Pages

Thursday, October 29, 2026

சதா மாஸ்டர் (சதானந்தம்)

பழம் பெரும் இசையமைப்பாளர்  சுதர்சனம் மாஸ்டரின் புதல்வர் மற்றும் இசைஞானி இளையராஜாவின் ஆஸ்தான கிட்டார் வாத்திய விற்பனர் இன்று காலமானார்.

சதா மாஸ்டருக்கு கிட்டார் வாங்கிக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் அப்பா

இன்று மறைந்த சதா மாஸ்டர் ஒரு சமயம் தன் அண்ணனிடம் பழுதுபார்க்க வந்த கிட்டாரை எடுத்து வசிக்கப் பார்த்ததும், கிட்டார் உரிமையாளர் இதொன்றும் விளையாட்டுப் பொருள் அல்ல என்று கண்டிப்பாகச் சொல்லவும், தானும் கிட்டார் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு வந்ததாக, சுபஶ்ரீ தணிகாசலம் நிகழ்த்தும் QFR 700 நிகழ்வில் பகிர்ந்திருக்கிறார்.

சதா மாஸ்டரின் தந்தை பிரபல இசையமைப்பாளர் சுதர்சனம் மாஸ்டரிடம் உதவி இசையமைப்பாளராக இருந்த ஆர்.கே.சேகர் தான் கிட்டார் ஒன்றை வாங்கி, கிட்டார் பழக அனுப்பினாராம்.

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தையின் ஐம்பதாவது நினைவாண்டு நிகழ்விலும் இவர் கலந்து கொண்டார்.

இவர் தன்ராஜ் மாஸ்டரிடம் கிட்டார் பயில ஆரம்பித்த பின்னர் இணைந்து கொண்டவர் இளையராஜா.

மெல்லிசை உலகின் ஆளுமை ராம்ஜி Ramjhi Issai Mazhalai அவர்கள் சில வருடங்களுக்கு முன் பகிர்ந்த ஃபேஸ்புக் பகிர்வில், 1968 ஆம் ஆண்டில் தன்னுடைய சகோதரர் ஷான் சந்திரசேகர் உருவாக்கிய BLUERICKS இசைக்குழுவில் சதானந்தம் அவர்கள் Lead Guitarist ஆக இயங்கியதைக் குறிப்பிட்டிருக்கிறார். 

இவரோடு இணைந்து கிட்டார் வாத்திய விற்பன்னராக இருந்தவர் ராதா விஜயன் (நடிகர் எம்.கே.ராதாவின் புதல்வர்). அவரும் QFR 700 இல் கலந்து கொண்டவர்.

இவர்களோடு ராம்ஜி ட்ரம்ஸ் வாத்தியத்தைக் கவனித்துக் கொண்டார்.

சதா என்ற சதானந்தம் அவர்கள் முதன்முதலில் படத்துக்காக கிட்டார் வாசித்தது ஜெயகாந்தனின் “யாருக்காக அழுதான்” படத்தில் ராம்ஜியின் சகோதரர் எஸ்.வி.ரமணனின் இசையில் தான்.

எஸ்.வி.ரமணன் அனிருத்தின் தாத்தா.

அந்தப் படம் வெளிவந்தது 1966 இல். இந்த ஆண்டோடு 60 ஆண்டுகள் சதா அவர்களது இசைப் பயணம் ஆரம்பித்து.

இதில் 45 ஆண்டுகள் இசைஞானி இளையராஜாவின் பாசறையில்.

சமீபத்தில் வாவ் தமிழா பேட்டியில் உலகம் சுற்றும் புகழ் பூத்த கிட்டார் வாத்தியக் கலைஞர் பிரசன்னாவிடம், நீங்கள் வியந்து பார்த்த கிட்டார் வாத்தியக்காரர் யார் என்று கேட்டதும், அவர் பதில் சொல்வதற்குள், இவர் யாராவது மேற்கத்தேய வாத்தியக் கலைஞரைச் சொல்வார் என்று பார்த்தால் அவர் குறிப்பிட்டவர்

“சதா மாஸ்டர்” ❤️🙏

கானா பிரபா

29.10.2026 










0 comments: