காலாபாணி திரைப்படம் வெளிவந்து இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் (06 ஏப்ரல் 1996).
மோகன்லாலின் ஆத்ம நண்பர் பிரியதர்ஷன், மலையாளத்தின் மகோன்னத எழுத்தாளர் T. தாமோதரன் உடன் இணைந்து கதை சமைத்து இயக்கிய பெரும் எடுப்பிலான, பிரமாண்ட வெற்றிச் சித்திரம் இது.
"காலாபாணி" என்று மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகி பின்னர் தாணுவின் தயாரிப்பில் தமிழில் மொழிமாற்றப்பட்டது. அறிவுமதி அண்ணனே முழுப் பாடல்களையும் எழுதி, வசனப் பங்களிப்பையும் கவனித்துக் கொண்டார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தியாகிகளை அந்தமானின் காலாபாணசிறைச்சாலையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்திய வரலாற்றைப் படம் பிடித்தது இப்படம்.
மோகன்லால், தபு, பிரபு ஆகியோர் முக்கிய வேடமிட்டு நடித்தனர். பாடலாசிரியர் அறிவுமதி அவர்களே அனைத்துப் பாடல்களையும் எழுதி, உரையாடலையும் எழுதியிருந்தார் 1995 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்காகவும், சிறந்த இரண்டாவது படத்துக்காக தயாரிப்பாளராகவும் இப்படத்திற்காக கேரள அரசின் விருதாகப் பெற்றார் மோகன்லால். கூடவே இசைஞானி இளையராஜாவுக்கும் கேரள அரசின் விருது கிட்டியது.
சந்தோஷ் சிவன் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதைத் தேசிய அளவிலும், கேரள மாநில அளவிலும் சுவீகரித்துக் கொண்டார்.
அது போலவே சாபு சிரிலுக்கும் இவ்விரு விருதுகளும் சிறந்த கலை இயக்கத்துக்காக வழங்கப்பட்டதோடு, பட ஆக்கத்தில் இன்ன பிற செயற்பாடுகளுக்காகவும், மாநில, தேசிய விருதுகளை அள்ளியது.
இப்படத்தின் இசையைப் பொறுத்தவரை இளையராஜாவின் ராஜாங்கத்துக்கு மாற்றீடாக எவரையும் எண்ணிப் பார்க்கவே முடியாது. கிராமியப்படங்களுக்கும், பீரியட் படங்களுக்கும் சிலிர்த்துக் கொண்டு இசையில் சாதனை படைக்கும் இளையராஜா காலாபாணிக்கும் அந்தக் குறையை விடவில்லை. அறிவுமதி அவர்களின் தெள்ளு தமிழ் வரிகளை எப்படி செம்பூவே பூவே, ஆலோலங்கிளி தோப்பிலே, மன்னன் கூறைச் சேலை, நம் பாரத நாடு, சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே என்று இனிய பாடல்களாக நெய்தாரோ அதே இன்னிசை முழக்கத்தை இப்படத்தின் பின்னணி இசையிலும் கொடுத்திருந்தார். சந்தோஷ்சிவனின் அழகிய வரலாற்றுக் காட்சிப்படுத்தலோடு இழைந்தோடுகின்றது ராஜாவின் இசை. திரையில் சிம்பொனியைக் கேட்ட பரவசத்தை இது ஏற்படுத்துகின்றது.
பல இடங்களில் வசனங்களோடு இணைந்து இந்தப் பின்னணி இசை பயணிப்பதால் அவற்றை விலக்கித் தனி இசையை மட்டும் பிரித்துக் கொடுப்பது கஷ்டமாக இருந்தது. ஆனாலும் இசையைத் தனியே முன்னுறுத்திய முக்கியமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து இங்கே தருகின்றேன். அனுபவியுங்கள்.
தியாகிகள் கைதிகளாக கப்பல் மூலம் காலாபாணி என்னும் கொடுஞ்சிறை நோக்கிப் பயணித்தல்
http://radio.kanapraba.com/schalai/sirai1.mp3
காலாபாணி சிறைச்சாலையின் மர்மங்களைத் தேடி வரும் வினீத் தியாகிகளின் சமாதியைக் காணல்
http://radio.kanapraba.com/schalai/sirai2.mp3
தியாகிகளின் கப்பல் அந்தமான் தீவின் கரையைத் தொடல்
http://radio.kanapraba.com/schalai/sirai3.mp3
காலாபாணி சிறையில தியாகிகள் நடமாடல்
http://radio.kanapraba.com/schalai/sirai4.mp3
மோகன்லாலின் மீது தபுவுக்கு வரும் காதல்
http://radio.kanapraba.com/schalai/sirai5.mp3
சிறையில் இருந்து தப்பித்த பிரபுவின் பழியைத் தானே ஏற்றுத் தண்டனை வாங்கி வரும் மோகன்லால்
http://radio.kanapraba.com/schalai/sirai6.mp3
மோகன்லால் பிரபு இருவரும் நட்பு பாராட்டுதல்
http://radio.kanapraba.com/schalai/sirai7.mp3
மோகன்லால் விடுதலையாகின்றார் என்ற செய்தியை தபுவிடம் சொல்லும் வெள்ளைக்கார வைத்தியர்
http://radio.kanapraba.com/schalai/sirai8.mp3
மோகன்லால் காலாபாணி சிறைச்சாலையில் இருந்த கொடுங்கோலனை அழிக்கத் தருணம் பார்த்தலும், அது நிறைவேறலும்
http://radio.kanapraba.com/schalai/sirai9.mp3
சிறைச்சாலை பாடல்கள்
https://www.youtube.com/watch?v=pvMfRoXX2uY
கானா பிரபா
1 comments:
நன்றி திரு.கானா பிரபா
Post a Comment