Pages

Monday, May 19, 2008

என்னுயிர்த் தோழன் - பின்னணி இசைத்தொகுப்பு


என்னுயிர் தோழன் திரைப்படம் படமாக்கப்படும் வேளை கல்கியில் தொடராக வெளிவந்தது. பாரதிராஜாவின் எழுத்தில் வந்த இப்படம் இவரது வழக்கமான பாணியில் இருந்து விலகி அரசியல் வாழ்வில் ஒரு சாதாரண தொண்டன் எப்படி ஏமாற்றப்படுகின்றான் என்பதை நடப்பு அரசியலோடு பொருத்தி எடுத்திருந்தார்.



பாரதிராஜாவின் மனைவி முன்னர் ஒரு பேட்டியில் தன் கணவர் இயக்கிய படங்களிலேயே என்னுயிர் தோழனே பிடித்தது என்று சொல்லியிருக்கின்றார். பாரதிராஜாவின் உதவி இயக்குனரும், இப்படத்தின் அறிமுக நாயகனுமான பாபு இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏராளம் படங்களில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒரு சில படங்களில் நடித்த நிலையில் எதிர்பாராத விபத்தில் சிக்கி இன்று வரை உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் இருக்கின்றார்.



இளையராஜாவுக்கும் பாரதிராஜாவுக்கும் கடலோரக் கவிதைகள் படத்தைத் தொடர்ந்து இவர்கள் நட்பில் விரிசல் விழுந்தது. பாரதிராஜா அம்சலேகா, தேவேந்திரன் என்று பிற இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திக் கொண்டார். அப்படங்களில் பாடல்கள் சிறப்பாக இருந்தும் படங்கள் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. என்னுயிர் தோழனே இளையராஜாவையும் பாரதிராஜாவையும் மீண்டும் இணைத்த திரைப்படமாகும். வைரமுத்து மட்டும் சேரவில்லை. இப்படத்தில் கங்கை அமரனே பாடல்களை எழுதினார். ஆனால் இப்படமும் தொடர்ந்து வந்த புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல் போன்ற இவர்கள் கூட்டணியில் வந்த படங்கள் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை.



என்னுயிர்த் தோழனில் மலேசியா வாசுதேவன், அருண்மொழி குழுவினர் பாடும்

"ஏ! ராசாத்தி...ரோசாப்பூ வா வா வா" பாட்டு








என்னுயிர் தோழனில் வில்லன் சக இரண்டாவது நாயகன் தென்னவன், ரமா சந்திக்கும் காதல்காட்சிகளில் புல்லாங்குழல் கலந்து வரும் இசையைக் கையாண்டிருப்பார் இளையராஜா. படத்தின் பெரும்பாகத்தை புல்லாங்குழலில் இழையோடும் இசை தான் நிரப்பியிருக்கும். கண்ணனின் லீலைகள் என்ற மறைபொருளில் கூட இந்த இசைவடிவை அர்த்தம் கற்பிக்கலாம். தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்ற முக்கிய காட்சிகளின் பின்னணி இசைத் தொகுப்பு இதோ:



நாயகி முதற்சந்திப்பில் நாயகன் கவிதையால் வர்ணிப்பு (பாரதிராஜா குரல்)






கள்ளமாக மறைந்திருக்கும் பார்க்கும் காதலியை அடியொற்றிய இசை (அட்டகாசமான இசைக்கலவை)






மேயாத மான் பாட்டை பாடிக் காட்டும் காட்சி






புல்லாங்குழலைக் களவாக வாசிக்கும் காதலியை சீண்டும் காட்சி, கூடவே காதல் கவிதை, பின்னணியில் இசைச் சிதறல்






காதலன் பிரிவில் புல்லாங்குழல் சோக இசை






ஒரு பிரிவின் பின் மீண்டும் காதலர் காணும் காட்சியில் புல்லாங்குழலோடு வயலின், பிற வாத்தியங்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி






கோபத்தை வெளிப்படுத்தும் புல்லாங்குழல் பின்னணி






12 comments:

pudugaithendral said...

அதிக வசூலைக் கொடுக்காவிட்டாலும்
அருமையான பாடல்கள் நிறைந்த படம்.

இந்தப் படத்தின் கதாநாயகி எங்கள் ஊர். நான் படித்த பள்ளியில்தான் அவரும் படித்தார்.எனக்கு சீனியர்.

இந்தப் படத்தை அதற்காகவே போய்
பார்க்கவேண்டும் என்று நினைத்ததுண்டு.

ஏ ரோசாப்பு பாடலில் காட்சிகளும்
பாடல் வரிகளும் அருமை.

நன்றி பிரபா.

ஆயில்யன் said...

ஒரு இசை அதை ஒவ்வொரு காட்சிகளிலும் சற்றே மாறிய வடிவங்களில் படம் பார்த்த போதும் சரி அதன் பின்னரும் சரி இந்தளவுக்கு ஈடுபாட்டுடன் கேட்டதில்லை!

மோகம்
சோகம்
கோபம் என்ற குணங்களினூடே மாறி மாறி பிரதிபலிக்கும் இசை நான் இன்றுதான் உணர்கிறேன்!

சரியான தேர்வில் ஆய்வு செய்து எங்களுக்காய் அர்ப்பணித்த உங்களுக்கு
பல பல நன்றிகள்! :)))

ஆயில்யன் said...

தொடருங்கள் இனிய இன்னிசைப்பணியினை!

வரும் கணினி தலைமுறையும் இதனில் கவர்ந்து உங்களை வாழ்த்தும்!

MyFriend said...

நானும் டவுன்லோட் பண்ணிட்டேன். நன்றி பிரபாண்ணா. :-)

பிருந்தன் said...

எனக்கு மட்டும் ஏன் இப்படி தெரிகிறது பாடல்கள் போட்ட இடங்களில் வெறும் இடைவெளிகள்தான் தெரியுது ஒரு இசையையும் கேட்முடிய இல்லையே.

கானா பிரபா said...

வணக்கம் பிருந்தன்

நான் கொடுத்த பிளேயர் எல்லா மீடியா பிளேயரிலும் இயங்கும். ஆனால் கொஞ்ச நேரம் எடுத்துத் தான் அந்த பிளேயரின் பட்டன் தெரியும், எனவே பதிவைத் திறந்து சில நிமிடம் வைத்திருக்கவும்.

பொறுத்தார் பூமி ஆள்வாராம் ;-)

கானா பிரபா said...

வாங்க புதுகைத் தென்றல்

ரமாவின் சகோதரி ராகசுதாவும் நாயகியாக நடித்தவர், உங்க ஊர்க்காரர். ஏ ரோசாப்பூ என் வாழ்நாளின் பிடித்த பாடல்களில் ஒன்று.

ஆயில்யன்

ஒலிப்பதிவைக் கேட்டுக் கருத்திட்டமைக்கு நன்றி. ஏதோ என்னால முடிஞ்சது ;-)

மைபிரண்ட்

டவுண்லோடும் பண்ணீட்டீங்களா? பெரிய ஆளுதான் ;-)

கோபிநாத் said...

தல

நன்றி....சும்மா பிரிச்சி மேஞ்சிருக்கிங்க....;))

pudugaithendral said...

ரமாவின் சகோதரி ராகசுதாவும் நாயகியாக நடித்தவர், உங்க ஊர்க்காரர்.//

ராக சுதா எங்கள் ஊர்தான். ஆனால் ரமாவின் தங்கை இல்லை.ரமாவின் அக்கா லதாவும் நடிகை. 2 அல்லது 3 படங்களில் நடித்தார். சில நாடகங்களிலும் நடித்தார்.

கானா பிரபா said...

//கோபிநாத் said...
தல

நன்றி....சும்மா பிரிச்சி மேஞ்சிருக்கிங்க....;))//

நன்றி தல

உண்மையிலேயே டிவிடியில் பிரிச்சு மேஞ்சு தான் இந்த ஒலியை எடுத்தேன் ;-)

புதுகைத் தென்றல்

லதாவைத் தான் ராகசுதா என்று குழப்பிவிட்டேன், நன்றி

தமிழன்-கறுப்பி... said...

போங்க பிரபாண்ணன் உங்களை பாத்தா பொறாமையாயிருக்கு எப்படி அண்ணன் இவ்வளவையும் தொகுக்குறிங்க.. உங்களோட கொஞ்சம் கதைக்கத்தான் வேணும்...

கானா பிரபா said...

இஞ்சை தம்பி

உன்னாணை நாவுறுபடுத்திப் போடாதையும், எப்படித் தொகுக்கிறது எண்டு சொல்லித்தாறன் சரியோ?