Pages

Thursday, May 15, 2008

சிறப்பு நேயர் "Surveyசன்"


கடந்த வார சிறப்பு நேயராக கயல்விழி முத்துலெட்சுமி வந்தாலும் வந்தாங்க, பதிவர்கள் தி.நகர் ஜவுளி நெரிசல் கணக்கா வந்து கு(ம்)மிஞ்சிட்டாங்க.

சரி இந்த வார சிறப்பு நேயர் யாரென்று பார்ப்போம்.

ஒரு இரண்டு வருஷங்களுக்கு முன்னர் தமிழ்மணத்தை வழக்கம் போல் உலாவலாம் என்று பக்கத்தைத் திறந்தால் எடுத்த எடுப்பிலேயே புள்ளிவிபர இலாகாவிலிருந்து கேட்குமாற் போல யாரோ ஒருவர் பதிவிட்டிருந்தார். வழக்கமான பதிவுகளில் இருந்து விலகியிருக்கிறாரே என்று நினைக்கமுன்னரே சரசரவென்று ஒவ்வொரு நாளும் விதவிதமான கேள்விக் கொத்தோடு பதிவுகளைக் குவித்தார். பாராட்டு, விமர்சனம் என்று சம அளவில் இந்தப் புள்ளிவிபரப்பதிவுகளுக்குக் கிடைத்தது. ஆனாலும் விட்டாரா மனுஷன், நான் "ஆக்கியவன் அல்ல அளப்பவன்" என்று தொடர்ந்தும் தன் "பணியை" செய்து ராமராஜன் லெவலுக்கு திடீர் ஹீரோவாகிவிட்டார். அவர் தான் நம்ம சர்வேசன்.

ஆனால் இவருக்கு புள்ளி விபரம் தான் எடுக்கத் தெரியும் என்று கணக்கு போடுபவர்களின் நினைப்பை மாற்றி "நேயர் விருப்பம்" போன்ற கலக்கல் இசைத் தொடர்களையும் ஆரம்பித்தார். மனசு ரிலாக்ஸாக இருக்க சில பதிவர்களின் பதிவைத் தேடிப்படிப்பது வழக்கம். அதில் சர்வேசனும் ஒருவர். நச் சென்ற விமர்சனமும், குறும்புத்தனமும், கலந்த எழுத்தும் அளவான கஞ்சத்தனமான பதிவும் இவரின் தனித்துவம். தமிழில் புகைப்படக்கலை போன்ற கூட்டுவலைப்பதிவுகளில் கலக்கினாலும் Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன்
என்ற இவரின் பதிவு தனித்துவமானது. எம்.எஸ்.வி ஐ வாழும் காலத்தில் கெளரவப்படுத்த வேண்டும் என்னும் இவரின் முனைப்பு இன்னும் ஒரு படி இவர் மேல் மதிப்பை ஏற்படுத்துகின்றது.

தொடர்ந்து நண்பர் சர்வேசனின் முத்தான ஐந்து பாடல்கள் பற்றி என்ன சொல்கின்றார் என்று கேட்போம்.


கானா பிரபாவின் றேடியோஸ்பதியில் புதுப்புது யுக்திகளை புகுத்தி வருகிறார்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சிறப்பு நேயர்' பதிவில், பதிவர்களின் டாப்-5 விருப்பப் பாடல்களை அருமையாக தொகுத்து வழங்குகிறார்.

தமிழ் திரைப்படங்களில் ஆயிரமாயிரம் பாடல்கள் மெய்சிலிர்க்க வைக்கும் ரகம். அதிலிருந்து வெறும் ஐந்து பாடல்களை மிகவும் பிடித்தது என்று எடுத்துத் தருவது ரொம்பக் கஷ்டமான வேலை.கூட்டிக் கழிச்சுப் பாத்தாகூட ஒரு ஐநூறு பாட்டாவது மிகப் பிடித்த தர வரிசையில் இடம்பெறும்.

அதனால, இந்த ஈ.மடலை தொகுக்கும் இந்த ஞாயிறு மதியம், மனதில் உதிக்கும் ஐந்து பாடல்களை தரலாம் என்று முடிவு. (எழுதி அனுப்பின தினம் பெப்ரவரி 25)
பலப் பல பாடல்கள் பிடித்தாலும், சில பாடல்களின் ஆரம்ப இசை கேட்டதும், மனதில் ஒரு சிலீர் தோன்றும். அப்படிப்பட்ட, எனக்கு மிகவும் பிடித்த ஆயிரமாயிரம் பாடல்களில் ஐந்து உங்கள் பார்வைக்கு.

1) ஒரே நாள் உனை நான்..
இளமை ஊஞ்சலாடுகிறது (இளையராஜா)


இந்தப் பாட்டு பாத்த ஞாபகம் இல்லை.
சின்ன வயசுல, ரேடியோல அடிக்கடி போட்டிருப்பாங்கன்னு நெனைக்கறேன்.
அதனாலத்தான் என்னவோ, எப்ப இந்த பாட்ட எங்க கேட்டாலும், நான் மேலே சொன்ன 'சிலீர்' அனுபவம் கிட்டும்.
ஆரம்ப, கிட்டார் strumming ம், அதைத் தொடரும் வயலினும் போதும், இது எப்பேர்பட்ட பாட்டு என்பதைச் சொல்ல.
ஒவ்வொரு interludeல் வரும் கிட்டாரும் சுண்டி இழுக்கும்.
Vow! what a song!
அந்த கால SPB குரல், சொல்லணுமா? கட்டியணைக்கும் ரகம்.
வாணி ஜெயராமின் கணீர் குரலும் அமக்களமா இருக்கும்.

வீடியோவில் பார்க்க

கேட்க



2) எங்கேயும் எப்போதும்...
நினைத்தாலே இனிக்கும் (MSV)


யப்பா யப்பா யப்பா. என்னமாதிரியான பாட்டு இது. இந்த மாதிரி ஒரு துள்ளலான பாடல், இதுக்கு முன்னாடி இருந்ததும் இல்லை, இதுக்கப்பரமும் வந்ததில்லை.
ஆரம்ப கிட்டாரும், பின்னணி ட்ரம்ஸும், அதைத் தொடரும் ட்ரம்பெட்டும் சாமி ஆடவைத்துவிடும்.
இந்தப் பாடலின் ஒரே குறை, கமலின் ஆட்டமும், நம் சூப்பர் ஸ்டார் கிட்டாரை சொறிவதும் தான் ;)
ஒருவேள படம் வந்த நேரத்துல, இந்த டான்ஸ் 'சகித்தல்' ரகமா இருந்திருக்குமோ என்னமோ :)
கண்ணதாசனின் எளிமையான வரிகளும், MSVன் அதிரடி இசைக் கோர்வையும் கேட்டால் ஆடாத கால்களும் ஆடும்.
வழக்கம் போல், SPB இந்த பாடலை பின்னி பெடலெடுத்திருப்பார்.
'இங்கும் எங்கும் நம்முலகம்'னு அசத்துவாரு பாருங்க அசத்தல்.
அடேங்கப்பா, திக்குமுக்காடவைக்கும் பாடல் இது.
MSVக்கும், கண்ணதாசனுக்கும், SPBக்கும் தலை வணக்கங்கள்!

வீடியோவில் பார்க்க

கேட்க



3) என்னைத் தாலாட்ட வருவாளா...
காதலுக்கு மரியாதை (இளையராஜா)


ஹரிஹரன் சின்ன வயசுல ராஜா கிட்ட சான்ஸ் கேட்டு அலஞ்சாராம். ராஜா கண்டுக்காம விட்டுட்டாராம். அவரும் அக்கடான்னு கஜல்ஸ் பாடிக்கிட்டு பொழப்பு நடத்திட்டிருந்தாரு. ரஹ்மான் புண்ணியத்துல சினிமால தலைகாட்டி, அவரு வித்த காட்டினது நமக்கு தெரியும்.
சினிமால பாட ஆரம்பிச்சு கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாகியும், ராஜா ஹரிஹரனுக்கு சான்ஸ் கொடுக்கல. (சான்ஸ் கொடுக்கர மாதிரி பாடல்கள் அமையலையோ?)
90களில் ரஹ்மான் வந்தப்பரம், ராஜாவின் ஆட்டத்தின் வேகம் குறைந்தது போல் தோன்றியது. ரஹ்மான் புகுத்திய புதுமையில் நம்மாளுங்கெல்லாம் மெய்மறந்து கெடந்தோம். சின்ன சின்ன ஆசை, சிக்கு புக்கு ரயிலே, ஒட்டகத்த கட்டிக்கோன்னு மந்திரிச்சு விட்ட மாதிரி இருந்தோம் எல்லாரும்.
ராஜாவும், அப்பப்ப electronics percussion எல்லாம் அங்கங்க போட்டு என்னென்னமோ பண்ணிப்பாத்தாரு எடுபடல.
ஒரு ரெண்டு மூணு வருஷம் பெருசா ஹிட்டும் வரல ராஜாகிட்டயிருந்து.
ஜனமும், ராஜா ரிட்டையர் ஆகவேண்டியதுதான்னு அனத்த ஆரம்பிச்சிருந்த காலம்.
லன்ச் டின்னர் டிஸ்கஷனிலெல்லாம், ரஹ்மான் ஸைட், ராஜா ஸைட்னு டீம் கட்டி சண்டைகள் வலுப்பெற்றிருந்த காலம். ராஜா வலுவிழந்து இருந்தாலும், விட்டுக் கொடுக்காம சண்ட போட்டோம்ல :)

அப்ப வந்ததுங்க இந்த 'காதலுக்கு மரியாதை' படம்.
ஹரிஹரனுக்கு முதல் வாய்ப்பு, ராஜாவின் இசையில்.
அருமையான கதைக்களம் உள்ள படம்.
பாடல் சிச்சுவேஷனும் அருமை.
ஆரம்ப ட்ரம்ஸும் அருமை. அப்படியே, இதையத் துடிப்பு மாதிரி ஆகிடுச்சு.
FMல அந்தப் பாட்டு ஒரு நாளைக்கு நூறு வாட்டி போட்டானுங்க.
டி.வி.ல எல்லாச் சேனல்லயும் இந்தப் பாட்டுதேன்.
ஹரிஹரன் அதுக்கு முன்னாடி எவ்ளவோ பாடல்கள் பாடியிருந்தாலும், இந்த பாடல் தந்த பன்ச் வேற எதுவும் தந்ததில்லை.
பவதாரணியின் ஹம்மிங்குடன் தொடங்கும் இந்தப் பாடல் பலருக்கு காதல் அரும்பக் காரணமான ஒரு பாடல் ;)

வீடியோவில் பார்க்க

கேட்க



4) தூங்காத கண்ணென்று ஒன்று...
குங்குமம் (கே.வி.மகாதேவன்)
சுசீலாவின் குரலில் வரும் இந்தப் பாட்டு கேட்டாலே மனசு இளகிடுது. படத்தின் வீடியோ கெடச்சா யாராவது போடுங்க. இதுவரை பாத்ததா ஞாபகம் இல்லை.

கேட்க



5) காற்றில் எந்தன் கீதம்..
ஜானி (இளையராஜா)


டாப் லிஸ்ட்ல, எஸ்.ஜானகி பாடின பாட்டு இல்லன்னா என் தலை சுக்கு நூறாயிடும் ;)
ஜானகி பாடர மாதிரி ஒரு ஸ்டைல், வேறு பெண் பாடகியர் பாடி நான் கேட்டதில்லை. சுசீலா பாடரதும் பிடிக்கும், ஆனா அவங்க, ரூல்ஸ் படி பாடிட்டு போயிடுவாங்களோ? ஜானகி, SPB மாதிரி, இவங்களுக்கான ஒரு ஸ்டைல் பாடலில் சேர்த்து, மேலும் மெருகேத்துவாங்கங்கரமாதிரி ஒரு தோணல் எனக்கு.
ஜானியில், வரும் "காற்றில்.." பாட்டும் சிலீர் ரகம்.
கிட்டார் ஒரு புறம், மழை சத்தம் மறுபுறம்.
நடுவில், அந்த ஹம்மிங், 'ஹா.. ஆ..ஆ.அ.ஆ. ஆ. ஆ" ன்னு நானும் எவ்ளவோ முயற்சி செய்து பாத்துட்டேன். வர்ல. :)
இந்தப் பாடலின் இசைக் கோர்வை ப்ரமிப்பூட்டும்.
ஃப்ளூட்டு, ட்ரம்பெட்டு, கிட்டாரு, ட்ரம்ஸு, இடி, மழை எல்லாம் சேந்து ஒரு ப்ரவாகமா மாறி மதிமயக்க வைக்கும் பாடல்.
stageல யாராச்சும் இந்த ஹம்மிங்க சரியா பாடினா கண்டிப்பா விசில் அடிச்சு அவங்களுக்கு மரியாதை செய்வேன், எல்லா வாட்டியும்.
ஜானகி மேடம், Salutes!

வீடியோவில் பார்க்க

கேட்க



ஐயோ, அஞ்சு ஆயிடுச்சா அதுக்குள்ள? ஹ்ம். லிஸ்ட்ல எதையாச்சும் எடுத்து, வேற பாட்ட நொழைக்கலாமான்னு தோணுது. ஆனா, அப்படிப் பண்ண ஆரம்பிச்சா அதுக்கு முடிவேயில்லாம போயிட்டே இருக்கும்.
செந்தாழம் பூவில், உறவுகள் தொடர்கதை, சின்னக் கண்னன் அழைக்கிறான், ஞாயிறு என்பது பெண்ணாக, எங்கிருந்தாலும் வாழ்க, நினைவெல்லாம் நித்யா, கனவு காணும் வாழ்க்கையாவும், பூமாலையில் ஓர் மல்லிகை, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தென்றல் வந்து தீண்டும்போது, கீரவாணி, ஓம் நமச்சிவாயா, இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே, லாலி லாலி, கற்பூர பொம்மை ஒன்று, சுந்தரி, தேனே தென்பாண்டி, மண்ணுக்கு மரம் பாரமா, நீதானே என் பொன்வசந்தம், உன்னை நான் சந்தித்தேன், .... இப்படி எழுதிக்கிட்டே போலாமே மக்களே. :)

நல்ல பாடல்களைக் கேளுங்க. கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.

வாய்ப்பளித்த கானா பிரபாவுக்கு நன்னி!

19 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தூங்காத கண்ணென்று ஆகா அருமையான பாட்டாச்சே.. நன்றி சர்வேசன்..

பெரிய லிஸ்ட் வேறு போட்டிருக்கீங்களே. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மற்ற எல்லா பாட்டுமே நல்லப்பாட்டுக்கள்.. ஒரே நாள் பாட்டும் எனக்கு ரொம்பவும் ரொம்பவும்.. பிடித்த பாட்டுதான்..

வடுவூர் குமார் said...

ஐந்தில் நாலு - எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள்.

ஆயில்யன் said...

//வரும் "காற்றில்.." பாட்டும் சிலீர் ரகம்.
கிட்டார் ஒரு புறம், மழை சத்தம் மறுபுறம்.
நடுவில், அந்த ஹம்மிங், 'ஹா.. ஆ..ஆ.அ.ஆ. ஆ. ஆ" ன்னு நானும் எவ்ளவோ முயற்சி செய்து பாத்துட்டேன். வர்ல. :)

//


வாழ்ந்திருக்காருங்க இப்படி ரசித்து ரசித்து,அதான் நல்லா அளந்துருக்காரு:))))

எனக்கு இதுல் மூணு பாட்டு ரொம்ப ரொம்ப புடிக்கும் :)))

M.Rishan Shareef said...

ஆஹா..இன்னிக்கு நண்பர் சர்வேசனா?
(பிரபா,இன்னிக்காவது அவர் புகைப்படம் வாங்கிப் போட்டிருக்கலாமே?)

1. ஒரே நாள் உனை நான்..

இந்தப் பாடல் மனதுக்கு வரும் போது எஸ்.பி.பி யை விட எனக்கு வாணி ஜெயராம் குரல்தான் நினைவுக்கு வருகிறது.அவ்வளவு அழகான கணீராக இருக்கும்.

2. எங்கேயும் எப்போதும்..

மிகவும் துள்ளலான பாட்டு.
பாட்டைக் கேட்கும் போது தன்னால் ஆட்டம் வரும்.
சமீபத்தில் இதனை ரீமிக்ஸ் என்ற பெயரில் 'பொல்லாதவன்' படத்தில் சக்கையாக்கி இருந்தார்கள்.

3. என்னைத் தாலாட்ட வருவாளா...

//இந்த பாடல் தந்த பன்ச் வேற எதுவும் தந்ததில்லை.
பவதாரணியின் ஹம்மிங்குடன் தொடங்கும் இந்தப் பாடல் பலருக்கு காதல் அரும்பக் காரணமான ஒரு பாடல் ;) //

சர்வேசன்,இந்த இடத்துல சஸ்பென்ஸ் வச்சுட்டீங்களே...உங்க காதல் கதையை சொல்லுங்க.. :P

4.தூங்காத கண்ணென்று ஒன்று...

வீடியோ கிடைத்தால் கட்டாயம் தருகிறேன் நண்பரே :)

5.காற்றில் எந்தன் கீதம்..

இது எனக்கும் பிடிச்ச பாடல்..
//stageல யாராச்சும் இந்த ஹம்மிங்க சரியா பாடினா கண்டிப்பா விசில் அடிச்சு அவங்களுக்கு மரியாதை செய்வேன்,//

சமீபத்தில் இளையராஜாவின் இசைமேடையில் ஷ்ரேயா கோஷல் 'காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தோடுதே'பாடினார்கள்.
இடையில் திருத்திக் கொண்டார்கள்.

//எல்லா வாட்டியும்.
ஜானகி மேடம், Salutes! //

ரிப்பீட்டேய்.... :)

நன்றி நண்பர்கள் சர்வேசன் & கானாபிரபா :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தொடர்ந்தும் தன் "பணியை" செய்து ராமராஜன் லெவலுக்கு திடீர் ஹீரோவாகிவிட்டார். அவர் தான் நம்ம சர்வேசன்.
//

காபி அண்ணாச்சியின் இந்த உகு-வை வழியோ வழி என்று வழிமொழிகிறேன்! :-)))

@சர்வேசன்
பாட்டு அத்தனையும் சூப்பர்! இருங்க ஒவ்வொன்னா வாரேன்!

@காபி அண்ணாச்சி
சர்வேசன் படத்தைக் கேட்டு வாங்குறதில்லையா? சர்வேசனைப் பாக்க எம்புட்டு நாளா தவம் செய்யறது? வந்த சான்ஸை விட்டுட்டீங்களே அண்ணாச்சி! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கூட்டிக் கழிச்சுப் பாத்தாகூட ஒரு ஐநூறு பாட்டாவது மிகப் பிடித்த தர வரிசையில் இடம்பெறும்//

எந்தப் பாட்டை றேடியோஸ்பதிக்கு கொடுக்கலாம்-னு ஒரு சர்வே போட்டுறப் போறீங்களோ-ன்னு பயந்துக்கிட்டே இருந்தோம் சர்வேசன்! :-)))

ஒரே நாள் உனை நான் = இது அந்த கிட்டாருக்காகவே கேட்க வேண்டிய பாட்டு! வாணி ஜெயராம் வாலியின் சில "வைர" வரிகளில் கலக்கி இருப்பாரு!
சங்கமங்களில்
இடம்
பெறும்
சம்பவங்களில்
இதம்
இதம்
-ன்னு பாட்டு முழுக்க ஒரே இதம்!

இந்தப் பாட்டு தெலுங்கிலும் வந்துச்சு சர்வேஸ்! வயசு பிலிச்சிந்தி-ன்னு படம்! அதுல சுசீலாம்மா பாடுவாங்க! இலாகே இலாகே சராகம் ஆடித்தே
வயாரம் ஈ யெளவனம் ஒய்யால லூகனே-ன்னு அதுலயும் நல்லா இருக்கும்!

எங்கேயும் எப்போதும் = MSVஇன் இந்தப் பாட்டு காலம் எல்லாம் rocks!
கண்ணதாசன் பாட்டுல வந்த ராக் ஹிட்களில் இது தலையாயது!

அதுல ஒரு பாம்பு ட்யூன் வரும் பாருங்க! எல்லாருக்கும் பிடிக்கும்! எல்லாரும் தலையா ஆட்டி இருப்பீங்க-ன்னு நினைக்கிறேன்! :-)
இப்ப இதை எழுதும் போது கூட "ஆடியேன்" தலையை ஆட்டிக்கிட்டே எழுதறேன்! :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்னைத் தாலாட்ட வருவாளா = ராஜாவுக்கு ஹரிஹரன் கொடுத்த வாய்ப்பு இந்தப் பாட்டு! சொல்லாமச் சொல்லிட்டீங்க! படத்தில் காதலர்கள் மேல் பரிவு வர இந்தப் பாட்டும் ஒரு காரணம்! :-)
பழனி பாரதியின் வரிகள் ஒவ்வொன்னும் சுகம் சுகம்!

தூங்காத கண்ணென்று ஒன்று = அடாடா..என்ன ஒரு (சோகமான ஆனால் சுகமான) தாலாட்டு!
தாங்காத மனம் என்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு

தங்கை பரீட்சைக்குக் கண் விழிச்சிப் படிக்கும் போது இந்தப் பாட்டைப் பாடி கேலி செய்வேன்! :-)

காற்றில் எந்தன் கீதம் = Class of Janaki
சில பாட்டில் குரல் நல்லா இருக்கும். வாத்தியங்கள் அவ்வளவா சோபிக்காது! ஆனா இந்தப் பாட்டில் தேன் குரலும் உண்டு! அத்தனை வாத்தியங்களும் உண்டு! ஒவ்வொன்னும் போட்டி போட்டுக்கிட்டு வரும்! அதுலயும் ஆஆஆஆன்னு பாடிட்டு, காற்-றில் ன்னு நிறுத்துவாங்க பாருங்க! simply awesome!

நன்றி சர்வேஸ்! & காபி அண்ணாச்சி!

//சுசீலா பாடரதும் பிடிக்கும், ஆனா அவங்க, ரூல்ஸ் படி பாடிட்டு போயிடுவாங்களோ?//

இல்லை இல்லை!
ரூல்ஸ் எல்லாம் ஒன்னும் இல்ல! சுசீலாம்மாக்கு மெலடீஸ்-ன்னு ஒரு லேபிள் ஒட்டிக்கிச்சி! ஆனா அதையும் தாண்டி அவங்க பல அதிரடிப் பாடல்களும் கொடுத்திருக்காங்க! சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு-ன்னு சுசீலாம்மா பாடாத குத்துப்பாட்டா? நேரம் வந்தாச்சு! நல்ல யோகம் வந்தாச்சு! டியோம் டியோம்! டியோம் டியோம்!

ஜானகி அவர்களின் குரலில் குழந்தையும் வரும், கன்னிப் பெண்ணும் வரும், அம்மாவும் வருவாங்க! சுசீலாம்மா செலக்டிவாப் பண்ணுவாங்க! அதான் வித்தியாசம்!

G.Ragavan said...

எல்லாமே நல்ல பாட்டுதான். எனக்கும் பிடிச்ச பாட்டுகதான்.

ஆனா ஒன்னு மட்டும் பிடிக்கலை.

// சுசீலா பாடரதும் பிடிக்கும், ஆனா அவங்க, ரூல்ஸ் படி பாடிட்டு போயிடுவாங்களோ? ஜானகி, SPB மாதிரி, இவங்களுக்கான ஒரு ஸ்டைல் பாடலில் சேர்த்து, மேலும் மெருகேத்துவாங்கங்கரமாதிரி ஒரு தோணல் எனக்கு. //

இதுதான் செம காமெடி. இத நீங்க சொல்லிருக்கும் எஸ்.ஜானகியும் எஸ்.பி.பியும் கூட ஒத்துக்கா மாட்டாங்க.

என்னங்க பாடலை அவங்க? குரலை மாத்திப் பாடுனாலோ பாட்டுக்கு நடுவுல சிரிச்சாலோதான் மெருகேத்துறதா? அப்ப அது காமெடிதான். :)

குரலை மாத்தாமலே குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுன்னு பாடுறப்போ குட்டி பத்மினிக்குப் பொருந்தாமலா இருந்துச்சு. குழந்தை பாடுற மாதிரி இல்லைன்னு யாருக்காச்சும் தோணுச்சா?

அதே படத்துல அன்புள்ள மான்விழியேன்னு பாடுறப்ப குழைவு இருக்குமே. காதல் குழைவு.

ஏன் செவ்வந்திப் பூமுடிச்ச சின்னக்கான்னு பட்டிக்காட்டு டப்பாங்குத்துப் பாடலையா. சைரனைப் போலப் பாடனும்னு சொன்னதப் பாடலையா!

கேட்டேளே அங்கே...அதப் பாத்தேளா இங்கே... வாங்கோண்ணா..வாங்கோண்ணா... இதுவும் மெருகேத்துதல் இல்லைன்னா... என்ன சொல்றது.

எஸ்.ஜானகி இளையராஜா இசையில நிறைய பாடியிருக்காங்க. நீங்களும் நிறைய கேட்டிருக்க்கீங்க.. அதுனால ஒங்களுக்கு அப்படித் தோணுது.

துளித்துளி துளித்துளி மழைத்துளி
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே...
காத்தோடு பூவுரச...பூவ வண்டுரச...
லாலீ லாலீ லாலீன்னு நெறையப் பாட்டுக இருக்கு. எடுத்துச் சொன்னா சொல்லிக்கிட்டேயிருக்கலாம்.

G.Ragavan said...

சர்வேசன் இந்தப் பாட்டைக் கேட்டுப்பாருங்க. இதுல எஸ்.பி.பியும் இசையரசியும் பாடியிருக்காங்க. இளையராஜா இசையில்.

http://uk.youtube.com/watch?v=3_qdZdzRvvg&feature=related

இதுலயும் ஒங்களுக்கு மெருகேத்துறது தெரியலைன்னா... ஒன்னும் சொல்றதுக்கில்ல.

இளையராஜா இசைல நெறைய அவங்க பாடலை. அதுனால இளையராஜா பாட்டுகளை நெறைய கேட்டுப் பழகுன ஒங்களுக்கு அவங்க சாதனை புரியலைன்னு தோணுது.

SurveySan said...

ஆஹா. தன்யனானேன்.

வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

:)

கொஞ்சம் இள வயசு ஃபோட்டோவ போட்டுட்டீங்க. சமீபத்திய போட்டோ அனுப்பணுமா? ;)

SurveySan said...

கயல்விழி முத்துலெட்சுமி,

//பெரிய லிஸ்ட் வேறு போட்டிருக்கீங்களே. :)//
என்னங்க பண்றது, அஞ்சு முடிவு பண்றதுக்குள்ள தலையே வெடிச்சிடுச்சு :)

வடுவூராரே, நாலுதான் பிடிக்குமா? எது பிடிக்காதது? சிங்கைக்கு ஆட்டோ அனுப்பணுமா? :)

ஆயில்யன், just 3 ? comeone. :(

ரிஷான், வீடியோ கெடச்சா சொல்லி அனுப்ப்புங்க.

krs, சுசீலாவும் சூப்பர் தான். ஆனா, ஜானகிதான் என் லிஸ்ட்ல டாப்பு :) ஜி.ரா ஆட்டோ அனுப்பிடப் போற்றாரு ;;)

ஜி.ரா, :) எனக்கு சுசீலாவும் ரொம்பப் பிடிக்குங்க. தூங்காத கண்ணென்று ஒன்று இப்ப கேட்டாலும் கண்ணுல தண்ணி வரும். ஆனா, ஜானு தான் டாப்பு ;)
ஒரு சர்வே போட்டு எம் மக்களை கேட்கிறேன். வர்டா ;)

Anonymous said...

சர்வ்ஸ்!
கானாப்ரபா மூலமா நமக்கெல்லாம் இனிய இசைவிருந்து வித்தியாசமா வாராவாரம் கிடைக்க்றதுல மகிழ்ச்சி!
5பாடலக்ளும் அம்ர்க்களம்.. ஒரே நாள் உனை நான்...பாட்டு ஒவ்வொரு நாளும் 2வரியாவது முணு முணுப்பேன்!!! ஆமா என்னாச்சு உங்க பாட்டுக்குப்பாட்டு?

அன்புடன்
ஷைலஜா

இறக்குவானை நிர்ஷன் said...

என்னைத் தாலாட்ட வருவாளா....
ஒரே நாள்... ஆகிய பாடல்கள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். சர்வேசனின் தெரிவுகள் நன்று....

கேட்டுக்கிட்டேயிருக்கலாமில்ல!!!

SurveySan said...

ஷைலஜா, பா.பாட்டு 'எ,ஏ,ய,யா'ல நிக்குது. பாடி அனுப்புங்க ;)

நிர்ஷன், நன்றி.

ஆ.கோகுலன் said...

'எல்லாம் அமையோணும்..' என்று பேச்சு வழக்கில் சொல்வார்களே அதைப்போல் இளையராஜாவுக்கு அமைந்த பாடல்கள் தான் என்னைத்தாலாட்ட வருவாளாவும் காற்றில் எந்தன் கீதமும்.. நன்றி சர்வேசன்

SurveySan said...

gokulan,

amaivadhai payan paduththikkonum. adhuvum mukkiyam :)

கோபிநாத் said...

சாரி ரொம்ப லேட்டு ;))

சர்வேசன் சார்...அனைத்து பாடல்களும் அருமை...அருமை...சூப்பர் தொகுப்பு...;))


வாழ்த்துக்கள் ;)

SurveySan said...

Gopinath, நன்றி.

கானா, உங்க புண்ணியத்துல ஒரு சர்வே போணியாச்சு :)
ஜி.ராவுக்கு ஒரு சூப்பர் பதிவு போணியாச்சு :)

வாழ்க ஜானகி, வாழ்க சுசீலா.
வாழ்க தமிழ் திரை இசை.