Tuesday, May 22, 2007
மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2
பிரபல பத்திரிகையாளர் ராணி மைந்தன் தொகுத்த "மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்" என்ற நூலை இரண்டு வருஷம் முன் சென்னை போனபோது வாங்கியிருந்தேன். அப்புத்தகத்தில் இடம்பெற்ற அம்சங்களில் தேர்ந்தெடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்களும், அவர்களின் படங்களில் பாடல்கள் பிறந்தபோது இடம்பெற்ற சுவையான தகவல்களையும் கோர்த்து பாடல்களோடு இணைத்து வானொலி வடிவமாக்கியிருந்தேன். அதில் முதற்பாகத்தை இங்கு தந்திருந்தேன்.
இதோ இரண்டாம் பாகம்.
இன்றைய பகுதியில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனோடு மெல்லிசை மன்னர் பணியாற்றிய படமான "கை கொடுத்த தெய்வம்" படத்தில் இடம் பெற்ற "சிந்து நதியின் மிசை" என்ற பாடல் பிறந்த கதை நகைச்சுவையான ஒரு சேதியோடு இடம்பெறுகின்றது. என்னவென்பதை அறிய ஒலிப்பதிவைக் கேளுங்கள்.
அதனைத் தொடர்ந்து பி.மாதவனின் இயக்கத்தில் வெளிவந்த "ராஜபார்ட் ரங்கதுரை" திரைப்படத்தில் இடம்பெற்ற "மதன மாளிகையில்" என்ற பாடல் உருவான போது எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பல்வேறு ரியூன்களில் ஒன்று எப்படித் தேர்வானது என்ற விசித்திரமான சம்பவத்தையும் தொட்டுச் செல்கின்றது.
இவ்விரண்டு படப்பாடல்களும் அந்தச் சுவையான சேதிகளோடு வருகின்றன.
சம்பவக் குறிப்புக்கள் நன்றி: ராணி மைந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
சில சமயங்களில் கதையைவிட கதை பிறந்த கதை சுவாரசியமாக இருக்கும். அதுபோலத்தான் பாடல் பிறந்த கதை. திரைக்குப் பின்னால் உள்ள சம்பவங்களை அறிந்து கொள்வதில் மனம் ஆர்வம் காட்டுகிறது. மேலும் பகிர்ந்து கொள்ளுங்கள்; எழுதுங்கள்... வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள் வெங்கடேஷ், இதன் இறுதிப்பாகத்தைப் பின்னர் தருகிறேன்.
இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்.
சிந்துநதியின்மிசை நிலவினிலே..இந்தப் பாடலுக்கு இதை விடச் சிறப்பாக யாரும் இசையமைக்க முடியுமா என்பதே ஐயமாக இருக்கிறது. அத்தகைய இசை. நடுவில் தெலுங்கு வரிகளும் கோர்த்து..மனசிதி நீக்கோசம்...மெல்லிசை மன்னருக்கு மட்டுமே முடிந்தது.
மதனமாளிகை....அடடா! என்னவொரு காதற்பாடல். இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பு இருக்கு. முதலில் சிவாஜி நாடக மேடையில் பாடுவார். மதனமாளிகையில் மந்திரமாலைகளாம் என்று இழுத்து கூத்துத்தனமாக பாடுவார்...உடனே அப்படியே கதாநாயகி கனவுக்குப் போய் விடுவார். அன்பே அன்பே அன்பே என்று மெட்டு மெல்லிசையாகி...இன்னிசையாகும். நல்ல பாடல். மிக நல்ல பாடல்.
மிகவும் அருமையான பதிவு.
//G.Ragavan said...
இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்.//
வணக்கம் ராகவன்
நீங்கள் கூறுவடதோடு உடன்படுகின்றேன். பாடல்கள் பிறந்த கதையோடு அவற்றைக் கேட்பது இன்னும் அப்பாடல்களுக்கு சிறப்பைத் தருகின்றன.
//Anonymous said...
மிகவும் அருமையான பதிவு.//
மிக்க நன்றி நண்பரே
அடிக்கடி வாருங்கள்
Post a Comment