Pages

Friday, February 29, 2008

சிறப்பு நேயர் "ஜிரா என்ற கோ.இராகவன்"


கடந்த வாரம் அப்பாவித்தங்கை துர்கா வந்து பல மொழிப்பாடல்களோடு வித்தியாசமான தன் ரசனையை வெளிப்படுத்தினார். இந்த வாரம் ஆண் நேயர் என்ற வகையில் ஐந்து முத்தான பாடல்களுடன் வந்து கலக்குகின்றார் "ஜிரா என்ற கோ.இராகவன்".


கோ.இராகவனின் பதிவுகள் இலக்கியம், சமயம், இசை, அனுபவம் என்று பலதரப்பட்ட பரப்பில் அகல விரிந்தாலும் அவரின் எல்லாப் பதிவுகளிலும் எஞ்சி நிற்பது அவரின் உயரிய ரசனைச் சிறப்பு. எதையும் அனுபவித்து எழுதும் இவர், பதிவுகள் மட்டுமன்றி பின்னூட்டங்களிலும் அதே சிரத்தையைக் காட்டுவார். பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் இவர் விதைக்கும் கருத்துக்கள் மிகுந்த நிதானத்துடனும், சுவையான தகவற் குறிப்புக்களுடனும் அமையும். சிறப்பாக;

மகரந்தம்

இனியது கேட்கின்

இசையரசி

முருகனருள்

போன்றவை கோ.இராகவனின் படைப்பாற்றலுக்கான களங்களில் சில.

இதோ இனி ஜிரா என்ற கோ.இராகவன் தொடர்கின்ரார்.

1. இது இரவா பகலா - வாணி ஜெயராம், ஏசுதாஸ்

நீலமலர்கள் படத்தில் இடம் பெற்ற பாடல் இது. கவியரசர் எழுதி மெல்லிசை மன்னர் இசையமைத்தது. கமலஹாசனும் ஸ்ரீதேவியும் நடித்திருக்கிறார்கள்.

காதலிக்கு உண்டாகும் ஐயங்களைக் கேள்வியாகக் கேட்கிறாள். அவைகளுக்குக் கேள்வியாலே விடையளிக்கிறான் காதலன்.

காதலி : இது இரவா பகலா?
காதலன் : நீ நிலவா கதிரா?

அவள் நிலவென்றால் அது இரவு. கதிரென்றால் பகல். என்ன அழகான விடை. மெல்லிசை மன்னரும் கவியரசரும் ஏற்கனவே செய்த இந்த முயற்சிதான்...பின்னாளில் உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா என்று கேட்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

வாணி ஜெயராமின் குரலும் ஏசுதாசின் குரலும் இணைந்து ஒலிக்கும் அற்புதப் பாடல்.


2. சிந்து நதிக்கரை ஓரம் - டி.எம்.எஸ், பி.சுசீலா

இளையராஜா இசையில் பாடிய முதல் ஆண் பாடகர் என்ற பெருமை ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜனையே சேரும். அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை மறந்து விட்டு அவர்கள் இருவரும் இணைந்த பாடல்களைப் பார்த்தால் அத்தனையுமே அருமை. ஒன்று கூட பழுது கிடையாது. அன்னக்கிளியில் தொடங்கிய கூட்டணி விரைவிலேயே முறிந்தது நமது கெட்ட நேரம்தான்.

நல்லதொரு குடும்பம் என்ற படத்திற்காக கவியரசர் எழுதி டி.எம்.எஸ்சும் இசையரசியும் பாடிய இந்த ஜோடிப் பாடலில் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள். மிக அழகான காதற்பாடல்.


3. அழகி ஒருத்தி இளநி விக்குற - எல்.ஆர்.ஈசுவரி, ஜெயச்சந்திரன்

ஜெயச்சந்திரன் என்றாலே மெல்லிய காதல் பாடல்கள் என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள். ஆனால் அவரையும் துள்ளலிசையரசி எல்.ஆர்.ஈசுவரியையும் இணைத்து ஒரு பாடலை மெல்லிசை மன்னர் இசையமைத்திருக்கிறார். கவியரசரின் பாடல்தான். பைலட் பிரேம்நாத் என்ற படத்திற்காக.

இலங்கையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர்திலகம், மாலினி ஃபொன்சேகா (இலங்கை), விஜயகுமார், ஜெயச்சித்ரா, ஸ்ரீதேவி, ஜெய்கணேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இலங்கையின் இளம் குயில், முருகனெனும் திருநாமம், Who is the blacksheep? ஆகிய அருமையான பாடல்களும் இந்தப் படத்தில்தான்.

இந்தப் பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.....

உப்புக்கடலோரம் ஒரு ஜோடி நண்டு
ஓடி விளையாடி உறவாடக் கண்டு
கன்னம் முச்சூடும் காயாத புண்ணு
கன்னி இளமேனி என்னாகுமென்னு
அம்மான் மகன் சும்மா நிப்பானா
அள்ளிக்கொண்டால் மிச்சம் வெப்பான

கேட்டுப்பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும்.


4. இது சுகம் சுகம் - வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மெல்லிசை மன்னருக்கும் இசைஞானிக்கும் பிறகு தமிழகத்தில் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமாந்தான். அவர் எட்டாத பல உயரங்களுக்குச் செல்கையில் தமிழ்த் திரையுலகத்தையும் விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. அவருடைய இடம் இன்னும் நிரப்ப்பப்படாமல் இருக்கிறது. அவருடைய பாணியை வைத்துக் கொண்டுதான் இன்றைக்குப் பலருக்குப் பிழைப்பே தவிர புதிதாக யாரும் எதுவும் செய்யவில்லை.

அவருடைய இசையில் வெளிவந்த இந்தப் பாடலில் ஒரு சிறப்பு. ஆம். அவருடைய இசையில் வாணி ஜெயராம் பாடிய ஒரே பாடல் இதுதான். வாணி அவர்களிடம் ஏ.ஆர்.ரகுமான் சொன்னாராம். "அம்மா, நீங்க பாட வேண்டிய அளவுக்குப் பாட்டு நான் போடுறதில்லை" என்று. அந்த அளவுக்கு இசைப்புலமை மிக்கவர் வாணி ஜெயராம். அவரும் பாடும் நிலா பாலுவும் இணைந்து குரலால் குழைந்து பாடிய இந்தப் பாடல் மிகமிக அருமையானது.

வண்டிச்சோலை சின்ராசு என்ற படத்தில் வெளிவந்த காரணத்தினால் மட்டுமே காணாமல் போன இந்தப் பாடல் நத்தையில் முத்து. கேட்டு ரசியுங்கள்.


5. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா - சொர்ணலதா, ஏசுதாஸ்

சொர்ணலதாவின் முதல் பாடல். நீதிக்குத் தண்டனை என்ற திரைப்படத்தில் இருந்து. பாரதியாரின் அருமையான தாலாட்டுப் பாடல். கண்ணன் பாட்டில் ஒரு பாட்டு இது. இந்தப் பாடலை இசையாக்கியிருக்கிறார் மெல்லிசை மன்னர். வழக்கமாக பாரதியார் பாடலென்றால் மெல்லிசை மன்னர் பயன்படுத்தியது இசையரசியின் குரலைத்தான். ஆனால் முதன்முறையாக புதுப்பாடகி. சொர்ணலதாவிற்குக் கிடைத்தது மோதிரக்கைக் குட்டு. அதுவும் ஏசுதாசுடன் இணைந்து பாடியிருக்கிறார். பின்னாளில் அவர் நிறையப் பாடல்களைப் பாடித் தேசிய விருதெல்லாம் வாங்கியிருந்தாலும் அவையனைத்திற்கும் முதற்படி இந்தப் பாடலே.


பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்.

அன்புடன்,
ஜிரா என்ற கோ,இராகவன்

24 comments:

pudugaithendral said...

அருமையான பாடல்கள்.

வாழ்த்துக்கள் ராகவன்.

நீங்களும் யேசுதாஸ் ரசிகரா?

அவரது முத்தான 3 பாடல் கொடுத்ததுக்கு நன்றி.

வாணிஜெயராம் அவர்களின் குரலில் இன்றும் இளமை.

லதா மங்கேஷ்கரே வாணியைப் பாத்து பயந்து போயிருக்காங்க.

Anonymous said...

யாரு இந்த ஹீரோ சாரு...ஐய் நம்ப ஜீரா அண்ணா...பேசமா நீங்களே நடிக்க போய் இருக்கலாம்..இப்போ வர ஹீரோ எல்லாம் சரி இல்ல

Anonymous said...

அய்யோ பாட்டு கேட்க முடியவில்லையே....!!!
இது வரைக்கும் நான் கேட்காத பாட்டா வேற இருக்கு :P
முதலில் கும்மி அடிக்கிறேன்.அப்புறம் பாட்டை கேட்குறேன்

CVR said...

ஆஹா!!!
இந்த தடவை நம்ம அண்ணாச்சியா???

வண்டிச்சோலை சின்ராசு பாட்டு நானும் விரும்பி கேட்கும் பாடல்!

பாடல்கள் கேட்க இப்போ நேரம் இல்லை!!
அப்புறமா எல்லாத்தையும் கேட்டுட்டு தனியா பின்னூட்டம் போடறேன்!! :-)

Anonymous said...

கமெண்ட் மாடரேசன் யாரு உங்களைப் போட சொன்னா?கும்மி அடிக்க கூப்பிட்டு இப்படி சதி பண்ணி அசிங்கம் பண்ணிட்டீங்க இல்ல பிரபு அண்ணா...க்க்ர்ர்ர்ர்ர்

G.Ragavan said...

// புதுகைத் தென்றல் said...
அருமையான பாடல்கள்.

வாழ்த்துக்கள் ராகவன்.

நீங்களும் யேசுதாஸ் ரசிகரா?

அவரது முத்தான 3 பாடல் கொடுத்ததுக்கு நன்றி. //

நன்றி புதுகைத் தென்றல்.

மூனு பாட்டா? ரெண்டுதானே குடுத்திருக்கேன். இது இரவா பகலா... அடுத்தது சின்னஞ்சிறு கிளியே...

// வாணிஜெயராம் அவர்களின் குரலில் இன்றும் இளமை.

லதா மங்கேஷ்கரே வாணியைப் பாத்து பயந்து போயிருக்காங்க. //

ஆமா. அதுனால மீராங்குற படத்துல லதா பாடனும்னா வாணி பாடுன பாட்டுங்க எல்லாத்தையும் லதா பாடி ரெக்கார்டிங் பண்ணனும்னு சொன்னாங்களாம்... ஆனா இசையமைக்கும் பண்டிட் ரவிசங்கர் ஒத்துக்கலையாம். எல்லா பாட்டையும் வாணிக்கே குடுத்துட்டாராம். ஆனா மத்த இசையமைப்பாளர்கள் அந்த மாதிரி செய்யாம.. லதா சொன்ன படி செஞ்சாங்களாம்.

G.Ragavan said...

// துர்கா said...
யாரு இந்த ஹீரோ சாரு...ஐய் நம்ப ஜீரா அண்ணா...பேசமா நீங்களே நடிக்க போய் இருக்கலாம்..இப்போ வர ஹீரோ எல்லாம் சரி இல்ல //

ஆகா தாயே என்னாது இது!!!! இப்பிடியெல்லாமா கிண்டல் பண்றது... ஒரு பயம் மரியாதை வேண்டாம்...

Anonymous said...

வாணி ஜெயராம் பாடல்கள் இரண்டுமே வித்தியாசமானவையா இருக்கு. ஆரம்ப காலத்து சொர்ணலதா குரலைக்கேட்டுட்டு, கிட்டத்தட்ட வாணி ஜெயராம் மாதிரியே இந்தப்பாடகி குரல் இருக்குன்னு எங்கண்ணன் சொன்னது ஞாபகம் வருது.

G.Ragavan said...

// துர்கா said...
அய்யோ பாட்டு கேட்க முடியவில்லையே....!!!
இது வரைக்கும் நான் கேட்காத பாட்டா வேற இருக்கு :P
முதலில் கும்மி அடிக்கிறேன்.அப்புறம் பாட்டை கேட்குறேன் //

என்னாலையும் பாட்டு கேக்க முடியலை :(

// துர்கா said...
கமெண்ட் மாடரேசன் யாரு உங்களைப் போட சொன்னா?கும்மி அடிக்க கூப்பிட்டு இப்படி சதி பண்ணி அசிங்கம் பண்ணிட்டீங்க இல்ல பிரபு அண்ணா...க்க்ர்ர்ர்ர்ர் //

எங்கிட்ட மோதாதே.... :))))))))))))

Swamy Srinivasan aka Kittu Mama said...

aaaha unga blog idhaan first time...superaa irukku ragavan

neenga sonna paatu ellamae dhool..yaesudhaas is a genius but enakku adha vida piditha genius, namba SPB dhaan.

office la iruppadhaala kaetka mudiyalai :-) but veetukku poi kandippaaga kaetkiraen...

g3 akka blog vaziyaa dhaan inga vandhaen...marubadiyum varugiraen

kittu mama

கோபிநாத் said...

வாங்க ஜிரா...வாங்க..;))

என்னம்மா போஸ் கொடுக்குறாரு எங்க ஹுரோ...இளம் இயக்குனர்களுக்கு ஒரு இனிய வாய்ப்பு....சீக்கிரம் இந்த ஹுரோவை...இல்ல இல்ல ஜிராவை கூட்டிக்கிட்டு போங்க... ;))

\\கோ.இராகவனின் பதிவுகள் இலக்கியம், சமயம், இசை, அனுபவம் என்று பலதரப்பட்ட பரப்பில் அகல விரிந்தாலும் அவரின் எல்லாப் பதிவுகளிலும் எஞ்சி நிற்பது அவரின் உயரிய ரசனைச் சிறப்பு. \\

அவரின் கதைகளுக்கு நான் எப்போதும் ரசிகன்...;))

\\எதையும் அனுபவித்து எழுதும் இவர், பதிவுகள் மட்டுமன்றி பின்னூட்டங்களிலும் அதே சிரத்தையைக் காட்டுவார். பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் இவர் விதைக்கும் கருத்துக்கள் மிகுந்த நிதானத்துடனும், சுவையான தகவற் குறிப்புக்களுடனும் அமையும். சிறப்பாக;\\

உண்மை...உண்மை...அவர் கடைபிடிக்கும் நிதானம் எனக்கு பிடித்த ஒன்று ;))

ரசிகன் said...

பாடல்கள் கலக்கலா இருக்கு:) நல்ல தேர்ந்தெடுப்பு.. சூப்பர்.....:)

ரசிகன் said...

//துர்கா said...
கமெண்ட் மாடரேசன் யாரு உங்களைப் போட சொன்னா?கும்மி அடிக்க கூப்பிட்டு இப்படி சதி பண்ணி அசிங்கம் பண்ணிட்டீங்க இல்ல பிரபு அண்ணா...க்க்ர்ர்ர்ர்ர்
//

kolaiveri yodathaan alaiyarangappa :)))))))

ரசிகன் said...

en pinnuten engeyi?

G.Ragavan said...

// சின்ன அம்மிணி said...
வாணி ஜெயராம் பாடல்கள் இரண்டுமே வித்தியாசமானவையா இருக்கு. ஆரம்ப காலத்து சொர்ணலதா குரலைக்கேட்டுட்டு, கிட்டத்தட்ட வாணி ஜெயராம் மாதிரியே இந்தப்பாடகி குரல் இருக்குன்னு எங்கண்ணன் சொன்னது ஞாபகம் வருது. //

வாங்க சின்ன அம்மணி. தமிழ் திரைப்படங்கள்ள பாடுற பெண் பாடகிகள்ள இசையரசி பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி.. இவங்கள்ள ஒருத்தரோட பாதிப்பாவது இல்லாமல் இருக்குற பாடகியைப் பார்க்கவே முடியாது.

G.Ragavan said...

// CVR said...
ஆஹா!!!
இந்த தடவை நம்ம அண்ணாச்சியா???

வண்டிச்சோலை சின்ராசு பாட்டு நானும் விரும்பி கேட்கும் பாடல்!

பாடல்கள் கேட்க இப்போ நேரம் இல்லை!!
அப்புறமா எல்லாத்தையும் கேட்டுட்டு தனியா பின்னூட்டம் போடறேன்!! :-) //

வாங்க சீவியாரு. இல்ல.. இல்ல.. புபு காக. :) பாட்டெல்லாம் கேட்டீங்களா? எல்லாத்தையும் கேட்டுட்டுப் பின்னூட்டம் போடுறதாச் சொன்னீங்களே! ;)

பாச மலர் / Paasa Malar said...

அழகி ஒருத்தி பாடலும், சின்னஞ்சிறு கிளியேவும் எனக்கு மிகவும் பிடிக்கும்..கேட்டு நீண்ட நாளாகிவிட்டது..நல்ல தேர்வுகள் ராகவன்..

M.Rishan Shareef said...

அன்பின் ஜி.ராகவன்,
நல்ல பாடல்களைத் தேர்வு செய்திருக்கிறீர்கள்.
இதில் அழகி ஒருத்தி பாடலையும்,சுவர்ணலதாவின் முதல் பாடலையும் இன்றுதான் முதன்முதல் கேட்கிறேன்.
நல்ல பாடல்கள்.

சுகம் சுகம் அது...பாடல் எனக்கும் மிகப் பிடித்த பாடல்.பாடலை மெல்லிசையில் கேட்க மிக அருமை.
அதில் எஸ்.பி.பி யின் குரலைக் கவனித்தீர்களா நண்பா? என்னமாய் அழகாய்க் குழைகிறது.அருமை.

பாடல்களைத் தந்த உங்களுக்கும்,நண்பர் கானா பிரபாவிற்கும் நன்றிகள் :)

G.Ragavan said...

// Kittu said...
aaaha unga blog idhaan first time...superaa irukku ragavan

neenga sonna paatu ellamae dhool..yaesudhaas is a genius but enakku adha vida piditha genius, namba SPB dhaan.

office la iruppadhaala kaetka mudiyalai :-) but veetukku poi kandippaaga kaetkiraen...

g3 akka blog vaziyaa dhaan inga vandhaen...marubadiyum varugiraen

kittu mama //

நன்றி கிட்டு மாமா. எல்லாமே நல்ல பாட்டுங்கதான். கேட்டுட்டு உங்க கருத்துகளைச் சொல்லுங்க. :)

G.Ragavan said...

// கோபிநாத் said...
வாங்க ஜிரா...வாங்க..;)) //

வந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன் :)

// என்னம்மா போஸ் கொடுக்குறாரு எங்க ஹுரோ...இளம் இயக்குனர்களுக்கு ஒரு இனிய வாய்ப்பு....சீக்கிரம் இந்த ஹுரோவை...இல்ல இல்ல ஜிராவை கூட்டிக்கிட்டு போங்க... ;)) //

என்னது போஸா? சுபாஸ் சந்திர போஸ் ரேஞ்சுக்குச் சொல்றீங்களே... மக்கள் சிரிக்கப் போறாங்க... :)

//அவரின் கதைகளுக்கு நான் எப்போதும் ரசிகன்...;))

உண்மை...உண்மை...அவர் கடைபிடிக்கும் நிதானம் எனக்கு பிடித்த ஒன்று ;)) //

அதெல்லாம் சரிங்க. பாட்டுக எப்படி? அதைச் சொல்லவேயில்லையே! ;)

SurveySan said...

அடேங்கப்பா..

வாணி குரல் கலக்கல்.

அருமையான தொகுப்பு. இளநி பாட்டு இதுவரை கேட்டதில்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாங்க ஜிரா! கலக்கி இருக்கீங்க எல்லாப் பாட்டுலயும்!
அட நீங்க பாடுனுதை மட்டும் சொல்லலைங்க! குறிச்சிக் கொடுத்ததையும் தான் சொன்னேன்!

நீங்க பாடுற குரலில் கேக்கணும்னா, அதெல்லாம் தனியா ஜிடாக்குல தானே பாடிக் காட்டுவீங்க? :-)

சுகம் சுகம் பாட்டு இருப்பதிலேயே சூப்பர்! எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு! கிக்கான பாடல்களையும் விரசம் இன்றி, காதல் குழைவுடன் பாடுவதில் வாணி ஜெயராம் மிகவும் வல்லவர்!

//அழகி ஒருத்தி இளநி விக்குற - எல்.ஆர்.ஈசுவரி, ஜெயச்சந்திரன்//

LR ஈஸ்வரி இல்லாத ஜிரா கலெக்சனா? :-)
எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது!

//இது இரவா பகலா//

வாணி ஜெயராமுக்கு இணையான ஆண் குரல் ஜேசுதாஸ் தானே ஜிரா? என்ன சொல்றீங்க?

//சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா//

இது கலைஞர் வசனம் எழுதிய படமும் கூட!
இந்தப் பாடல் பல படங்களிலும் வந்துள்ள அருமையான பாடல்.
எம்.எல்.வி மணமகள் படத்தில் பாடி இருப்பார்!

//கண்ணன் பாட்டில் ஒரு பாட்டு இது//

ஹிஹி, ஏதோ ஞாபகம் இருந்தாச் சரி! :-)

ஆனால் பலரும் நினைப்பது போல் இதைக் கண்ணனை நினைத்து எழுதவில்லையாம் பாரதியார்.
கண்ணம்மா - என் குழந்தை என்று தலைப்பிட்டு எழுதிய அவர், அதற்கு முன்னுரை சொல்கையில்
"பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு" என்று தான் குறிப்பிடுகிறார்! பாரதியார் கவிதைப் புத்தகத்திலும் இதைக் காணலாம்!

CVR said...

தாமதமான பின்னூட்டம் போடுவத்ற்கு மன்னிக்கவும்!!

1.)ஆகா!! இனிமை! யேசுதாஸின் குரலில் ஏதோ குறைகிறது!! கம்பீரம்,மிடுக்கு,நிமிர்வு என்று பெயர் கொடுக்க தெரியவில்லை!!
இது என் ஏசுதாஸ் குரல் அல்ல!!அன்றைக்கு ஏதோ உடம்பு சரியில்லை போல!!
பாடலில் தமிழ்ச்சுவை ஆனந்தம்!!

2.)மென்மையான பாடல்!!
டி.எம்.எஸ்ஸின் குரலின் உதவியோடு அழகாக பாடலை இழைத்திருக்கிறார் இளையராஜா!! இளையராஜாவின் இசையில் டி.எம்.எஸ்ஸின் குரல் கேட்க வித்தியாசமாக இருக்கிறது.அவர்களின் கூட்டணி தொடராதது வருத்தம்!

3.)புதுசா இருக்கே!!
இது வரைக்கும் கேட்க வில்லையே!!
ஹ்ம்ம்!! ஜாலியா தான் போகுது!
ஜெயச்சந்திரன் இந்த மாதிரி பாட்டு எல்லாம் கூட பாடுவாரா?? பரவாயில்லையே!! ;)

4.)ஆஹா!!
ரஹமானின் பல நல்ல பாடல்கள் அவ்வளவாக பிரபலமாகாமல் போயிருக்கின்றன,அப்படிப்பட்ட ஒரு பாடல் இது!!
நான் மிகவும் ரசிக்கும் பாடல்!
அடையாளம் பார்த்து இந்த பதிவில்
வெளியிட்டதற்கு நன்றி அண்ணாச்சி!! :-D

5.)பாரதியார் பாட்டு எப்பவும் கேட்க இன்பம்!
அழகாக மெட்டமைக்கப் பட்டிருக்கும் பாடல்!யேசுதாஸின் குரலை விட சொர்ணலதாவின் குரலே மனதில் நிற்கிறது!!

G.Ragavan said...

// ரசிகன் said...
பாடல்கள் கலக்கலா இருக்கு:) நல்ல தேர்ந்தெடுப்பு.. சூப்பர்.....:) //

நன்றி ரசிகன். பாட்டெல்லாம் கேட்டு ரசிச்சதுக்கு நன்றி.


////துர்கா said...
கமெண்ட் மாடரேசன் யாரு உங்களைப் போட சொன்னா?கும்மி அடிக்க கூப்பிட்டு இப்படி சதி பண்ணி அசிங்கம் பண்ணிட்டீங்க இல்ல பிரபு அண்ணா...க்க்ர்ர்ர்ர்ர்
//

kolaiveri yodathaan alaiyarangappa :))))))) //

பாத்தீங்களா.... ஏதோ பிரபா நமக்காகப் பாட்டுப் போடுறாரு. அவர் பதிவுல இப்பிடியெல்லாம் செஞ்சா அவரு கோவிச்சிக்கிருவார்ல. :)

//en pinnuten engeyi? //

உங்க பின்னூட்டமும் போட்டு... அதுக்குப் பதிலும் போட்டாச்சு.