“தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை”
பாடலை ஒலிபரப்பி விட்டு வானொலியில் “அறிவுக் களஞ்சியம்” என்ற போட்டிநிகழ்ச்சியை நடத்துவேன். ஒன்றல்ல இரண்டெல்ல 2001 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆண்டு வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும். அவ்விதம் சங்கீதா சஜித் என்ற தமிழுக்கு அந்நியமான பாடகியின் குரல் மீதும், ஏ.ஆர்.ரஹ்மான் அந்தப் பாட்டுக்குக் கொடுத்த மீன் துள்ளல் இசையும் பிடித்தமானது.
சங்கீதா சஜித் தனது 46 வது வயதில் இன்று இவ்வுலகில் இருந்து விடை பெற்று விட்டார்.
அந்த வசீகரக் குரல் “பார்த்தாலே பரவசம்" https://www.youtube.com/watch?v=Vg2BF1uBe8A ஈறாக உள்வாங்கப்பட்டது ரஹ்மானால். ரட்சகனின் “போகும் வழியெல்லாம்" தெலுங்குக்குப் போன போது சங்கீதா தான் பிரேமேயோடு https://www.youtube.com/watch?v=t_pHpCv-GVs பாடிச் சிறப்பித்தார்.
இசைஞானி இளையராஜாவின் “கேரளவர்மா பழசிராஜா”விலும் அவர் கூட்டிசைத்திருக்கின்றார் “ஓடத்தன்னில்" https://www.youtube.com/watch?v=vmRmf6oiNoA பாடல் வழியே.
தேனிசைத் தென்றல் தேவா "மதுமதி" படத்தில் தேனிசைத் தென்றல் தேவா "மதுமதி" படத்தில்
"ஓ மதிவாணா"https://www.youtube.com/watch?v=yjIZmUhfMAs
"நீராரும் கடலுடுத்த" https://www.youtube.com/watch?v=PT9CH5KefF4 வழியேயும் பயன்படுத்தினார் இந்த இளங்குரலை.
சினேகிதியே படத்தில் “கல்லூரி மலரே”, “ராதை மனதில்” பாடல்களில் சித்ரா, சுஜாதாவுடன் கூட்டாகப் பாடியவர் வேறு யாருமல்ல அவரே தான். இவ்விதம் கூட்டாகப் பாட வைத்ததில் இன்னொன்று “செல்லா நம் வீட்டுக்கு" என்று வித்யாசாகரும் இந்தக் காந்தர்வக் குரலை விட்டு வைக்கவில்லை.
“அம்பிலிப் பூ வட்டும் பொன்னுருளி"
https://www.youtube.com/watch?v=c6aZhfmw6gE
பாடிய வகையில் “என்னு ஸ்வந்தம் ஜானகிக்கு" இன்னும் மலையாளிகளோட சுகந்த கீதமாய் மனசில் நிறைய, இருநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களோடு தன் குரலை மட்டும் இங்கே விட்டுப் பறந்து விட்டது சங்கீதா எனும் இன்னொரு இளவயதுப் பாட்டுக் குயில்.
கானா பிரபா
22.05.2022
0 comments:
Post a Comment