Pages

Friday, April 27, 2007

நீங்கள் கேட்டவை - 3



வணக்கம் நண்பர்களே

வாராந்த நீங்கள் கேட்டவை பகுதியின் மூன்றாவது பதிவு இதுவாகும். ஏற்கனவே மின்னஞ்சல் மற்றும் பின்னூட்டம் மூலமாகப் பாடல்களைக் கேட்ட அன்பர்களின் விருப்பங்கள் இன்றைய பதிவில் இடம்பெறுகின்றன. பாடல் கேட்ட ஒழுங்கில் சில பாடல்கள் இல்லாமைக்குக் காரணம், குறிப்பிட்ட சில பாடல்கள் இன்னும் கைவசம் வந்து சேரவில்லை. நிச்சயமாக இடம்பெறாத மற்றைய பாடல்கள் அடுத்தடுத்த நீங்கள் கேட்டவை பதிவுகளில் இடம்பெறும். அந்த வகையில் இன்றைய விருப்பத்தேர்வுகள் இதோ

1. ஜெய்சங்கர் என்ற நேயரின் விருப்பத் தேர்வாக " தர்மபத்தினி" திரைப்படத்தில் இருந்து இளையராஜா இசையில், இளையராஜா, ஜானகி குரல்களில் " நான் தேடும் செவ்வந்திப் பூவிது" என்ற பாடல்

2. மாசிலா என்ற நேயரின் விருப்பத் தேர்வாக " மதனமாளிகை" திரைப்படத்தில் இருந்து எம்.பி.சிறீனிவாசன் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் " ஒரு சின்னப்பறவை" என்ற பாடல்

3. இந்துமகேஷ் என்ற நேயரின் மின்னஞ்சல் விருப்பத் தேர்வாக " இரவும் பகலும்" திரைப்படத்தில் இருந்து கே.வி.மகாதேவன் இசையில், நடிகர் அசோகன் பாடிய " இறந்தவனை" என்ற பாடல்

4. திலகன் என்ற நேயரின் விருப்பத் தேர்வாக " செம்மீன்" திரைப்படத்தில் இருந்து சலீல் செளத்ரி இசையில், கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் " கடலினக்கரை போனேரே" என்ற பாடல்

5. கோபிநாத் என்ற நேயரின் விருப்பத் தேர்வாக " நீங்கள் கேட்டவை" திரைப்படத்தில் இருந்து இளையராஜா இசையில் ஜானகி குரலில் "பிள்ளை நிலா இரண்டும்" என்ற பாடல்

6. சிவா என்ற நேயரின் மின்னஞ்சல் விருப்பத் தேர்வாக " ஒரு விடுகதை ஒரு தொடர்கதை" திரைப்படத்தில் இருந்து கங்கை அமரன் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் ஜானகி குரல்களில் "நாயகன் அவன் ஒரு புறம்" என்ற பாடல்


பாடல்களைக் கேளுங்கள், உங்கள் விருப்பங்களையும் தொடர்ந்தும் அறியத் தாருங்கள்.
நீங்கள் கேட்டவை 3 என் குரற்பதிவில் அறிமுகம்


பாடல்களைக் கேட்க
Powered by eSnips.com

22 comments:

Thillakan said...

பாட்டுக்கு நன்றி ,
இன்னொரு பாட்டும் கேட்டனான்:)

மாசிலா said...

நன்றி கானா பிரபா. அருமையான சேவை.

அடுத்து நான் விரும்பும் பாடல் இளைய ராஜா பாடிய "மெட்டி ஒலி காற்றாக ..." என்ற பாடல்.

முயற்சிக்கு நன்றி.

We The People said...

மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர் நன்பரே! நன்றிகள் ஆயிரம்.

பல வருடங்களாக தேடிய பாட்டு இது, இவ்வளவு எளிதாக, விரைவாக, அற்புதமான தரத்துடன் தந்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை!

நன்றி!

நா. ஜெயசங்கர்

கோபிநாத் said...

நன்றி தலைவா...நன்றி

ஒருவருக்கு ஒரு பாட்டு தானா இல்லை இன்னும் ஒன்றை கேட்காலமா?

We The People said...

ஐயா,

எனக்கு இன்னும் ஒரு பாட்டு வேண்டும், வழங்க முடியுமா?

படம்: ஆவரம்பூ
பாட்டு: ஆலோலம் பாடி
நடிகர்கள்: நாசர், வினீத்
இசை: இசை
பாடியவர்: இசை ;)

நன்றி,

நா ஜெயசங்கர்

Anonymous said...

Hi prabha

I have written abt ur blog in my blog . have a look
http://ilakkiyam.wordpress.com

கானா பிரபா said...

//Thillakan said...
பாட்டுக்கு நன்றி ,
இன்னொரு பாட்டும் கேட்டனான்:) //

உங்கட அடுத்த பாட்டு அடுத்த பதிவில் ரும், வரும்.

கானா பிரபா said...

// மாசிலா said...
நன்றி கானா பிரபா. அருமையான சேவை.

அடுத்து நான் விரும்பும் பாடல் இளைய ராஜா பாடிய "மெட்டி ஒலி காற்றாக ..." என்ற பாடல்.

முயற்சிக்கு நன்றி.//

//We The People said...
மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர் நன்பரே! நன்றிகள் ஆயிரம்.//

நன்றி நண்பர்களே, உங்கள் விருப்பங்கள் தொடர்ந்த பதிவுகளில் வரும்

SurveySan said...

அருமை!

கானா பிரபா said...

//maravantu said...
Hi prabha

I have written abt ur blog in my blog . have a look
http://ilakkiyam.wordpress.com //

மிக்க நன்றிகள் நண்பரே

Haran said...

பிரபா அண்ணா,
கடலினக்கர... சிறு வயதில் கேட்ட பாட்டு... மீண்டும் கேட்க சந்தர்ப்பம் ஏற்படுத்தியமைக்கு நன்றிகள்.

கெளரிகரன்

Anonymous said...

GANA PRABA AVARGALUKKU,

INDRU THAN ENATHU NANBAR GANESHIN VALAIPATHIVIL PARTHEN. MIGUNTHA SANTHOSHAM ADAINTHEN.

AANAL ORALAVIRKKU ELLARIDAMUM IRUKKUM PADALAI OLI PARAPUVATHARKU PATHILAGA, ENGUM KIDAIKATHA SILA NALL PADALGALAI OLI PARAPPAVUM.

PADAL:
MAALATHI - KARPANAIYO KAI VANTHATHO
(SPB PADIYA MIGA ARPUTHAMAANA PADAL)
MANTHOPPU KILIYE - MAANTHOPPU KILIYE MACHANAI PAARU

ITHU PONDRA PADALGAL OLI PARAPUVATHARKKU MUTHALILEYE NANDI SOLGIREN.

NANDRI

SRIKANTH
rsrikanths@gmail.com

பாரதிய நவீன இளவரசன் said...

ஸ்ரீகாந்தோடு 100% ஒத்துப்போகிறேன்!

நீங்கள் குறிப்பிடப்பட்டுள்ள பாடல்கள் எல்லாமே ரொம்ப அருமையான பாடல்கள் ஐயா! தற்சமயம் எனது கணினியில் ஒலி வசதியில்லை. பின்னர் கேட்கிறேன்.

எனக்காக ஒரு பாடல், ப்ளீஸ்...
கல்யாணராமன் படத்தில் வரும் (ஜென்ஸியின் குரலில்) ஒரு பாடல்..."மலர்களில் ஆடும் இளமை புதுமையே ஹோய்..."

அவசரமில்லை.. முடிந்தால் இமெயில் செய்யவும்.. ரொம்பவும் சந்தோஷப்படுவேன்.. vencut underscore v at yahoo dot com

கானா பிரபா said...

//SurveySan said...
அருமை!//

மிக்க நன்றிகள் நண்பரே

//srikanth said...
AANAL ORALAVIRKKU ELLARIDAMUM IRUKKUM PADALAI OLI PARAPUVATHARKU PATHILAGA, ENGUM KIDAIKATHA SILA NALL PADALGALAI OLI PARAPPAVUM.//

முதற்தடவையாக என் வலைப்பூவிற்கு வந்ததற்கு முதலில் என் நன்றிகள். உங்கள் கூற்றோடு முழுதும் ஒத்துப்போகின்றேன். இந்தப் பதிவுகளின் நோக்கமே பத்தோடு பதினொன்றாகப் பாடல்களைப் போடாமல் தனித்துவமாக அரிதான பாடல்களின் களஞ்சியமாக அமையவேண்டும் என்பதே. இந்தவலைப்பதிவினை முழுமையாக ஒருங்கிணைக்கச் சிறிது காலம் தேவைப்படுகின்றது. அப்போது இவற்றை அமுல்படுத்தவுள்ளேன். நீங்கள் கேட்ட பாடல்களைத் திரட்டித் தருகின்றேன். பதிவில் வரும்போது நிச்சயம் மடல் அனுப்புகிறேன்.


//arateeyamodernprince said...
எனக்காக ஒரு பாடல், ப்ளீஸ்...
கல்யாணராமன் படத்தில் வரும் (ஜென்ஸியின் குரலில்) ஒரு பாடல்..."மலர்களில் ஆடும் இளமை புதுமையே ஹோய்..." //

வணக்கம் நண்பரே
நீங்கள் கேட்ட பாடல் நல்ல ஒலித்தரத்தில் என்னிடம் உள்ளது அடுத்த பதிவில் தருகின்றேன். பாடியவர் ஜென்சி அல்ல கிட்டத்தட்ட அவர் குரலோடு ஒத்துப் போகும் எஸ்.பி.சைலஜா

உண்மைத்தமிழன் said...

மிக்க நன்றி கானா.. கடைசிப் பாடலை நான் தேடோ தேடு என்று தேடிக் கொண்டிருந்தேன். அந்தப் படம் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை எனக்கு மிகவும் பிடித்தப் படம். பெரிய நடிகர்கள், பெரிய டைரக்டர் என்று இல்லாததால் அப்பொழுதே சரியான பெயர் கிடைக்கவில்லை இந்தப் படத்திற்கு. ஆனால் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.. மிக்க நன்றி கானா அவர்களே..

ஒரு சிறிய வேண்டுகோள்.. இந்த மாதிரி பாடல்களை தரவிறக்கம் செய்யும்படியான வசதிகளையும் செய்து வைத்தீர்களானால் எங்களை மாதிரி தேட முடியாதவர்களுக்கு உதவியாக இருக்குமே.. மீண்டும் ஒரு நன்றி..

கானா பிரபா said...

//கோபிநாத் said...
நன்றி தலைவா...நன்றி

ஒருவருக்கு ஒரு பாட்டு தானா இல்லை இன்னும் ஒன்றை கேட்காலமா? //

தலைவா,

ஒரு பதிவில் ஒருவருக்கு ஒரு பாட்டு என்று மட்டுப்படுத்தியிருக்கிறேன். பின்னைய பகுதிகளில் உங்கள் பாட்டு வரும்.


//Haran said...
பிரபா அண்ணா,
கடலினக்கர... சிறு வயதில் கேட்ட பாட்டு... மீண்டும் கேட்க சந்தர்ப்பம் ஏற்படுத்தியமைக்கு நன்றிகள்.//

வருகைக்கு நன்றி ஹரன், நீங்களும் பாடல் கேட்கலாம்.


//உண்மைத் தமிழன் said...
மிக்க நன்றி கானா.. கடைசிப் பாடலை நான் தேடோ தேடு என்று தேடிக் கொண்டிருந்தேன். அந்தப் படம் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை எனக்கு மிகவும் பிடித்தப் படம். //

வணக்கம் உண்மைத்தமிழன்

இந்தப்படத்தை விஜயகாந்தை அறிமுகப்படுத்திய காஜா இயக்கியிருந்தார், கங்கை அமரனின் முதல் இசையமைப்பு கூட. கங்கை அமரன் குறித்து ஒரு விசேட பதிவு இடவுள்ளேன், அப்போது இதே படத்தில் உள்ள "விடுகதை ஒன்று "என்ற பாடலைத் தருகின்றேன்.

பாடல்களுக்கான காப்புரிமை காரணமாகவே தரவிறக்கம் செய்யும் வசதி கொடுக்கவில்லை.

Anonymous said...

கானா பிரபா

வலையில் தேடியும் கிடைக்காத பாடலொன்று, " எண்ணப்பறவை சிறகடித்து, விண்ணில் பறக்கின்றதா".. இடம் பெற்ற படம், " கார்த்திகை தீபம்".

கிடைத்தால், முடிந்த போது எடுத்து போடுங்கள். நன்றி.

கானா பிரபா said...

வணக்கம் வாசன்

நீங்கள் கேட்ட பாடலை இன்னொரு நேயரும் கேட்டிருந்தார், நிச்சயம் பாடல் வரும்.

Anonymous said...

அன்பு பிரபா!

எனது விருப்பத் தேர்வை
விரைந்து தந்தமைக்கு நன்றிகள்!

ஒரு சில தடவைகள்மட்டுமே கேட்டு
மனதில் நிற்கும் பல பாடல்களைத்
திரும்பக் கேட்க முடியவில்லையே
என ஏங்கும் மனங்களுக்கு
மகிழ்வளிக்கும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

தங்கள் தேடும் திறனில் நம்பிக்கை கொண்டு மேலும் சில பாடல்களை மீட்டுத் தருவீர்கள் என என் விருப்பத் தேர்வுகளாக மேலும் இரண்டு பாடல்களை இங்கு குறிப்பிடுகிறேன்.


கல்கியின் "கள்வனின் காதலி" என்ற படத்தில் இடம்பெற்ற
"வெய்யிற்கேற்ற நிழலுண்டு"
என்ற பாடல்.
பாரதிதாசனின் வரிகளுக்கு ஏ.எம். ராஜா - பானுமதி குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இன்னுமொரு பாடல்
ஏ.எம். ராஜா பாடிய
"மலரின் மதுவெல்லாம்"
என்ற பாடல்.
படம் " ரிஷ்யசிருங்கர் " என்பதாக ஞாபகம்.

எனது சின்ன வயதில் கிராமபோனின் காதைத் திருகி நான் இரசித்த பாடல்கள்.

நான் கேட்ட ஏ.எம்.ராஜாவின் பாடல்களில் அவரது மதுரக்குரல் "மலரின் மதுவெல்லாம் " பாடலில்
அதி மதுரமாக இருந்தது.


தருவீர்கள் எனக் காத்திருக்கிறேன்.


அன்போடு
இந்துமகேஷ்.

balar said...

முதல் முறையாக இங்கே..தங்களின் பாடல்கள் தொகுப்பு எல்லாம் மிக அருமை...

தொடரட்டும் இசை அமுதம்..

கானா பிரபா said...

//inthumakesh said...
அன்பு பிரபா!

எனது விருப்பத் தேர்வை
விரைந்து தந்தமைக்கு நன்றிகள்!//



வணக்கம் அண்ணா

உங்களைப் போன்ற உறவுகள் கேட்கும் தளமாக மாறிவிட்டது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. உங்கள் பாடற் தெரிவுகள் நிச்சயம் வரும். குறிப்பிட்ட சில பாடல்களை ஒலிப்பேழையில் இருந்து கணினிக்கு மாற்ற நேரம் எடுப்பதால் தான் சிலவேளை காலதாமதம் ஏற்படுகின்றது.

கானா பிரபா said...

//balar said...
முதல் முறையாக இங்கே..தங்களின் பாடல்கள் தொகுப்பு எல்லாம் மிக அருமை...//

மிக்க நன்றி நண்பரே தொடந்தும் வாருங்கள்.