மரணம் எல்லோர்க்கும் பொதுவானது தான், ஆனால் திரையில் தோன்றி மறையும் விம்பங்களாய் இருந்தாலும் எமது வாழ்வில் ஏதோ இணைந்துவிட்ட பிடிப்போடு தொடர்ந்தே நினைவில் இருத்தி வைத்திருக்கும் கலைஞர்கள் சொற்பமே. அந்த வகையில் ரகுவரனும் கூட இந்தப் பட்டியலில் வந்து விட்டார்.
ஏழாவது மனிதன் வந்தபோது எனக்கு அவ்வளவாக நடிப்பை ரசித்துப் பார்க்கும் வயதில்லை. ஆனால் சம்சாரம் அது மின்சாரம் திரையில் மூத்த பையனாகவும், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் புத்திபேதலித்த மனைவியைச் சமாளித்து அதே வேளை தொலைந்த குழந்தையை மீட்கும் பாத்திரத்திலும், மந்திரப்புன்னகையில் கொல்லப்பட்ட காதலியில் நினைவில் வாடும் வில்லனாகவும், கலியுகம் திரையில் அப்பாவி இளைஞனாகவும், மைக்கேல் ராஜில் பீடிக்கட்டு முரடனாகவும், குற்றவாளியில் இன்னொரு வகை நடிப்பிலும், பாட்ஷாவில் மார்க் ஆண்டனியாகவும், புரியாத புதிரில் சந்தேகக் கணவனாகவும், இப்படி நான் பார்த்த அந்தந்தக் காலகட்டத்துத் திரைப்படங்களில் ரகுவரனுக்கு மாற்றாக இன்னொரு நடிகரை நினைத்துப் பார்க்கமுடியவில்லை.
ஜீனியர் விகடன், குமுதம், நக்கீரன் என்று ரகுவரனின் மரணத்தின் பின் ஒவ்வொரு வார இதழ்களிலும் இந்தக் கலைஞனின் நிஜப்பரிமாணம் குறித்து சககலைஞர்கள் பேசும் போது வியப்பாக இருக்கின்றது. அத்தனை உலக ஞானமும் தெரிந்துகொண்டே, அடக்கமாக இயக்குனர் செதுக்கிய சிலையாகவே இது நாள் வரை இவர் இருந்திருக்கின்றார். ஒரு வாரப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்கள் இப்படி " ஹாலிவூட் தரத்தில் அடக்கமாக நடிக்கத் தெரிந்த நடிகர் ரகுவரன்" உண்மைதான், ஆனால் இவருக்கு இப்படியான கச்சிதமான பாத்திரத்தில் முறையான தீனியை முழு அளவில் எந்தப் படமுமே கொடுக்கவில்லை என்பது கசப்பான நிஜம்.
நண்பர் பாரதிய நவீன இளவரசன் தன் பதிவின் மூலம் , ரகுவரனுக்காக நினைவுப்பதிவைப் பாடலோடு இடக் கேட்டிருந்தார். காலம் கடந்து அவரின் கோரிக்கையோடு ரகுவரனுக்கு அஞ்சலியாக இப்பாடல் தொகுப்பு அரங்கேறுகின்றது.
"ஒரு ஓடை நதியாகிறது" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ராஜேஸ்வரி பாடும் தலையை குனியும் தாமரையே"
|
ஏழாவது மனிதன் திரைப்படத்திலிருந்து சில பாடல்கள்
YouTube இல் thecrowresurrect ஒளியேற்றிய காட்சித்துண்டங்கள்
16 comments:
வித்தியசமான நடிகர். ஏழாவது மனிதன், ஒரு ஓடை நதியாகிறது படப்பாடல்களெல்லாம் அருமையான பாடல்கள்.
அடுத்த முதல்வர் கனவில் இருப்பவர்களிலிருந்து திடீர் தளபதிகள் வரை நம் ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்களாக இருக்கையில், ரகுவரன் ஒரு அபூர்வம்.
பாட்ஷாவில் அவர் சொல்லும் "Bad News" , முதல்வனில் சொல்லும் "என்னை சமாளிக்கவே முடியலைல?" யாராலும் மறக்க முடியாது.
இங்க வந்துட்டு ஒரு போன் கூட போடாமா போயிட்டீங்களே!!!
எங்க வந்த இடத்திலும் பாட்டு கேட்டிட போறாங்களே என்று யோசித்து சொல்லாமல் போய்விட்டீர்களா?
:(
நல்ல கலைஞன்
பிரபா!
இவர் அடக்கமான நடிப்பு பிடிக்கும்.
எனக்கு பிடித்த நடிகர்கள் பட்டியலில் முதல் இடங்களில் இருப்பவர் ரகுவரன் அவரைப்பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று இருந்தேன் பார்க்கலாம்....
நன்றி இந்தப்பதிவுக்காக...
கார்த்திக், ரேவதி, தேவயானி, ரகுவரனின் மனைவி ரோகிணி எல்லோரது நடிப்பிலும் வந்த தொட்டாச்சிணுங்கி படத்தில் மற்ற அனைவரையும் விட ரகுவரனின் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும். இந்தியில் இதே பாத்திரத்தை ஷாருக்கான் நடித்திருந்தார். ஆனால் ரகுவரனின் நடிப்புக்கு நிகர் அவரேதான். ஒரு நுண்ணிய உணர்வுடன் அமைந்த மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அவர்.
பாரதி
கானா,
ரகுவரன் தன்னையே அழித்துக்கொண்டவர், நல்லக்கலைஞர்கள் எல்லாம் இப்படித்தானோ.
gaana praba
its arunmozhi after a long time
raguvanaran is simpy the best actor. in ullasan movie at a restaurant fight scene the way he acknowledges ajith as ajith was facing the situaation is the proof for his talent
//மை ஃபிரண்ட் ::. said...
வித்தியசமான நடிகர். ஏழாவது மனிதன், ஒரு ஓடை நதியாகிறது படப்பாடல்களெல்லாம் அருமையான பாடல்கள்.//
வருகைக்கு நன்றி சிஸ்டர்
//ஹாரி said...
அடுத்த முதல்வர் கனவில் இருப்பவர்களிலிருந்து திடீர் தளபதிகள் வரை நம் ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்களாக இருக்கையில், ரகுவரன் ஒரு அபூர்வம்.//
சரியா சொன்னீங்க ஹாரி, ஒரு பத்திரிகை அறிக்கை லெவலுக்கே போகாதவர்.
//வடுவூர் குமார் said...
இங்க வந்துட்டு ஒரு போன் கூட போடாமா போயிட்டீங்களே!!!
எங்க வந்த இடத்திலும் பாட்டு கேட்டிட போறாங்களே என்று யோசித்து சொல்லாமல் போய்விட்டீர்களா?//
வாங்க வடுவூர் குமார்
உங்க புளக்கர் புரபைலில் இருக்கும் மெயில் ஐடிக்கு வருவதற்கு இருவாரம் முன்பே மெயில் போட்டிருந்தேன், நீங்க அந்த மெயில் பக்கமே போவதில்லை போலிருக்கு. ஈசூனுக்கு படம் பார்க்கவும் வரவிருந்தேன். சரி அடுத்த தடவை ஒரு வலைப்பதிவர் சந்திப்பே வைக்கலாம் ஒகேயா ;-)
(இந்த துர்கா பொண்ணு கூட உங்க நம்பரைத் தரல. பாருங்களேன்)
//கோபிநாத் said...
:(
நல்ல கலைஞன்//
உண்மைதான் தல
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
இவர் அடக்கமான நடிப்பு பிடிக்கும்.//
வணக்கம் அண்ணா
நடிப்பில் அடக்கமாக இருந்தவர், போதைப்பக்கமும் போகாமல் இருந்திருக்கலாம்.
//தமிழன்... said...
எனக்கு பிடித்த நடிகர்கள் பட்டியலில் முதல் இடங்களில் இருப்பவர் ரகுவரன் அவரைப்பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று இருந்தேன் பார்க்கலாம்.... //
உங்கள் பதிவையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றேன் நண்பா
பாரதி, வவ்வால், அருண்மொழி
தங்கள் வருகைக்கு நன்றி,
விஜயன், பாண்டியன் வரிசையில் தன்னை தானே அழித்துக் கொண்ட இன்னொரு நல்ல கலைஞர் இவர்.
//விஜயன், பாண்டியன் வரிசையில் தன்னை தானே அழித்துக் கொண்ட இன்னொரு நல்ல கலைஞர் இவர்.//
உண்மைதான் :-((
Thanks a lot Prabha. romba nandri.
Intha inimaiyaana paadal moolam nenjaarndha anjali, thanathu thaniththuvamaana nadippin moolam nam uLLam kavarntha raghuvaran rasikargal manathai vittu endru agala maattaar.
mikka nandri.
வணக்கம் பிரபா ந
மிக மிக தாமதமாக இடும் பின்னூட்டம்
மிக அருமையான கலைஞர் ரகுவரன்.
அவரின் இந்த ஏழாவது மனிதன் பாடல்களை எவ்வாறு தரவிரக்குவது
நன்றி
இராஜராஜன்
வணக்கம் ராஜராஜன்
இவற்றினைத் தரவிறக்கும் வசதி இங்கே இல்லை. Cooltoad.com என்ற தளத்தில் இருக்க வாய்ப்பிருக்கின்றது.
Post a Comment