Pages

Thursday, May 8, 2008

சிறப்பு நேயர் "கயல்விழி முத்துலெட்சுமி"


கடந்த வாரம் கண்ண(னின்) தாசன் கண்ணபிரான் ரவி சங்கர் கலவையாக ஐந்து பாட்டுக் கேட்டுவிட்டுப் போனார். அவர் பக்திமார்க்கமாகத் தான் பாடலுக்குப் போவார்னு நினைச்சவங்க வாயில் மண் மன்னிக்கவும் அவல் ;-) தொடர்ந்து உங்கள் விருப்பத் தேர்வுகள் ஐந்தைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பற்றி உங்கள் பாணியில் எழுதி kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் உங்கள் விருப்பத் தேர்வுகளும் இடம்பெறக்காத்திருக்கின்றன. நீங்கள் பதிவராக இருக்க வேண்டிய அவசியமில்லை, பதிவுலக வாசகராகவும் இருக்கலாம்.


இதோ இந்த வாரச்சுற்றுக்குப் போவோம். இந்த வார றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக வலம் வருபவர் "கயல்விழி முத்துலட்சுமி". கடந்த 2006 இல் தான் பதிவுலகிற்கு வந்தாலும் வகை வகையான பதிவு விருந்து கொடுத்து தொடர்ந்தும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றார்.
சிறு முயற்சி என்பது இவரின் தனித்துவமான வலைப்திவாகும். கூடவே தேன் கிண்ணம், சாப்பிட வாங்க போன்ற கூட்டு வலைப்பதிவுகளிலும் இடம்பிடித்தாலும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய இவரின் இன்னொரு பங்கு வலைச்சரத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி.
வலைச்சரம் என்னும் கூட்டு வலைப்பதிவில் ஒரு தேக்கம் களைந்து சமீப காலமாக தொடர்ந்து தேர்ந்தெடுத்த சகவலைப்பதிவர்களை ஒழுங்கமைத்து இப்பதிவில் எழுத வைப்பது இவரின் சிறப்பான பணிகளில் ஒன்று. இவரின் பதிவுகளிலேயே மிகவும் பிடித்தது "எம்.பி.த்ரி மை எம்.பி.த்ரி" காரணம் தொழில்நுட்ப விஷயங்களை இலாகவமாக இவர் தந்திருந்த விதம்.

தொடர்ந்து கயல்விழி முத்துலட்சுமி தன் முத்தான ஐந்து தேர்வுகள் குறித்து என்ன சொல்கிறார், கேட்போமா?


பாட்டு பாட்டு ன்னு படிப்பைக்கூட கவனிக்காம பாட்டு கேட்கும் பழக்கம் சின்னவயசில் இருந்தே இருக்கிறது.

ரேடியோவை அணைக்காம ராத்திரி பாட்டை கேட்டுகிட்டே தூங்கி அப்பா வந்து பாத்து அணைப்பது கூட உண்டு. டிவியில் கூட படங்களை விட பாட்டு நிகழ்ச்சி வரும் நிகழ்ச்சிகள் தான் பிடிக்கும்.. முன்பு etc ஒரு சேனல் வந்துது இந்தி பாட்டு மட்டும் பாடும் .. அதே ஓடும் சில நேரம். தமிழ்நாடு வந்தா டிவியில் எப்ஃஎம் போடறாங்களே அதுவோ இல்லாட்டி சன்ம்யூசிக்கோ தான் போட்டுப்பாப்பேன் அந்த அளவு பாட்டு தான் பிடிக்கும். இப்படி இருக்கும் போது அஞ்சு பாட்டுன்னா எதை சொல்றது எதை விடறது கஷ்டம் தான் இருந்தாலும் முயற்சி செய்யறேன்..

"அன்புள்ள மான்விழியே"

" மெதுவான இசை , அழகான அந்த கண்களோடு ஜமுனா உதட்டை சுழித்து " ஆசையில் ஒர் கடிதம் அதை கைகளில் எழுதவில்லை இரு கண்களில் எழுதி வந்தேன் " பெரிய கண்ணை அங்கயும் இங்கயும் உருட்டி பாட்டை கண்களால் நாட்டியம் ஆடி பாடுவதும் என்று தனி அழகு..
"

நலம் நலம் தானே நீ இருந்தால் சுகம் சுகம் தானே நினைவிருந்தால் " ரசித்து கேட்கலாம் ரசித்து பார்க்கலாம்




"அழகிய கண்ணே உறவுகள் நீயே"

.. அஸ்வினி ...சாந்தமான அந்த முகமும் சரி அந்த பாட்டின் இசையும் சரி மனசை கொள்ளை யடிக்கும்..
"

சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே" ஆகா சிறுமி அஞ்சு வின் சிரிப்பை விட்டுட்டேனே... அதையும் சேர்த்துக்கோங்க..




"பூவிலே மேடை நான் போடவா"
... ஜெயச்சந்திரன் எனக்குபிடித்த பாடகர் அந்த குரலில் ஒரு மென்மை இருப்பது போல தோன்றும் ..".பூவிதழ் போல முல்லை என் கிள்ளை " சின்ன தாலாட்டு ..




"பூங்கதவே தாள் திறவாய்"

ஒன்னும் சொல்றதுக்கில்ல இசை தான் கிறக்குமே... என்ன பாட்டு என்ன பாட்டு.. அதுல தீபனும் உமாவும் வேற உருகி இருப்பாங்க பாட்டுல .... ""ஆஹா ஹா ஆனந்தம் '' பாட்டுலயே சொல்றாங்க பாருங்க...




"உலவும் தென்றல் காற்றினிலே"
இந்தப்பாட்டு கேட்கும் போதே நாமும் படகுல உக்காந்து போற மாதிரியே இருக்கும்...


"அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே .." நாயகன் பாட

"உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே"

.. நாயகி புகழ...
பதிலுக்கு அவரு

"இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே " ன்னு மடக்க
"தெளிந்த நீரைப்போல தூயக்காதல் கொண்டோம் நாம்" ன்னு நாயகி பாட
"களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார் "ன்னு மடக்க
"குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ" ன்னு .. கதாநாயகி மயங்க
உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே

... என்ன ஐஸ் பாருங்களேன்..
எத்தனை பேரு இந்த பாட்டை இந்த காலத்துலயும் ரசிப்பாங்கன்னு தெரியாது



..
இன்னும் எத்தனையோ பாட்டு ஹ்ம்

.. இன்னொரு முறை வாய்ப்பளிக்குமாறு கானாப்பிரபாவை கேட்டுக்கிறேன்..

--
கயல்விழி முத்துலெட்சுமி

34 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றிநன்றி என் வேண்டுகோளை ஏற்று கொஞ்ச நாள் கழித்து இதே மாதிரி இன்னொருமுறை வாய்ப்பளிக்கனும் சொல்லிட்டேன்.. :)

ஆயில்யன் said...

அந்த காலத்து பாடல்கள் நல்ல தேர்ந்தெடுப்பு!

வாழ்த்துக்கள்:))

M.Rishan Shareef said...

அன்பின் கயல்விழி,
தெரிவுகள் அருமை.எல்லாம் இடைக்காலப்பாடல்களாக அமைந்திருக்கிறது.

"பூங்கதவே தாழ்திறவாய்" எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.அடிக்கடி முணுமுணுத்துக்கிட்டே இருப்பேன்.

நன்றி சகோதரி.
பாடல்களைத் தந்த நண்பர் கானாபிரபாவுக்கும் நன்றிகள் !

SurveySan said...

//"அழகிய கண்ணே உறவுகள் நீயே" //

my all time favourite.

Thamiz Priyan said...

முத்தக்காவின் ரசனைகள் வித்தியாசமாக உள்ளன. 'உலவும் தென்றல் காற்று' பாட்டின் படகு பீலிங் எனக்கும் உண்டு......
(கண்ணாடியொடு இருப்பதைப் பார்த்தால் அது க.வி.மு.ல. அக்காவோ?)

சென்ஷி said...

அருமையான பாடல் தொகுப்பூ.....

நன்றி கானா மற்றும் முத்துக்கா :)))

தருமி said...

//ஜெயச்சந்திரன் எனக்குபிடித்த பாடகர் ..//
அதே! எஸ்.பி.பி. ஜேசுதாஸ் இருவர் குரலையும் சேர்த்தால் கிடைக்கும் குரல் என்பதாய் எனக்கு நினைப்பு. ஆனால் ஏனோ தமிழ்ப்பாடல்கள் அதிகமில்லை அவருக்கு.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பூவிலே மேடை பாட்ட இன்னைக்குத் தான் முதன் முதலா கேட்குறேன். நல்லா இருக்கு.

கோபிநாத் said...

வாங்க...முத்துக்கா..;)

\\வலைச்சரம் என்னும் கூட்டு வலைப்பதிவில் ஒரு தேக்கம் களைந்து சமீப காலமாக தொடர்ந்து தேர்ந்தெடுத்த சகவலைப்பதிவர்களை ஒழுங்கமைத்து இப்பதிவில் எழுத வைப்பது இவரின் சிறப்பான பணிகளில் ஒன்று.\\

சரியாக சொல்லியிருக்கிங்க தல ;))


\\இவரின் பதிவுகளிலேயே மிகவும் பிடித்தது "எம்.பி.த்ரி மை எம்.பி.த்ரி" காரணம் தொழில்நுட்ப விஷயங்களை இலாகவமாக இவர் தந்திருந்த விதம்.\\

கதைகள், கவிதைகள், குறிப்பாக சுற்றுலா தளங்களை பற்றிய பதிவுகள் தமிழ்மணத்தில் பிரபலம் ;)

கோபிநாத் said...

1. "அன்புள்ள மான்விழியே

சின்ன வயசுல ரேடியோவில் கேட்டது...நல்ல பாடல் ;)

2. "அழகிய கண்ணே உறவுகள் நீயே"

இந்த பாட்டை பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல...எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..;)

3. "பூவிலே மேடை நான் போடவா"

நல்ல பாடல்...ஜெயச்சந்திரன் குரல்..ஆகா...ஆகா..அருமை ;)


4. "பூங்கதவே தாள் திறவாய்"

இசை, வரிகள், காட்சி அமைப்பு என்று அனைத்தும் மிக அழகாக இருக்கும்...நீங்கள் சொல்வது போலவே குரல்களும் இனிமை ;)

5. உலவும் தென்றல் காற்றினிலே"

அக்கா...நீங்க எங்கையோ போயிட்டிங்க...;)))

\\இன்னொரு முறை வாய்ப்பளிக்குமாறு கானாப்பிரபாவை கேட்டுக்கிறேன்\\

எல்லோரும் வாய்ப்பளித்தமைக்கு நன்றின்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடுவோம்...ஆனா நீங்க தான் இன்னொரு முறை லைன்ல நிக்குறிங்க...;)))

முத்தான பாடல்களை கொடுத்த முத்துக்காவுக்கும், தல கானாவுக்கும் மிக்க நன்றி ;)))

CVR said...

சூப்பரு!!
எல்லாம் எனக்கும் பிடித்த பாடல்கள் அக்கா!!

"அன்புள்ள மான்விழியே"
எவ்வளவு அழகான பாட்டு!!
வரிகள்,ஆண் மட்டும் பெண் பாடகர்கள் இருவரும் இளமைக்கே உரித்தான ஒருவிதமான விளையாட்டுத்தனம் மற்றும் உற்சாகத்தோடு பாடுவது பாடலின் சிறப்பு!! இசை மற்றும் மெட்டு மென்மை மற்றும் வேகம் இரண்டும் கலந்த அற்புதமான கலவை..

"அழகிய கண்ணே உறவுகள் நீயே"
பல முறை கேட்டிருக்கிறேன்.அவ்வளவாக உருக வைக்காவிட்டாலும் மென்மையாக இதமளிக்கும் பாடல்.. :)

"பூவிலே மேடை நான் போடவா"
தொடக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசையே நம்மை இந்த பாட்டுக்கு தயார் செய்துவிடும்.பெரிதாக மெனக்கெடாமல் சாதாரணமாக பாடினாலே மெலடியாக அமைந்துவிடும் குரல் ஜெயச்சந்திரனுடையது.அவரின் குரலில் இன்னொரு அழகான மென்மையான பாடல் இது.

"பூங்கதவே தாள் திறவாய்"
க்ளாசிக் பாட்டு!!
தொடகத்தின் வயலின் இசையே இந்த பாடலின் உயர்ந்த தரத்தை பறைசாற்றிவிடும்.அப்படியே தெய்வீகமான வீணை இசையோடு தொடர்ந்து மென்மையான ஆண் குரலுக்கு பாடல் வந்து சேர்வதற்குள் மனம் அமைதியாகி இந்த பாடலை இரசிக்க தயாராகிவிடும்....

"உலவும் தென்றல் காற்றினிலே"
ஆகா!!
இவ்வளவு மேட்டரு இருக்கா இந்த பாட்டுல???
நீங்க விவரிச்ச அப்புறம்தான் இந்த பாட்டின் அழகை ரசிக்க முடிந்தது.
//எத்தனை பேரு இந்த பாட்டை இந்த காலத்துலயும் ரசிப்பாங்கன்னு தெரியாது ///
உங்களை மாதிரி இப்படி விம் பார் போட்டு வெளக்கரவங்க இருக்கற வரைக்கும் என்ன கவலை.. ;)

//.. இன்னொரு முறை வாய்ப்பளிக்குமாறு கானாப்பிரபாவை கேட்டுக்கிறேன்..
///
இன்னும் ஒரு வாய்ப்பு போதுமா??? ;)

கலக்கிட்டீங்க அக்கா!!
பாடல்கள் எல்லாம் சூப்பரு!
வாழ்த்துக்கள்! :-)

நிஜமா நல்லவன் said...

ஆஹா இந்தவாரம் கயல் அக்காவா? இருங்க பாட்டு எல்லாம் கேட்டுட்டு வர்றேன்.

நிஜமா நல்லவன் said...

பாடல் அனைத்தும் அருமை.
அழகிய கண்ணே பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடல்.
கயல் அக்காவிற்கும் கானா அண்ணனுக்கும் மிக்க நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆயில்யன்..

நன்றி ரிஷான்..ஆமாம் இடைக்காலப்பாடல்கள் தான் மனதை அதிகம் பாதிப்பதாகவும் பதிவதாகவும் இருக்கிறது.. :)

நன்றி சர்வேசன்

ஆமாம் தமிழ்பிரியன் அது அவங்க படம் தான்

நன்றி சென்ஷி

நன்றி தருமி ... கொஞ்சம் பாடினாலும் நல்ல பாடல்கள் ஜெயச்சந்திரனது பாடல்கள் இல்லையா..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரவிசங்கர் நீங்க கேட்டதில்லையா?நல்ல பாட்டு டிவியில் அதிகம் வராததால மறந்துருப்பீங்க படம் பாத்தா நினைவுக்குவரும் ரொம்ப சின்ன பாட்டு
-------------

விளக்கமான விமர்சனத்துக்கு நன்றி்கோபி கானாகிட்ட சொல்லி இன்னொரு வாய்ப்பு ம் வாங்கி கொடுக்க கூடிய தலைமை ரசிராச்சே நீங்க
-------
ரொம்ப நன்றி சிவி ஆர்.. விம் பார் போட்டு விளக்கிருக்கேனா.. சரி தான்.. வேணா அடுத்த வாய்ப்பில் இன்னும் பீதாம்பரி பவுடர் போட்டு பளபளன்னு விளக்கிடறேன்.. ஆமா எத்தனை வாய்ப்பு கிடைத்தாலு ம் செய்யறதுக்கு ஆசைதான்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிஜம்மா நல்லவன் ரொம்ப நன்றி அதுவும் நீங்க கயலக்கான்னு சொன்னதும் ஊரு நியாபகம் வந்துடுச்சு.. எல்லாரும் கயலம்மா ன்னு அம்மாவை சொல்லுவாங்க..என்னை கயலக்கான்னு சொல்லுவாங்க.. :)

G.Ragavan said...

ஆகா..இந்த வாரப் பாடல்கள் உங்களுடையனவா. என்னுடைய வாழ்த்துகள்.

அனைத்துமே அருமையான பாடல்கள். எல்லாமே எனக்கும் பிடித்த பாடல்கள்.

அன்புள்ள மான்விழியே என்று குறும்பூ பூக்கும் எளிய இனிய காதல் பாடல்.

நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சரமே

மஞ்சள் எப்போதும் நிலையானது.. மழை வந்தாலுமே கரையாதது...கவியரசர் வரிகளும் இசைஞானியின் இசையும்..எஸ்.ஜானகியின் குரலும் நம்மைப் புதுவுலகம் அழைத்துச் செல்கின்றன என்றால் மிகையில்லை.

ஜெயச்சந்திரன் எனக்கும் மிகவும் பிடித்த பாடகர். இவர் தமிழில் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை. ஆனால் தமிழில் இவர் பாடியது எல்லாமே சிறப்பான பாடல்கள். சமீபத்திய ஒரு தெய்வம் தந்த பூவே ஆகட்ட்டும்....பழைய வசந்தகால நதிகளிலே பாடல் ஆகட்டும். அவர் தனித்தன்மை கெடாமல் பாடியிருப்பார். இந்தப் பாடலும் எனக்குப் பிடிக்கும். பூவிலே மேடை நான் போடவா.. முடிக்கும் பொழுது இசையரசி சிறிது பாடுவார்கள். அதுவும் அருமை.

யாருக்குப் பிடிக்காது பூங்கதவு தாழ் திறக்க? உமாரமணனும் தீபன் சக்கரவர்த்தியும் அழகா பாடியிருப்பாங்க.

உலகவும் தென்றல் காற்றினிலே... ஓடமிதே.. நாம் மகிழ ஊஞ்சலாடுதே... கேக்கும் போதே ஊஞ்சல் ஆட்டுதல்ல. நல்ல பாட்டு.

இதே மாதிரி இன்னொரு வாய்ப்பு உங்களுக்குக் குடுக்கனும்னு நானும் பிரபா கிட்ட கேட்டுக்கிறேன்.

அருண் said...

Nice selection of songs. Well done both of you!

pudugaithendral said...

ஐய்யோ! நான் காலேல போட்ட பின்னூட்டம் என்னாச்சு. காணோமே? போயிந்தி! இட்ஸ் கான்! :(((((

MyFriend said...

ஐ.. அக்காவா? இவங்களுக்கு 5 பாட்டுங்கிற லிஸ்ட் பத்தாதே.. இவங்க லிஸ்ட்டு ரொம்ப நீளமாதானே இருக்கும்?

MyFriend said...

பாட்டெல்லாம் சூப்பர் செலக்ஷன்க்கா.

:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாட்டு பாட்டு ன்னு படிப்பைக்கூட கவனிக்காம பாட்டு கேட்கும் பழக்கம்//

யார் உங்கள திட்டுவா? யார் கிட்ட பாட்டு கேட்டுப்பீங்க முத்துலெட்சுமி அக்கா? :-))

அன்புள்ள மான்விழியே = இன்றும் கேட்கக் கேட்க மனமுருகும் பாட்டு!
அதுவும் சின்னச் சின்னச் சண்டைக்குப் பிறகு இந்தப் பாட்டைக் கேக்கணும்! சண்டை உடனே முடிவுக்கு வந்துடும்! :-)
TMSஐ விட சுசீலாம்மா பாடும் போது இன்னும் உருக்கம் இருக்கும்! ஏன்னா காதலி பாடும் வரிகள் அப்படி!

அவரு சாதாராணமா எழுதினேன்-னு சொன்னா, இவங்க என் கைகளில் எழுதவில்லை, இரு கண்களில் எழுதிவந்தேன்-ன்னு சொல்லி ஒரே சாய்ச்சா சாய்ச்சிருவாங்க!
நலம் நலம் தானா-ன்னு கேட்டா, நலம் நலம் தானே நீ இருந்தால்-ன்னு ஒரே அடி! கடைசீல வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா? வாட வைத்தது உண்மை அல்லவா?_ன்னு கேக்கும் போது...காதலன் சாரிடா செல்லம்-ன்னு பணிஞ்சே ஆகணும் முத்துலெட்சுமி அக்கா! :-)

அழகிய கண்ணே உறவுகள் நீயே = உம் அம்மா...பசங்க! நான் ஒன்னும் சொல்லலை-க்கா இந்தப் பாட்டு பத்தி!
மஞ்சள் என்றென்றும் நிலையானது, மழை வந்தாலுமே கலையாதது!

பூவிலே மேடை நான் போடவா = ஜெயச்சந்திரன் குரல் அப்படிக் குழையும் இந்தப் பாட்டுல! இதுல வரும் புல்லாங்குழல் ஒரு மயக்கம் என்றால், ஜெயச்சந்திரன் கடைசியா பின்னணி இசை எதுவுமே இல்லாம...முடிப்பாரு பாருங்க! அந்தக் கட்டம் அருமையிலும் அருமை!

அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி
அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி - இது அண்ணன்-தம்பி உறவுக்கும் தான்!

பூங்கதவே தாள் திறவாய் = இது இன்னிக்கும் கீபோர்ட், karoke-ன்னு எல்லாரும் ஈசியா முயற்சிக்கும் பாட்டு! மாயமளவகெளளை ராகம் என்பதால் absolutely song for beginners! Bass Violin பாட்டுல கலக்கல்!

உலவும் தென்றல் காற்றினிலே = இப்ப பாட்டை மறந்து போயி நீங்க விம் பார்-ல வெளக்கி வச்சதை எப்படி எங்க யூஸ் பண்ணலாம்-னு ரோசிச்சிக்கிட்டு இருக்கேன்கா!

அருமையான தெரிவுகள்!
காபி அண்ணாச்சி...அக்காவுக்கு ரெண்டாம் ஆட்டம் கொடுங்க ப்ளீஸ்! அப்படியே கொஞ்சம் எனக்கும்! (பக்கத்து இலைக்குப் பாயசம்! போன வாரம் சொல்லாம் விட்டுப் போன என் பாடல்கள்!) :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கண்ண(னின்) தாசன்//

அண்ணாச்சி இதுல உ.கு, நு.அ எல்லாம் ஒன்னுமில்லையே??

//அவர் பக்திமார்க்கமாகத் தான் பாடலுக்குப் போவார்னு நினைச்சவங்க வாயில் மண் மன்னிக்கவும் அவல் ;-//

நல்ல காலம் அவல்-ன்னு சொன்னீங்க! ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு ஆகி இருந்தாலும் அ-ல்-வ-ன்னு ஆயிருக்கும்! என்னாக்கா நான் சொல்லுறது? :-))

நிஜமா நல்லவன் said...

வணக்கம் KRS. நல்லா இருக்கீங்களா? பின்னூட்ட பதிவு நல்லா இருக்குங்க.

ரசிகன் said...

அருமையான பாடல் தொகுப்புக்கள் அக்கா.:)

ரசிகன் said...

கொஞ்சம் பழைய டைப் பாடல்களா இருந்தாலும்,கேற்க இனிமையாத்தான் இருக்கு:)

ரசிகன் said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...

நன்றிநன்றி என் வேண்டுகோளை ஏற்று கொஞ்ச நாள் கழித்து இதே மாதிரி இன்னொருமுறை வாய்ப்பளிக்கனும் சொல்லிட்டேன்.. :)//

ரெண்டாவது இன்னிங்க்ஸ்சா?.. கலக்குங்க அக்கா:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜிரா சிபாரிசுக்கும் பெரிய்ய்ய விமர்சனத்துக்கும் நன்றி நன்றி..:)
-------------------------
அருண் விஜய் ரொம்ப நன்றி
-------------------------
புதுகைத் தென்றல் என்னப்பா தேடிக்கிட்டிருக்கீங்களா ...சரி என்னதான் போட்டீங்க அதை சொல்லுங்களேன்...
-------------
மைபிரண்ட் ரொம்ப நல்லா புரிஞ்சு வைச்சிருக்க.. நன்றி
--------------------
கே .ஆர். எஸ் வேற யாருகிட்டங்க அம்மா கிட்டதான்.. அது என்னடி கணக்குபோடும்போதும் பாட்டு புரிஞ்சு படிக்கற மாதிரி தெரியலயேன்னு..

நிஜம்மா நல்லவன் சொன்னமாதிரி பின்னூட்ட பதிவு சூப்பர்..
--------------------------
ரசிகன் கொஞ்சம் பழய டைப் தான்.. ஆனா இலங்கை வானொலியோட வளர்ந்ததால இந்த கலந்த ரசனை வந்திருக்கும்.. ஏன்னா அதுல ரெண்டுத்தோட அருமையும் சொல்லி சொல்லி வழங்குவாங்களே....

தங்ஸ் said...

அழகிய கண்ணே - ஜானகியும்,ராஜாவும் கலக்கியிருப்பார்கள்
பூங்கதவே - ஆஹாஹா ஆனந்தம்
/*உலவும் தென்றல் காற்றினிலே"
இந்தப்பாட்டு கேட்கும் போதே நாமும் படகுல உக்காந்து போற மாதிரியே இருக்கும்*/

அய்யோ ஆமாங்க...

பூவிலே, அன்புள்ள மான்விழியே செலக்சனும் சூப்பர்..

கானா பிரபா & கயல்விழி முத்துலட்சுமி-க்கு நன்றி...

துளசி கோபால் said...

ஹைய்யோ...........

உலவும் தென்றல் எ(ச)ங்க காலத்துப் பாட்டாச்சே.....

அட்டகாசமான பாட்டு. இதுவும் வாராய் நீ வாராய்,
தேசுலாவுதே தேன் மலராலே

எல்லாம் மனசுலே மணை போட்டு உக்கார்ந்துருக்கு.

பூங்கதவே தாழ்திறவாய் அருமை.

ரசிச்சேன் ரசிச்சேன்.

வல்லிசிம்ஹன் said...

கயல்விழி முத்து,
என்ன ஒரு சாய்ஸ்பா.
அஸ்வினியின் முகமும் அந்தக் குழந்தைகளின் கபடமற்ற முகமும், எப்போ கேட்டாலும் நெஞ்சில் தொண்டையில் சிக்கிவிடும்.படமா அது. !!!!

அதே போல் மான்விழி.கடிதம் போடும் பாட்டு இனிமை. எங்கள் தாரக மந்திரப் பாடல் அது;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தங்க்ஸ் ரொம்ப நன்றி.. நீங்களும் அப்ப பாட்டைக்கேட்குஇம்
போது படகில் போவீங்களா..? :)

-------------

துளசி ஆம் அந்த தேசுலாவே தானே நம்ம ராதா
பதிவில்போட்டிருந்த இந்தி பாட்டு ?
--------------

வல்லி நிஜம் தான் பாவமா இருக்கும் அஸ்வினி
பாத்தா..

துளசி கோபால் said...

கயலு,

ராதா போட்டதுலே


முதல் பாட்டு இப்படித் தமிழில் வந்துச்சு.

ஆசை பொங்கும் அழகு ரூபம் ....


ரெண்டாவது.....

என் சிந்தை நோயும் தீருமா தீயன் சூழ்ச்சி மாறுமா
ஸ்நேகம் ஒன்று சேருமா......

விக்கல் எல்லாம் போட்டுப் பாடுவேன் நான்:-))))


தேசுலாவுதே வேற மெட்டு.
அதோட வரிகள்

http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=2599&start=0&postdays=0&postorder=asc&highlight=

பாட்டு ம்யூசிக் இண்டியாலே வரும்.
http://www.musicindiaonline.com/p/x/k4ygs5Wa3d.As1NMvHdW/

ஆ.கோகுலன் said...

மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற படத்தில் வரும் பாட்டின் முதல்வரியை பாடலின் ஒலியைமட்டும் கிரகித்து 'பேசுலாவுதே..' என்று அனுமானித்து அப்படியே பதிவிட்டிருந்தேன்.
ஆயினும் சரியான வடிவத்தையும் பாடல் வரிகளையும் அறிமுகப்படுத்திய திருமதி.துளசிகோபால் அவர்கட்கு நன்றி.

இச்சந்தர்ப்பத்தை அளித்த கயல்விழி முத்து லட்சுமி மற்றும் கானா பிரபா ஆகியோருக்கும் நன்றி. :)