Pages

Friday, October 23, 2026

பாடகர் கிருஷ்ணராஜ் இன் பாட்டுப் பயணம்


அவர் ஒரு அறிமுக இயக்குநர்

இவர் ஒரு அறிமுகப் பாடகர்

இருவருக்குமான முதல் வாய்ப்பு, பாடல் பதிவாகிறது, ஆனால் படமோ முடங்கிப் போகிறது.

அவர் அகத்தியன் என்ற இயக்குநர், இவர் கிருஷ்ணராஜ் என்ற பாடகர்.

இசையமைப்பாளர் தேவா அறிமுகத்தில் அவரிடம் பக்திப் பாடல்கள் பாடியவருக்குத் திரைப்படப் பாடல் வாய்ப்பு வாய்க்கிறது, சரத்குமார் நடிப்பில் அகத்தியன் இயக்கவிருந்த,  “அதிகாலை சுபவேளை” படத்தில் இடம்பெற்ற 

“உன்ன நான் தொட்டதுக்கு”

https://youtu.be/vz3I-8kMk10?si=YQzr-IyDxeMYRisw

பாடல் வழியாக. ஆனால் அந்தப் படம் வெளிவராமல் முடங்கிப் போனது.

இந்தப் பாடல் பின்னர் SPB பாடிய “ஊர்மரியாதை” படத்தில் வெளிவந்தது

https://youtu.be/eap91tjwFQI?si=Vl7eCz8e583T7lTy

பாருங்கள் அப்பவே கிருஷ்ணராஜ் பாடிய பாடல் இன்னொருவருக்குப் போயிருக்கிறது. பின்னாளில் நலம் நலமறிய ஆவல் பாடலுக்கும் இப்படித்தானே நேர்ந்தது.

பின்னாளில் இதே அகத்தியன் இயக்கிய “காதல் கோட்டை” படம் “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” பாடல் வழி பாடகர் கிருஷ்ணராஜுக்குப் பெரும்  புகழ், இருவருக்கும்  மறுவாழ்வு அளித்தது வரலாறு.

வேம்படிதாளம் என்ற ஊரில் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர். 

உள்ளூர் இசைக்கச்சேரிகளில் பாடி வந்தவருக்கு ஒரு சமயம் பாடல் போட்டியில் முதற் பரிசு கிடைக்கிறது. அந்தப் பரிசைக் கொடுத்தவர் பிரபல இசையமைப்பாளர் வி.குமார்.

அப்போது தான் முழுமையான பாடகராக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் கிளர்கின்றது. இந்தப்பதிவை எழுதியவர் கானா பிரபா

தமிழ் நாடு இசைக்கல்லூரியில் முறையாக இசை பயின்று, “சங்கீத வித்துவான்” பட்டத்தை மட்டுமல்ல, முதல் மாணவர் என்ற உன்னதத்தைத் தொட்டதால் அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பதக்கம் வழங்கிக் கெளரவித்தார்.

தமிழ்த் திரைப்பட உலகில் அவருக்குத் திறவுகோலாய் அமைந்தது, இசையமைப்பாளர் ஆர்.ராமானுஜன் அவர்களுடனான அறிமுகம்.  அவரிடமேயே முதல் பாட்டு பாடியிருக்கிறார். அந்த சமயம், விளம்பரப் பாடல்கள், பக்திப் பாடல்களைப் பாடல்கள் என்று தொடர்கிறார்.

அது சரி

யார் அந்த ராஜன் சக்ரவர்த்தி?

அதுவும் இவர் தான்.

“ வா அருகில் வா” திரைப்படத்தில்

சாணக்யா இசையில்

இதயக் கோயிலில்

https://youtu.be/-7_6Wk28kAs?si=Jk03zuJoZ3rl0zIV

பொன்னுமணி பூச்சரமே

https://youtu.be/-VchU84LUqw?si=qP0gwLsalW50HIKE

ஆகிய இரு பாடல்கள் வழியாக அறிமுகமாகிறார்.

தேவாவின் இசையில் ராஜன் சக்ரவர்த்தி என்ற பெயரிலேயே, 

அம்மா தானம்மா - மண்ணுக்கேத்த மைந்தன்

https://youtu.be/1Mm7T6_lus8?si=6OzyqbwI0zp__oNb

மாலைக் கருக்கல் வந்து - நாடோடிக் காதல்

https://youtu.be/NHuh1EoSrAE?si=M6hARLHnjGwNKMIR

வைகாசி பொறந்தாச்சு படத்தில் “வாழை மரம்” பாடல், 

அண்ணாமலை அண்ணாமலை (மாங்கல்யம் தந்துனானே)

https://youtu.be/I59WC79Cfrs?si=XsH0rG3rjl2vuuSh

மேலும் “வாயாடி” என்ற இன்னொரு பாடல். “வைதேகி கல்யாணம்” படத்தில்

ஆலமரத்தடி” என்று பாடிக் கொண்டே பயணித்தாலும் பெரிய அடையாளம் இவருக்கு வாய்க்கவில்லை. 

“அறிமுகம் கிருஷ்ணராஜ்” 

என்று தேவா இசையில் ஆனந்த ராஜ் நடித்த, மணிவண்ணன் இயக்கிய “கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை” படம் இவருக்கு இன்னொரு தடவை அறிமுகம் கொடுக்கிறது.

தேனிசைத் தென்றல் தேவாவின் பாசறையில் track பாடகர் மட்டுமல்ல, பாட்டுச் சொல்லிக் கொடுப்பவரே இவர் தான் என்று இயங்கினார்.இந்தப்பதிவை எழுதியவர் கானா பிரபா

தன்னுடைய முதல் பாடலை அகத்தியனுக்குப் பாடி, படம் வெளிவராமல் இருந்ததோ அதே அகத்தியனின் “காதல் கோட்டை” வழியாக “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” இவருக்குப் பெரிய புகழைக் கொடுக்கிறது.

பிறகென்ன ஏறுமுகம் தான்.

ராஜன் சக்ரவர்த்தி என்று 

ரஜினி புகழ் பாடல்கள் 

https://youtu.be/bRed4MvIV2E?si=3nm26JIIQh8aKMyd

என்ற தனிப்பாடல் தொகுப்பில் பாடியவர் பின்னாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே பாடுவேன் என்று நினைத்திருப்பாரா?

“நகுமோ” பாடலை track பாடியவர், ஹரிஹரன் பாடிய இன்னொரு வடிவமும் பதிவாகியது. ஆனால் ரஜினி தேர்ந்தெடுத்தது கிருஷ்ணராஜ் பாடியதையே.

கிருஷ்ணராஜ் பாடிய எண்ணற்ற புகழ்பூத்த பாடல்களில், நான் அடிக்கடி விரும்பிக் கேட்பவை ஐந்து

தேவா இசையில்

“உன்னருகே நான் இருந்தால்”

https://youtu.be/xranbNagWoU?si=m4FAvHIM6uD3LAHn

இதயம் இதயம் இணைகிறதே

https://youtu.be/SVT_HaaVyA4?si=JBtfuWjJ9q4AcpjG

“ஜனவரி நிலவே நலம் தானா”

https://youtu.be/8snzPlRDKjc?si=_6rI6BwDy8yLI6DN

யுவன் ஷங்கர் ராஜா இசையில் 

“ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்”

https://youtu.be/nXIU8aiB-NM?si=_tPDqBKjdEqIbu_w

“ஐயய்யோ” 

https://youtu.be/uS8Z4nLJ53I?si=O06jyH5MNqZIPEzX

இவரின் பிரிவுச் செய்தியைக் கேட்ட கணம்  “நீ பார்த்துட்டுப் போனாலும்” 

https://youtu.be/DsWdEBZf4Fk?si=PJYUKydtkN7p2lUc

பாடல் தான் மனசுக்குள் ஓடியது. 

கிருஷ்ணராஜ் மகளின் அறிமுகம் கிட்டியதும் அகத்தியன் படத்தில் தான். தேனிசைத் தென்றல் தேவா இசையில் ஜீவரேகா, கார்த்திக் உடன் இணைந்து “ஓவெண்புறா ஒன்று” பாடலைப் பாடியிருக்கிறார்.

தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடலைக் கூட கிராமியப் பண் பாடும் பாடகருக்காக கிருஷ்ணராஜ் பாடிய ஒத்திகைப் பாடல் தானாம். ரோஜா கம்பைன்ஸ் ஒட்டுமொத்தமாக இதை ஆதரிக்க இதுவே இறுதியானது தான் பின்னாளில் சரித்திரம் படைத்தது.

சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் வாழும் காலத்திலேயே அவர் முன்னால் “தேனிசைத் தென்றல்” தேவாவின் தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடி அவரிடம் பாராட்டுப் பெற்றவர்.

எஸ்.ஆர்.நாதனுக்குப் பிரியாவிடை கொடுத்த பாட்டைப் பாடிய இருவரும் பிரியாவிடை கொடுத்து விட்டனர்.

கானா பிரபா

23.10.2026

Shared post



0 comments: