Pages

Thursday, May 31, 2007

நீங்கள் கேட்டவை 7



வணக்கம் நண்பர்களே

நீங்கள் கேட்டவை 7 பகுதியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியிலும் ஏற்கனவே பாடற் தெரிவைக் கேட்ட அன்பர்களின் விருப்பப்பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன.முதலில் வழமை போல் என்விருப்பப் பாடல் ஒன்று. இன்றைய என் விருப்பப் பாடலாக வருவது "புவனா ஒரு கேள்விக்குறி" திரைப்படத்தில் இருந்து எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடும் "விழியிலே மலர்ந்தது" என்ற பாடல். பாடலுக்கான இசை இசைஞானி இளையராஜா. இளையராஜாவின் ஆரம்பகால இசையில் வந்த இந்தப் பாடலில் வித்தியாசமான நெளிவு சுழிவு மெட்டோடு பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். கடந்த வாரம் வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் இசைக்கச்சேரி பார்த்துவிட்டு வரும் போது அவர் வீணையில் இசைத்த இந்தப் பாடல் கொண்ட இசைத் தட்டையும் வாங்கினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்க வேண்டும் என்று தூண்டிவிட்டது அவர் மீள் இசையாகக் கொடுத்திருந்த விதம். இதோ என்னோடு சேர்ந்து நீங்களும் கேட்டு இன்புறுங்கள்.


இன்றைய நீங்கள் கேட்டவை பகுதியிலே இடம்பெறும் பாடல்கள் இதோ:
வல்லி சிம்ஹனின் விருப்பத் தேர்வில் நாடோடி மன்னன் திரைக்காக பி.பானுமதி பாடிய "சம்மதமா" என்ற பாடல். பாடல் இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு

இந்துமகேஷ், விப்ரநாராயணா திரைப்படத்திற்காக ஏ.எம்.ராஜா பாடிய "மலரின் மதுவெல்லாம்" என்ற பாடலை விரும்பிக் கேட்டிருக்கின்றார். இந்தப் படத்தின் இசை எஸ்.ராஜேஷ்வர ராவ்

சிவாவின் விருப்பமாக நிழல் நிஜமாகிறது படத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "கம்பன் ஏமாந்தான்" பாடலைப் பாடுகின்றார்.

ஜெய்சங்கரின் விருப்பப் பாடலாக ஆவாரம் பூ திரைப்படத்திற்காக "ஆலோலம் பாடி" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் இளையராஜா.

நண்பர்களே!
அடுத்த சுற்றுக்கான உங்கள் பாடல் தெரிவுகளை அனுப்பிவையுங்கள் அவை தொடர்ந்த வாரங்களில் இடம்பெற இருக்கின்றன.
என் விருப்பப் பாடல்


நீங்கள் கேட்டவை 7 பாடல்கள்
Powered by eSnips.com

11 comments:

Anonymous said...

நீங்கள் கேட்டவை ஏழு இனிமையான பாடல்களுடன் கூடிய சிறந்த தொகுப்பு. இப்பணி தொடர வாழ்த்துக்கள் பிரபா!

என் விருப்பப்பாடல் - மோக முள் படத்தில் இளையராஜாவின் இசையில் எம்.ஜி.ஸ்ரீகுமார் பாடிய "சொல்லாயோ வாய் திறந்து" என்ற பாடல்.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

(புது)வீட்ட போய்த்தான் பாட்டைக் கேட்கலாம்.

நேயர் ஷ்ரேயா சிட்னியிலிருந்து விரும்பிக் கேட்பவை:
1) ஈரமான ரோஜாவே..என்னைப் பார்த்து மூடாதே
2) புத்தியுள்ள மனிதரெல்லாம்...
3) என்ன படமென்டு ஞாபகம் வருதில்ல.. ஷாலினி பேபியா நடிச்சிருந்தா. ரகுவரன் அவட சித்தப்பா, நதியாவுக்கு இரட்டை வேடம். ஒரு பாட்டில ரகுவரன் மேடையில மயங்கி விழுற மாதிரி நடிச்சு, ஷாலினி எழும்பச் சொன்னோண்ண எழும்பிப் பாடுவாரே.. அந்ந்ந்ந்தப் பாட்டு.
4) கற்பூர முல்லை ஒன்று..காட்டாற்று வெள்ளமென்று..
5) ஓ butterfly butterfly..நீ விரித்தாய் சிறகை..

இயலுமானதைத் தாருங்க அண்ணாச்சி..

SurveySan said...

கன்னிராசி,
சுகராகமே என் சுகபோகம் நீயே.

நன்னி!

கானா பிரபா said...

//வெயிலான் said...
என் விருப்பப்பாடல் - மோக முள் படத்தில் இளையராஜாவின் இசையில் எம்.ஜி.ஸ்ரீகுமார் பாடிய "சொல்லாயோ வாய் திறந்து" என்ற பாடல். //

அருமையான பாடலைக் கேட்டிருக்கின்றீர்கள் தென்றல், இதே பாடலை ஜானகியும் பாடியிருப்பார். உங்கள் பாட்டு கட்டாயம் வரும்.

கானா பிரபா said...

//மழை` ஷ்ரேயா(Shreya) said...
(புது)வீட்ட போய்த்தான் பாட்டைக் கேட்கலாம்.//

மழை

நீங்கள் புதுவீட்டுக்கு போகமுதல் பாட்டு வரும் ;-)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

இல்லையே.. நான் புது வீட்ட போயிட்டன். பாட்டு இன்னும் வரேல்லயே!! :O)

வல்லிசிம்ஹன் said...

மறுபடியும் மறுபடியும் ஒரே வார்த்தைதான் உங்கள் சேவைக்கு.
நன்றி.நன்றி.
இந்தப் பாட்டு சம்மதமா போல,
இன்னோரு பாடல் "ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் சாமத்திலெ "என்ற பாட்டு. திருச்சி லோகநாதனும்,ஜமுனாராணியும்னு நினைக்கிறேன்.
படம் மறந்து போச்சு.
2 ஆவது பாட்டு வசந்த முல்லை.
சாரங்கதாரா என்னும் படம்.
டி.எம்.எஸ் பாடினது
3ஆவது சீர்காழியின் ..சிரிப்புத்தான் வருகுதைய்யா....
கிடைத்தால் போடுங்கள் பிரபா.

கானா பிரபா said...

மழை

வரும் வியாழன் நீங்கள் கேட்டவை 8 இல் உங்கட பாட்டு வரும்,

வல்லி சிம்ஹன்

உங்கள் வருகைக்கு நன்றி, கட்டாயம் உங்க தேர்வு வரும்.

Anonymous said...

பிரபா!
எனது
விருப்பப்
பாடலைத்
தந்தமைக்கு
நன்றி.
கிட்டத்தட்ட
40
ஆண்டுகளுக்குப்
பிறகு
இப்போது
கேட்கும்போதும்
மனது அந்தச்
சின்னப்
பையனாக
அந்தக்காலத்துக்கு
ஓடிவிட்டது.
பழைய
பாடல்களை
மறுபடி
கேட்க
முடியாத ஒரு
காலகட்டத்தில்
இருந்தும்
அவற்றைத்
தேடித்
தரும்
உங்கள்
பணிக்கு
வயோதிபர்
உலகம்
மிகவும்
நன்றிக்
கடப்பாடுடையது.

அடிக்கடி
பழைய
பாட்டுக்களைக்
கேட்டு
உங்களைச்
சிரமப்படுத்தாமல்
புதுப்பாட்டு
ஒன்றை என்
விருப்பமாக
உங்களிடம்
கேட்கலாம்
என்று
நினைக்கிறேன்.

(பழையதும்
புதியதுமாய்
பாடல்கள்
கலந்து
வருவதால்
நீங்கள்
கேட்டவை
களைகட்டும்.
கிழவன்
கேட்கிற
பாட்டைப்
பாரன் என்று
நீங்கள்
கொடுப்புக்குள்ளை
சிரிக்கப்படாது
என்பதற்காக
இந்த
நியாயப்படுத்தல்)


பாடல்: ஏதோ
நினைக்கிறேன்.
படம்:
தலைநகரம்.
பாடியவர்கள்
யாரென்று
தெரியவில்லை.


இந்தப்பாடல்
பல
ஆண்டுகளுக்கு
முன்பு
எம்.எஸ்.
விஸ்வநாதன்பாடிய
சொல்லத்தான்
நினைக்கிறேன்
பாடலின்
வரிகளை
எனக்கு
நினைவூட்டுகிறது.

அந்த
நாளையில
என்னைப்போல
இளந்தாரியள்
அப்படிப்
பாடினால்
இந்த
நாளையிலை
உங்களைப்போன்ற
இளந்தாரிகள்
இப்படித்தான்
பாடுவீர்கள்.

அந்தநாட்களில்
குரலைவைத்து
பாடியவர்
யாரென்று
சட்டெனச்
சொல்லிவிடலாம்.
புதியவர்களில்
யார் எவர்
என்று
கண்டுபிடிக்க
முடிவதில்லை.

பழைய
பாடல்களில்
பி.பி.சிறீனிவாஸ்
அவர்களது
பாடல்களை
அதிகம்
இரசிப்பேன்.

அவரது
பாடல்களில்
பெரும்பாலானவை
எல்லோரையும்
கவர்ந்த
பாடல்கள்தான்.

"வாழ்க்கை
வாழ்வதற்கே!"
என்றொரு
படம் அதில்
வந்த
அனைத்துப்
பாடல்களும்
எனக்குப்பிடித்தவை.

அதில் ஒரு
பாடல்:
சிறீனிவாஸ்
சுசீலா
இணைந்து
பாடிய

"நான் பாடிய
பாடல்" என்ற
பாடல்.
வசதிப்படும்போது
தாருங்கள்.

நீங்கள்
கேட்டவையில்
வரும்
அத்தனை
பாடல்களுமே
முத்தானவைதான்.


அந்த "ஊரார்
உறங்கையிலே"
பாட்டைக்
கேட்க
நினைத்துக்கொண்டிருந்தேன்.
வல்லிசிம்கன்
விரும்பிக்
கேட்டிருக்கிறார்.
அவருக்கு
நன்றி.

பாட்டைப்
போட்டபிறகு
உங்களுக்கு
நன்றி.


தொடர்க.

அன்புடன்
இந்துமகேஷ்

கானா பிரபா said...

வணக்கம் அண்ணா

உங்களைப் போன்ற பெரியவர்களுக்கு என்னால் முடிந்த இசையின்பம் கொடுப்பது பேரானந்தம், தொடர்ந்து தனிமடலிலோ அல்லது பின்னூட்டமாகவோ கேளுங்கள் தருகின்றேன்.

சஞ்சயன் said...

அய்யா!இந்த பாட்டையும் போடுங்கோவன்.

மேகமே மேகமே
படம்: பாலைவனச் சோலை
பாடியவர்: வாணி ஜெயராம்

ஏழு பாட்டு எழுதவில்லை..தவணை முறையில் கேட்கிறனே...