Pages

Tuesday, February 26, 2008

வரவிருக்கும் வாரங்களின் சிறப்பு நேயர்கள்

றேடியோஸ்பதியின் புதுத் தொடராக வலம் வந்து கொண்டிரும் இவ்வார சிறப்பு நேயர் தொடர் ஆரம்பித்ததே ஒரு சுவாரஸ்யமான எதிர்பாராத சந்தர்ப்பத்தில். நண்பர் ஜீவ்ஸ் நீங்கள் கேட்டவை பகுதியில் கேட்க வேண்டும் என்று தொடர்ச்சியாக நான்கு பாடல்களைக் கேட்டிருந்தார்.

சரி இவ்வளவு நல்ல பாடல்களைக் கேட்கின்றீர்களே, ஒரு தொடரை ஆரம்பித்து அதில் நீங்களே உங்களுக்குப் பிடிச்ச ஐந்து பாட்டுக்களைச் சிலாகித்து எழுதி அனுப்புங்களேன் என்றேன். சொன்னதும் தான் தாமதம், சில மணி நேரத்திலேயே பதிவோடு மனுஷன் வந்து விட்டார். ஜீவ்ஸ் தொடக்கி வச்ச முகூர்த்தமோ என்னமோ இந்த பிசினஸ் நல்லாவே போகுது ;-).

பல நண்பர்கள்/பதிவர்கள் தம் பதிவுகளை எழுதி அனுப்பி வைத்து விட்டுக் காத்திருக்கின்றார்கள். அவை எப்போது வரும் என்பதை, தம் பதிவை அனுப்பிய ஒழுங்கிலேயே காட்டுகின்றேன். ஒரேயொரு மாற்றம், ஒரு ஆண் நேயர், அடுத்து ஒரு பெண் நேயர் என்ற ஒழுங்கில் மட்டும் இது அமைகின்றது. இதோ அந்த வரவிருக்கும் வெள்ளி வாரங்களின் சிறப்பு நேயர்கள்.

1. பெப்ரவரி 29 - ஜிரா என்னும் கோ.ராகவன்
2. மார்ச் 7 - பாசமலர்
3. மார்ச் 14 - ரிஷான் ஷெரிப்
4. மார்ச் 21 - சினேகிதி
5. மார்ச் 28 - ஸ்ரீராம்
6. ஏப்ரல் 4 - துளசி கோபால்
7. ஏபரல் 11- கண்ணபிரான் ரவிசங்கர்
8. ஏபரல் 18 - நித்யா பாலாஜி
9. ஏப்ரல் 25- சர்வேசன்
10.மே 2 - கயல்விழி முத்துலெட்சுமி
11. மே 9 - அய்யனார்


தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்
KANAPRABA@GMAIL.COM

சரி இந்த அறிவித்தலோடு, என்னைக் கவர்ந்தவை 2 பகுதியையும் தருகின்றேன்.
முதலில் "மெட்டி" திரைப்படத்தில் இருந்து ப்ரம்மானந்தம் பாடும் "சந்தக் கவிகள் பாடிடும் மனதினில்" என்ற பாடலை இளையராஜா இசையில் கேட்கலாம். அதிகம் கேட்காத பாடகர், கர்னாடக இசைக்கலைஞருக்கே உரித்தான குரலில் பாடும் இனிமையான தனியாவர்த்தனம் இது.
Get this widget | Track details | eSnips Social DNA


அடுத்து இளையராஜாவின் இசையில் "ஒரு ஓடை நதியாகிறது" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ராஜேஸ்வரி பாடும் "தலையை குனியும் தாமரையே". பாடலைக் கேட்கும் போதே மனதுக்குள் கல்யாணக் கச்சேரி களை கட்டும்.
Get this widget | Track details | eSnips Social DNA


நிறைவாக "உனக்காகவே வாழ்கிறேன்" திரையில் இருந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம், இளையராஜா இசையில் பாடும் "இளஞ்சோலை பூத்ததா" என்னும் இனிமையான பாடல். இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் கேரளாவில் விடுமுறையில் இருந்த நாளொன்றில் ஏஷியா நெட்டின் இசை நிகழ்ச்சிக்காக ஒரு மலையாள இளைஞன் இப்பாடலை வெகு சிறப்பாக பாடியதை தொலைக்காட்சியில் பார்த்த அந்த ஞாபகம் நினைவில் வரும்.
Get this widget | Track details | eSnips Social DNA

16 comments:

Anonymous said...

ரொம்ப நன்றி அண்ணா,
யாருக்கு யாருக்கு எப்போ எப்போ வந்து கும்மி அடிக்கனும்ன்னு இப்போ தெரிஞ்சு போச்சு

கானா பிரபா said...

ஆகா, எல்லாம் ஒரு ஏற்பாடாத்தான் நடந்துட்டிருக்கா

M.Rishan Shareef said...

தேதி தெரிஞ்சு போச்சு.இனிமே கொண்டாட்டம் தான்.... :)
நன்றி நண்பரே...!

G.Ragavan said...

மூனு பாட்டுகளும் மூன்று முத்துகள்.

சந்தக் கவிதை பாடிடும் பாட்டு ரொம்ப அருமை. பாடியது யார்னு தெரியலை. இது ரொம்பவே அறிவாளித்தனமான மெட்டும் இசைக்கோர்வையும். நல்ல இசை வாங்குறதுல ஸ்ரீதருக்கு அடுத்து மகேந்திரன்னு சொல்ல நெனைக்கிறேன்.. கீழ ஸ்ரீதர் படப் பாட்டு.

தலையைக் குனியும் தாமரையே. எஸ்.ராஜேஸ்வரி நல்லாப் பாடியிருக்காங்க. காத்திருந்தேன் அன்பே... இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ... பூமகள் கன்னங்கள் இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ..ஆயிரம் நாணங்கள்.. இந்த ஊமையின் வீணையில் பலசுரமா...

ஆகா ஆகா... என்ன பாட்டு என்ன பாட்டு... ஸ்ரீதர்.. எங்கய்யா போனீங்க. :(

துளசி கோபால் said...

பிரபா,

நான் ஒரு அஞ்சு பாட்டு கேட்கவா?

தனிமடலில் அனுப்புறேன் நாளை.

கானா பிரபா said...

துளசிம்மா

என்ன கேள்வி இது, அனுப்பிடுங்க சீக்கிரமே ;-)
உங்க ரசனையையும் அறிய ஆவல்

கோபிநாத் said...

தல

லிஸ்ட்டு போட்டது ரொம்ப நல்லது...பாட்டை கேட்டுட்டு பிறகு வருகிறேன் :)

Vassan said...
This comment has been removed by the author.
Vassan said...

Brahmanandan

கானா பிரபா said...

ப்ரம்மானந்தம் குறித்த தொடுப்புக்கு மிக்க நன்றி வாசன், உண்மையில் இது நாள் வரை யார் இவர் என்று தேடிக்கொண்டிருந்தேன்.

SurveySan said...

ரெண்டு மாசம் வெயிட்டிங்கா. அடேயப்பா ;)

பாச மலர் / Paasa Malar said...

ரொம்ப நன்றி பிரபா..முன்னறிவிப்புக்கு..

பாச மலர் / Paasa Malar said...

தலையிக் குனியும் தாமரையே பாட்டுக்கும்தான் நன்றி...

கானா பிரபா said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
தேதி தெரிஞ்சு போச்சு.இனிமே கொண்டாட்டம் தான்.... :)
நன்றி நண்பரே...!//

உங்கள் ஆக்கத்தை அனுப்பி வைத்ததற்கும் , காத்திருப்பதற்கும் நன்றி நண்பா

கானா பிரபா said...

//SurveySan said...
ரெண்டு மாசம் வெயிட்டிங்கா. அடேயப்பா ;)//

வெயிட் பண்ணுங்க தல. தப்பேயில்ல ;-)

//பாச மலர் said...
ரொம்ப நன்றி பிரபா..முன்னறிவிப்புக்கு..//

இந்த வாரம் உங்க ஸ்பெஷல் தான்

pudugaithendral said...

தலையைக் குனியும் தாமரை

&

இளஞ்சோலை பூத்ததா

இரண்டும் அருமையான பாடல்கள்.

நன்றி.