கடந்த வாரம் ஒரு பாடலின் இடை இசையோடு புதிர் போட்டேன். இந்த வாரம் ஒரு படத்தின் முகப்பு இசையைத் தந்து அப்படம் எதுவென்று புதிர் போடுகின்றேன். காரணம் தமிழ்த் திரையுலகில் பாடல்களை விதந்து சிலாகிக்கும் அளவுக்கு அப்படத்தில் சிறப்பாக இருக்கும் பின்னணி இசை பேசப்படுவதில்லை. குறிப்பாக இசைஞானி இளையராஜா இசையமைத்த எழுநூற்றுச் சொச்சம் திரைப்படங்களில் அவர் கொடுத்திருக்கும் பின்னணி இசை ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே ரசிகர்களால் கவனிக்கப்பட்டு நேசிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த வாரம் போடும் புதிர் ஒரு பின்னணி இசையாகவே கொடுக்கப்பட்டு எவ்வளவு தூரம் அந்த இசையை நீங்கள் கவனித்திருக்கின்றீர்கள் என்பதை அறியும் ஒரு முயற்சியாக இருக்கின்றது. எனவே கஷ்டப்பட்டு இந்த இசையை படத்தின் காட்சியில் இருந்து பிரித்தெடுத்து இங்கே தந்திருக்கின்றேன்.
இங்கே நான் தரும் இந்த இசை எண்பதுகளில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் முகப்பு இசையாக (Title music) இருக்கின்றது. இது வேற்று மொழியில் வந்து பின்னர் மீளவும் தமிழில் புதிதாக எடுக்கப்பட்ட படமாகும். படத்தின் தலைப்பில் இலக்கம் (number) இருக்கும். இப்பட நாயகன் எண்பதுகளில் அறிமுகமாகிப் பிரபலமான நாயகன். நாயகிக்கு இந்தப் படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இன்று வரை இந்த நாயகி அதே புகழோடு இருக்கின்றார். இப்படத்தின் பாடல் ஒன்று பண்டிகை நாள் ஒன்றை நினைவுபடுத்தும். இப்படத்தில் தோன்றிய முக்கிய பாத்திரங்களில் ஒருவரான பூர்ணம் விஸ்வநாதனை இங்கே படமாகக் கொடுத்திருக்கின்றேன். சரி இனி இந்தப் பின்னணி இசையைக் கேட்டு இப்படம் எதுவென்று கண்டுபிடியுங்களேன்.
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
Not 100 percent sure. But looks like Varusham 16. Is it ?
JK
உங்கள் கணிப்பு சரியானது. வாழ்த்துக்கள்
மனசுக்குள்ள இருக்கு. வறமாட்டேங்குது.
பாட்டோட முகப்புன்னா சொல்லிடலாம்.
ஐய்யோ! சொக்கா! சொக்கா!
பாட்டு என்னன்னு கண்டுபிடிக்க முடியலையே!!!
Thanks Praba. Looking forward more and more like this. You have a great sense of music. All the best.
புதுகைத் தென்றல்
மனசத் தளரவிடாம கண்டுபிடியுங்க.
இந்தப் பட நாயகி இன்று வரை பிரபலம். இந்தப் படம் தான் இவருக்கு திருப்பு முனை.
எங்கே பார்க்கலாம் ;-)
வருஷம் 16
கப்பி பய
கலக்கீட்டீங்க வாழ்த்துக்கள் ;-)
mounaragan
மெளனராகம் தவறு ;-)
படத்தின் தலைப்பில் இலக்கம் இருக்கும்.
கானா தெய்வமே இரண்டுமணி நேரமா யோசிக்கிறேன். எப்படி தலை வெடிக்காம இருக்குன்னு எனக்கே தெரியலே.
வருஷம் 16
வருஷம் 16..
இந்த மாதிரி நல்ல தீம் மியூசிக்.. சாதாரணமா வலையில் கிடைக்காததை ஷேர் பண்ணலாமே? ;-)
//நிஜமா நல்லவன் said...
கானா தெய்வமே இரண்டுமணி நேரமா யோசிக்கிறேன். எப்படி தலை வெடிக்காம இருக்குன்னு எனக்கே தெரியலே.//
பக்தனே
மனசை தளரவிடாம கீப் ட்ரை ;-)
மைபிரண்டு
சூப்பரோ சூப்பர், இந்தாங்க பிடியுங்க வாழ்த்தை
சினேகிதன்
பின்னீட்டீங்க, வாழ்த்துக்கள்
வருசம் பதினாறு..
வருஷம் 16 - அப்பாடா.. ஸ்.. ஸ்.. காப்பி கீப்பி ஏதாவது கிடைக்குமா..? முடியல.. 10.36 pm
Moonram Pirai
இல்லை இல்லை மூன்றாம் பிறை அல்ல. வருஷம் பதினாறு. இது சரியா ?
வருசம் 16 தானே அண்ணன்...
தெய்வமே 'வருஷம் 16'. எப்பா கண்டுபிடிக்க பட்ட பாடு இருக்கே சொல்லி மாளாது.
நானும் உண்டு
வருஷம் 16
Is it Varsham 16
வருஷம் 16
ம்ஹூம், கண்டுபிடிக்க முடியலை. நீங்க விடை ரிலீஸ் பண்ணும்போது தெரிஞ்சுக்கறேன்.
கொஞ்சம் வருஷம் பதினாறு மாதிரி இசை இருக்கு. சரியான்னு சொல்லீருங்க
முத்துலெட்சுமி, கோகுலன், மதுமதி,தமிழன், நிஜமா நல்லவன், ஆயில்யன், சுந்தரி, வெயிலான், சின்ன அம்மணி
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், சரியான விடை சொல்லியிருக்கீங்க ;-)
வாழ்த்துக்களுக்கு நன்றி!
Post a Comment