Pages

Sunday, April 8, 2007

உதிரிப்பூக்கள் உருவான கதை


தமிழ் சினிமாவின் போக்கில், நல் விதையாய் அமைந்த , இயக்குனர் மகேந்திரனின் கைவண்ணத்தில் உருவான உதிரிப்பூக்கள் படம் உருவான கதை, மகேந்திரனின் "சினிமாவும் நானும்" என்ற நூலில் இடம்பெற்றிருந்தது. அதில் தேர்ந்தெடுத்த சில பகுதிகளோடு, கவியரசு கண்ணதாசன் வரிகளில், இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.ஜானகி பாடிய "அழகிய கண்ணே... உறவுகள்" நீயே பாடலும் கலந்து வருகின்றது என் குரற்பதிவோடு.

13 comments:

SurveySan said...

பிரபா, மிக மிக நன்றி.
அழகான ஆடியோ பதிவுக்கு மிக நன்றி.

உதிரிப்பூக்கள் சின்ன வயசுல பாத்தது. இப்ப பாக்கலாம்னா, எங்கயும் கிடைக்க மாட்டேங்குது. தேடிக்கிட்டே இருக்கேன்.

ஜானகி, கண்ணதாசன், ராஜா காம்பினேஷன்ல அமைந்த அழகிய கண்ணே, இன்னிக்கு கேட்டாலும் ஒரு சிலிர்ப்பை தருது.

பதிவுக்கு நன்றி:)

மலைநாடான் said...

பிரபா!

மிக அழகான உச்சரிப்புடன் கூடிய மிகநல்ல பதிவு. பலபுதிய தகவல்களும்தான். பாராட்டுக்கள்.

SurveySan said...

பாட்டுக்கு பாட்டுல உதிரிப்பூக்கள் பாட்டுதான் கடைசியா இருக்கு :)

பாட்டுக்கு பாட்டு

கானா பிரபா said...

//புதியவன் said...
பதிவு நல்ல சுவரசியம். நன்றி நண்பரே. //

பதிவைக் கேட்டுக்கருத்தளித்த உங்களுக்கு என் நன்றிகள் நண்பரே

தென்றல் said...

பிரபா,

நல்ல உச்சரிப்பு. பின்னனி இசை நன்றாக இருந்தது.

நல்ல தகவல். நன்றி!

SurveySan, you tubeல தேடினீங்களா?

கானா பிரபா said...

// SurveySan said...
பிரபா, மிக மிக நன்றி.
அழகான ஆடியோ பதிவுக்கு மிக நன்றி.//

வணக்கம் சர்வேசன்

உதிரிப்பூக்கள் பற்றிய ஒலிப்பதிவு செய்ய்யும் திட்டமிருந்தாலும் உங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கவே உடன் செய்தேன்.
உதிரிப் பூக்கள்,, கே டிவி போட்டாலும் போடுவார்கள்.

//SurveySan said...
பாட்டுக்கு பாட்டுல உதிரிப்பூக்கள் பாட்டுதான் கடைசியா இருக்கு :)//

இப்போது தான் பார்த்தேன், என்ன கொடுமை இது சர்வேசா, முதலில் வரக்கூடிய எல்லாத் தகுதியும் இதற்கு இருக்கு.

கானா பிரபா said...

//மலைநாடான் said...
பிரபா!

மிக அழகான உச்சரிப்புடன் கூடிய மிகநல்ல பதிவு. பலபுதிய தகவல்களும்தான். பாராட்டுக்கள்//

வணக்கம் மலைநாடான்

இப்போது தான் பின்னணி இசைக் கலவையைக் கோர்த்து ஒலிப்பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

SurveySan said...

//உதிரிப்பூக்கள் பற்றிய ஒலிப்பதிவு செய்ய்யும் திட்டமிருந்தாலும் உங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கவே உடன் செய்தேன்.//

ரொம்ப thanks பிரபா!!!!!

//இப்போது தான் பார்த்தேன், என்ன கொடுமை இது சர்வேசா, முதலில் வரக்கூடிய எல்லாத் தகுதியும் இதற்கு இருக்கு.///

பாட்டுக்கு பாட்டு, பாடல் போட்டி பதிவல்ல.
சங்கிலித் தொடர். latestஆ வந்திருப்பது அழகிய கண்ணே என்று சொன்னேன் :)

SurveySan said...

தென்றல், youtubeல கெடைக்கல.

DVD/VCD எங்கயாவது விக்கராங்களா?

G.Ragavan said...

சிற்றன்னை என்ற புதுமைப்பித்தனின் கதையின் தாக்கத்தில் விளைந்ததுதானே உதிரிப்பூக்கள். இனிய பாடல்கள் நிறைந்த அருமையான படம்.

// SurveySan said...
உதிரிப்பூக்கள் சின்ன வயசுல பாத்தது. இப்ப பாக்கலாம்னா, எங்கயும் கிடைக்க மாட்டேங்குது. தேடிக்கிட்டே இருக்கேன்.

DVD/VCD எங்கயாவது விக்கராங்களா? //

என்ன சர்வேசன்? எந்த ஊர்ல இருக்கீங்க? மோசர்பேயர் பத்திப் பதிவு போட்டது நீங்கதானே? மோசர்பேயர் டிவிடி உதிரிப்பூக்கள் 34 ரூவாய்க்குக் கிடைக்குது. நானும் வாங்கீருக்கேன். சென்னைல இருந்தீங்கன்னா சங்கராஹால்ல இருக்குற சவுண்டு சோன்ல முயற்சி செஞ்சு பாருங்க. மதுரைல இருந்தீங்கன்னா..பழையபஸ்டாண்டுல வரிசையா பல கடைகள் இருக்கு. மத்த ஊர்கள்ளயும் கிடைக்கனும்.

கானா பிரபா said...

கானா பிரபா said...
//தென்றல் said...
பிரபா,

நல்ல உச்சரிப்பு. பின்னனி இசை நன்றாக இருந்தது.

நல்ல தகவல். நன்றி!//

வணக்கம் தென்றல்

ஒலிப்பதிவைக் கேட்டுத் தங்கள் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள்.


//SurveySan said...
பாட்டுக்கு பாட்டு, பாடல் போட்டி பதிவல்ல.
சங்கிலித் தொடர். latestஆ வந்திருப்பது அழகிய கண்ணே என்று சொன்னேன் :) //

மன்னிக்கவும், தவறாகப் புரிந்துகொண்டேன் ;-)

//G.Ragavan said...
சிற்றன்னை என்ற புதுமைப்பித்தனின் கதையின் தாக்கத்தில் விளைந்ததுதானே உதிரிப்பூக்கள். இனிய பாடல்கள் நிறைந்த அருமையான படம்.//

ஆமாம் ராகவன் அதைத் தான் மகேந்திரன் குறிப்பிடும் அம்சமாக இவ்வொலிப்பதிவில் தந்திருக்கின்றேன்.

SurveySan said...

ஜி.ராகவன்,

//என்ன சர்வேசன்? எந்த ஊர்ல இருக்கீங்க? மோசர்பேயர் பத்திப் பதிவு போட்டது நீங்கதானே? மோசர்பேயர் டிவிடி உதிரிப்பூக்கள் 34 ரூவாய்க்குக் கிடைக்குது. //

இப்போ, California.
அடுத்தமுறை சென்னை வரும்போது, கண்டிப்பா வாங்கிடறேன்.
தகவுலுக்கு நன்றி :)

கானா பிரபா said...

சர்வேசன்

ஆன்லைனில் கூட வாங்கிட முடியும் இந்தாங்க இணைப்பு

http://www.moserbaerhomevideo.com/