Pages

Saturday, October 31, 2026

எல்லாம் இன்ப மயம் ❤️

 எல்லாம் இன்ப மயம் ❤️


எங்கள் காலமெல்லாம் பி.சுசீலா வில் ஆரம்பித்து எஸ்.ஜானகி, கே.எஸ்.சித்ரா என்று தொடர்ந்தது. 


ஆனால் இதற்கு முன்னர் இன்னொரு தலைமுறைப் பாடகிகள் என்று வரும் போது சாஸ்திரிய சங்கீதம் மட்டுமல்லாது திரையிசையிலும் கோலோச்சிய 

எம்.எல்.வசந்தகுமாரி, 

மற்றும் 

பி.லீலா 

ஆகியோர் முக்கியமானவர்கள்.


இந்த இரண்டு பாடக ஆளுமைகளின் கூட்டுச் சிறப்பு ஒன்றுள்ளது.

அது என்னவெனில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கூட்டுப் பாடகிகளாகப் பாடிச் சிறப்பித்துள்ளார்கள்.


இன்னுமொரு சிறப்பும் உண்டு.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கி நடித்த “மணமகள்” திரைப்படத்தில் திருவிதாங்கூர் சகோதரிகள் என்று புகழப்பட்ட லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவருமே நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள்

சி.ஆர்.சுப்பராமன் இசையில்

 எம்.எல்.வசந்தகுமாரி மற்றும் பி.லீலா 

ஆகியோர் இணைந்து பாடியது.

திரையில் தோன்றிப் பாடுபகர்கள் வேறு யாருமல்ல 

லலிதா & பத்மினி சகோதரிகள் தான்.

அந்தப் பாடல்களில் ஒன்று

இன்றும் காலத்தால் அழியாப் புகழ் கொண்ட


“எல்லாம் இன்ப மயம்”


https://youtu.be/xeh2OyboKW8?si=hJOFDUBwoE7km-Nl


இன்னொன்று


“ஆயிரத்துத் தொளாயிரத்து”


https://youtu.be/HJ9f35TAREc?si=1LIRpJ4-srJZbInJ


மணமகள் படம் தெலுங்குக்குப் போன போது அங்கேயும் இந்த ஜோடிப் பாடகிகள் தான் இரண்டையும் பாடிச் சிறப்பித்தார்கள்.


அது போல் இன்னொன்று

“இரு சகோதரிகள்” என்று தமிழில் உருவான படத்தில் எஸ்.ராஜேஸ்வரராவ் இசையில்

“தாயே உன் சேயல்லவோ” 


https://youtu.be/2EDP7uCvd_4?si=Yk5lx8ep_6XN3HtZ


இந்தப் படம் சமகாலத்தில் Bhale Ammayilu என்று தெலுங்கில் எடுக்கப்பட்ட போது அங்கும் இரட்டைக் குரலாக அணி செய்தனர்.


மலையாளத்தில் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள் இசையில் எம்.எல்.வசந்தகுமாரி மற்றும் பி.லீலா  இன்னும் அதிகப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.


அவற்றுள் “ஆகாச தீபம்” படத்தில் இடம்பெற்ற 

“ஜனனி ஜயகே நீணல்”


https://youtu.be/8lIZFKZ_P1M?si=hSBR_SvabGjPc_vG


என்ற பாடல் தெய்வீகச் சிறப்பு மிகுந்து கொண்டாடப்படுகிறது. 

அன்றைய மலையாள இசையமைப்பாளர் கே.ராகவனும் இந்த இரட்டைக் குரல்களைப் பயன்படுத்தி இருக்கிறார்.


“கற்பூரமுல்லை” ஒரு சாஸ்திரிய பாடகிக்கும், மகளுக்குமான பாசப் போராட்டம். அந்தப் பாடகியாக நடித்தவர் எம்.எல்.வசந்தகுமாரி மகள் ஶ்ரீவித்யா என்றால், அந்தப் பாடகிக்கான குரலாக அமைந்தவர் பி.லீலா.

நீண்ட இடைவெளிக்குப் பின் பாட வந்த பி.லீலா

இசைஞானி இளையராஜா இசையில் இந்த ஆச்சரியமான ஒற்றுமையோடு பாடியொருக்கிறார் 

“ஶ்ரீ சிவா”


https://youtu.be/jcHE0nE4YuA?si=jFv5HjW-fipKzXJK


சமகாலத்தில் படமான மலையாள வடிவம் “எண்ட சூர்ய புத்ரிக்கு” படத்திலும் பி.லீலா குரலில் இதே பாடல் தான்.


இன்னொரு ஒற்றுமை


31 அக்டோபர் 1990 

எம்.எல்.வசந்தகுமாரி


31 அக்டோபர் 2005 

பி.லீலா


இவரும் இறையடி சேர்ந்த ஒரே நாள் ஆகியது.


கானா பிரபா

31.10.2026

0 comments: