Pages

Wednesday, December 3, 2008

றேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ

இந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண்பதுகளில் கலக்கிய இன்னொரு பாடல் இது. சென்னை வானொலியின் நேயர் விருப்பத்தில் 90 களில் ஆரம்பவரை ஒலித்துக் கொண்டே இருந்தது.

இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆரம்பத்த்தில் ஒரு குண்டான நடிகர் நடித்து வந்தது. பின்னர் தமிழில் ஒரு குண்டான நடிகர் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. பின்னர் ஹிந்தியிலும் மான் வேட்டை நடிகர் நடித்து மலையாளத்திலிருந்து ஹிந்திக்கு மாற்றும் தொழிலை மும்முரமாக செய்துவரும் இயக்குனர் கைவண்ணத்தில் வந்தது. தமிழில் மட்டும் இரண்டு இயக்குனர்கள் சேர்ந்து வேலை செய்தால் தான் படமே வந்ததாமே ;)

இன்னொரு க்ளூ, தமிழில் காதலியாக நடித்த நடிகை, மலையாள,ஹிந்திப் பதிப்பு இயக்குனரின் மனைவி.

பாடல் இசையைக் கேட்டுக் கண்டு பிடியுங்கள், வெற்றி பெற்றால் பட்டாசு இல்லாவிட்டால் புஸ்வாணம் தான் ;)

p1.mp3 -

49 comments:

Thanjavurkaran said...

மனசுக்குள் மத்தாப்பூ - பொன் மாங்குயில்

Anonymous said...

ராஜா இல்லாம புதிரா? ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆங்!

பதில் சொல்லமாத்தேன் போங்க :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

KARTHIK said...

:((

கானா பிரபா said...

தஞ்சாவூர்க்காரன்

கலக்கீட்டிங்க

MyFriend said...

தலவட்டம் -> மலையாளம் - (குண்டான நடிகர்) மோஹன் லால்
kYon Ki -> ஹிந்தி - (மான் வேட்டைக்காரர்) சல்மான் கான்

லிஸ்ஸி - பிரியதர்ஷன் மனைவி.

ராஜா இல்லை.. ஆமா.. இசை SA ராஜ்குமார்

தமிழில் மனசுக்குள் மத்தாப்பு -> குண்டான நடிகர் பிரபு.

http://urupudaathathu.blogspot.com/ said...

படம் : மனசுக்குள் மத்தாப்பு
நடிகர் : பிரபு


இயக்குனர் : ஹிந்தியில் : பிரியதர்சன்

ஹிந்தி நடிகர் : சல் மான் கான்

முரளிகண்ணன் said...

மனசுக்குள் மத்தாப்பு - லிஸி

ஆயில்யன் said...

ராஜா இல்லாம புதிரா? ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆங்!

பதில் சொல்லமாத்தேன் போங்க :)

கானா பிரபா said...

மைபிரண்ட்

எல்லா பதில்களையும் சொல்லி கலக்கீட்டீங்க

கானா பிரபா said...

உருப்புடாதது_அணிமா

சரியான பதில், வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

முரளிகண்ணன்

வாழ்த்துக்கள், சரியான கணிப்பு

தமிழன்-கறுப்பி... said...

தெரியலைண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

நேரமும் கிடைக்கலை அதனால நாளைக்கு முடிஞ்சா வந்து சொல்றேன்...

கானா பிரபா said...

சொக்கன், கார்த்திக், ஆயில்யன் மற்றும் தமிழன்

இன்னும் 2 நாள் அவகாசம் கொடுக்கிறேன், இன்னொரு முறை சொல்லுங்க ;)

பரிசல்காரன் said...

ஓ.. பொன்மாங்குயில் சிங்காரமாய் பண்பாடுதே..

-அந்தப் பாடலா ப்ரபா?

ஆயில்யன் said...

பாஸ் நீங்க சொன்ன மாதிரியே இந்த தடவை ரொம்ப கஷ்டமா கேட்டு சாதிச்சிட்டீங்க பாஸ்! குட்!

பட் எனி ஹவ் நீங்க எங்க காலத்துக்கு வாங்க பாஸ் ! எப்ப பார்த்தாலும் 1980களிலேயே சுத்திக்கிட்டிருக்கீங்க :)))

கானா பிரபா said...

பரிசல்காரன்

சரியான கணிப்பு வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மனசுக்குள் மத்தாப்பூ.. லிசியோட படமே காட்டிக்கொடுக்குது..

நீங்க படம் போட்டே கண்டுபிடிக்கவைக்கிறீங்க..

கோபிநாத் said...

தல...சூப்பர் பீட்டு....


ஆனா...தெரியல...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கானா பிரபா said...

கயல்விழி முத்துலெட்சுமி

நீங்களும் சரியான விடை தான், வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

இன்றைக்காவது கஷ்டமான புதிர் கொடுப்பீங்கன்னு பார்த்தா..ம்ஹ்ம்..

நீங்க கேட்ட பாட்டு...

ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்ப் பண்பாடுதே சங்கீதக் காலம் எந்தன் காதல் பாதையில் ...

Anonymous said...

படம் பெயர் 'மனசுக்குள்' இருக்கின்றது. சொன்னால் பட்டாசு, புஸ்வானம் வேண்டாம் 'மத்தாப்பு' போதும் !
ப்ரீதம்

நிலாக்காலம் said...

பாடல்: பூந்தென்றலே நீ பாடி வா
படம்: மனசுக்குள் மத்தாப்பூ
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
நாயகன்: பிரபு
நாயகிகள்: சரண்யா, லிஸி ப்ரியதர்ஷன்

ஒரு வேண்டுகோள்..
நீங்கள் போடும் புதிர்களில் சம்மந்தப்பட்ட பாடலின் புகைப்படத்தையும் போடுவதால் புதிரைப் படிக்க அவசியமே இல்லாமல் உடனே விடையைக் கூற முடிகிறது. புகைப்படத்தைத் தவிர்த்து, எங்கள் மூளைக்கு வேலை கொடுக்கக் கூடாதா?

KARTHIK said...

தலைப்பு கூ கூ நு வேற வெச்சுட்டீங்க பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பாட்டும் இயக்குனர் பிரியதர்சனும் தான் மண்டைக்குள்ள ஓடுது வேற ஏதும் தோணலை


// பட் எனி ஹவ் நீங்க எங்க காலத்துக்கு வாங்க பாஸ் ! எப்ப பார்த்தாலும் 1980களிலேயே சுத்திக்கிட்டிருக்கீங்க :))) //

ஆமாங்க கொஞ்சம் 90 மேலையும் வாங்க

Anonymous said...

மலையாளப் படம்: தலவட்டம் - குண்டு நடிகர்: மோகன்லால் - இயக்குனர்: பிரியதர்ஷன் - தமிழ்ப் படம்: மனசுக்குள் மத்தாப்பு - குண்டு நடிகர்: பிரபு - காதலி நடிகை: லிஸி (பிரியதர்ஷனின் மனைவி) - ஹிந்தி படம்: க்யோன் கி - நடிகர்: சல்மான் கான் - இயக்குனர்: அதே பிரியதர்ஷன் - சரியா?

(எல்லாம் க்ளூவை வைத்து அடிச்சது, பாட்டைக் கேட்கவில்லை, ஒருவேளை கேட்டாலும் தெரியாது, நான் ராஜா இசையைதான் திரும்பத் திரும்பக் கேட்பேன், மற்றவர்கள் இசையைக் கேட்டாலும் மறந்துபூடும், சுத்தமான பாமரன் நான் ;)

- என். சொக்கன்,
பெங்களூர்.

அரவிந்த் said...

ஓ.. பொன்மான்குயில்.. சிங்காரமாய்..
S. A. ராஜ்குமார்
பிரபு நடித்தது..
மனசெல்லாம் மத்தாப்பூ?? சிறு சந்தேகம்.. பெயரில்..

thamizhparavai said...

'மனசுக்குள் மத்தாப்பு'?
எஸ்.ஏ.ராஜ்குமார்...?

G.Ragavan said...

அதாங்க பிரபு பைத்தியமா நடிப்பாரே. சரண்யா கூட டாக்டரா வருவாங்களே. லிசிதான் காதலி. கார் விபத்துல இறந்துருவாங்கன்னு நெனைக்கிறேன். அப்பத்தான் பிரபுவுக்குப் பைத்தியம் பிடிக்கும். ராபர்ட்-ராஜசேகர் இயக்கம். பிரியதர்ஷனோட மனைவி லிசி. படத்தோட பேரென்ன... இனிய உறவு பூத்ததுன்னு நெனைக்கிறேன். பாட்டு வாய்க்குள்ள இருக்கு. வர மாட்டேங்குதே.

கானா பிரபா said...

ரிஷான்

கலக்கீட்டிங்க, சும்மா உங்க காலம் ஆச்சே

ப்ரீதம்

ஆஹா ;‍) சிலேடையில் வச்சுப் பின்னீட்டிங்க

Anonymous said...

இது தாளவட்டம் தன்னே.
மனசுக்குள் மத்தாப்பு, சுனந்தையும் ஜெயச்சந்திரனுமல்லே தமிழில் பாடியது.

அருண்மொழிவர்மன் said...

பிரபா....

சினிமா பற்றிய பதிவில் இப்படத்தை என்னை பாத்தித்த படமாக குறீப்பிட்டிருந்தேன்

படம் - மனசுக்குள் மத்தாப்பூ
பாடல் - வெண்ணிலாவை
ந்டிகர் - பிரபு மோகன்லால் (மலையாளம்)
இயக்குனர் - ராபர்ட் ராஜசேகர் (இவர்கள் இப்போ என்ன ஆணார்கள்... நிறைய நல்ல படங்களை 80 களில் தந்தவர்கள்)

இசை - எஸ். ஏ. ராஜ்குமார்

நிலாக்காலம் said...

மன்னிக்கவும்.. பாட்டைக் கேட்காமல், புகைப்படத்தைப் பார்த்ததும் பதில் சொல்லி விட்டேன். :D
சரியான விடை: ஓ.. பொன்மாங்குயில் சிங்காரமாய்ப் பண்பாடுதே.. :)

கானா பிரபா said...

அரவிந்த், தமிழ்ப்பறவை

சரியான பதில் வாழ்த்துக்கள்

ஜி ரா

படம் பேர் சொல்லலியே :(

சின்ன அம்மணி

சரியான பதிலே தான் ;)

அருண்மொழி வர்மன்

படம் சரி பாட்டு தவறு :(

Anonymous said...

என்ன கானா இப்படிப்பண்ணீட்டீங்க. வினையூக்கியோட லிங்க்ல விடை லட்டு மாதிரி இருக்கே. வேணும்னா டெலீட் பண்ணீடுங்க.

சந்தனமுல்லை said...

கேட்க நல்லாதா இருக்கு வழக்கம்போல். ஆனா விடைதான் தெரியலை வழக்கம்போல்!!

Anonymous said...

இசையமைப்பாளர் - S.A.ராஜ்குமார்
படம் - மனசுக்குள் மாத்தாப்பூ
இயக்குனர்கள் - ராபர்ட் - ராஜசேகரன்(தமிழில்) ,ப்ரியதர்ஷன் (ஹிந்தி & மலையாளத்தில்)
கதாநாயகன் - பிரபு (தமிழில்) , மோகன்லால்(மலையாளத்தில்),சல்மான்கான்(ஹிந்தியில்)

கைப்புள்ள said...

ஓ பொன்மாங்குயில் சங்கீதமாய் பண்பாடுதே - மனசுக்குள் மத்தாப்பு படத்துலேருந்து. இசை எஸ்.ஏ.ராஜ்குமார்.

குண்டு நடிகர் - பிரபு
மான்வேட்டை நடிகர் - சல்மான் கான். அந்த படம் க்யோன் கி.
இயக்குநர் - பிரியதர்ஷன்
அவர் மனைவி - விக்ரம் படத்துல கமல் கூட நடிச்ச லிஸி
மலையாள மூலப் படம் - தலவாட்டம்

கானா பிரபா said...

சின்ன அம்மணி

தவறுதலா அந்த லிங்கை பப்ளிஷ் பண்ணீட்டேன் இப்போ எடுத்தாச்சு

(நிலாக்காலம்), ரா.சு, கைப்புள்ள‌

சரியான கணிப்பு ;)

Anonymous said...

romba tough prabha

raaja na kandu pudichiralam

andhalavukku namakku knyanam illa:)

கலைக்கோவன் said...

ஓ...போன்மாங்குயில் சிங்காரமா...
புதிர் போடுதே .....

மனசுக்குள் மத்தாப்பு கொளுத்திய
குண்டு நடிகர் பிரபு தானே.

இயக்கம்
ராபர்ட்- ராஜசேகர்
(நான் கூட சில இரட்டையர்களை
ஒருவர் என்று நினைத்திருந்தேன் ...
மனோஜ் கியான்
ராபர்ட் ராஜசேகர் என்று ...)

சரண்யா தானே நாயகி ...,
(சரண்யா கணவர் பொன்வண்ணன் ஆச்சே..,
ஒரு வேலை என் கணிப்பு தவறோ )
சரண்யா டாக்டர் வேடத்தில் நடித்திருந்தார் ,
சரி ...,
காதலி பெயரை நீரே சொல்லிவிடும்
(இதை கணிக்க நான் பட்ட கஷ்டம்..
எனக்கு தானே தெரியும் )

கானா பிரபா said...

கலைக்கோவன்

கலக்கீட்டீங்க, நீங்க சொன்ன நடிகையோட இன்னொரு நடிகையும் இருந்தாங்களே

கலைக்கோவன் said...

மலையாளத்திலிருந்து ஹிந்திக்கு .....
டைரக்டர் ப்ரியதர்ஷன் .....
மனசுக்குள் மத்தாப்பு "காதலி"
லிசி
அவரின் "சிநேகிதியே" தானா

கானா பிரபா said...

கலைக்கோவன்

மீண்டும் வந்து ஹைகூவாய் விடையை கூவிட்டீங்களே ;)

நிஜமா நல்லவன் said...

பிரபு நடித்த மனசுக்குள் மத்தாப்பு தான் அந்த படம்.....காதலியாக நடித்த நடிகை LIZZY.......அவங்க தான் மலையாள இயக்குனர் பிரியதர்ஷனோட மனைவி.....இந்த படம் பார்த்துட்டு நான் ரொம்ப நாள் படத்தின் பாதிப்பில் இருந்து மீளலை.....இப்ப கூட கொஞ்சநாள் முன்னாடி ஏதோ ஒரு தொல்லைகாட்சியில் போட்டாங்க தல....:)

கானா பிரபா said...

நிஜம்ஸ்

கலக்கல்ஸ் ;)

http://urupudaathathu.blogspot.com/ said...

படம் : மனசுக்குள் மத்தாப்பு
நடிகர் : பிரபு
நடிகைகள் : சரண்யா, லிசி
பாடல்: பூந்தென்றலே நீ பாடி வா..
ஹிந்தி : சல்மான் கான், கரீனா கபூர்
தமிழில் இயக்கியது :ராபர்ட் ராஜ சேகர்..
ஹிந்தி : பிரியதர்சன்
இசை : SA ராஜ் குமார் ??

சென்ற பின்னூட்டத்தில் பாடலை தெரிவிக்க வில்லை..

கப்பி | Kappi said...

மனசுக்குள் மத்தாப்பூ - பொன்மான் குயில் சிங்காரமாய்

கானா பிரபா said...

தங்கக்கம்பி, கப்பி

சரியான பதில் ;)

உருப்படாதது அணிமா

இங்கே நான் போட்டிருக்கும் பாட்டு இதே படத்தில் வரும் இன்னொரு பாட்டாச்சே, நீங்க ஒலியை கேட்கலை போல.

கானா பிரபா said...

சரியான பதில்

மலையாளப் படம்: தலவட்டம் குண்டு நடிகர்: மோகன்லால் இயக்குனர்: பிரியதர்ஷன்
தமிழ்ப் படம்: மனசுக்குள் மத்தாப்பு
இரட்டை இயக்குனர்கள்: ராபர்ட் ராஜசேகரன்
குண்டு நடிகர்: பிரபு
காதலி நடிகை: லிஸி (பிரியதர்ஷனின் மனைவி)
ஹிந்தி படம்: க்யோன் கி
நடிகர்: சல்மான் கான்
இயக்குனர்: பிரியதர்ஷன்
ஒலிபரப்பிய பாடல்: ஓ பொன் மாங்குயில் சங்கீதமாய் அந்தப் பாடலில் ஆரம்பத்தில் கூ குக்கு கூ என ஆரம்பிக்கும்

வருகைதந்து விடையளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;)