Friday, April 25, 2008
சிறப்பு நேயர் "நித்யா பாலாஜி"
கடந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பித்திருந்தவர், தனது திருமணத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடிய நண்பர் "அய்யனார்". றேடியோஸ்பதியின் இசைப்பதிவுகள் பதிவர்களை மட்டுமன்றி பதிவுலக வாசகர்களையும் ஈர்த்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வாரம் கலந்து சிறப்பிக்கும் சிறப்பு நேயர் "நித்யா பாலாஜி" பதிவுலகிற்குப் புதியவர். அத்தோடு வலைப்பதிவை இன்னும் ஆரம்பிக்காதவரும் கூட. சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய சிறப்பு நேயர் தொடரால் கவரப்பட்டுத் தனது ஆக்கத்தை முத்தான ஐந்து பாடல்களுடன் அழகாகத் தொகுத்து அனுப்பியிருக்கிறார் இவர். தொடர்ந்து நித்யா பாலாஜி பேசுவதைக் கேளுங்கள்.
நான்
வலைப்பதிவுகளுக்கு புதியவள்.
றேடியோஸ்பதியின் "சிறப்பு நேயர் தொடர்" ரொம்பவும் சுவாரஸ்யம்.
எனக்கு பிடித்த ஐந்து பாடல்களை கொடுத்திருக்கிறேன்.
இந்த பாடல்களை வழங்கினால் மகிழ்வேன்.
அனைவரும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பாடல்
: சங்கீத மேகம்
படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பி
இளையராஜா
, எஸ்.பி.பி கூட்டணியில் உருவான பாடல்களில் மிக அற்புதமான பாடல் இது.
எந்த மனோநிலையில் இருந்தாலும் கேட்ககூடிய பாடல்.
"இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்"
பாடல்
: நானே நானா
படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்: வாணி ஜெயராம்
வாணி
ஜெயராமின் குரலில் சுகமான பாடல்.
கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் அடிக்கடி கேட்ட பாடல்.
இது அந்த காலங்களுக்கு என்னை அழைத்து செல்லும்.
பாடல்
: நான் ஏரிக்கரை மேலிருந்து...
படம்: சின்னத்தாயி
இசை: இளையராஜா
எளிமையான
இயல்பான கிராமத்து காதல் பாடல்.
அற்புதமான பாடல் வரிகள்.
இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்.....
"கையேந்தும் ஆட்டுகுட்டி கன்னி பெண்ணா மாறாதோ
மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீர பேசாதோ...."
இந்த பாடல் அதிகம் பிரபலம் ஆகவில்லையோ?
பாடல்
: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பி, ஜானகி
அருமையான
மெலடி.
பாடல் முழுவதும் வரும் புல்லாங்குழல் இசை அற்புதமாக இருக்கும்.
இளையராஜா இசையில் எஸ்.பி.பி, ஜானகியின் குரல் சுகமோ சுகம்.
பாடல்
: நினைத்து நினைத்து
படம்: ரெயின்போ காலணி
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: கே கே
பாடல்
முழுவதும் கேகேயின் குரல் இசையோடு இழையும்.
நா.முத்து குமாரின் வரிகளும் யுவன் சங்கரின் இசையும் மனதை நெகிழச் செய்துவிடும்.
எனக்கு இந்த பாடலில் பிடித்த வரிகள்,
"முதல்
கனவு முடிந்துடும் முன்னமே
தூக்கம் கலைந்ததேன்......"
நன்றி
நித்யா பாலாஜி
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல், நான் எப்பொழுது எங்கு கேட்டாலும் அந்த இடத்தில் நின்று கேட்கிற பாடல்களில் ஒன்று...
நல்ல தெரிவுகள்.
எனது தெரிவுகளை எப்படி அனுப்பலாம்? வலைப்பதிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லையா?
தமிழன் தங்கள் வருகைக்கு நன்றி
//நல்ல தெரிவுகள்.
எனது தெரிவுகளை எப்படி அனுப்பலாம்? வலைப்பதிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லையா?//
வணக்கம் நண்பரே
தங்களுக்கு வலைப்பதிவு இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஐந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை உங்கள் பாணியில் சிலாகித்து எழுதி kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
//நானே நானா யாரோதானா?//
அற்புதமான பாடல்.
இந்தப்பாடலையே திரும்பத்திரும்ப போட்டுக்கேக்கும் பக்கத்து வீட்டு அக்காவுக்கும், எதிர்வீட்டு அண்ணனுக்கும் இருந்த காதலை
கிசுகிசுக்க வைத்த பாடல்....
நல்ல தெரிவுகள்..
அருமை
வாங்க நித்யா பாலாஜி..;)
அனைத்து பாடல்களும் அருமை...அதுவும் எல்லாமே நம்ம ராஜா பாட்டு வேற...ஒன்னும் சொல்றதுக்கு இல்லை...அனைத்து பாடல்களும் எனக்கு பிடித்த பாடல்கள் ;)
1. சங்கீத மேகம்
சூப்பர் பாட்டு...கல்லூரியில் தோழி ஒருத்தி அற்புதமாக பாடுவாள் இந்த பாட்டை ;)
\\"இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" \\
ராஜாவுக்கு பொருத்தமான வரிகள் ;))
2. நானே நானா
\\வாணி ஜெயராமின் குரலில் சுகமான பாடல்.\\
உண்மை...அருமையான குரல்..நல்ல பாடல் ;)
3.நான் ஏரிக்கரை மேலிருந்து...
மற்றொரு அருமையான பாடல்...
4. சுந்தரி கண்ணால் ஒரு சேதி
தளபதி படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மிக மிக அற்புதமான பாடல்கள். இந்த பாடலில் ராஜாவின் உழைப்பை பற்றி பல இடங்களில் எஸ்.பி.பி புகழ்ந்து இருக்கிறார் ;)
\\பாடல் முழுவதும் வரும் புல்லாங்குழல் இசை அற்புதமாக இருக்கும்.
இளையராஜா இசையில் எஸ்.பி.பி, ஜானகியின் குரல் சுகமோ சுகம்.\\
அழகாக சொல்லியிருக்கிங்க ;)
5. நினைத்து நினைத்து
நல்ல பாடல்...நல்ல வரிகள்...பாடல் காட்சியும் நன்றாக எடுத்திருப்பார்கள் ;)
அருமையான தொகுப்பு...மகிழ்ச்சி ;)
வாழ்த்துக்கள் ;)
நல்ல பாடல்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்..
வாழ்த்துகள் நித்யா பாலாஜி. ஆறும் அருமையானவை.
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்... இளையராஜா என்கின்ற சங்கீத மேகம் இசைத்தேனைச் சிறப்பாகவே சிந்தியிருக்கிறது.
நானே நானா யாரோதானா என்று பாடிய வாணி ஜெயராமுக்குக் கிடைத்தது அந்த ஆண்டின் சிறந்த பாடகிக்கான தமிழக அரசு விருது. ஆறு பாடல்களிலும் என்னுடைய கருத்தில் முதன்மையானது இந்தப் பாடலே என்பேன்.
நான் ஏரிக்கரை மேலிந்து எட்டுக்கட்டிப் பாடும் பொழுது என்று ஏசுதாஸ் பாடும் பொழுதே இனிமை நிறைந்து விடுகிறது. என்னுடைய மனங்கவர்ந்த இன்னொரு அற்புதமான பாடல்.
சுந்தரி கண்ணால் ஒரு சேதியல்ல... பல சேதி சொல்லத் தூண்டும் பாடல் இது.
நினைத்து நினைத்து பாடலும் சிறப்பான பாடலே.
why my comment was not displayed? any problem with me or with my comment....?
நண்பரே
உங்கள் பின்னூட்டம் கிடைக்கவேயில்லை, முன்னர் எழுதியதை இயலுமானால் கீழ்க்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள், பின்னூட்டலில் சேர்க்கின்றேன். அல்லது மீண்டும் பின்னூட்டவும்
kanapraba@gmail.com
mannichukonga thala... en pinnoottam ungala vandhu adaiyathathu enakku theriyala.. sari... mathavangaloda ella pinnoottathukkum naan oru repeata pottu , ippo appeat aahikiraen.....
Post a Comment