலி மூச்சு விடாமல் முன்னூறு தடவைக்கு மேல் அலுக்க அலுக்கப் போட்ட போதெல்லாம் கூட இந்த இசையமைப்பாளர் குறித்த தேடல் இருந்திருக்கவில்லை. 

எழுபதுகளின் இறுதியிலே வி.குமார், விஜயபாஸ்கர், ஷியாம் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் வந்த பல நல்ல பாடல்களை சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்தவையாக இருக்கும் என்று அதிகம் மெனக்கடவில்லை. அந்த வகையில் வி.தட்சணாமூர்த்தி அவர்களை சுவாமிகள் என்று விளித்து அவரின் பெருமைகளை சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரமணன் சிலாகித்தபோதுதான் அவர் மேல் வெளிச்சம் பட்டது எனக்கு. தமிழ்த்திரையுலகில் இரண்டு தட்சணாமூர்த்திகள் இருந்திருக்கிறார்கள், ஒருவர் எஸ்.தட்சணாமூர்த்தி இவர் அலிபாபாவும் 40 திருடர்களும்" போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர், பின்னவர் தான் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள். 

"நந்தா என் நிலா" படத்தில் வந்த பாடலான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய "நந்தா என் நிலா பாடலை விடவும் என்னை அதிகம் கவர்ந்ததென்னவோ ஜெயச்சந்திரன், டி.கே. கலா பாடியிருந்த "ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தேன்" என்ற பாடல் தான். அன்றைய சனிக்கிழமை இரவுப்பொழுதில் அதிகாலை ஒரு மணியைத் தொடும் போது வானொலி நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் என் தனிமையை விரட்டிப் பல தடவை சொந்தம் கொண்டாடிய பாடல் அது.

வானொலியின் பிறந்த நாள் வாழ்த்துப்பாடல்களில் எழுதப்படாத ஒப்பந்தமாக அமைந்து போன பாடல்களில் ஒன்று "நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க" 

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது திரைப்படத்துக்காக வி.தட்சணாமூர்த்தி இசையில் வந்த அந்தப் பாடலோடு அதே படத்தில் வந்த "ஆண்டவன் இல்லா உலகமிது" 

https://www.youtube.com/watch?v=h1yXp01-VVY பாடலும் அப்போதைய இலங்கை வானொலி ஒலிபரப்பால் பிரபலமான பாடல்களில் ஒன்று.

மீண்டும் தொலைக்காட்சி வாயிலாகவே இன்னொரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருந்தது V.தட்சணாமூர்த்தி அவர்களின் கேரள சினிமாவுக்கான பணி. கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் ஐம்பது ஆண்டுகள் திரையுலகில் நிறைவாக்கியதை ஏஷியா நெட் தொலைக்காட்சி கொண்டாடியபோது, வி.தட்சணாமூர்த்திக்கான சிறப்பு கெளரவத்தையும் அவர் முன்னிலையிலேயே வழங்கியிருந்தார்கள். அப்போது கேட்ட "சந்த்ரிகையில் அலியுன்னு சந்த்ரகாந்தம்" https://www.youtube.com/watch?v=Dbhmm0vLDEY என்ற பாடலை (பி.லீலாவுடன் இணைந்து கே.ஜேசுதாஸ்) யூடியூபின் வழியாகக் கேட்டுப் பரவசம் கொண்டேன்.

இசைஞானி இளையராஜாவின் குருநாதர்களில் ஒருவர் இந்த தட்சணாமூர்த்தி. எம்.எஸ்.வியோடு இணைந்தது போலவே V.தட்சணாமூர்த்தியோடு இணைந்து இளையராஜா மலையாளத்தில் இசையமைத்த படம் “காவேரி”

இப்பேர்ப்பட்ட இசையமைப்பாளர் V.தட்சணாமூர்த்தி இசையில் நந்தா என் நிலா திரைப்படம் உருவான போது “ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்” https://www.youtube.com/watch?v=Nd8waZR6zUU என்ற ஜோடிப் பாடலை ஜெயச்சந்திரனும், T.K.கலாவும் பாடியிருக்கிறார்கள்.

ஜெயச்சந்திரனைப் பொறுத்தவரை அவரின் ஆரம்ப காலத்தில் அரவணைத்து வளர்த்த மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் போன்றே அப்போது மலையாளத்தின் உச்ச இசையமைப்பாளராக விளங்கிய V.தட்சணாமூர்த்தி அவர்களின் பார்வை பட்டு மலையாளத்தில் மட்டுமன்றித் தமிழிலும் “நந்தா என் நிலா” வழியாகப் பாடும் பேறு கிட்டியிருக்கிறது.

“ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்” பாடலின் வரிகளை விடுத்து அந்தப் பாடல் கொண்டிருக்கும் சந்தத்தை மட்டும் ஒரு முறை மனதில் மீட்டில் பாருங்கள். ஒரு வீச்சுக்குள் (range) நின்று மேலும் கீழுமாக ஜாலம் புரியும் அற்புதமான சாகித்தியம் அது. ஆண், பெண் பாடகருக்கான சங்கதியும் ஒரே மாதிரி இருக்கும். அது போலவே தேர்ந்தெடுத்த இந்தப் பாடகர்களும் கொஞ்சமும் தடம் மாறாமல் அதே போலக் கொடுத்திருப்பார்கள். ஆனால் T.K.கலா தன் முத்திரை உச்ச ஸ்தாயி வரை போய் வர, ஜெயச்சந்திரனோ அதிக கஷ்டப்படாமல் தன் எல்லையில் நின்று அடித்து ஆடுவார்.

மரகத வீணை படத்தில் "சுதா மாதுர்ய" https://www.youtube.com/watch?v=ad110ow5w3Y பாடலை எஸ்.ஜானகியுடன் ராஜா பாட வைத்தார்.

மலையாளத் திரைப்பட உலகின் மகோன்னதமான இசையமைப்பாளராகப் போற்றப்படுகின்றார்.
இசையமைப்பாளர் வி.தட்சணாமூர்த்தி அவர்கள் குறித்து ஜனம் மலையாளத் தொலைக்காட்சித் தளம் பகிர்ந்த இடுகையை நன்றியோடு மொழியாக்கம் செய்து இங்கே பகிர்கின்றேன்.

வி.தட்சிணாமூர்த்தி மலையாளிகளின் மனதில் தேன் சேர்த்த மேதை. சுவாமி என்று பிரபலமாக அறியப்பட்ட சுவாமி, தூய இசையின் பேரரசர். ஆன்மிகம் நிறைந்த சுவாமியின் முழு உடலும் வாழ்க்கையும் இசை என்று சொல்லலாம். சாந்தம் மற்றும் பிரகாசத்தின் அந்த முகம் பணிவு மற்றும் பக்திக்கு ஒத்ததாக இருந்தது. எத்தனை கலைஞர்கள் சுவாமி கையைப் பிடித்துக் கொண்டனர், மேலும், எத்தனை படைப்புகள் அந்த படைப்பு வாழ்க்கையால் அழியாதவை?

அதன் அர்த்தத்தை இழக்காமல் கவிதைத் தரத்தை இசையில் முழுமையாக இணைக்கும் சுவாமியின் திறன் எப்போதும் வித்தியாசமானது. இசையில் இந்த பிரபுக்கள் சுவாமிக்கு தூய இசையை நேசிப்பவர்களை எப்போதும் ஈர்க்கும் முக்கிய நல்லொழுக்கங்களில் ஒன்றாகும். வசனங்களில் உள்ள வாழ்க்கையை உறுதிப்படுத்தும் இசை, மெல்லிசைகளை வெளிச்சம் போடும் திறன், எழுதப்பட்ட வரிகளில் உள்ள குறிப்புகளை அவர் எளிதாகக் கண்டுபிடிப்பது, இதெல்லாம் சுவாமிக்கு நெருக்கமானவர்களுக்கு எப்போதும் ஆச்சரியமாகவும் விவாதமாகவும் இருந்தது.

டிசம்பர் 9, 1919 இல் ஆலப்புழாவில் பிறந்த வி. தட்சிணாமூர்த்திக்கு அவரது தாயார் இசை கற்றுக் கொடுத்தார். சிறு வயதிலிருந்தே, சுவாமியின் இசை அனுபவம் தியாகராஜசாமியின் படைப்புகள் உட்பட அறிவியல் அடிப்படையைக் கொண்டிருந்தது. ஸ்வாமி தனது 12 வது வயதில் முதன்முதலில் அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணசுவாமிக்கு தனது குரலை அர்ப்பணித்து தனது இசை அறிமுகத்தை செய்தார். இசையின் மீதான அவரது அடக்கமுடியாத ஆர்வம் அவரை 10 ஆம் வகுப்பில் பட்டம் பெற்ற பிறகு ஒரு வழக்கமான இசை பக்தராக ஆக்கியது. கான கந்தர்வ கேஜே யேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜோசப் நடித்த நல்ல தங்க திரைப்படத்திற்கு இசையமைத்து சுவாமி திரையுலகில் அறிமுகமானார். யேசுதாஸ், அவரது மகன் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மகள் அமேயா ஆகியோர் சுவாமியின் பாடல்களைப் பாடும் அதிர்ஷ்டசாலிகள். இதனால் பெரிய பக்தர் தலைமுறைகளின் சுவாமி மற்றும் குரு ஆனார்.

ஸ்ரீகுமரன் தம்பியின் பல மெல்லிசைப் பாடல்களை மலையாளிகளின் எப்போதும் பிடித்தமானதாக ஆக்கியது சுவாமியின் மாயம்தான்.

சிறந்த இசை இயக்குனருக்கான மாநில அரசின் திரைப்பட விருது, ஜேசி டேனியல் விருது, சங்கீத சரஸ்வதி விருது மற்றும் சுவாதி திருநாள் விருது உட்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார். இவை அனைத்திற்கும் மேலாக, சுவாமி இசை பிரியர்களின் இதயங்களில் ஒரு இடத்தைப் பெற்றார்.

தொண்ணூற்றி மூன்று வயதில், சென்னையில் உள்ள மயிலாப்பூரில், சுவாமி இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வரை தூய இசையின் பக்தராக இருந்தார்.

கானா பிரபா


0 comments: