

இசைஞானி இளையராஜாவின் இசையா?
கங்கை அமரனின் எளிமையான திரைக்கதை இயக்கமா?
கவுண்டமணி - செந்தில் கூட்டணியின் கலக்கல் நகைச்சுவை இசையா என்று பட்டிமன்றமே வைக்கலாம். இருந்தாலும் இசைஞானி இளையராஜாவின் இசையே இந்தப் படத்தின் வெற்றிக்கு முதற்காரணம் என்று சொல்லி வைக்கலாம்.


முத்தையன், காமாட்சி என்று நாயகன், நாயகிக்கான பெயர்த்தெரிவில் இருந்து காட்சி அமைப்புக்கள் எல்லாமே கிராமத்தின் அக்மார்க் எளிமை படம் முழுக்க இருக்கின்றது.

படத்தில் வந்த பிரபலமான நகைச்சுவைகள்
டேய் நாதஸ்! இந்தா ஒர்ரூபா ரெண்டு பழம் வாங்கிட்டு வா
"என்ன கேட்டானா? காரை நமம வச்சிருக்கிறோம் இந்தக் காரை வச்சிருந்த சொப்பனசுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கிறாங்கன்னு கேட்கிறான், ஒரு வித்துவானைப் பார்த்துக் கேட்கிற கேள்வியாய்யா இது?"
பழைய இரும்புச்சாமான், பித்தளைக்கு பேரீச்சம்பழம்

பின்னணி இசையில் என்னைக் கவர்ந்தது இந்த இசைத்துண்டம்
முத்தையன் , காமாட்சியை சந்திக்கும் காட்சி (மாங்குயிலே பூங்குயிலே இசைக்கலவையில்)

ராஜா முதல் பாட்டு பாடினால் படம் ஹிட்டாமே
"பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டாலே புத்தி சொன்னார்"
உறுமி மேளம், நாதஸ்வரம் முழங்க கரகம் ஆடியவாறே காமாட்சி அறிமுகமாகும் காட்சி
முத்தையன் கரகக்குழு (ராமராஜன்) குழு திருவிழாவுக்கு கரகம் ஆட கிராமத்துக்கு வருதல்
திருவிழாவில் கரகமாடும் முத்தையன் கோஷ்டி
"நந்தவனத்தில் வந்த ராஜகுமாரி" கங்கை அமரன் பாடும் இப்பாடல் படத்தின் இசைத்தட்டுக்களில் இடம்பெறாதது
நள்ளிரவில் முத்தையன், காமாட்சியை சந்திக்க வரும் காட்சி
முத்தையன் குழு கரகமாடிப் பாடும் "மாங்குயிலே பூங்குயிலே"
காமாட்சி போட்டிக்காகக் கரகப்பயிற்சி எடுத்தல்
வழியனுப்ப ஓடிவரும் காமாட்சி, பின்னணியில் மாங்குயிலே பூங்குயிலே பாடல் இசை புல்லாங்குழலில் ஒலிக்க
முத்தையன் சால்வை காற்றைக் கிழித்துக் காமாட்சியின் முகத்தை வருடி அணைக்க வருகிறது "இந்த மான் உந்தன் சொந்த மான்"
காமாட்சியின் ஊருக்குத் திருட்டுத்தனமாக முத்தையன் அவளைப் பார்க்கவரும் காட்சியின் பின்னணி இசை
முத்தையனின் கோஷ்டி அவரைக் கிண்டல் பண்ணிப் பாடும் "ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்கோ"
உறுமி மேளம், நாதஸ்வரம் கலக்க கரகம் ஆடியவாறே முத்தையன் நடத்தும் சண்டை
காமாட்சி வீட்டில் முத்தையன் அவமானப்பட்டு நிற்றல், பின்னணியில் வயலின் ஆர்ப்பரிப்பில் மாங்குயிலே பூங்குயிலே" இசை
தன்னைக் காண வந்த முத்தையனைத் தேடிக் காமாட்சி ஓடும் காட்சி, மாங்குயிலே பாடலின் சந்தோஷ இசை மெல்ல சோக இசையாக மாறும்
காமாட்சியைத் தேடிக்காண முத்தையன் பாடும் "குடகு மலைக்காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என்பைங்கிளி"
காமாட்சியைத் துரத்தும் வில்லன் கோஷ்டி
முத்தையன், காமாட்சி காதலுக்கு வீட்டில் பச்சைக்கொடி காட்ட, "மாங்குயிலையும் பூங்குயிலையும் சேதி சொல்ல அழைக்கிறார்கள்
பஞ்சாயத்தில் காமாட்சி, முத்தையன் குற்றவாளிகளாக
முத்தையன், காமாட்சி தீக்குழித்துத் தம்மைப் புனிதராக்கும் காட்சி, "மாரியம்மா மாரியம்மா பாடல்" பின்னணியில்
வில்லன் பழிவாங்கத் தருணம் பார்க்கும் காட்சியில் அகோர இசை
இயக்குனர் கங்கை அமரன் வந்து ஜோடியை வாழ்த்தும் காட்சியோடு மாங்குயிலே பூங்குயிலே புல்லாங்குழலிசை பரப்பி நிறைவாக்குகின்றது.

28 comments:
இசைத் தொகுப்பு nalla effort and it had come very nice :)
Gone back to old days of listening to Movie dialogues in Radio:)
Expecting more good movies in this type.
"இந்தப் பதிவுக்கான மொத்த உழைப்பு 2நாள் இரவுப் பொழுதுகள்" ;)
"இது தானே தல உங்கள் சொத்து"
என்னை போன்றவனுக்கு இன்னும் இரண்டு,மூன்று
வருடங்கள் ஆனாலும் இது நினைவில் இருந்து அகலாதே!
கிராமிய இசையனுபவத்தை
வழங்கிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி! நன்றி!
\\இந்தப் பதிவுக்கான மொத்த உழைப்பு 2 நாள் இரவுப் பொழுதுகள் ;)
\\
மிக்க நன்றி தல...விரைவில் முழுவதுமாக கேட்டு பின்பு வருகிறேன்.;))
யம்மாடி! மொத்தப் படமும் மறுபடி பார்த்த ஃபீலிங், பின்னிட்டீங்க கானா - வாழ்த்துகள் & நன்றிகள் :)
- என். சொக்கன்,
பெங்களூரு.
அருமை அருமை அருமை.
/தன்னைக் காண வந்த முத்தையனைத் தேடிக் காமாட்சி ஓடும் காட்சி, மாங்குயிலே பாடலின் சந்தோஷ இசை மெல்ல சோக இசையாக மாறும்/ இந்த விளையாட்டுக்கு எல்லாம் மொட்டையைத் தவிர யாரு இருக்காங்க?
மிக்க நன்றி கார்த்தி, பழைய இடுகைகளிலும் சில பின்னணி இசைத்தொகுப்புக்கள் உண்டு
S Maharajan said...
என்னை போன்றவனுக்கு இன்னும் இரண்டு,மூன்று
வருடங்கள் ஆனாலும் இது நினைவில் இருந்து அகலாதே!//
மிக்க நன்றி நண்பா, உங்களைப் போன்ற இசைரசிகர்களால் தான் ஊக்கமுடன் இதைச் செய்ய முடிகின்றது
//முத்தையன், காமாட்சி காதலுக்கு வீட்டில் பச்சைக்கொடி காட்ட, "மாங்குயிலையும் பூங்குயிலையும் சேதி சொல்ல அழைக்கிறார்கள்
///
மாங்குயிலே பல்வேறு வெர்ஷன்களில் ஒலித்துக்கொண்டிருந்தாலும் இந்த பார்ட்ல சந்தோஷ சேதியை சொல்ல வைக்கும் இசை - ராசா ராசாதான் :))))
திருப்பரங்குன்றத்துல டைரக்டரு சந்தானபாரதி மேரேஜ் (1989) - படம் அப்பத்தான் பைனல் ஆகி ரீலிசுக்கு தயாரான நேரம்- பக்கத்து மண்டபத்துல எங்க மாமா பையன் மேரேஜ் அப்பொழுது வந்த ஒட்டுமொத்த கரகாட்ட குழுவினரில் சிலரை பார்த்த ஞாபகம் ராமராஜன் & கவுண்டமணி - முதன்முதலாய் திரைப்படகலைஞர்களை பார்த்த அனுபவம் அன்றுதான் :)
எனக்கு தெரிந்து இந்த படத்திற்குத்தான் அப்படி ஒரு கூட்டம் குடும்ப சகிதம் எங்க ஊர் -மயிலாடுதுறை- பியர்லெஸ் தியேட்டரில் பார்த்தேன் !
100 நாட்களுக்கு மேல் ஓடியதற்கு பெருமை காட்டிக்கொள்ளும் வகையில் தியேட்டரில்இப்பொழுதும் இருக்கிறது ராமராஜன்&கனகா ஆடும் போட்டோ அடங்கிய ஷீல்டு!
//அதி உச்ச தரத்துடன் அளித்திருந்தது. அதை வாங்கி அடிக்கடி போட்டுப் பார்த்துக் கரகாட்டக்காரனை ரசித்து வருகிறேன். இன்னும் அலுக்கவில்லை./
ஹம் அப்லோடு செஞ்சா என்னைய மாதிரி ஏழைபாழைங்க பாத்து சந்தோஷப்பட்டுக்கும் பாஸ் :)
காந்த கண் அழகியே - 20 வருசம் கழிச்சு கனகா உங்களை கவர்ந்தது ஆச்சர்யமே! புரொபைலில் எல்லாம் மாத்திப்போட்டீங்க போல வெரிகுட் வெரிகுட் :)
ஐம்பதாவது புதிர் போட்டியின் முழுமையான இசைவிருந்து - எதிர்பார்த்த இசை துண்டங்களை இறக்கிவைத்துவிட்டேன் நன்றி அண்ணே! :)
பிரபா
அருமையான தொகுப்பு .
"21 வருஷங்கள் கழித்து இந்தப் படத்தைப் பார்த்தாலும் அதே புதுப்பொலிவுடன் ரசிக்க வைக்கின்றது. "
உண்மை அப்படிபட மிக சில தமிழ் படங்களில் இதுவும் ஓன்று .
"இந்தப் பதிவுக்கான மொத்த உழைப்பு 2 நாள் இரவுப் பொழுதுகள் "
உங்கள் இசை மீதான காதலுக்கு இரண்டு மணிநேரம் ஒன்றும் இல்லை தானே !!!. :)
மீண்டும் நன்றி ஒரு நல்ல பதிவுக்கும் ராஜாவின் இசைக்கும்
அருண்
தல கோபி
சாவகாசமா கேட்டுட்டு வாங்க ;) அந்த வீடியோவையும் இணைக்கிறேன்
நன்றி சொக்கரே, இப்படியே எல்லாப்படத்தையும் பதிவில் பார்த்து திருப்தி அடையாம தியேட்டருக்கு போய் பாருங்க ;-)
வாங்க சுரேஷ்
காட்சிக்கு உயிர்கொடுக்க மொட்டையை விட்டா ஆள் ஏது ;0
வருகைக்கும் கருத்தும் நன்றி ஆயில்ஸ், உங்கள் பழைய நினைவுகள் சுவையாக இருந்தது.
//முத்தையன் கரகக்குழு (ராமராஜன்) குழு திருவிழாவுக்கு கரகம் ஆட கிராமத்துக்கு வருதல்//
இந்த பின்ணணி இசையைத்தான் நான் எனது மொபைலில் ரிங் டோனாக வைத்திருந்தேன். சுற்றுவட்டாரமே சிரிக்க ஆரம்பித்துவிடும்.
அது அந்த படத்திற்க்கு கிடைத்த அங்கீகாரம்
//இந்தப் பதிவுக்கான மொத்த உழைப்பு 2 நாள் இரவுப் பொழுதுகள் ;)//
நல்ல கடுமையான உழைப்பு தான்.. எனக்கென்னமோ ராஜாவே அவ்வளவு நாள் எடுத்து இருப்பார்னு தோனல.. அவர் தான் மின்னல் வேக கம்போசர் ஆச்சே..
ரவிசங்கர் ஆனந்த்
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
நன்றி அண்ணன் மறக்க முடியுமா இந்தப்படத்தை!
:)
அருண், காளிராஜ்
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
Thanks for sharing.... enjoyed a lot !!
நன்றி
எப்படி இதை டவுன்லோடு செய்வது என்று யாராவது சொல்லுங்களேன் ரிங்டோனாக யூஸ் செய்ய
பள்ளியில் படிக்கும் போது மதுரை நடனா திரையரங்கில் "கட்" அடித்து பலமுறை ராஜா இசைக்காகவே பார்த்திருக்கிறேன். திரையரங்கில் தலைவர் ரி ரிக்கார்டிங் கேட்கவே சுகமாக இருக்கும். ராஜா இசையில் உங்களுக்கு இருக்கும் ஈர்ப்பு பிரமாண்டமாய் இருக்கிறது. நான் பல வருடங்களுக்கு முனனால் ஹே ராம் வந்த புதிதில் ராஜா ரி ரிக்கார்டிங்காக ஒரு இனைய தளம் உருவாக்கி இருந்தேன் அது தான் எனக்கு நியாபகம் வருகிறது.
http://members.cox.net/heyram/
(பிளாஷ் பக்கத்தை பார்க்கவும்)
உங்கள் இரண்டு இரவு கடின உழைப்பு பல ரசிக நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும்.
ரவிசங்கர்
அவரோடு ஒப்பிட முடியுமா ;)'
ஆண்டாள் மகன், கறுப்பி, யுர்கன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
எனக்குள் ஒருவன்
தனிமடல் போடுங்க, எந்த க்ளிப்புன்னு சொன்னால் தருவேன்
மீனாக்ஷி சுந்தரம்
பின்னணி இசை மீதான உங்கள் தேடுதலைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். ஹே ராம் என் பட்டியலில் இருந்தது, உங்கள் மூலம் காண்பதையிட்டு மன நிறைவு கொள்கிறேன். மிக்க நன்றி
அடேங்கப்பா.
பாடல்களை பல முறை கேட்டிருந்தாலும், பின்னணி இசையை இந்த முறையில் கேட்டது இல்லை. மிக உண்ணதமான உணர்வு எனக்குள் உண்டாகின்றது. இந்த பதிவின் வழியாக 1989 தவறவிட்ட தருணங்களை மீட்டெடுக்க முயல்கின்றேன். முக்கியமாக அண்ணனும் தம்பியும் எப்படி பேசி பேசி இந்த இசையை உருவாக்கி இருப்பார்கள் என்கின்ற கற்பனை, நெஞ்சில் ஊறி இனிக்கின்றது. இசையை வலது காதின் வழியாக மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். இனி இடது காதையும் பயன் படுத்த விழைகின்றேன். நன்றி கானா பிரபா. இதை டிவிட்டரி பகிற்கின்ற நண்பர்களுக்கும் நன்றி.
பாடல்களை பல முறை கேட்டிருந்தாலும், பின்னணி இசையை இந்த முறையில் கேட்டது இல்லை. மிக உண்ணதமான உணர்வு எனக்குள் உண்டாகின்றது. இந்த பதிவின் வழியாக 1989 தவறவிட்ட தருணங்களை மீட்டெடுக்க முயல்கின்றேன். முக்கியமாக அண்ணனும் தம்பியும் எப்படி பேசி பேசி இந்த இசையை உருவாக்கி இருப்பார்கள் என்கின்ற கற்பனை, நெஞ்சில் ஊறி இனிக்கின்றது. இசையை வலது காதின் வழியாக மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். இனி இடது காதையும் பயன் படுத்த விழைகின்றேன். நன்றி கானா பிரபா. இதை டிவிட்டரி பகிற்கின்ற நண்பர்களுக்கும் நன்றி.
Post a Comment