Pages

Tuesday, May 27, 2008

அமர்க்களமான இசையமைப்பாளர் பரத்வாஜ்

சரணுடன் இணைந்து கூட்டணி அமைத்து காதல் மன்னன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான பரத்வாஜ் அடிப்படையில் ஒரு பட்டயக் கணக்கறிஞர். காதல் மன்னன் முதல் தொடர்ந்து அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ரோஜா வனம், பாண்டவர் பூமி, ஆட்டோ கிராப் என்று இவரின் பெரும்பாலான படங்களில் தனித்துவமான இவரிசையை ரசித்திருக்கின்றேன். பல படங்களின் மண்டலின் இசைக்கருவிக்கு முக்கியத்துவம் கொடுத்து அசத்தியிருப்பார் இவர். இளைராஜா - வைரமுத்து காலம் ஓய்ந்த பின் வைரமுத்துவை சிறப்பாக அதிகம் பயன்படுத்தி வருபவர் இவர். பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம் போன்ற பசுமை நினைவுகளை மெல்லிசையால் வருடியவர்.

இன்றைக்கு முன்னுக்கு இருக்கும் இளம் இசையமைப்பாளர்களை விட நுணுக்கமாக மெட்டும், இசைக்கலவையும் கொடுக்கக் கூடிய சில நல்ல இசையமைப்பாளர்கள் இன்னும் அதிகம் பேசப்படவில்லையே என்று நான் நினைப்பதுண்டு. அதில் ஒருவர் ரமேஷ் விநாயகம் (அழகிய தீயே), மற்றவர் பரத்வாஜ்.
நேற்றைய றேடியோஸ்புதிரில் ஜே ஜே படத்தில் வரும் உனை நான் பாடலினை நினைவுபடுத்தும் வயலின் இசை கொடுத்திருந்தேன்.



அந்த மெட்டின் சோக வடிவம்



ஜே ஜே திரையில் இருந்து "உனை நான்" பாடல்



பரத்வாஜின் ஆரம்ப கால இசைமைப்புக்களில் சிலவற்றை இங்கே தருகின்றேன்.

காதல் மன்னன் படத்தில் வரும் "வானும் மண்ணும்" பாடலில் புல்லாங்குழலைக் கையாண்ட இலாவகம்.



பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வரும் "எனக்கென ஏற்கனவே" பாடலில் மண்டலினைச் சிறப்பாக இடையிசையில் கொடுத்திருப்பார்.



அமர்க்களம் படத்தில் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" பாடலின் சிறப்பான மெட்டும் இசையும்



பரத்வாஜ் அமர்க்களமான ஆனால் அடக்கமான இசையமைப்பாளர்.

14 comments:

ஆயில்யன் said...

2 எக்ஸ்டரா மீல்ஸ்மும்ல போட்டு அசத்திட்டீங்க

//பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வரும் "எனக்கென ஏற்கனவே" பாடலில்///

என்னோட இன்னுமொரு பேவரைட் சாங் :)))

jeevagv said...

ஆமா பிரபா, இரசிக்கத்தக்க இசையமைப்பாளர்!

ரூபன் தேவேந்திரன் said...

எனக்கு ஒரு சம்பவத்தை நினைவு படுத்தி விட்டியள்."உனை நான்" பாடலிசையை மாதவன் ஒரு இடத்தில் வயலினில் வாசிப்பார். அதை பார்த்து நானும் வயலின் பழக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று வயலின் வாங்கி மூன்று வகுப்புக்கு போனதுதான். நாலாவது வகுப்பில் கைவெட்டி இரத்தம் வர வெளிக்கிட்டிட்டுது. அதோட அந்த வகுப்பும் கட். ரமேஸ் விநாயகத்தை "இனி நானும் நானில்லை" என்ற பாட்டுக்காக எனக்கு பிடிக்கும். இதில் நீங்கள் சொல்லியிருக்கும் எல்லா பாட்டுக்களும் எனக்கு பிடிக்கும். நீங்கள் குறிப்பிட்ட மாதிரி அவர்கள் பேசப்படவில்லையே என்று நான் நினைப்பதுண்டு. இதே கேள்வியை ரமேஸ் விநாயகத்தை அன்று ஏதோ ஒரு தொலைக்காட்சியில் ஒரு நேயர் கேட்டார். ரமேஸ் விநாயகமும் இனிவரும் படங்களின் இசை தன்னை பேச வைக்கும் என்றார்.

Anonymous said...

நல்ல இசையமைப்பாளர்கள் தான்.
ரமேஸுன் குரலும் எனக்கு பிடிக்கும்.

ஆ.கோகுலன் said...

வாவ்.. பதிவிற்கென்று எவ்வளவு ஆர்வமாக முயற்சி செய்திருக்கிறிங்கள்.
ஒரு முதுமாணி மேற்படிப்பை தொடருவதற்கு வேண்டிய ஆராயும் ஆர்வம் உங்களிற்கு இருக்கிறது. முயற்சி செய்வதற்கு வாழ்த்துக்கள் கானாபிரபா..!

M.Rishan Shareef said...

வாவ்..
பரத்வாஜ் எனக்கும் மிகவும் பிடிக்கும்..
"வானும் மண்ணும்" பாடல் சித்ரா+ஹரிஹரன் கூட்டணியில் சூப்பர்.

david santos said...

Excellent post, my friend, excellent.
have a nice day

JK said...

Well said piraba. Don't miss out "Kaadu Thiranthu" gem from Vassol Rajah. One of the best interlude arrangements and Hariharan Sadhanasargam combination is amazing in that song.
Talking about Ramesh, I always compare him with legendary A.M.Rajah (Little premature statement though !). It is hard to tell whether he is a good singer or director. (So is A.M Rajah). His song "Yaaridamum" in Thotti Jaya (composed by Harris) was amazing with his chill voice. Same time his arrangements in all "Azhahiya Theeye" songs are equally aclaimable. He and Bharatwaj deserved more better critics as you mentioned.

கானா பிரபா said...

ஆயில்ஸ்

எனக்கென ஏற்கனவே லைலா கனவில் வந்தாளா ;-)

ஜீவா

வருகைக்கு நன்றி

கோசலன்

நல்ல காலம் நீங்கள் தில்லானா மோகனாம்பாள் பார்க்கேல்லை இல்லாவிட்டா நாதஸ்வரம் படிக்கப் போயிடுவியள், உங்கள் நினைவுகளைக் பகிர்ந்தது சுவாரஸ்யமா இருந்தது. ரமேஷ் விநாயகம் பற்றியும் பதிவு போடுவேன்.

தூய்ஸ்

வருகைக்கு நன்றி

கானா பிரபா said...

வாங்கோ கோகுலன்

பிடித்தமான விஷயங்களை மணிக்கணக்கில் பேசலாமே.

ரிஷான்

வானும் மண்ணும் பாட்டின் இடையில் வரும் புல்லாங்குழல் என்னவெல்லாமோ ஜாலம் செய்யுமே.

டேவிட்

மொழி தெரியாவிட்டாலும் அடிக்கடி வாறீங்கள் நன்றி ;)

ஜேகே

அருமையான கருத்துக்களோடு உங்கள் பின்னூட்டம் அமைந்தது. வசூல்ராஜா படத்தின் பாட்டோடு ரோஜாக்கூட்டத்தில் "உயிர்கொண்ட ரோஜாவே" பாடலும் நினைவில் நிற்கவைக்கும்.

ரமேஷ் விநாயகம் பற்றி நீங்கள் சொன்னது மிகச்சரி, நளதமயந்தி படத்தில் "என்ன இது என்ன இது என்னைக் கொல்லுது" பாட்டு இந்தப் பட்டியலில் விடுபடமுடியாதது.

JK said...

Piraba : Yes I too love that nalathamayanthi song. He is stunning in high notes.Isn't he ?

Kosalan : Small correction in your comment. I think "Ini Naanum Naanillai" song is composed by Srinivas. "Thottu Thottu" song is the one composed by Ramesh. That film has actually 5 composers. Especially the saranam of "Thottu Thottu" song has good melody.

கோபிநாத் said...

தல

அருமையான தொகுப்பு...எனக்கு காதல் மன்னன் படமும், ஆட்டோகிராப் படமும் மிகவும் பிடிக்கும். நல்ல திறமையான இசையமைப்பாளர்

பதிவுக்கு நன்றி தல ;)

கானா பிரபா said...

ஜேகே

நீங்கள் சொன்னது போல் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே படத்தில் பாடல்கள் ஓவ்வொன்றும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள்.

தல கோபி

என்ன கொஞ்ச நாளா மீயூசிக் கிளாசுக்கு வரல?

மங்களூர் சிவா said...

/
//பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வரும் "எனக்கென ஏற்கனவே" பாடலில்///

very excellent lyrics
nice music!