Pages

Tuesday, November 3, 2009

றேடியோஸ்புதிர் 47 - "ராஜாதி ராஜா" படத்தில் வராத பாட்டு

"ராஜாதி ராஜா" படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் திரைப்படங்களில் காலம் கடந்து ரசிக்க வைக்கும் படம். பாவலர் கிரியேஷன்ஸ் படம் என்றால் சொல்ல வேண்டுமா பாடல்களும் கூடுதல் கலக்கலாக இருக்கும். ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் ரஜினி, ராதா, நதியா போன்றோர் நடித்த இந்தப் படத்தில் இருந்து ஒரு புதிர்.

படத்தின் நீளம் கருதி இப்படி பாடல்கள் பல படங்களிலே துண்டாடப்பட்டிருப்பது வழக்கம். இந்தப் படத்திற்காக இசையமைத்து ஒலிநாடாக்களிலும், இசைத்தட்டிலும் வெளிவந்த பாடல்களில் ஒரு பாடல் ராஜாதி ராஜா படத்தினைப் பார்க்கும் போது காணாமல் போயிருக்கும்.கேள்வி இதுதான் இந்த ராஜாதி ராஜா திரைப்படத்திற்காக இசையமைத்து ஒலிநாடாக்களிலும், ஏன் வானொலிகளிலும் ஒலிபரப்பப்படும் பாடல் ஒன்று படத்தில் வரவில்லை. அந்தப் பாடல் எது என்பதே கேள்வியாகும். பின்னர் இந்தப் பாடலை அன்றைய காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த "டவுசர் பாண்டி" ராமராஜன் பின்னர் தான் நடிக்க இருந்த "பெத்தவமனசு" என்ற திரைப்படத்தில் பயன்படுத்த இருந்தார். கொடுமை என்னவென்றால் பின்னர் 'பெத்தவமனசு' படமே வராமல் போய் விட்டது. அந்த ராசியான பாட்டைக் கண்டுபிடியுங்களேன்.

போட்டி முடிவடைந்தது, பதில் இதுதான்.

இந்தப் படத்தில் வராத பாடல் "உன் நெஞ்சத் தொட்டுச் சொல் ராசா என் மேல் ஆசை இல்லையா" பாடியவர்கள் பி.சுசீலா மற்றும் சித்ரா

போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்

அந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்

29 comments:

Anonymous said...

உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு, என் ராசா, ... என் மேல் ஆசை இல்லையா? :) கே. எஸ். சித்ராவும் பி. சுசீலாவும் பாடிய பாட்டு ;)

- என். சொக்கன்,
பெங்களூரு.

ஆயில்யன் said...

ம்ம் இந்த {போ)வாட்டி எனக்கு உடம்பு சரியில்ல !

கானா பிரபா said...

ஆயில்ஸ்

உங்களை கேள்வி வாட்டி எடுக்குதாக்கும் ;)

Anonymous said...

Un Nenjai thottu sollu en mael aasai ilaya....

கானா பிரபா said...

சொக்கரே சரியான பதில் தான், பாட்டாவே படிச்சிட்டீங்களா ;)

பெயர் குறிப்பிட விரும்பாத அன்பரே

அதுதான் பதில்

sutha said...

உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா
என்மேல் ஆசை இல்லையா....

சரியா?

கானா பிரபா said...

வணக்கம் சுதா

உங்கள் பதில் சரியானது தான்

வாசுகி said...

இந்த முறை நம்ம ரஜினி படப்பாடலா

"உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா" என்ற பாடல்

thamizhparavai said...

நெஞ்சைத் தொட்டு சொல்லு ராசா என் மேல் ஆசை இல்லையா...?

சரி என்று நம்புகிறேன்...

குட்டிபிசாசு said...

உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு இந்த பாட்டு தானே...

M.Rishan Shareef said...

எஸ்.பி.பியோட உலக வாழ்க்கையே வெறும் ஜெயிலு வாழ்க்கைதான் பாடலா பாஸ்?

கோபிநாத் said...

ஹலோ...யாரு...ஹலோ யாருப்பா...ஹலோ..!!

ரெஜோலன் said...

நல்ல போட்டி

இதுதான் நான் பங்கேற்கும் முதல் போட்டி என்பதும் ஒரு சிறப்பு

தலைவர் படம் இல்லையா அதிலும் சூப்பர் படம்

பாடல்: உன் நெஞ்சத்தொட்டு சொல்லு என் ராஜா என் மேல் ஆசை இல்லையா

பாடல் இன்னும் காதில் ஒலிக்க கூடிய அழகிய பாடல்
இசைஞானி இளையராஜா கலக்கி இருப்பார் படத்தில் அத்தனை பாடல்களும் சூப்பர்

விடை சரியா

bala said...

"un nenja thottu sollu en rasa en meala asai illaiya" this song

bala said...

un nenja thottu sollu en rasa song

கானா பிரபா said...

வாசுகி, தமிழ்ப்பறவை, குட்டிப்பிசாசு, ரெஜோலன், பாலா

கலக்கீட்டீங்க, சரியான பதில் தான்

Unknown said...

திரு பிரபா அவர்களுக்கு

சூப்பர் ஸ்டார் ரஜினி இன் ராஜாதி ராஜா படத்தில்
இடம் பெறாத
அந்த பாடல்


"உன்
நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசை இல்லையா" சரியா


இதே பாடல் பின்பு ராமராஜன் படத்தில் இசைஞானி அவர்கள் சேர்த்தார் என்று கேள்வி பட்டதுண்டு
அதே போல் வீரா படத்திலும் இடம் பெறாத "முந்தி முந்தி " என்ற பாடலையும் வனஜா கிரிஜா படத்திலும் ராஜா பயன் படுத்தி இருபார்

அடியேனின் கருத்து சரியா பிரபா அவர்களே


அன்புடன்
சு மகாராஜன்
அமீரகம்

தங்ஸ் said...

en nenjai thottu sollu en raasa by suseela..

நிஜமா நல்லவன் said...

உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?

கானா பிரபா said...

மச்சா, தங்ஸ், நிஜமா நல்லவன்

சரியான பதில் தான்

Anonymous said...

உங்க நெஞ்ச தொட்டு சொல்லுங்க கானா சார் எங்க மேல உங்களுக்கு ஆசையே இல்லையா என்ன ?

~ரவிசங்கர் ஆனந்த்

Anonymous said...

En nenjai thottu sollu en raasa, en mel aasai illaya?

Singers - P.Suseela, Chithra

Sampath said...

பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ .... :)

Narayanan Narasingam said...

வா வா மஞ்சள் மலரே

கானா பிரபா said...

ரிஷான், சம்பத் மற்றும் NN

தவறான பதில்கள்

தல கோபி

இதானே வேணாங்கிறது


ரவிசங்கர் ஆனந்த்

அதே தான் ;-)

பெயர்குறிப்பிட விரும்பாத நண்பரே

சரியான பதில்

Anonymous said...

வா வா மஞ்சள் மலரே???

கானா பிரபா said...

சின்ன அம்மணி

அந்த விடை தப்பு

கானா பிரபா said...

போட்டி முடிவடைந்தது, பதில் இதுதான்.

இந்தப் படத்தில் வராத பாடல் "உன் நெஞ்சத் தொட்டுச் சொல் ராசா என் மேல் ஆசை இல்லையா" பாடியவர்கள் பி.சுசீலா மற்றும் சித்ரா

போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்

பாரதி 777 said...

கீழே உள்ள இணையப் பக்கத்தில் இப்பாடல் இடம் பெறாததற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/65904-rajini-and-ilaiyaraaja-ignored-says-sundarrajan.art