Pages

Friday, May 18, 2007

"அழகு" ராணிகள் Rated MA 18+



வலைப்பதிவுலகில் காலத்துக்குக் காலம் பரவும் வைரஸ் காச்சல்களாக, சங்கிலிப் பதிவு, நன்றியுள்ள நாலு பேர், சங்கிலிப் பதிவு, வியேட் பதிவு வரிசையில் அழகுப் பதிவுகளும் வந்து ஓய்ந்துவிட்ட வேளை நானும் என் பங்கிற்கு அழகு குறித்த என் பார்வையைத் தரலாம் என்றிருக்கின்றேன். ஆளாளுக்கு வானத்தை வெறிச்சுப் பார்த்தும், கடல் அலையைக் கால்கள் தொட்டுப் பார்த்தும் அழகுக் கவிதைகள் எழுதிவிட்டார்கள். நமக்கெல்லாம் கவிதைகள் சரிப்பட்டு வராது. "செய்யும் தொழிலே தெய்வம்" ( பாட்டுப் போடுறது) என்று மனசைத் திடப்படுத்திக் கொண்டு எனக்குப் பிடித்த அழகு ராணிகளைப் பற்றிச் சொல்லப் போகிறேன். முதலில் இந்த அழகுப் பதிவுக்கு என்னை இழுத்து வந்த பாலைவனத்துச் சிங்கம் கோபிநாத்துக்கு ஒரு சலாம்.

தமிழ் சினிமா நாயகிகளைக் கவர்ச்சியின் உருவமாகப் பார்த்து ஏங்கும் பதிவல்ல இது. என்னுடைய காலத்தில் கடந்து போகும் சினிமா ரசனைகளில் வழித்துணையாக வந்து போன நாயகிகளுக்கான கெளரவமாக வேண்டுமென்றால் சொல்லலாம். இந்த ராணிகள் நடித்துப் போன படங்களில், என்னைக் கவர்ந்த பாடல் ஒன்றும், றேடியோஸ்பதியின் விதிமுறைகளைச் சற்றே விலக்கி வைத்து ஓளிக்காட்சியையும் இப்பதிவில் தருகின்றேன்.


அந்த வரிசையில் எனக்குப் பிடித்த ஆறு அழகு ராணிகள் இதோ.
அழகு ராணி ஒன்று: அர்ச்சனா


நடராஜா மாமா வீட்டு திண்ணையில் ஒரு கூட்டம் அயற் சனம் கூடி இருக்க, சின்னப்பிள்ளைகளோடு ஒருவனாக, ஆவென்று புதினமாகப் பார்த்த படம் "நீங்கள் கேட்டவை". அந்த வயசிலும் அர்ச்சனா என்ற அந்த நாயகியை ஏதோ பக்கத்துவிட்டு அக்காவின் நடையுடை போல ஒரு உணர்வு தோன்றிய காலம் அது. கண்களும் சிரிக்க ஒரு மிரளல் பார்வையோடு நடித்த அர்ச்சனாவின் பிள்ளையார் சுழி அது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்தி சொன்னது போல, தமிழ் சினிமா நாயகியின் பொருத்தமான அடையாளமாக அர்ச்சனாவைச் சொல்லலாம்.

நல்ல சினிமாவைத் தேடி ரசித்துப் பார்த்த காலத்தில் அர்ச்சனாவின் இயல்பான நடிப்பை அவர் நடித்த "வீடு" படத்தின் மூலம் உள்வாங்கிக்கொண்டேன்.

அழகி படத்தில் நடிக்கவைக்க இயக்குனர் தங்கர்பச்சன் நந்திதா தாசைத் தேடி வட நாட்டுக்கு போயிருக்கத் தேவையேயில்லை. உள்ளூரில் அகப்படும் அர்ச்சனாவே மிகப்பொருத்தமாக இருந்திருப்பார்.
தேசிய விருதுக் குழுவிற்கு மட்டுமே தெரிந்த அர்ச்சனாவின் நடிப்பின் பெருமையை சினிமா உலகம் பயன்படுத்தத் தவறிவிட்டது. இப்போது பரட்டைக்கு அம்மாவாக நடிக்க வேண்டிய தரத்தில் அர்ச்சனாவின் நிலை.

அர்ச்சனாவின் நடிப்பைக் காட்ட முடியவில்லை. அவர் நடித்த நீங்கள் கேட்டவை படத்தின் அருமையான பாடலைக் கேளுங்கள். காட்சியையும் பார்த்து அனுபவியுங்கள். இந்த "ஓ வசந்த ராஜா" பாடலைப் பார்க்கும் போது ஒரு புதுமையையும் காண்பீர்கள். அது, பாடலின் முன் பாதி இந்திய சங்கீதப் பாணியிலும் பாடலின் மறு பாதி மேற்கத்தேயப் பாணியிலும் இருக்கும். அதை அப்படியே உள்வாங்கிப் பாடல்காட்சியும் இரண்டு கலப்பிலும் இருக்கும்.


பாடலைப் பார்க்க



அழகு ராணி இரண்டு: ரேவதி





பாரதிராஜாவின் "மண்வாசனை"யில் தோன்றிய "ரா" வரிசை நாயகி இவர், புதிதாக நடிக்க வரும் நடிகைகள் பயன்படுத்தும் கெளரவமான நடிப்பின் அடையாள அட்டை இவர் எனலாம். "நான் நடிச்சா ரேவதி மாதிரி பாத்திரங்களில் நடிக்கணும்" என்று போனவாரம் திரையுலகிற்கு வரும் நாயகி கூட சொல்லும் அளவிற்குக் கெளரவமான நடிப்பின் சொந்தக்காரி.


என் ரசனையில் ரேவதியின் நடிப்பின் பரிமாணத்தை மண்வாசனை தொடங்கி மெளன ராகம் , மறுபடியும், தேவர்மகன் என்று முக்கியமான அவர் நடிப்பின் மைல்கள் பிடிக்கும். மெளன ராகத்தில் என்னமாய் நடித்திருப்பார். தேவர் மகனில் என்னமாய் வாழ்ந்திருப்பார்.
மறுபடியும் படத்தில் மாற்று வீடு தேடும் கணவனிடம் அடங்கி அடங்கி வாழ்ந்து, மனதுக்குள் குமுறிக்குமுறி ஒலமிட்டு இறுதியில் வெடிப்பாரே அதைச் சொல்லாமல் விடமுடியுமா?


ஆஷா கேளுண்ணிக்குக் ( அதாங்க ரேவதி) கிடைத்த இன்னொரு வரம் அவரின் குரல். நடுத்தரக்குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண் போன்ற தோற்றத்திற்கு அவரின் குரல் அளவெடுத்த சட்டை. மெளன ராகம் படத்தில் வந்த, நான் அடிக்கடி பார்த்து ரசிக்கும் "சின்னச் சின்ன வண்ணக்குயில் இதோ".

பாடலைப் பார்க்க



அழகு ராணி மூன்று: நதியா



"நதியா நதியா நைல் நதியா" என்று சினிமாக்கவிஞனைப் பாட்டு எழுதத் தூண்டிய நடிப்புக்குச் சொந்தக்காரி. இவரும் அடுத்த வீட்டுப் பெண் போல இனம் புரியாத நேசத்தைத் தன் நடிப்பின் மூலம் தந்தவர். "பூவே பூச்சூடவா" இவருக்கு நல்லதொரு ஆரம்பத்தை கொடுத்தது. எத்தனை பெரிய நாயகர்களோடு நடித்தாலும் கவர்ச்சி முலாம் பூசாமல் நடித்துக் காட்டியவர். கிராமியப் படங்களை விட நகரத்தில் வாழும் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோற்றமும், குறும்புத்தனமான நடிப்பும் இவரின் பலங்கள். நதியா போல பெண் வேண்டும் என்று ஒரு காலகட்டத்து ஆண்கள் மட்டுமா ஆசைப்பட்டார்கள்? நதியா ஸ்டைல் தோடு, காப்பு, அட்டிகை என்று எண்பதுகளில் பெண்களின் நவநாகரீகத்தின் அடையாளம் இந்த நதியா.

சுரேஷ் நதியா ஜோடி தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகளில் ஒன்று, இதோ அவர்கள் ஆடிப்பாடும் " நதியா நதியா நைல் நதியா", பூ மழை பொழியுது திரைப்படத்தில் இருந்து.


அழகு ராணி நாலு: அமலா

டி.ராஜேந்தர் கண்டுபிடித்த (மைதிலி என்னைக் காதலி) உருப்படியான கண்டு பிடிப்புக்களில் தலையாயது அமலா என்னும் அழகு பொம்மை. இந்திய சீன பார்டலில் இருந்து வந்து தென்னக சினிமாவையே ஒரு காலகட்டத்தில் கைக்குள் வைத்திருந்தவர். நவநாகரீகத்தின் அடையாளம் அமலா. இன்றைய ஐஸ்வர்யா ராயை விட அமலா தான் சிறந்த இந்திய அழகி என்பேன். ஒரெலி, ரெண்டெலி, மூணெலி என்று ஆரம்பித்து அஞ்சலி என்று தன் பெயரைச் சொல்வதாகட்டும் சிகரட் புகைத்துப் பார்த்து ரசிப்பதாகட்டும் அமலாவின் குறும்புத்தனமான நடிப்புக்கு அக்னி நட்சத்திரமே நல்ல உதாரணம்.

ஆனால் இவரால் நடிக்கவும் முடியும் என்று காட்டி இன்றளவும் நான் நேசிக்கும் படம் பாசிலின் இயக்கத்தில் வந்த " கற்பூர முல்லை" மலையாளத்தில் " எண்டே சூர்ய புத்ரிக்கு " என்று வந்திருந்தது.
கே.பாலசந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படத்தில் ஒனிடா டீ.வி விளம்பர பேனரில் அமலாவின் போஸைப் பார்த்து கிழவர் பூர்ணம் விஸ்வநாதன் ஜொள்ளு விடுவாரே, அதுவே அன்றைய காலகட்டத்தில் அமலா என்ற மாய பிம்பம் ஏற்படுத்திய தாக்கத்துக்கு ஒரு உதாரணம்.
இதோ அக்னி நட்சத்திரத்தில் இருந்து அமலா நடித்த "நின்னுக்கோரி" என்ற அட்டகாசமான பாடல்.

பாடலைப் பார்க்க




அழகு ராணி ஐந்து: குஷ்பு



கோயில் கட்டுமளவுக்கு இவர் நடிப்பை நான் தொடர்ந்து ரசிக்கவில்லை (மற்றைய நாயகிகளோடு ஒப்பிடும் போது) . ஆனால் இவர் நடித்த ஒரேயொரு படமே போதும். அதுவே நான் திரும்பத் திரும்பப் பார்த்து ரசிக்கும் வருஷம் 16. கண்ணத்தானைக் காதலிக்கும் சைனீஸ் பட்லர் முறைப்பெண்ணாக வருஷம் 16 படத்தில் இவர் நடித்த காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். அதுவே போதும்.
இதோ வருஷம் 16 இல் இருந்து வரும் இனிமையான பாடல் "பூப்பூக்கும் மாசம்"


அழகு ராணி ஆறு: மீரா ஜாஸ்மின்
கேரளத்துப் பைங்கிளி மீரா ஜாஸ்மினின் அடக்கமான நடிப்பை தமிழ்ப்படமான "ரன்"னில் தான் முதலில் பார்த்தேன். பின்னர் அவர் நடித்த படங்களைத் தேடித் தேடி மலையாளப்படவுலகத்தையும் என்னை நாடிச்செல்ல வைத்தது அவர் நடிப்பு. பெருமழாக்காலம், அச்சுவிண்டே அம்மா, ரசதந்திரம், கஸ்தூரிமான் என்று ஒவ்வொரு மலையாளப் படங்களுமே மீரா ஜாஸ்மினுக்கு முத்திரைகள். தமிழில் தான் ஏதாவது லூசுப் பாத்திரம் இருந்தால் கூப்பிடுங்கள் மீரா ஜாஸ்மினை என்று சொல்லி அவர் நடிப்பைச் சீரழிக்கின்றார்கள்.

ரச தந்திரத்தில் அவர் தோன்றும் அனுதாபத்துக்குரிய தமிழ்ப்பெண் பாத்திரத்தையும், அச்சுவிண்டே அம்மாவில் வரும் அங்கலாய்ப்பான மகளாக அவர் நடிக்கும் பாத்திரத்தையும் தேடியெடுத்துப் பாருங்கள், அவரின் நடிப்பின் பரிமாணம் விளங்கும்.
இதோ அச்சுவிண்ட அம்மா திரையிலிருந்து இசைஞானியின் இசையில் " எந்து பறஞ்சாலும்".

பாடலைப் பார்க்க



சரி கோபிநாத் இவ்ளோ தான் என் அழகுப் பதிவு சமாச்சாரங்கள்,
ஸாரி நிறைய ஜொள்ளீட்டேன் ;-)

47 comments:

தமிழ்பித்தன் said...

அசின்அக்காவைக் காணவே இல்லை
இது தொடர்பாக அமுக அதுதானுங்க அசின்அக்கா முன்னேற்றக்கழகம் சார்பில்
வன்னையான கண்டணத்தையும் தெரிவித்து ஆர்பாட்டமும் செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

சோமி said...

தலீவா சூப்பராகீது...ஊன் வயசுக்கேத்த ஹீரோயின்கள போட்டிருக்கா. அப்பால மீராவ இன்னாதுக்கு உன்னாண்ட பதிவு இஸ்த்துக்குன்னு வந்திருக்க?

நிசமாவே தலீவா சூப்பர் சுப்பர் பதிவெல்லாம் போடுறே.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

அமலாவையும் சரண்யாவையும் ஷோபனாவையும் ஷாலினியையும் ஞாபகமிருக்குமோ என்டு பார்த்தன்.. பரவாயில்ல ஒராளையாவது ஞாபகம் வைச்சு ஜொள்ளியியிருக்கிறீங்க!! :O))

இராம்/Raam said...

ஆத்தாடி இம்புட்டு அழகா......

அவங்களை பத்தி இன்னமும் கூட ஜொள்ளிருக்கலாம்.... :))

கரட்டாண்டி said...

அண்ணே.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு அழகு இருக்குண்ணே... இவுகள மட்டும் சொன்னா எப்பிடி....

கொழுவி said...

மீராவுக்கு இங்கென்ன வேலை..? உடனடியாக அவவை நீக்கவும்.. அவவுக்கு பதில் ராதாவையோ அம்பிகாவையோ போட்டுக் கொள்ளவும். இது எச்சரிக்கை அல்ல கட்டளை.. ட்டளை.. டளை.. ளை

கானா பிரபா said...

கானா பிரபா said...
// தமிழ்பித்தன் said...
அசின்அக்காவைக் காணவே இல்லை
இது தொடர்பாக அமுக அதுதானுங்க அசின்அக்கா முன்னேற்றக்கழகம் சார்பில்
வன்னையான கண்டணத்தையும் தெரிவித்து ஆர்பாட்டமும் செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது //

தம்பி

படிக்கிற வயசிலை படிக்கிற அலுவலைப் பாரும், பெரியாக்கள் இருக்கிற இடத்தில உமக்கென்ன வேலை? இப்ப என்ர பதிவுக்கும் வயசு வந்தவர்களுக்கு மட்டும் எண்ட றேட்டிங் போட்டுட்டன். அசினுமில்லை பிசினுமில்லை

theevu said...

உது சரிப்பட்டு வராது புரோக்கருக்கு சொல்லி அனுப்பிடவேண்டியதுதான்.
:)

மங்கை said...

பரவாயில்லையே.. வித்தியாசமா ஜொள்ளியிருக்கீங்க...:-)

//எண்ட றேட்டிங் போட்டுட்டன். அசினுமில்லை பிசினுமில்லை///

:-)

கானா பிரபா said...

//சோமி said...
தலீவா சூப்பராகீது...ஊன் வயசுக்கேத்த ஹீரோயின்கள போட்டிருக்கா. அப்பால மீராவ இன்னாதுக்கு உன்னாண்ட பதிவு இஸ்த்துக்குன்னு வந்திருக்க?//

கொக்கரக்கோ கும்மாங்கோ

மீரா இல்லாத அழகுப் பதிவு எதுக்கு வாலூ?

இளங்கோ-டிசே said...

அஸினும் பாவனாவும் இல்லாத பதிவு, உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்ரு கூறி முதலில் எனது கடும் கண்டனம்
....
மீரா ஜாஸ்மினைத் தமிழ்ப்படங்களில் பாவிக்கும் உங்கள் கருத்தோடு உடன்படமுடிகிறது. ஆய்தஎழுத்தில் கொஞ்சம் அவருக்கு நடிக்க சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. மாதவனோடு மீராவின் அந்த 'சண்டைக்கோழி' பாடல் இருக்கே..அது ஒரு கவிதை :-))).
.......
/மீராவுக்கு இங்கென்ன வேலை..? உடனடியாக அவவை நீக்கவும்.. அவவுக்கு பதில் ராதாவையோ அம்பிகாவையோ போட்டுக் கொள்ளவும்/
கொழுவியின் நியாயம் புரிகிறது. அவர் ராதா நடிக்கும் காலங்களிலேயே, 'முதல் மரியாதை' சிவாஜியின் வயதிலிருந்து தான் ராதாவை சைட் அடித்தவர். தாத்தாவாய்ப் போனாப்பிறகும் கொழுவியிற்கு ஆசை நரைக்கவில்லை, அதுதான் சிறப்பு :-).

கானா பிரபா said...

//`மழை` ஷ்ரேயா(Shreya) said...
அமலாவையும் சரண்யாவையும் ஷோபனாவையும் ஷாலினியையும் ஞாபகமிருக்குமோ என்டு பார்த்தன்.. பரவாயில்ல ஒராளையாவது ஞாபகம் வைச்சு ஜொள்ளியியிருக்கிறீங்க!! :O)) //

மழை

ஷாலினியை அழகுப்பதிவுக்குள் அடக்கமுடியாது, அதையும் தாண்டிப் புனிதமானது..னிதமானது...தமானது..மானது..னது...து

ஷோபனா, மலையாளப் படங்களோடு சரி.


//இராம் said...
ஆத்தாடி இம்புட்டு அழகா......

அவங்களை பத்தி இன்னமும் கூட ஜொள்ளிருக்கலாம்.... :)) //

இதுவே போதும் தல, பின்னூட்டல்களைப் பாருங்க

//கரட்டாண்டி said...
அண்ணே.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு அழகு இருக்குண்ணே... இவுகள மட்டும் சொன்னா எப்பிடி.... //

காதல் தம்பி

இப்போதைக்கு இம்புட்டு போதும்

சயந்தன் said...

//உது சரிப்பட்டு வராது புரோக்கருக்கு சொல்லி அனுப்பிடவேண்டியதுதான்.//

அப்படியா.. சரி.. வக்கீல் நோட்டிசு அனுப்பிட வேண்டியது தான். :)

Anonymous said...

Haran has left a new comment on your post ""அழகு" ராணிகள்":

இந்த அழகிகளைப் பற்றி நீங்கள் எடுத்து ஜொள்ளியதற்கு அ.மு.க சார்பில் எனது பாராட்டுக்கள்...:P


தனிப்பட்ட பாதுகாப்பு கருதி, மேலை பதிலெழுதின தம்பியின் பின்னூட்டம் பாதியாகக் குறைக்கப்படுகிறது.

இங்ஙனம்
கானா

கானா பிரபா said...

//கொழுவி said...
மீராவுக்கு இங்கென்ன வேலை..? உடனடியாக அவவை நீக்கவும்.. அவவுக்கு பதில் ராதாவையோ அம்பிகாவையோ போட்டுக் கொள்ளவும். //

உமக்கு அசின் மன்றத்தலைவரே விளக்கம் கொடுத்திருக்கிறார், நான் என்ன சொல்லுறது.

// theevu said...
உது சரிப்பட்டு வராது புரோக்கருக்கு சொல்லி அனுப்பிடவேண்டியதுதான்.//

ஆருக்கண்ணை, உந்த நடிகைகளுக்கோ?

//சயந்தன் said...
அப்படியா.. சரி.. வக்கீல் நோட்டிசு அனுப்பிட வேண்டியது தான். :) //

தம்பி சயந்தன்
கொழுவியின்ர வேலையை நீர் செய்யாதையும், அவர் தனித்துவமானவர்.

கானா பிரபா said...

//மங்கை said...
பரவாயில்லையே.. வித்தியாசமா ஜொள்ளியிருக்கீங்க...:-)//

நீங்க வேற, வலைப்பசங்க என்ன சொல்லுவாங்களோ என்று பயந்து பயந்து தான் பதிவே போட்டேன் ;-)

நளாயினி said...

iயே.. இப்பிடிக் குhட ரசனையா.. வ்வாக் சிலரை திருத்தவே ஏலாது.

வி. ஜெ. சந்திரன் said...

எங்கப்பா அம்பிகா, ராதா, ராதிகா எண்டு உங்க காலத்து அன்ரி மார காணலை ;-)

அழகிகள் நல்லா தான் இருக்கு. உங்க ஆத்துகாரி அகப்பையும் கையுமா இன்னும் வரலையோ? இல்லை அந்த காலத்திலை நீங்க வாங்கி குடுத்த நதியா காப்பு, சீப்பு, ..... இத்தியதி இத்தியாதில வாய முடிட்டு இருக்காங்களோ ;-)

கொழுவி said...

நீங்க நமீதாவை இதில் சொல்லாமல் விட்டதற்கு சபை நாகரீகம் காரணமாயிருப்பினும் மனசுக்குள் அது குறித்து அழுவீர்கள் என எனக்குத் தெரியும்.

கானா பிரபா said...

//டிசே தமிழன் said...
அஸினும் பாவனாவும் இல்லாத பதிவு, உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்ரு கூறி முதலில் எனது கடும் கண்டனம்//

தமிழ்பித்தனைப் போக்குக் காட்டியாச்சு, உங்களை ஏய்க்கேலாது ஒத்துக்கொள்றன்.

ஆய்த எழுத்து எனக்கு ஒத்துவரவில்லை. கெழவி (அப்பிடித் தான் யாரோ பின்னூட்டம் போட்டவை) அண்ணைக்கு என் சார்பில் பதிலளித்தமைக்கு நன்றி ;-)

கானா பிரபா said...

//நளாயினி said...
iயே.. இப்பிடிக் குhட ரசனையா.. வ்வாக் சிலரை திருத்தவே ஏலாது.//

என்னக்கா செய்யிறது, கூடவே பிறந்த குணம் ;-)

// வி. ஜெ. சந்திரன் said...
எங்கப்பா அம்பிகா, ராதா, ராதிகா எண்டு உங்க காலத்து அன்ரி மார காணலை ;-)//

ஐசே, இப்பிடிச் சொல்லி உம்மை இளமையான ஆளாக் காட்ட முயற்சிக்க வேண்டாம் சொல்லிப்போட்டன்.
நீங்கள் கேட்டவையில நீங்கள் கேட்ட பாட்டு நான் பிறக்க முந்தி வந்தது.

//கொழுவி said...
நீங்க நமீதாவை இதில் சொல்லாமல் விட்டதற்கு சபை நாகரீகம் காரணமாயிருப்பினும் மனசுக்குள் அது குறித்து அழுவீர்கள் என எனக்குத் தெரியும். //

ஏன் கும்தாஜ்ஜையும் மும்தாஜையும் சேர்த்திருக்கலாமே?

வி. ஜெ. சந்திரன் said...

//சொல்லிப்போட்டன்.
நீங்கள் கேட்டவையில நீங்கள் கேட்ட பாட்டு நான் பிறக்க முந்தி வந்தது.//

ஏனப்பா கவியரசர் கண்ணதாசன் பட்டை ரசிக்கிறாக்களுகெல்லாம் அவரோட வயதோ :)))

சின்னக்குட்டி said...

இதில் பரவை முனியம்மாவையும் தேனி குஞ்சரம்மாவையும் சொல்லாமல் விட்டதுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்

மலைநாடான் said...

பிரபா!

மெளனராகம் பாடலில் இறுதிப் பந்தியி்ல் வரும் இரு இடங்களில், தஞ்சாவூர் பொம்மைகள் அசைவது போன்ற நடன அமைப்பும், அதற்கேற்ற காட்சிப்படுத்தலும், பலதடவை இப்பாடலை ரசித்துப்பார்க்க வைத்தது.


நன்றி.

கானா பிரபா said...

//சின்னக்குட்டி said...
இதில் பரவை முனியம்மாவையும் தேனி குஞ்சரம்மாவையும் சொல்லாமல் விட்டதுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் //

சின்னக்குட்டிய

அழகுப்பதிவுக்கு உங்களையும் அழைக்கிறேன், மேற்குறித்த உங்கட காலத்து ஆட்களைப் பற்றி எழுதுங்கோ ;-)

-----------------------------------
என்ன கொடுமை சார் இது
என்னுடைய பதிவு, தமிழ்மணத்தின் சூடான இடுகைகளுக்குள் வந்திருக்கு.
பதிவின் தலைப்பைப் பார்த்து வில்லங்கமான பதிவெண்டு நினைச்சினமோ?

வி. ஜெ. சந்திரன் said...

"பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள மஞ்சள எடு"

இந்த பட்டையே பொடியள் எனக்கு வச்சிருந்த பட்ட பெயருக்கு ஏற்ற மாதிரி மாத்தி பாடுவாங்கள் :-). அப்ப கோபம் தான் வரும் அப்பிடி பாட. இப்ப அப்பிடி பாடின ஆக்கள் எங்க எங்கயோ எண்டு யோசிக்க, சந்திப்பமா எண்டு யோசிக்க கவலையா/ ஏக்கமா இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

மறந்துபோன அழகிகளைக் கொண்டுவந்து பாட்டும் வைத்துவிட்டீர்கள்.
எண்பதுகளை நிறைத்த அழகிகள். மீரா புது அழகு.

நன்றி. பிரபா.

Haran said...

//தனிப்பட்ட பாதுகாப்பு கருதி, மேலை பதிலெழுதின தம்பியின் பின்னூட்டம் பாதியாகக் குறைக்கப்படுகிறது//

எண்டாலும் உங்களுக்குக் குசும்பு கொஞ்சம் கூடத் தான்... என்ர சாபம் உங்களச் சும்மாய் விடாது:P...

ஆனாலும் உங்களிட்ட வரும்பொழுது உங்களை இது சம்மந்தமாய் கவனிக்கத் தான் இருக்கு:P இப்ப எங்க "edit" பண்ணுங்க பாப்பம்... நானே சென்சார் பண்ணி போட்டிருக்கிறன்....
அஸ்கு புஸ்கு...

கோபிநாத் said...

அட்றா...அட்றா...எல்லா அழகிகளை பற்றியும் ரொம்ப அழகாக எழுதியிருக்கிங்க தல ;))

கோபிநாத் said...

\\முதலில் இந்த அழகுப் பதிவுக்கு என்னை இழுத்து வந்த பாலைவனத்துச் சிங்கம் கோபிநாத்துக்கு ஒரு சலாம்.\\

சலாம் எல்லாம் வேண்டாம் தல...அதுக்கு பதிலா இன்னும் ரெண்டு அழகிகளை பற்றி போடுங்க ;-))

கோபிநாத் said...

\\சரி கோபிநாத் இவ்ளோ தான் என் அழகுப் பதிவு சமாச்சாரங்கள்,\\

தல....ஏன் அதுக்குள்ள வீட்டுல பார்த்துட்டாங்களா???

Anonymous said...

அஞ்சி வரைக்கும் எனக்கும் ஓக்கே தான். ஆறாவதுக்குத்தான் வேற யாரயாவது சொல்லிவைக்கலாம்,

கானா பிரபா said...

// மலைநாடான் said...
பிரபா!

பலதடவை இப்பாடலை ரசித்துப்பார்க்க வைத்தது.//

வணக்கம் மலைநாடான்

எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காட்சியமைப்புக் கொண்ட பாடல் இது, அருமை.

// வி. ஜெ. சந்திரன் said...
"பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள மஞ்சள எடு"

இந்த பட்டையே பொடியள் எனக்கு வச்சிருந்த பட்ட பெயருக்கு ஏற்ற மாதிரி மாத்தி பாடுவாங்கள் :-)//

வி.ஜே

பாட்டுக்களை வைத்துப் பட்டப்பெயர் வைத்தது எங்கட கூட்டாளிகளிடமும் இருந்தது, அதைப்பற்றிப் பதிவே போடலாம்.

// வல்லிசிம்ஹன் said...
மறந்துபோன அழகிகளைக் கொண்டுவந்து பாட்டும் வைத்துவிட்டீர்கள்.
எண்பதுகளை நிறைத்த அழகிகள். மீரா புது அழகு.//

வாசித்துக்கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள் வல்லி சிம்ஹன். மீரா தான் என் லேட்டஸ்ட் அழகுராணி

//Haran said...
எண்டாலும் உங்களுக்குக் குசும்பு கொஞ்சம் கூடத் தான்... என்ர சாபம் உங்களச் சும்மாய் விடாது:P...//

தம்பி

இப்பவே சாபம் போட்டுப் பழகாதையும்.

ilavanji said...

கானா பிரபா,

அசத்தலான படங்களும் ஒலியும் ஒளியுமாக அருமையான ஃபார்மேட்டில் ஒரு பதிவு!

மற்றபடி, அழகுராணி "ஆண்ட்டி"களைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை! ;)

கானா பிரபா said...

//கோபிநாத் said...
அட்றா...அட்றா...எல்லா அழகிகளை பற்றியும் ரொம்ப அழகாக எழுதியிருக்கிங்க தல ;)) //

ரொம்ப நன்றி தல
இப்போதைக்கு இவ்வளவும் போதும் , மீராஜாஸ்மினின் பேத்தி நடிக்கவரும் போது அடுத்த சுற்றில் எழுதுவோம்;-)

//Anonymous said...
அஞ்சி வரைக்கும் எனக்கும் ஓக்கே தான். ஆறாவதுக்குத்தான் வேற யாரயாவது சொல்லிவைக்கலாம், //

ஆறாவது நல்லது தான் சார், தமிழ்ப்படங்களைப் பார்த்து இவரின் நடிப்பை எடைபோடமுடியாது.

// இளவஞ்சி said...
கானா பிரபா,
அழகுராணி "ஆண்ட்டி"களைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை! ;) //

வாங்க இளவஞ்சி,

நான் போட்ட ஒலி ஒளியைப் பற்றிச் சிலாகித்துச் சொன்ன ஒருசிலரில் நீங்களும் ஒருவர். நன்றிகள்.
மீரா ஜாஸ்மினும் உங்களுக்கு ஆண்டியா? உங்களுக்கே ஓவராத் தெரியலை? ;-)

சினேகிதி said...

பிரபாண்ணா இது நான் பழைய அழகுப்பதிவென்று நினைச்சு வாசிக்காமல் விட்டிட்டன்....அர்ச்சனா பற்றி உங்கட வலைப்பதிவிலதான் முதல்முதல் வாசிச்சனான் வீடு படம் பற்றி எழுதியிருந்தபோது.பரட்டை படம் இன்னும் பார்க்கேல்ல.மற்ற ரேவதி நதியா குஸ்பு அமலா மீரா தவிர சுகாசினியும் வடிவு தானே??

ஷாலினி ஜோ மாதிரி மீராவும் நடிப்புக்கு டாட்டா காட்டாட்டால் நல்லது.

நதியா நதியா நைல்நதியா என்று இன்னும் இரண்டு பாட்டிருக்கு ..நீங்கள் போட்ட பாட்டு நான் கேட்டதில்லை.

நின்னுக்கோரியும் இப்பத்தான் பார்க்கிறன்.

கானா பிரபா said...

வணக்கம் தங்கச்சி

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வந்திருக்கிறியள். சுகாசினி எனக்கு பிடிக்காதுஇ.
அமலாவின் நின்னுக்கோரி பாட்டு முந்தி பார்த்ததேயில்லையா? என்ன கொடுமை இது சார்.

சினேகிதி said...

\அமலாவின் நின்னுக்கோரி பாட்டு முந்தி பார்த்ததேயில்லையா? என்ன கொடுமை இது சார்.\\

'என்ன கொடுமை இது சார்'
ஏன் சரவணாவை விட்டிட்டிங்கிள்!

பொன்ஸ்~~Poorna said...

பிரபா,
அழகு பதிவுகளில் நான் முழுமையாக படித்த பதிவு இது மட்டும் தான்.. எனக்குப் பிடித்த நடிகைகள் எல்லாரையும் சொல்லி இருக்கிறீர்கள் - ஜோவைத் தவிர.. :(

என்ன இருந்தாலும் அக்கா குஷ்புவை ஐந்தாவது இடத்துக்குத் தள்ளியது தான் மனசாறவே இல்லை...

Anonymous said...

ஓய் எண்பதுகளின் கனவுக் கன்னியான சிலுக்கை விட்டுப் போட்டு ஒரு அழகுப் பதிவா?

நேற்று ராத்தரி யம்மா...

கானா பிரபா said...

தங்கச்சி, சென்னை 28 படம் பார்த்தால் விடை கிடைக்கும்.

வாங்க பொன்ஸ்

அழகு ராணிகளுக்கு இலக்கம் தான் கொடுத்தேன், தர வரிசை கிடையாது, என் அழகுப்பதிவை வாசிக்கத் தூண்டியது காட்சியும் கானமும் கொடுத்ததால் போல

முருகேசர்

சிலுக்கைப் பற்றி எழுதினால் அனுராதா எங்கே என்று கேட்பினம்

பாரதி தம்பி said...

80-களின் ரசணை. அப்படியே ஜோதிகாவையும் சேர்த்திருக்கலாம்.ஏன்...பாவனா கூட அம்சமாதான் இருக்கு...ம்....

கானா பிரபா said...

வாங்க ஆழியூரன்

ஜோவையும் சேர்த்துக்கொள்ளலாம் தான் ஆனால் நான் குறிப்பிட்ட அழகிகள் நடிப்பு அழகு இரண்டும் வாய்த்தவர்கள், ஜோ அழகு பொம்மையாக வந்து பின்னாளில் தான் சோபித்தவர்.

பி.கு: ஜோ மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வு இல்லை ;-)

Anonymous said...

பிரபா,

உங்களுடைய வழக்கமான நடையில் "அழகு" காட்டிருக்கிறீர்கள்.

ஆனால் திரைப்பட நடிகைகளோடு அழகு நின்று விட்டதா என்ன?

இருந்தாலும் என் கணிப்பில் மீரா ஜாஸ்மின் தான் அழகி-1.

கானா பிரபா said...

வணக்கம் வெயிலான்

திரைப்பட நடிகைகள் பற்றிப் பதிவு போடும் போது பாடல்களையும் இணைத்து வித்தியாசமாகத் தரமுடியும் என்பதாலேயே இப்பதிவு. இப்போது என் முழு வாக்குரிமை மீரா ஜாஸ்மினுக்கே ;-)

சயந்தன் said...

//80-களின் ரசணை. //

ஆனாலும் கானா பிரபாக்கு 80 வயசெண்டு சொல்லப் படாது.. அதின்ர அரைவாசி தான்.

கானா பிரபா said...

யோவ், என்ர இமேஜை உடைக்கிறதெண்டே வெளிக்கிட்டிட்டீரோ? எனக்கு 80இல் கால்வாசிக்கு கொஞ்சம் கூட தான். சில சனம் தங்களை இளமையாக் காட்ட எப்பிடியெல்லாம் அலையிறாங்கள் ;-)