Pages

Wednesday, June 21, 2023

திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர் இசை கூறும் 80 கள் ❤️🎸🥁


மணியோசையும்....

கை வளையோசையும்

ஆனந்த ராகம் சொல்ல

நான் கேட்கிறேன்

உன்னை ஆகாயம் பூமி

எங்கும் நான் பார்க்கிறேன்......

https://www.youtube.com/watch?v=38aOGQ7pAUA

திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் எண்பதுகளின் பங்களிப்பை நினைத்தால் நளினமாக வந்து இந்தப் பாட்டை நினைப்பூட்டுகின்றார் எஸ்பிபி.

எண்பதுகளிலே மெல்லிசை மன்னரும், இசைஞானியும் கோலோச்சிக் கொண்டிருந்த போதும் கே.வி.மகாதேவன் என்ற முன்னோடிக்கான இடம் தனித்து இருந்தது. தெலுங்கிலே கோலோச்சிக் கொண்டிருந்த “கே.வி.மகத்துவம்” தமிழிலும் அவ்வப்போது நேரடிப் படைப்புகளிலும், மொழித் தழுவல் படைப்புகளிலும் வந்து சேர்ந்தது.

இங்கே நேரடிப்படங்கள் என்று சொல்லும் போது ஆர்.சுந்தரராஜனை நன்றியோடு நினைவு கூட வேண்டும். “பயணங்கள் முடிவதில்லை” கொடுத்த புகழேணியில் இருந்தாலும், இளையராஜாவின்  இசை வாகனத்தில் மட்டும் அவர் சவாரி செய்யவில்லை. அப்பப்போது மூத்தோர்கள் மெல்லிசை மன்னரையும், திரையிசைத் திலகத்தையும் கூட உள்வாங்கித் தன் படைப்புகளிலே முதல் மரியாதை கொடுத்தார் எனலாம்.

அப்படி ஒன்றாக அமைந்தது தான் “அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை” அந்தப் படத்துப் பாடல்களைக் கேட்டாலே தேனமுதம் தான். முகாரி ராகமாய் அமைந்த திரைக்கதையை இனிக்க இனிக்கப் பாடல்கள் கொடுத்து, அப்படத்தை நினைப்பூட்டும் போதெல்லாம் மோகனமாக்கினார்.

“எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணலையே

இளங்காத்தே ஏன் வரலைத் தெரியலையே”

https://www.youtube.com/watch?v=MoteV8Ai92s

என்ற பரிதவிப்பிலும் சுகம் கொள்ள வைத்து,

“சுமைதாங்கி ஏன் இன்று விழுகின்றது”

https://www.youtube.com/watch?v=F39baB6ERog

சோகம் பற்ற வைத்தார்.

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்

அது ஆசை அலைகளின் ஊர்வலம்

நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்

அது சிந்தையில் நீ செய்த சாகசம்

https://www.youtube.com/watch?v=65FTpnF291M

பாடலை எழுதிய புலவர் புலமைப்பித்தனும், இசையமைத்த திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனும், பாடும் நிலா எஸ்.பி.பியும் வானகத்தில் தம் ஆரம்ப காலத்து "ஆயிரம் நிலாவே வா" வைப் பேசிக் கொண்டிருப்பார்கள். கூடவே எண்பதுகளில் மூவரும் சேர்ந்த இந்தப் பாடலைப் பற்றியும் விசேஷமாக.




இந்தப் பாடல் இடம்பிடித்த “தூங்காத கண்ணின்று ஒன்று” படமும் கூட ஆர்.சுந்தரராஜன் கை வண்ணமே.

“இதய வாசல் திறந்த போது

உறவு வந்தது.......”

https://youtu.be/vncM4IQjMdE

இன்னொரு இனிமை சொட்டும் பாட்டையும் இந்தப் படத்துக்காகக் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

“ஈரத்தாமரைப் பூவே

உன் இதழில் எத்தனை சாரங்கள்

https://www.youtube.com/watch?v=XeHrcdIrwCw

எஸ்பிபியின் குரல் ஜனகராஜ் நாயகனாக அரிதாரம் கொண்ட “பாய்மரக் கப்பல்” படத்திலும் அணி செய்தது கே.வி.மகாதேவன் இசை துணை செய்ய.  

“என் தலைவன் வருகின்றான்

நேரிலே…,

நல்ல இளமை என்னும் 

கவிதைக் கோவில் தேரிலே”

https://youtu.be/TDWe9WRZDuE

“மலர்கின்ற பருவத்திலே” படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலில் நாகசுர மேள முழக்கங்களோடு அற்புதம் படைத்தார். 

“எங்கெங்கும் அவள் முகம்

அங்கெல்லாம் என் மனம்”

https://youtu.be/EE_KhVnm9lk

என்று சிவகுமாருக்காக நெருப்பிலே பூத்த மலர் படத்துக்காக ஜெயச்சந்திரனைப் பாட வைத்தவர்

இதற்கு முன் 1979 இல் வெளிவந்த காதல் கிளிகள் படத்துக்காக ஜேசுதாஸ் & S.P.சைல்ச்ஜாவை வைத்து

“செவ்வானமே சீர் கொண்டு வா”

https://youtu.be/k7Xz1qh3DBo

நதிக்கரை ஓரத்து நாணல்களே

https://youtu.be/UVtPAk46fwI

என்ற புகழ்பூத்த பாடலையும் கொடுத்திருக்கிறார். ஏணிப்படிகள் அதற்கு முந்திய இசை ஜாலமாக அமைந்தது.

“வானவில்லின் வர்ணஜாலங்கள்

  ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்”

https://youtu.be/4o5rVDzY2tw

“நான் நானே தான்” படத்தில் இடம்பெற்ற எஸ்பிபி குழுவினர் பாடிய அந்தப் பாடலையும்,

இனிமையானது

அந்த இறைவன் போன்றது

இறைவன் போன்றது

அது புனிதமானது

காதல் பொருள் நிறைந்தது

https://youtu.be/bwQL9QR12gs

“மன்மத ரதங்கள்”படத்துக்காக எஸ்பிபி & வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடலையும் கேட்கும் போதே இலங்கை வானொலியின் பொற்காலத்துக்குப் போய் விடுவீர்கள் இல்லையா?



கே.வி.மகாதேவன் என்றால் ஊதுபத்தி மணம் கமிழும் தெய்வீக இசை பிறப்பிப்பவர். அப்படியாகப்பட்டவரின் இறுதிச் சுற்று எண்பதுகளில் இயங்கிக் கொண்டிருந்த போது “ஓம்சக்தி” எஸ்.ஜெகதீசன் இயக்கிய பதில் சொல்வாள் பத்திரகாளி, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி, சமயபுரத்தாளே சாட்சி, மேல் மருவத்தூர் அற்புதங்கள், ஒரே தாய் ஒரே குலம் ஆகிய படங்களுக்கும்,

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய மகாசக்தி மாரியம்மன் பாம் ஈறாகப் பக்தி இசை வெள்ளம் ஓடவிட்டார். பதிவை எழுதியவர் கானா பிரபா

சிவாஜி & பிரபு கூட்டுச் சேர்ந்து நடித்த படங்களில் ஒன்றான “சிம்ம சொப்பனம்”, சுதாகரின் “குருவிக்கூடு”, மன்மத ரதங்கள்,

இராம நாராயணன் இயக்கி மோகன், பிரபு நடித்த “சின்னஞ் சிறுசுகள்”, சிவகுமாரின் “நெருப்பிலே பூத்த மலர்”, ஶ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமாரின் “நான் நானே தான்”, சுரேஷ், நளினி, சுலக்சனா நடித்த “ஆஷா”, மலர்கின்ற பருவத்திலே, மவுன யுத்தம் என்று நேரடித் தமிழ்ப் படங்களை இசையமைத்தார். பதிவை எழுதியவர் கானா பிரபா'



புகழ்பூத்த “சங்கராபரணம்” தொடக்கி வைத்த மொழிமாற்றுப் பட வரிசையில் கே.விஸ்வநாத் இன் “சிரிக்கும் சலங்கை”, “ராக தேவதை”, “இசைக்கு ஒரு கோவில்” என்று தமிழுக்கு மொழி மாற்றித் தந்தார். சங்கராபரணத்தின் நேரடித் தெலுங்கு மூலமே தமிழ் ரசிகர்களிடம் பெரு வரவேற்பைப் பெற்றாலும் அது பின்னர் தமிழ் வடிவமும் கண்டது. மாதிரிக்கு இதோ இந்தப் பாட்டு “ஓம்கார நாதங்கள்”

https://youtu.be/xRLxHgoPTk8

“சங்கரா” பாடல் முன்னர் “கிரிதரா” என்ற பெயரிலும் தமிழில் மொழி மாற்றம் கண்டிருந்தது.

இந்த இடத்தில் நிறுத்தி விட்டு

“என்றுமே நல்ல ராசி

இந்தத் திருமகள் ராசி

தடைகள் இல்லாத யோகமே

தருகிற ராசி இன்பத் தமிழ்மகள் ராசி”

https://youtu.be/TrRXwleUeyw

 என்ற “இசைக்கு ஒரு கோயில்” மொழிமாற்றுப் பாடலைக் கேளுங்கள் சொக்கிப் போவீர்கள்.

அப்படியே இதன் மூல, தெலுங்கு வடிவமும் இதோ

https://youtu.be/DorQlNRVmCY

தெலுங்கு, தமிழில் ஒரே நேரத்தில் தயாரான, “நீதி தேவன் மயக்கம்” (கமல்ஹாசன் கெளரவ வேடத்திலும் நடித்தார்) படமும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.



திரையிசையில் பக்தி இலக்கியத்தைச் செழுமையாகப் பதித்த கே.வி.மகாதேவன் அவர்கள் 1990 இல் வெளியான “முருகனே துணை” திரைப்படத்தோடு தமிழில் தன் இசையுலக வாழ்வை நிறைவு செய்தார். தெலுங்கில் தொடர்ந்து பங்களித்தார். தன்னுடய 50 ஆண்டு கால இசைச் சரிதத்தை அசை போட்டுக் கொண்டு நிறை வாழ்வு வாழ்ந்து 2001 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் ஆண்டு முருகன் அடி சேர்ந்தார். 

கானா பிரபா

21.06.2023


3 comments:

Anonymous said...

Wonderful to read the last leg of MAMAA KVM avargaL. Request you to write about songs (or list out) of His Last movie “Murugane ThuNai”.

Anonymous said...

His Songs from SiriVennela Telugu movie (Dubbed as Raaga Devathai in Tamil) were pure unpolluted honey drops. Esp Chandamama raave was superb with SPB & PS Singing main course with B.Vasantha taking the Humming part of it. All my sorrows will fly off whenever I listen to it. Unfortunately the movie, directed by K.Vishwanath, did not receive any awards at National level. If I am not wrong Seetharama Sastry, Lyricist (his first film) received Award at AP State Level.

கானா பிரபா said...

மிக்க நன்றி நண்பரே, முருகனே துணை பாடல்கள் குறித்து எழுதுவேன்.