Pages

Sunday, November 30, 2008

"அரண்மனை கிளி" பின்னணிஇசைத்தொகுப்பு

இளையராஜாவை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு திரையுலகில் சிறந்த ஒரு உதாரணம் விநியோகஸ்தராக இருந்து, தயாரிப்பாளராகி, நடிகராகி, இயக்குனரும் ஆகிய ராஜ்கிரண்.

ராசாவே உன்னை நம்பி என்னப் பெத்த ராசா என்று படங்கள் தயாரித்து, என் ராசாவின் மனசிலே என்று நாயகனாகி, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா தான் என்று இயக்குனராகி தொண்ணூறுகளில் பணம் காய்க்கும் சினிமாக் குதிரையாக இருந்தவர் ராஜ்கிரண். படம் வெளி வந்து தாறுமாறாக வசூலைக் குவிக்கும் திரைப்படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் பெரும்பாலும் உரசல் வருவது சினிமாவின் எழுதப்படாத ஜோதிடங்களில் ஒன்று. அது தான் "என் ராசாவின் மனசிலே" திரைப்படத்தின் இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கும், அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் ராஜ்கிரணுக்கும் வந்தது. சமீபத்தில் கூட கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில் "என் ராசாவின் மனசிலே" படம் இப்போது வெளிவந்தால் அதிக நாள் தாக்குப்பிடிக்காது என்று சீண்டியிருந்தார். எனவே அடுத்த படமான "அரண்மனைக் கிளி" படத்திற்கு தானே நாயகனாக அரிதாரம் பூசிக்கொண்டு இயக்குனராகவும் ரிஸ்க் எடுத்தார் ராஜ்கிரண். அப்போது அவர் மலை போல நம்பியிருந்தது இளையராஜாவின் இசையை. இப்படத்தின் நாயகன் பெயரைக் கூட இளையராஜாவின் இயற்பெயரான ராசய்யா என்றே வைத்திருப்பார்.

ஆரம்பத்தில் குஷ்புவை ஒப்பந்தம் செய்து பின்னர் ஒதுக்கிவிட்டு அஹானாவை பிடித்தார். கூடவேஆன்றைய காலகட்டத்தில் குஷ்புவுக்கு குரல் கொடுத்த அனுராதா தான் அஹானாவுக்கு பின்னணிக் குரல். கூடவே காயத்ரி என்னும் இன்னொரு புதுமுகமும், முன்னர் என் ராசாவின் மனசிலே படத்தில் சிறுவேடத்தில் நடித்த வடிவேலுவும், விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள்.

இப்பதிவின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன், ராஜாவை நம்பினோர் கைவிடப்படார். அதையே தான் ராஜா தன் பாடல்களில் நிரூபித்திருந்தார். "அம்மன் கோயில் வாசலிலே" என்று மின்மினி குழு பாடும் பாடல், "நட்டு வச்ச ரோசாச்செடி" என்று பி.சுசீலா, " வான்மதியே" என்று எஸ்.ஜானகி, "ராசாவே உன்னை விட மாட்டேன்" என்று எஸ்.ஜானகி, "அடி பூங்கொடியே" என்று மனோ, மின்மினி குழுவினர், "ராத்திரியில் பாடும் பாட்டு" என்று மலேசியா வாசுதேவன், அருண்மொழி, மின்மினி குழுவினர், " என் தாயென்னும் கோயிலை" என்று இளையராஜா என்று மொத்தம் ஏழு முத்தான முழுப்பாடல்களையும் "துணிமேலே காதல்" மற்றும் "ராமர நினைக்கும் அனுமாரு" என்று படத்தில் வராத ஆனால் இசைத்தட்டில் மட்டும் வரும் பாடல்கள் என்று மொத்தம் ஒன்பது பாடல்களைக் கொடுத்து ராஜ்கிரணைக் காப்பாற்றி விட்டார் ராஜா. பாடல்களை வாலி மற்றும் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார்கள்.அந்தப் பாடல்களை இணைத்து செண்டிமெண்டாக ஒரு கதையும் பின்னி "அரண்மனை கிளி" யையும் வசூல் கிளியாக மாற்றி விட்டார் ராஜ்கிரண்.

இப்படத்தின் பின்னணி இசையைப் பொறுத்தவரை கிராமியப் படங்களுக்கு குறிப்பாக பாரதிராஜாவின் படைப்புக்களின் காட்சிகளின் அழகுணர்ச்சிக்கு மெருகூட்டுமாற்போலக் கொடுக்கும் பின்னணி இசை இப்படத்தில் இல்லை. அதற்கு காட்சி அமைப்புக்களின் தன்மையே காரணம் எனலாம். ஆனால் கிடைத்த வாய்ப்புக்களை வைத்துக்கொண்டு இப்படத்திலும் தன் பின்னணி இசைக் கைவரிசையைக் காட்டி விட்டார் இளையராஜா.
இதோ அந்த இசைத் தொகுப்பு

அரண்மனை கிளி பூங்கொடி அறிமுகம், வீணை இசை கலக்கஏழைப் பெண் செல்லம்மா மனதில் ராசய்யா மீது காதல் பூக்கின்றது, "ராசாவே உன்னை விட மாட்டேன்" பாடலின் இசை புல்லாங்குழலில் கலக்கசெல்லம்மாவை சீண்டி அவளின் தோழிமார் பாடும் "அடி பூங்குயிலே பூங்குயிலே"ராசய்யாவை நினைத்து பூங்கொடி காதல் கனவில் மிதத்தல் "வான்மதியே" பாடல் மெட்டோடு கலக்கிறதுபூங்கொடியை பெண் பார்க்க வருவோர்களை "அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" பாடி கலாய்த்தல் (பாடல்: மின்மினி)செல்லம்மா, ராசய்யாவை நினைத்து காதல் வானில் சிறகடிக்கிறாள், "ராசாவே உன்னை விட மாட்டேன்" பாடல் கூட வருகின்றதுபூங்கொடி தன் காதல் கைகூடாதோ என்று கவலையில் இருத்தல்செல்லம்மா காதல் தோல்வியில் துயர் அடைதல்பூங்கொடி, ராசய்யா திருமண நாள்ராசய்யா கவலையில் பாடும் "ராத்திரியில் பாடும் பாட்டு"செல்லம்மா ஆபத்தான நிலையில்மனம் பேதலித்த செல்லம்மாவை தன் வீட்டுக்கு அழைத்து வரும் பூங்கொடி, நிறைவுக்காட்சி

14 comments:

கோபிநாத் said...

கடமை தல ;))

\\இளையராஜாவை நம்பினோர் கைவிடப்படார் \\

கோடி முறை ரீப்பிட்டிக்கிறேன்..;))

Anonymous said...

this movie has one of the best songs ever composed by IR. The maestro's touch can be seen throughout.

Anonymous said...

கானாபிரபா,

அற்புதமான தொகுப்பு, நன்றி நன்றி!

‘ராமரை நினைக்கும் அனுமாரு, இங்கே ஆடுகிற ஆட்டத்தை நீ பாரு’ங்கற கும்மாளப் பாட்டும் இந்தப் படம்தானே? ராஜா சும்மா பூந்து விளையாடியிருப்பாரே ... ஆனா படத்தில வரலைன்னு நினைவு.

இந்தப் படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்தவை: ‘ராத்திரியில் பாடும் பாட்டு’வின் மலேசியா வாசுதேவன் சரணம், ‘அடி பூங்குயிலே, பூங்குயிலே’யின் சிணுங்கல் ட்யூன், அப்புறம் ’ராசாவே உன்னையும் விடமாட்டேன்’ பாட்டில் வரும் தொட்டாச்சிணுங்கி + அதேமாதிரி கதாநாயகி காண்பிக்கும் வெட்கம்

- என். சொக்கன்,
பெங்களூர்.

ஆயில்யன் said...

படம் வெளியாகி காலக்கட்டத்தில் பாடல்கள் ஒலிக்காத இடங்களே இல்லை என்று கூறுமளவுக்கு கிராமப்புறங்களில் பாடி களைத்துபோன ரெக்கார்டர்கள்! இரவு தூங்கப்போகும் சமயத்தில் (அதெல்லாம் டெய்லி டெரரா பாட்டு போடற ஆளுங்க இருக்காங்க!) தெருவில் ஒலிக்க பல முறைக்கேட்டிருக்கிறேன் !

கானா பிரபா said...

தல கோபி

வருகைக்கு நன்றி ;)

// Anonymous said...
this movie has one of the best songs ever composed by IR. The maestro's touch can be seen throughout.//

உண்மை தான் நண்பரே

பாடல்களுக்கு இடையே வரும் இசையில் சிம்பொனியின் பிரவாகத்தைக் காட்டியிருப்பார் ராஜா.

கானா பிரபா said...

வாங்க சொக்கன்

ராமர நினைக்கும் அனுமாரு பாடல் கூட இந்தப் படம் தான், டைட்டிலில் இந்தப் பாடலைப் போட நினைத்திருப்பார்கள் போல, ஆனால் படத்தில் வரவே இல்லை. ஞாபகப்படுத்தியதற்கு நன்றி, அதையும் சேர்த்திருக்கின்றேன்.

ராசாவே உன்னை விடமாட்டேன் பாட்டின் இடையே புல்லாங்குழலோடு வரும் இசைஜாலம் ராஜாவுக்கே தனித்துவமானது. கிச்சாசின் ஒளிப்பதிவை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்.

கானா பிரபா said...

// ஆயில்யன் said...
படம் வெளியாகி காலக்கட்டத்தில் பாடல்கள் ஒலிக்காத இடங்களே இல்லை என்று கூறுமளவுக்கு கிராமப்புறங்களில் பாடி களைத்துபோன ரெக்கார்டர்கள்! இரவு தூங்கப்போகும் சமயத்தில் (அதெல்லாம் டெய்லி டெரரா பாட்டு போடற ஆளுங்க இருக்காங்க!) //

வாங்க பாஸ்

நம்மூரில் இருந்த காலத்தில் ஒலிநாடாவில் கேட்டுக் கிறங்கிய பாடல்களில் இவையும் சில.

Unknown said...

தலைவா,
Super போங்க

"அழகி" பட பின்னணி இசை

கிழே உள்ள வலையில் No.7 "end credits" closing Title music
http://www.dhool.com/sotd2/152.html

No.9 Beginning Music

http://www.dhool.com/sotd2/153.html
வயலின் கொஞ்சுவார்.


இன்னும் நெறைய BGM இருக்கு

இப்ப இருக்கிற இசைஅமைப்பாளர்கள் தினமும் மார்கழி மாசம் நாலு மணிக்கு எழுந்து காதுல HEADPHONE மாட்டிகிட்டு கழுத்தளவு சில் தண்ணிரில நின்னுகிட்டு இதெல்லாம் கேட்டு சாதகம் பண்ணனும்.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி ரவிசங்கர், உங்கள் தொடுப்புக்கள் மிக அருமை, அதுக்கும் போனஸ் நன்றி ;)

இப்ப வர்ரவங்க எல்லாம் இசையமைப்பாளர்கள் என்பதை விட நல்ல ஒலிக்கோப்பாளர்கள், ராஜா ஒரு குறிஞ்சிப்பூ

Anonymous said...

இந்தப் படத்துக்கு, பாடல்களெல்லாம் கம்போஸ் செய்யப்பட்டபிறகு, அவற்றை இணைத்து ராஜ்கிரண் ஒரு கதை செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், நீங்கள்கூட கிட்டத்தட்ட அதேபோல் எழுதியிருக்கிறீர்கள் - நிஜமா?

நிஜம் எனில், ராஜ் கிரண் பெரிய திறமைசாலிதான்!

நாமும் ஏன் விளையாட்டாக ராஜாவின் 5 பெஸ்ட் பாடல்களை (பல வகை சார்ந்தவை) எடுத்துக்கொண்டு ஒரு கதை பண்ணிப் பார்க்கக்கூடாது? :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

KARTHIK said...

// "ராசாவே உன்னை விட மாட்டேன்" என்று எஸ்.ஜானகி,//

இந்தப்படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டுங்க இது.

நல்ல தொகுப்புங்க.

கானா பிரபா said...

//என். சொக்கன் said...
இந்தப் படத்துக்கு, பாடல்களெல்லாம் கம்போஸ் செய்யப்பட்டபிறகு, அவற்றை இணைத்து ராஜ்கிரண் ஒரு கதை செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், நீங்கள்கூட கிட்டத்தட்ட அதேபோல் எழுதியிருக்கிறீர்கள் - நிஜமா//

நீங்க சொல்வது நிஜம் தான், அந்த நேரத்தில் வந்த புதுமையான செய்தி அது. ஆனா இந்த பெருமை அரண்மனைக் கிளி மற்றும் எல்லாமே என் ராசா தான் படத்தை இயக்கிய ராஜ்கிரணுக்கா அல்லது கண்ணுக்குத் தெரியாத அந்த உதவி இயக்குனருக்கா தெரியலையே ;)

இப்படங்களைத் தொடர்ந்து ராஜ்கிரணின் உதவி இயக்குனராக இருந்து பின் இயக்குராக மாறிய பாண்டியனாக கூட இருக்கலாம்.

நீங்க சொன்ன ஐந்து பாட்டு வச்சு கதை எழுதுறது வித்தியாசமான ஐடியாவா இருக்கே, பூனைக்கு மணி கட்டுவது யார் ?

கானா பிரபா said...

//கார்த்திக் said...
// "ராசாவே உன்னை விட மாட்டேன்" என்று எஸ்.ஜானகி,//

இந்தப்படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டுங்க இது.

நல்ல தொகுப்புங்க.//

வருகைக்கு நன்றி நண்பா

K.Arivukkarasu said...

’பெட்டகத்தில் இருந்து’ என்று ட்வீட்டரில் சுட்டி கொடுத்ததால் இங்கு வந்தேன். அரண்மனைக் கிளி பாடல்கள் அனைத்துமே எனக்கு பிடிக்கும். குறிப்பாக, ’ராசாவே உன்னை விட மாட்டேன்’ அதில் பாடல் இடையே வரும் இசை மனதை மயக்கும். இப்படத்தைப் பற்றி மேலும் தகவல் தந்ததற்கு நன்றி,குறிப்பாக பின்னணி இசை தொகுப்பு.