நீங்கள் கேட்டவை 6 பதிவிலே உங்களை வழமைபோல் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியிலும் என் விருப்பப்பாடல் ஒன்றோடு உங்கள் தெரிவுப்பாடல்களும் இடம்பெற இருக்கின்றன. இன்றைய பதிவின் பாடல்களைக் கேட்பதோடு மட்டும் நின்று விடாது உங்கள் விருப்பப் பாடல்களையும் பின்னூட்டம் அல்லது மின்னஞ்சல் மூலமாக அறியத் தாருங்கள்.
என் விருப்பமாக அமையும் இன்றைய பாடல் "மலையோரம் மயிலே " என்ற பாடல் "ஒருவர் வாழும் ஆலயம்" திரைப்படத்திற்காக மலேசியா வாசுதேவன், சித்ரா குரல்களில், இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்கின்றது. "ஒருவர் வாழும் ஆலயம்" திரைப்படத்தின் அனைத்துப்பாடல்களுமே இனிமையானவை. சிவக்குமார், பிரபு, ரகுமான் என்ற அன்றைய முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படம். சிவக்குமார் ஒரு பாடகனாக நடித்ததாலோ என்னவோ பாடல்களுக்கு ராஜா மனம் வைத்து இசையமைத்திருக்கின்றார். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மாபெரும் சங்கீத வித்துவானான தன் எஜமானானின் மகளையே மணமுடிக்கும் வேலையாளாக பிரபு நடித்திருப்பார். பாமரனான அவர் , சங்கீதப் பாரம்பரியமிக்க குடும்பத்துப் பெண்ணான தன் மனைவியின் ஆசைக்கிணங்கத் தனக்குத் தெரிந்த வரிகளை இட்டுப் பாடலாக இப்பாடல் அமைந்திருக்கின்றது. இனிய இசையும் குரலினிமையும் இணைந்த அந்தப்பாடல் முதலாவதாக இடம்பெறுகின்றது.
இன்றைய நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் இடம்பெறும் பாடல்கள் இதோ
1. ஹரனின் விருப்பமாக சுமைதாங்கி திரைப்படத்தில் P.B.சிறீனிவாஸின் குரலில் " மனிதன் என்பவன் தெய்வமாகலாம்" என்ற பாடல். கண்ணதாசன் வரிகளுக்கு பாடல் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
2. கதிரவனின் விருப்பமாக " சிப்பி இருக்குது" என்ற பாடல் "வறுமையின் நிறம் சிகப்பு" திரைப்படத்திற்காக கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் மலர்கின்றது
3. மாசிலா விரும்பிக் கேட்டிருக்கும் பாடல் இளையராஜாவின் இசையில் மெட்டி திரைப்படத்திற்காக " மெட்டி ஒலி காற்றோடு " என்ற பாடல், பாடலைப் பாடுகின்றார்கள் இளையராஜா மற்றும் எஸ்.ஜானகி.
4. வி.ஜெ.சந்திரனின் விருப்பமாக " கீதாஞ்சலி" திரைப்படத்திற்காக " ஒரு ஜீவன் அழைத்தது" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் இளையராஜா, இணைந்த குரல் சித்ரா.
5. நிறைவாக ஷ்ரேயாவின் விருப்பமாக "சந்திர வெளிச்சத்தில்" என்ற பாடலை கோபால் சர்மா குழுவினர் பாடுகின்றார்கள். பாடல் இசை, ஆகோஷ் என்ற மூன்று இசையமைப்பாளர்கள்.
நீங்கள் கேட்டவை 6 அறிமுகம்
இதோ பாடல்கள்
Powered by eSnips.com |
11 comments:
மீண்டுமொரு நல்ல தொகுப்பு. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இன்னிசையில் தொடங்கி...அப்படியே மெல்லிசை மன்னருக்குத் தாவி...சிப்பியிருக்குது முத்துமிருக்கு...அந்தப் பாடலில் தமிழுமிருக்குது இசையுமிருக்குது.
மெட்டி ஒலி காற்றோடு....இந்தப் பாடலில் இளையராஜாவின் குரலும்...எஸ்.ஜானகியின் குரலும் இணைந்து...மெத்தென்று ஒலிக்கும் அருமையான பாடல்...அதிலும் ஜானகி..துருதூதுத்தூதூ என்று பாடுகையில்..அடடா!
மற்ற இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்.
இனிய பாடல்கள் அனைத்தும். எனது தெரிவை பகிர்ந்தமைக்கு நன்றி
வாங்க ராகவன்
வலையுலக நண்பர்களின் தேர்வு பெரும்பாலும் இனிமையான பாடல்களாக இருக்கின்றன. ராஜா , ஜானகி கூட்டில் வந்த எல்லாப்பாடல்களும் சோடைபோனதேயில்லை என்று சொல்லலாம். மகேந்திரனின் இன்னொரு கவித்துவமான படமான மெட்டியிலிலிருந்து வந்த கவித்துவமான பாடல் அது.
நன்றி... ;)
வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. "மெட்டி ஒலி காற்றோடு.." பாடல்தான் இளையராஜா பாடிய பாடல்களிலேயே மிக சிறந்தது என்பேன் என்னைப்பொறுத்தவரை.
அப்புறம்தான் அவரின் "காதல் ஓவியம் பாடும் காவியம்..."(அலைகள் ஓய்வதில்லை), "காட்டுவழி போற பெண்ணே..." (மலையூர் மம்புட்டியான்) மற்றும் "அண்ணே அண்ணே சிப்பாயண்ணே..." (கோழி கூவுது) எல்லாம். :)
//வி. ஜெ. சந்திரன் said...
இனிய பாடல்கள் அனைத்தும். எனது தெரிவை பகிர்ந்தமைக்கு நன்றி //
//Haran said...
நன்றி... ;)//
இன்னும் கேளுங்கோ கொடுபோம்,
என்ன ஹரன் தத்துவப்பாட்டு கேட்டுட்டு சிரிப்பு வேண்டிக்கிடக்கு
உங்கள் பதிவுகளை படிக்கும்போது பிடித்த நண்பனோடு, அமைதியான இடத்தில் மனதில் தோன்றிய எல்லாம் கலந்து அளவளாவும் ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது பிரபா!
உங்கள் குரலும்,எழுத்து நடையும் கூட மிகவும் சிறப்பு சேர்க்கிறது.
அருமை நண்பர் கானா பிரபா. எனக்கு பிடித்த பாடல்களில் மிகவும் உயர்ரக பாடல் இந்த மெட்டி ஒலி பாடல்தான். மனதுக்கு இதமாக இருந்தது. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. தொடர்க.
நன்றி பிரபா பாட்டுப் போட்டதுக்கு. கனநாளைக்குப் பிறகு கேட்டேன்.
//Bharathiya Modern Prince said...
வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. "மெட்டி ஒலி காற்றோடு.." பாடல்தான் இளையராஜா பாடிய பாடல்களிலேயே மிக சிறந்தது என்பேன் என்னைப்பொறுத்தவரை.//
வணக்கம் வெங்கடேஷ்
என்னைப் பொறுத்தவரை ராஜாவுக்குப் பொருத்தமான பாடல் ஜோடி ஜானகி என்பேன், இவர்கள் குரலில் வந்த கண் மலர்களின் அழைப்பிதழ் பாடலையும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.
வருகைக்கு நன்றிகள்.
//வெயிலான் said...
உங்கள் பதிவுகளை படிக்கும்போது பிடித்த நண்பனோடு, அமைதியான இடத்தில் மனதில் தோன்றிய எல்லாம் கலந்து அளவளாவும் ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது பிரபா! //
உங்கள் பாராட்டைக் கேட்கவே மெய்சிலிர்க்கின்றது நண்பரே. ஒத்த ரசனை கொண்ட உங்களைப் போன்ற நண்பர்களை வலையுலகம் தந்தது மிகப்பெரிய கொடை, மிக்க நன்றிகள்.
மாசிலா மற்றும் ஷ்ரேயா வருகைக்கு நன்றிகள்
அடுத்த சுற்றுக்கான பாடல்களை நேயர்கள் கேட்க ஆரம்பிக்கலாம்
Post a Comment