Pages

Friday, May 4, 2007

நீங்கள் கேட்டவை 4


வணக்கம் நண்பர்களே

இன்றைய நீங்கள் கேட்டவை பகுதியில்

1. சினேகிதி விரும்பிக்கேட்ட "சங்கர் குரு" திரைப்படப்பாடலான "சின்னச் சின்னப்பூவே" கே.ஜே.ஜேசுதாஸ், ஜானகி குரல்களில் ஒலிக்கின்றது. சினேகிதி கேட்ட பெண்குரல் பாடல் பின்னர் வரும். இப்பாடலின் இசை சந்திரபோஸ்

2.வெங்கடேஷ் வரதராஜன் விரும்பிக்கேட்ட "கல்யாண ராமன்" திரைப்பாடலான "மலர்களில் ஆடும்" பாடல் இளையராஜா இசையில் எஸ்.பி.சைலஜா பாடுகின்றார்.

3. ராதா சிறீராம் விரும்பிக்கேட்ட "பிராப்தம்" திரைப்பாடலான " சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து" பாடல் ரி.எம்.செளந்தரராஜன், பி,.சுசீலா குரல்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை வழங்கியிருக்கிறார்

4. சிந்தாநதியின் விருப்பமாக ஜி.கே.வெங்கடேஷ் இசையில் "மல்லிகை மோகினி" திரைப்படத்திலிருந்து "மேகங்களே பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் ஒலிக்கின்றது.

5. வல்லி சிம்ஹனின் விருப்பமாக சீர்காழி கோவிந்தராஜன் பாடிய
"இன்பம் எங்கே" பாடல் "மணமுள்ள மறுதாரம்" திரைப்படத்திற்காக கே.வி மகாதேவன் இசையில் மலர்கின்றது.

பணி நிமித்தம் காரணமாக நீங்கள் கேட்டவை பகுதி 4 குரற்பதிவாக வழங்கமுடியவில்லை. அடுத்த வாரம் சிறிது ஓய்வோடு மீண்டும் மறுவாரம் நீங்கள் கேட்டவை 5 இடம்பெறும்.
Powered by eSnips.com

34 comments:

வி. ஜெ. சந்திரன் said...

நம்மளுக்கு 2 பாட்டு போடுங்க


1. ஒரு ஜீவன் அழைத்தது
2. என் ஜீவன் பாடுது

சினேகிதி said...

tx prabanna but enada intha paadu iruku enaku female version than venum :-)

Moongil ilai kaadukale ilaum male version iruku enada athilaum female version than venum.

"unaye kalyanam panikiren" la irunthu nan keda paadalgal irukuta?

Kaathalar geethangalum nala paadukal!

பொன்ஸ்~~Poorna said...

பிரபா,
நம்ம பட்டியல்:
1. சொல்லத்தான் நினைக்கிறேன் - படம்: சொல்லத்தான் நினைக்கிறேன்
2. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நெஞ்சிலோர் ஆலயம்
3. நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை.. (படம் பெயர் தெரியலை..)

இன்னும் நிறைய பாட்டு இருக்கு.. இப்போதைக்கு மறந்து போச்சு.. அப்புறமா வரேன்..

எப்படியும் எல்லாத்தையும் சேர்த்துப் போட முடியாதே, மெல்லக் கொடுங்க..

Chandravathanaa said...

கானா பிரபா
இன்னொரு பாடலைத் தேடுகிறேன். ஒலி வடிவில் சில வருடங்களுக்கு முன் கேட்டது.
இப்போது எங்குமே கிடைக்குதில்லை.
ஹரிஹரன், சுஜாதா பாடிய பாடல். என்னைத் தாலாட்ட வருவாளா என்ற படத்தில் இடம் பெற்றது.
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
வீட்டில் யாரும் இல்லை.
வெளியில் யாரும் இல்லை
ஊரில் ஒரு ஓசை இல்லை..
என்று தொடர்கிறது

G.Ragavan said...

கேட்டேன். கேட்டேன். கதம்பம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு பாட்டு. எம்பதுகளின் மத்தியில் வந்த பாட்டு முதலில். பிறகு எழுபதுகளின் இறுதியில் வந்த பாடல். பிறகு அறுபதுகளின் இறுதியில் வந்த பாடல். பிறகு மீண்டும் 80. அடுத்து 50. அப்பப்பா! நல்ல கதம்பந்தான்.

அத்தோட முடிஞ்சதா? வந்ததுக்கு அடுத்து ரெண்டு பாட்டு கேக்கனுமே.
1. மண்ணில் வந்த நிலவே என்ற பாடல் நிலவே மலரே என்ற படத்திலிருந்து.
2. ஒனக்கெனத்தானே இந்நேரமா என்ற பாடல் பொண்ணு ஊருக்குப் புதுசு என்ற படத்திலிருந்து
3. சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது என்ற பாடல் சரணம் ஐயப்பா படத்திலிருந்து.
ரெண்டுன்னு சொல்லி மூனு கேட்டுட்டேன். வர்ரேன்.

கானா பிரபா said...

கானா பிரபா said...
//வி. ஜெ. சந்திரன் said...
நம்மளுக்கு 2 பாட்டு போடுங்க//

வி ஜெ

நீங்கள் கேட்ட இரண்டு பாட்டும் ஒவ்வொன்றாக நல்ல ஒலித்தரத்தில் வரும். நம்ம ராசாவின் பாட்டாச்சே.

//சினேகிதி said...
tx prabanna but enada intha paadu iruku enaku female version than venum :-)//

வணக்கம் தங்கச்சி

பெண் குரல் தற்சமயம் கடையில் இல்லை, பக்கத்துக் கடைக்காரரிடம் வாங்கி பிந்திய பதிவில் தாறேன். இப்போதைக்கு இதைக்கேளுங்கோ.

கருத்துக்கு நன்றி ;-)

கானா பிரபா said...

// பொன்ஸ்~~Poorna said...
பிரபா,
நம்ம பட்டியல்:
1. சொல்லத்தான் நினைக்கிறேன் - படம்: சொல்லத்தான் நினைக்கிறேன்
2. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நெஞ்சிலோர் ஆலயம்
3. நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை.. (படம் பெயர் தெரியலை..)//

வணக்கம் பொன்ஸ்
உங்க பாட்டுக்கள் சீக்கிரமே வரும். நீ இல்லாத உலகத்திலே பாடல் தெய்வத்தின் தெய்வம் படத்தில் வந்தது.

பாரதிய நவீன இளவரசன் said...

Kaana Praba... my heartfelt thanks to you! i really loved hearing this song...

கொழுவி said...

//நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை.. //

பொன்ஸ் நம்பிக்கையை தளர விடாதீர்கள். அதனை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும் :(

கானா பிரபா said...

//Chandravathanaa said...
கானா பிரபா
இன்னொரு பாடலைத் தேடுகிறேன். ஒலி வடிவில் சில வருடங்களுக்கு முன் கேட்டது.
இப்போது எங்குமே கிடைக்குதில்லை.
ஹரிஹரன், சுஜாதா பாடிய பாடல். என்னைத் தாலாட்ட வருவாளா என்ற படத்தில் இடம் பெற்றது.//

வணக்கம் அக்கா

நீங்கள் கேட்ட பழைய பாட்டோடு இந்தப் பாடலும் வரும்.

கானா பிரபா said...

// G.Ragavan said...
கேட்டேன். கேட்டேன். கதம்பம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு பாட்டு. //

வாங்க ராகவன்

நீங்கள் கேட்ட பாட்டுக்களும் அருமை, கட்டாயம் வர இருக்கின்றன.

Vasanthan said...

உங்கள் எல்லாப் பாடல்களுமே ஒலித்தரம் சிக்கலாகத்தான் இருக்கின்றன.
ஆனால் வானொலியில் நேரடியாகக் கேட்பதுபோன்றே தோன்றுகிறது.
வேண்டுமென்றுதான் செய்கிறீர்களாஃ

Vasanthan said...

தங்கிலீசில எழுதிற ஆளுக்கெதிரா ஒரு போராட்டம் செய்ய வேணும்.
தொடர்ச்சியா இப்பிடி எழுதிறவவின்ர பின்னூட்டங்களை வெளியிடாமல் விட்டால் என்ன? எல்லாரும் சேந்தால் மாத்தலாமெல்லோ?

கானா பிரபா said...

வசந்தன்

இயன்றவரை சீடியில் இருக்கும் பாடல்களைத் தான் தருகின்றேன், திட்டமிட்டு எதுவும்
செய்யவில்லை ;-)


ஆங்கிலத்தில தமிழ் எழுதிறது தான் இப்ப நாகரீகமாம் ;-)

பாரதிய நவீன இளவரசன் said...

//தங்கிலீசில எழுதிற ஆளுக்கெதிரா ஒரு போராட்டம் செய்ய வேணும்.
தொடர்ச்சியா இப்பிடி எழுதிறவவின்ர பின்னூட்டங்களை வெளியிடாமல் விட்டால் என்ன? எல்லாரும் சேந்தால் மாத்தலாமெல்லோ? //
//ஆங்கிலத்தில தமிழ் எழுதிறது தான் இப்ப நாகரீகமாம் ;-)//

மன்னிக்க வேண்டும் தலைவா! நான் அப்போது கம்பெனியின் (தமிழ் எழுத்துரு இல்லாத) மற்றொரு கணினியில் இருந்தேன். இப்போது என் அலுவலகத்தில் உள்ள எனது கணினியில் உள்ளேன். அதுதான் இந்த ஆங்கிலப் பின்னூட்டத்திற்கான காரணம். மீண்டும் ஒரு முறை மன்னிக்க வேண்டுகிறேன்.

சரி.. விஷயத்திற்கு வருவோம்... கான பிரபா, கல்யாணராமன் படத்தில் வந்த 'மலர்களில் ஆடும் இளமை' பாடல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை; ஒரு வாரகாலமாக தோஹா நகரில் பல கடைகளில் ஏறி இறங்கிப் பார்த்துவிட்டேன். download செய்யும் வசதியும் இங்கு இல்லை. தயை கூர்ந்து எனக்கு மின்மடல் மூலம் அப்பாடலை அனுப்பிவைக்கவும்.

நன்றி.

vencut underscore v at yahoo dot com

கானா பிரபா said...

//Bharathiya Modern Prince said...
Kaana Praba... my heartfelt thanks to you! i really loved hearing this song...//

மிக்க நன்றி வெங்கடேஷ்

//மன்னிக்க வேண்டும் தலைவா! நான் அப்போது கம்பெனியின் (தமிழ் எழுத்துரு இல்லாத) மற்றொரு கணினியில் இருந்தேன்.//

உங்களைக் குறிப்பிடவில்லை நண்பரே ;-).
மேலே எங்கள் தங்கச்சி தமிங்கிலிஷில் விளையாடியிருக்கிறார். பார்க்கவும்.

நீங்கள் கேட்டது அனுப்பிவைக்கப்படும். மன்னிப்பெல்லாம் கேட்டு எங்களைப் பெரியமனிதர் ஆக்கவேண்டாம் ;-))

Radha Sriram said...

கானா பிரபா,
ரொம்ப நன்றி என்னொட பாட்ட போட்டதுக்கு. இதெல்லாம் எங்கேயோ பின்னாடி நியாபகத்துல இருந்த பாட்டு.
அதே மாதிரி என்னோட அடுத்த சுற்றுல

"சக்கர கட்டி ராஜாத்தி என் மனச வச்சுகோ காபாத்தி"

உங்க கிட்ட இன்னொண்ணும் கேக்கணூம்.....நான் சின்ன பொண்ணா இருந்தப்பொ எங்க அம்மால்லாம் சிலோன் ரேடியோல ஞாயிற்று கிழமை "இரை தேடும் பரவைகள்"ன்னு ஒரு ட்ராமா கேப்பாங்க..அத பத்தி ஏதாவது தெரியுமா??

கானா பிரபா said...

வணக்கம் ராதா சிறீராம்

உங்க அடுத்த பாட்டு அடுத்த சுற்றில் வரும்.
இரை தேடும் பறவைகள் மிகப் பிரபலமான நாடகம். அதில் நடித்த பிரபல கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் இணையத்தளம் இதோ
http://actorksbalachandran.blogspot.com/

பாரதிய நவீன இளவரசன் said...

நன்றி :)

Anonymous said...

வணக்கம்
கானா பிரபா

மிக அபூர்வமான பாடல்கள் கேட்க கொடுத்ததற்கு நன்றி

ஞாபகங்களின் பழைய அடுகுகளில் இருந்த பாடல்கள் மிக்க நன்றி

Haran said...

கானா பிரபா... ஒங்க பாட்டுங்க போடுற சேவ பாருங்க.. ரொம்ப நன்னாயிட்டு இருக்கு...

நேக்கும் மூணு பாட்டு போடுவேளோ???

1 - அதொ அந்தப் பறவை போல (ஒரே வானிலே)
2 - அந்த நாள் முதல் இந்த நாள் வரை...
3 - மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...

நன்றிங்க...

ஹரன்

Haran said...

அதென்ன சந்திரன்.. தன் ஜீவனைத் தேடுறார்??? என்ன நடக்குதிங்க?? :P
உசிரோட தானே இருக்கிறார்... பிறகென்னவாம்.

கானா பிரபா said...

//இராஜராஜன் said...
வணக்கம்
கானா பிரபா

மிக அபூர்வமான பாடல்கள் கேட்க கொடுத்ததற்கு நன்றி//

வணக்கம் இராஜராஜன்

உங்களின் விருப்பத்தேர்வுகளைத் தாருங்கள் அவை பதிவாக வரும்.
வருகைக்கு மிக்க நன்றிகள்

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நல்ல தொகுப்பு பிரபா.

எனக்கும் ஒரு பாட்டுப் போட வேணும். ஒரு பாட்டு, நல்ல முசிப்பாத்தியாம் என்டு எனக்கு ஒருத்தர் சொன்னவர். அவர் சொல்லிக் காட்டின மட்டுக்கும் பார்த்தால் அப்பிடிப் போலதான் கிடக்கு. என்ன படமென்றுதான் ஞாபகமில்லை அவருக்கு.
பாட்டு இதுதான்:

'பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போலே முன்னால் போனாள், பின்னல் கண்டு அவள் பின்னால் சென்று பொண்ணு ஊருக்குப் புதுசோ என்றேன், காலில் உள்ளது புதுசு என்றாள்.. ஓ! மேலே கேட்காதே'

அவளவும்தான் அந்தாள் எனக்குப் பாடிக்காட்டினார். பிரபா.. கேட்டுட்டன்..பாட்டைத் தரவேணும் :O)(இங்க போடாமல் மின்னஞ்சலில அனுப்பினாலும் சரிதான்)

கானா பிரபா said...

//Haran said...
கானா பிரபா... ஒங்க பாட்டுங்க போடுற சேவ பாருங்க.. ரொம்ப நன்னாயிட்டு இருக்கு... //


தம்பி ஹரன்

ஒண்டில் இந்தியத் தமிழில் எழுதோணும் அல்லது மலையாளத்தில எழுதோணும் இரண்டும் கெட்டானா இருக்கிற பருவம் எண்டு தெரியுது.

//Haran said...
அதென்ன சந்திரன்.. தன் ஜீவனைத் தேடுறார்??? என்ன நடக்குதிங்க?? :P
உசிரோட தானே இருக்கிறார்... பிறகென்னவாம். //

உமக்கந்தக் கொடுப்பினை இல்லைப்போல

கானா பிரபா said...

//மழை` ஷ்ரேயா(Shreya) said...

நல்ல தொகுப்பு பிரபா.

எனக்கும் ஒரு பாட்டுப் போட வேணும். ஒரு பாட்டு, நல்ல முசிப்பாத்தியாம் என்டு எனக்கு ஒருத்தர் சொன்னவர்.//

கன காலத்துக்குப் பிறகு மழை அடிச்சிருக்கு வாருங்கோ ;-)

நீங்கள் கேட்ட பாட்டு 80 களில் ஒரு கலக்கு கலக்கின பாட்டு. நான் சின்னனாக இருக்கும் போது அண்ணன் போல இளவட்டங்கள் பாடிக்கொண்டிருந்த குஷியான பாட்டு. பாலைவனச்சோலை படத்தில் வந்த பாட்டு அது. பாட்டு நிச்சயம் வரும்.

பாலைவனச்சோலை படம் பற்றி எழுதவும் இருக்கிறேன்.

Unknown said...

Nanrikal "Kana Priaba" ungal Sevaikku, Intha "fast world" il ippadi paddukalai thokutthu kedpathil sugam than.

கானா பிரபா said...

மிக்க நன்றி ag
அடிக்கடி வாருங்கள், பாடல்களை கேளுங்கள்.

கதிரவன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபா !!

என் விருப்பமாக இப்போதைக்கு 2பாடல்கள்

1) "சிப்பி இருக்குது முத்தும் இருக்குது" - படம்:வறுமையின் நிறம் சிகப்பு
2) "கொடுத்தவனே பரித்துக்கொண்டாண்டி" படம்:தங்கப்பதுமை

கானா பிரபா said...

ரொம்ப நன்றி கதிரவன்

நீங்க கேட்ட பாட்டு நிச்சயம் வரும், மடல் அனுப்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

பிரபா, நாட்கள் கழித்து வருவதற்கு மன்னிக்கவும்.

சீர்காழியின் குரல் ஒலிக்கக் கேட்டு
மிக்க இன்பம்.
நன்றி..நன்றி.
உங்கள் சேவை என்றும் நிலைத்து எல்லோருக்கும் மகிழ்ச்சி கொடுக்கணும்.

கானா பிரபா said...

வல்லிசிம்ஹன்,

பாட்டுக் கேட்டுக் கருத்தனுப்பியதற்கு நன்றிகள், இன்னும் கேளுங்க கொடுப்போம் ;-)

Anonymous said...

ValliSimhan Avargal, Seerkazhiyai patri sonnathum oru vishayam gnabhagathirku varugirathu. Jaya TV-il "Sokkuthe Manam" nigazhchiyil oru Sardarji appadiye Seerkazhi avargalaipolave padugirar. Nigazhchiyin vadivam DD-yil vantha/varum "Thulla Manamum Thullum" nigzhchiyin nagalaga irunthpothum rasikkum padi ullathu.

Thangal padhivugal nandraga ullana. Nandri

Srinivasan

கானா பிரபா said...

வணக்கம் சிறீனிவாசன்

முதலில் தங்கள் வருகைக்கு என் நன்றிகள். சீர்காழி கோவிந்தராஜனின் பாடலைப் பாடும் அந்த சீக்கிய அன்பரின் பேட்டியை நானும் ஒரு சஞ்சிகையில் வாசித்த ஞாபகம் வருகின்றது. தெய்வீகக்குரலுக்குச் சொந்தக்காரர் சீர்காழி வாழ்ந்த காலத்தில் ஒருபகுதியாவது நாமும் வாழ்ந்திருப்பது மிகப்பெருமை.