கடந்த வாரம் ஷைலஜாவின் சிறப்பு வாரம் வந்து போனது. இந்த வாரம் வலம் வர இருப்பது குழந்தைகள் சிறப்பு பதிவு. இவர்களின் பெற்றோரும் கூட முந்திய சிறப்பு நேயர்களாக வந்து சிறப்பித்தவர்களே. புதுகைத் தென்றல் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர்களின் அம்மா மற்றும் தந்தை ஸ்ரீராம் ஆகியோரே அவர்களாவர். வலைப்பதிவில் பல குட்டிப் பதிவுகள் வலம் வரத்தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த வார சிறப்பு நேயர்களாக வரும் ஆஷிஷ் அம்ருதாவும் கூட ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள் என்ற பெயரில் சொந்த வலைப்பதிவு வைத்திருக்கின்றார்கள். ஆனால் பாருங்க பொதுவா குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் ஹோம் வேர்க் செய்ய சொன்னா அவங்க அப்பா/அம்மாவே செய்து கொடுத்து அனுப்புவது போல இந்தப் பதிவுகளின் பின்னணியில் இருக்கும் அந்த உதவிக்கரம் அம்மாவா, அப்பாவா? ஆஷிஷ் அம்ருதாவுக்கே வெளிச்சம் ;-)
ஆனாலும் என்ன குழந்தைகளுக்கான நல்ல வாசிப்புத் தீனி கொடுக்கும் பதிவுகள் பல இங்கே களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சரி, இனி ஆஷிஷ் அம்ருதா சொல்வதைக் கேட்போமா.
வணக்கம் மாமா,
நலமா?
எங்களுக்கு பிடித்தமான பாடல்களை இங்கே கொடுத்திருக்கோம்.
அதை சிறப்பு நேயர் விருப்பத்தில் கொடுக்க முடியுமா மாமா?
1. ராஜா சின்ன ரோஜா படம்
ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் போனானாம் - பாடல்
இந்தப் பாட்டு எங்களுக்கு மிகவும் பிடிக்கும். பாடலில் வரும் கதை,
தரும் மெசெஜ் அருமை.
"நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மை விளைந்தது.
தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது"
கார்ட்டுன் வடிவங்களுடன் ரஜினி அங்கிள்
நடித்திருப்பாங்க நல்லா இருக்கும்.எங்களுக்கு மிகவும்
பிடிக்கும்.
வீடியோவில் பார்க்க
2. சங்கர் குரு படத்திலிருந்து "சின்னச்சின்னப்பூவே கண்ணால் பாரு போதும்"
இந்தப்பாட்டை ஜானகி ஆண்ட்டி பாடி இருக்காங்களாமே.
சின்னக்குழந்தை மாதிரி ரொம்ப நல்லா இருக்கு.
இந்தப் பாட்டை யூட்யூபில் பாத்திருக்கோம். ரொம்ப பிடிக்கும்னு சொன்னது
அம்ருதா.
வீடியோவில் பார்க்க
3.கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்ருந்து
இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும்.
ஆஷிஷ், அம்ருதா ரெண்டு பேருக்கும் பிடிச்ச பாட்டு.
ஒரே குறும்பு... லூட்டி நல்லா இருக்கும்.
வீடியோவில் பார்க்க
4.அன்னை ஒர் ஆலயம் படத்தில்
"அப்பனே எங்கப்பனே பிள்ளையாரப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா"
பிடிக்கும்னு சொன்னது அஷிஷ்.
பாட்டு ரொம்ப பிடிக்கும்.
ரஜினி அங்கிள் யானையைப் பார்த்துவிடக்
கூடாதுன்னு
செய்யற கலாட்டா பார்க்க நல்லா இருக்கும்.
"அன்பு எனக்கு ரொம்ப இருக்கு,
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு"
இந்த வரி நல்லா இருக்கும்.
வீடியோவில் பார்க்க
5.அஞ்சலி படத்திலிருந்து "அஞ்சலி அஞ்சலி"
குட்டி பாப்பா சோ ஸ்வீட்.
இந்தப் படத்தில வர்ற பாட்டு எல்லாமே
சூப்பர் என்றாலும், இந்தப் பாட்டு சூப்பரோ
சூப்பர். அஞ்சலி பாப்பாக்கூட எல்லோரும்
டான்ஸ் ஆடறது நல்லா இருக்கும்.
வீடியோவில் பார்க்க
இது எங்க ரெண்டு பேருக்கும் பிடிக்கும்.
இவைதான் எங்களுக்கு பிடிச்ச பாடல்கள் மாமா.
மீண்டும் சந்திப்போம்.
நன்றி
அன்புடன்
ஆஷிஷ், அம்ருதா
Friday, May 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
பத்து நாளைக்கு முன்னாடி சிறப்பு நேயர் ஷ்ரிராம் , இப்ப ஆஷ் அம்ருதாவா அப்ப அடுத்தது யாருன்னு தெரிஞ்சி போச்சு
:))))))))))))))
ஆஷிஷ், அம்ருதா வாழ்த்துக்கள்.
எல்லா பாட்டும் ரொம்ப நல்லா இருக்கு. அதுலயும் ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் போனாராம் பாட்டுல ஒரு க்ராபிக்ஸ் வரும் அது எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
ஆனால் பாருங்க பொதுவா குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் ஹோம் வேர்க் செய்ய சொன்னா அவங்க அப்பா/அம்மாவே செய்து கொடுத்து அனுப்புவது போல இந்தப் பதிவுகளின் பின்னணியில் இருக்கும் அந்த உதவிக்கரம் அம்மாவா, அப்பாவா? ஆஷிஷ் அம்ருதாவுக்கே வெளிச்சம் ;-)
ஏன்? ஏன்? ஏன் பிரபா இந்த மர்டர் வெறி?????? :))))))))))))
ஆஹா இந்தவாரம் ஆஷிஷ், அம்ருதா வா? வாழ்த்துக்கள்.
இருங்க பாட்டு எல்லாம் கேட்டதா இருந்தாலும் உங்களுக்காக இன்னொரு தடவை மாமா போய் கேட்டுட்டு வர்றேன்.
நான் சின்ன புள்ளையா இருந்தப்ப எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டெலாம் இதுல இருக்கு ஜூப்பரு அண்ணே & பாப்பாக்களுக்கு!
மழலைகளையும் றேடியோஸ்பதியில் இணைத்துக்கொண்ட கானாபிரபாவிற்கு பாராட்டுக்கள்.
ஆஷிஷ் அம்ருதாவிற்கு வாழ்த்துக்கள்.
வாவ்..ரொம்ப நாளைக்கப்புறம் இந்தப் பாட்டையெல்லாம் கேட்கவச்சீங்க ஆஷிஷ் & அம்ருதா :)
நன்றிகள்..நண்பர் கானாப் பிரபா..உங்களுக்கும் :)
பாட்டுக்கள் சூப்பர் !
வாழ்த்துக்கள் ஆஸிஷ் அம்ருதா!
சிவா மாமா,
அதுனால தான் அந்த பாட்டு எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.
நிஜமா நல்லவன் மாமா,
பாட்டு கேட்டுடீங்களா??
வாழ்த்துக்கு நன்றி
ஆயில்யன் அங்கிள்
மலரும் நினைவுகளா!!
எம்.ரிஷான் ஷெரீப் said...
வாவ்..ரொம்ப நாளைக்கப்புறம் இந்தப் பாட்டையெல்லாம் கேட்கவச்சீங்க ஆஷிஷ் & அம்ருதா :)//
அம்மா இந்தப் பாடல்களை அடிக்கடி பார்ப்பாங்க. எங்களுக்கும் ரொம்ப பிடிச்சது.
சுரேகா.. said...
பாட்டுக்கள் சூப்பர் !
வாழ்த்துக்கள் ஆஸிஷ் அம்ருதா
நன்றி அங்கிள்
பாட்டு எல்லாம் கேட்டாச்சு. நல்ல பாடல்களை தேர்வு செய்த ஆஷிஷ், அம்ருதா உங்களுக்கும் கானா அண்ணனுக்கும் நன்றி.
ஆகா..ஆகா...இந்த பாட்டை எல்லாம் கேட்டு எம்புட்டு நாள் ஆச்சு..;))
ஆஸிஷ் அம்ருதா உங்கள் இருவருக்கும் என்னோட வாழ்த்துக்கள்.!
வாழ்த்துகள் ஆசிஷ் மற்றும் அம்ருதா.
இந்தப் பாட்டெல்லாம் எனக்கும் பிடிக்கும். ராஜா சின்ன ரோஜா படத்துல வர்ர பாட்டு ரொம்பவே பிடிக்கும். :)
Post a Comment