கடந்த றேடியோஸ்புதிரில் ஒரு பாடலின் இடைக்குரலை ஒலிபரப்பி அந்த மழலைக் குரல் யார் என்று கேட்டிருந்தேன். மனோஜ் கியான் இசையில் வெளிவந்த விஜயகாந்த் படமான "உழவன் மகன்" திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சசிரேகா பாடிய "செம்மறியாடே செம்மறியாடே செய்வது சரிதானா" என்ற பாடலின் இடையில் வரும் மழலைக் குரல் தான் யுகேந்திரன் பாடகராக அறிமுகமானது.
அதன் பின்னர் இவர் வளர்ந்த பின்னர் கங்கை அமரன் தன் மகன் வெங்கட் பிரபுவை போட்டு எடுத்திருந்த "பூஞ்சோலை" திரைப்படத்தில் இளையராஜா இசையில் "உன் பேரைக் கேட்டாலே" என்ற பாடலை பவதாரணியுடன் சேர்ந்து பாடினார் யுகேந்திரன். அந்தப் படம் பத்து வருஷங்களுக்கு மேலாகக் கிடப்பில் இருக்கின்றது. "ஒருவன் ஒருவன் முதலாளி" என்ற பெயரில் அதனைப் பெயர் மாற்றி 2 வருஷங்களுக்கு முன்னர் மீண்டும் கொண்டு வர இருந்தார்கள். அப்படியும் வரவில்லை.
அதன் பின்னர் தேவாவின் இசையில் "பொற்காலம்" திரைக்காக "சின்னக் காணங்குருவி ஒண்ணு" என்ற பாடலைப் பாடினார்.அதுவும் இசைத்தட்டில் வந்ததோடு சரி. படத்தில் வரவில்லை. இவர்களை எல்லாம் கடந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் அருள் யுகேந்திரனுக்குக் கிடைக்கவே "பூவேலி" திரைப்படத்தில் "பொள்ளாச்சி சந்தையிலே" என்ற பாடலைப் பாடி நல்லதொரு அறிமுகத்தைப் பெற்றார். தொடர்ந்து பரத்வாஜின் இசையில் நிறையப் பாடல்களைப் பாடியிருக்கின்றார் இவர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் "காதலர் தினம்" திரைக்காக "ஓ மரியா" பாடலை தேவனுடன் இணைந்து பாடியும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "முதன் முதலாய்" பாடலை மதுமிதாவுடன் இணைந்தும் பாடி அந்தப் பாடல்கள் பிரபலமாயிருக்கின்றன. "வீரமும் ஈரமும்" என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கின்றார்.
சிங்கப்பூர் ஒலி வானொலியில் நிகழ்ச்சி படைத்திருந்த மாலினி என்னும் அறிவிப்பாளர் இலங்கையின் சுவர்ண ஒலி என்ற வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளராகச் சென்றபோது அந்த நேரத்தில் கெளரவ அறிவிப்பாளராக் வந்து நிகழ்ச்சி படைத்திருந்த யுகேந்திரனுடன் காதல் மலர்ந்து சிங்கப்பூரையும் தமிழ்நாட்டையும் கொழும்பு இணைத்தது ;)
அவர்தான் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன். இவரது தங்கை பிரசாந்தியும் வளர்ந்து வரும் பின்னணிப் பாடகிகளில் ஒருவர். இவர் பின்னாளில் பாடகராகவும், நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றைய தொகுப்பிலே யுகேந்திரன் பாடிய சிறந்த பாடல்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்கின்றேன். கேட்டு மகிழுங்கள். (மேலே படத்தில் யுகேந்திரன் சிட்னி வந்திருந்த போது)
யுகேந்திரன் மழலையாகப் பாடிய "செம்மறி ஆடே" பாடல் உழவன் மகன் படத்திலிருந்து
மனோஜ் கியான் இசையில் இணைந்து பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சசிரேகா
பூஞ்சோலை படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் 'உன் பேரைக் கேட்டாலே" இணைந்து பாடியவர் பவதாரணி
தேவாவின் இசையில் பொற்காலம் திரையில் வரும் "சின்னக் காணாங்குருவி ஒண்ணு"
பரத்வாஜின் இசையில் பார்த்தேன் ரசித்தேன் படத்திற்காக ரேஷ்மியுடன் "பார்த்தேன் பார்த்தேன்"
சித்ரா சிவராமனுடன் பாண்டவர் பூமி திரைக்காக "தோழா தோழா" பரத்வாஜ் இசையில்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லேசா லேசா திரைப்படத்தில் இருந்து "முதன் முதலாய" இணைந்து பாடியவர் மதுமிதா
ஆட்டோ கிராப் திரையில் இருந்து " கிழக்கே பார்த்தேன்" பரத்வாஜ் இசையில்
சபேஷ் முரளி இசையில் தவமாய் தவமிருந்து திரைக்காக "என்ன பார்க்கிறாய்" இணைந்து பாடியவர் சுசித்ரா
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
ஆகா...இவரு தானா அவரு..!!!!
கலக்கல் ஸ்பெசல் தல ;))
ம்ம் யுகேந்திரன் காதல் திருமணம் செஞ்ச சேதிக்கு பிறகுதான் ரொம்ப பிரபலமா தெரிய ஆரம்பிச்சாருன்னு நினைக்கிறேன் குமுதத்தில பேட்டி வந்துச்சு!
அப்பப்ப பொங்கள் தீபாவளின்னா கங்கை அமரன் குரூப்ல வந்து டிவியில பாட்டு பாடிக்கிட்டு போவாரு!
இப்ப என்ன பண்றாருங்க தல?
யுகேந்திரன் தொகுப்பு நன்றாக இருக்கிறது. பல் புதிய விடயங்களை தந்தீர்கள். இவர் இப்பொழுது விஜய் ரீவி யின் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகி விட்டார். பாடல்துறையில் வளம், மற்றும் பின்னனி இருந்தும் கவனம் செலுத்தவில்லை. எல்லா இடமும் கால் வைக்கப்போய் தனித்துவத்தை இழக்கிறார் என்பது என் கருத்து. படங்களில் வில்லன் பத்திரங்களிலும் ஜமாய்த்தவர். நல்ல பதிவு.
avvvvvvvvvvvv.
இதெல்லாம் ஓவரு.
:))))))))))
வாழ்க யுகேந்திரன்..!
அவ்ரைப்பதிவிடும் கானா பிரபாவுக்கு ஒரு 'ஓ' போடுகிறேன்..!
:)
/சுரேகா.. said...
வாழ்க யுகேந்திரன்..!
அவ்ரைப்பதிவிடும் கானா பிரபாவுக்கு ஒரு 'ஓ' போடுகிறேன்..!
:)/
ரிப்பீட்டேய்...!
தல கோபி
மிக்க நன்றி
ஆயில்ஸ்
இப்ப இவர் விஜய் டிவியில் இசை நிகழ்ச்சி தொகுப்பாளராவும், நாடகங்களில் வேஷம் கட்டிக்கிட்டும் இருக்கார்.
அன்பு கானா பிரபா, எனக்கு ஒரு வேண்டுகோள், உறங்காத நினைவுகள் எனும் படத்திலிருந்து மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை என தொடங்கும் பாடலை வலையேற்ற இயலுமா? இயன்றால் இந்த பாடலின் எம்.பி.3 வடிவை என் இணைய முகவரிக்கு (dul_fiqar786@hotmail.com) அனுப்ப முடியுமா? சிரமத்திற்கு மன்னிக்கவும்
//கதியால் said...
யுகேந்திரன் தொகுப்பு நன்றாக இருக்கிறது. பல் புதிய விடயங்களை தந்தீர்கள். இவர் இப்பொழுது விஜய் ரீவி யின் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகி விட்டார்.//
வருகைக்கு நன்றி நண்பா
புதுகைத்தென்றல்
என்ன சொல்ல வர்ரீங்க ;)
சுரேகா, நல்லவன்
மிக்க நன்றி
நாகூர் இஸ்மாயில்
நிச்சயமாகக் கொடுக்கிறேன், என்னுடைய பாடல் களஞ்சியத்தில் தேடிச் சொல்கிறேன்.
என்னா தல ! அது யுகேந்திரன்தான்னு ஊகிச்சு சொல்றதுக்குள்ள விடைய போட்டிங்களே !!!
எனி வே நல்ல பாடல் தொகுப்பிற்கு நன்றி
ப்ரீதம்
வாங்க நண்பா
பதிலோடு வருவீங்கன்னு காத்திருந்தேன், வெள்ளி முடிவுகளை அறிவிச்சாகணுமே, சரி சரி அடுத்த முறை மறக்காம வாங்க.
அருமையான தொகுப்புங்க
Post a Comment