Pages

Wednesday, December 17, 2008

றேடியோஸ்புதிர் 31 - எல்லாம் தெரிஞ்ச ஐயா ஹோ!


கடந்த றேடியோஸ்புதிரும் இலகுவாக அமைந்ததில் பலருக்கு கொண்டாட்டமாம். எனவே ஒரு புதிரோடு வந்திருக்கிறேன், ராஜா இல்லாமல் ;)

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த்தின் ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் இடைக் குரலைப் பாடியிருக்கும் மழலை பின்னாளில் பாடகராகவும், நடிகராகவும் வலம் வந்திருக்கிறார். அவர் யார் என்பதே கேள்வி. இவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் இவர் முதலில் பாடியதே இங்கே கொடுத்த பாடல் தானாம். அதனைத் தொடர்ந்து பெரியவரானதும் ராஜாவின் இசையில் ஒரு வாரிசை வைத்து அவரின் அப்பா இயக்குனர் இயக்கிய படத்தில் பவதாரணியுடன் கூடப் பாடிய பாடலும் அந்தப் படம் வெளியே வராததால் பிரபலமாகவில்லை. அதனைத் தொடர்ந்து தேவாவின் இசையில் சேரன் இயக்கிய அருமையானதொரு படத்தில் இவர் பாடி அந்தப் பாடல் ஒலிநாடாவில் மட்டுமே வந்தது, பாடற் காட்சியாக்கப்படவே இல்லையாம். அதன் பிறகு இன்னொரு இசையமைப்பாளரின் அருளால் பாடகராக வந்தார். பெரும் பாடகர் என்று இவரை சொல்ல முடியாது. வெற்றி பெறும் யோகம் இருந்தால் இந்த யுகத்திலேயே கண்டு பிடிச்சு சொல்லுங்க ;)


sm1.mp3 -

35 comments:

ஆயில்யன் said...

தல!

எவ்ளோ நாளைக்கித்தான் உங்களுக்கு தெரியாத பாட்டை பத்தியெல்லாம் எங்க கிட்ட கேட்டு கண்டுபுடிச்சுப்பீங்க...?

இந்த தடவை நாங்க கேக்குறோம்!

இய்யா இய்யா இய்யாவோ எல்லாம் தெரிஞ்ச ஐயாவோ

எங்க ஆன்சரை டக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்!

Pavals said...

யுகேந்திரன் (மலேசியா)வாசுதேவன் :)

Pavals said...

யுகேந்திரன்

நாரத முனி said...

Yugendran...?

கைப்புள்ள said...

படம் உழவன் மகன். எல்லாம் தெரிஞ்ச ஐயான்னு பாடுன அந்த சின்னப் பையன் மலேசியா வாசுதேவனோட மகன் யுகேந்திரன்.

சந்தனமுல்லை said...

//எவ்ளோ நாளைக்கித்தான் உங்களுக்கு தெரியாத பாட்டை பத்தியெல்லாம் எங்க கிட்ட கேட்டு கண்டுபுடிச்சுப்பீங்க...?//

அதானே!!

சந்தனமுல்லை said...

//எங்க ஆன்சரை டக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்!//

ஆயில்ஸ் கேக்கறாரு இல்ல..சொல்லுங்க பார்ப்போம்!! lol

முரளிகண்ணன் said...

yukenthiran?

சந்தனமுல்லை said...

//வெற்றி பெறும் யோகம் இருந்தால் இந்த யுகத்திலேயே கண்டு பிடிச்சு சொல்லுங்க ;)//

கொஞ்சம் ஓவராத் தெரியலை?!!நாங்கள்ளாம் விடை தெரிஞ்சாக் கூட சொல்ல மாட்டோம்..அடக்கமா அமைதியா இருப்போம்..!! ஓக்கே!!!

Unknown said...

கானா பிரபு,

//இந்த யுகத்திலேயே கண்டு பிடிச்சு சொல்லுங்க//

//யுகத்திலேயே//

யுகேந்திரன்.

கானா பிரபா said...

ஆயில்ஸ்

அடுத்த ஜென்மத்துல பார்த்துக்குவோம்

சந்தனமுல்லை

உங்களுக்கு தெரிஞ்சதுன்னா ஜனகணமண தான் நான் போடணும் ;)

ஆயில்யன் said...

சந்தனமுல்லை said...

//வெற்றி பெறும் யோகம் இருந்தால் இந்த யுகத்திலேயே கண்டு பிடிச்சு சொல்லுங்க ;)//

கொஞ்சம் ஓவராத் தெரியலை?!!நாங்கள்ளாம் விடை தெரிஞ்சாக் கூட சொல்ல மாட்டோம்..அடக்கமா அமைதியா இருப்போம்..!! ஓக்கே!!!


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

கானா பிரபா said...

கொங்குராசா

கலக்கல்ஸ்

நாரதமுனி

சரியான கணிப்பு

கைப்புள்ள

கலக்கீட்டிங்க

கானா பிரபா said...

முரளி கண்ணன்

சரியான விடை ;)

கே.ரவிசங்கர்

சொந்த செலவில் சூனியம் வச்சிட்டேனா, சரியான விடை ;)

ஆயில்யன் said...

இய்யா இய்யா இய்யா ஹோய்

பாடினது மலேஷியா வாசுதேவ பையன் யுகேந்திரன்

அதுக்கு பிறகு ஆயில்யனும் கொஞ்ச நாள் பாடிக்கிட்டிருந்தாரு!

:)))))

ஆயில்யன் said...

/கைப்புள்ள

கலக்கீட்டிங்க///


தல!


தல எண்ட்ரீ போடுவாருன்னு எக்ஸ்பெக்ட் பண்ணிக்கிட்டிருந்தேன்!

பின்னே பாட்டு பத்தி தனி பதிவு எல்லாம் போட்டிருந்தாரே

இய்யா இய்யா இய்யா ஹோய் :))))

நாரத முனி said...

oh am i right????

Anonymous said...

மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன்?

பூஞ்சோலை படத்தில் ‘உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது’ என்று ஒரு நல்ல பாட்டைப் பாடினார், ஆனால் அந்தப் படம் 10 வருடமாகியும் வரவில்லை (வெங்கட் பிரபு நடிப்பு - அவர் அப்பா கங்கை அமரன் இயக்கம் - இளையராஜா இசை)

- என். சொக்கன்,
பெங்களூர்.

கோபிநாத் said...

இப்போதைக்கு உள்ளேன் ஐயா ;))

அரவிந்த் said...

யுகேந்திரன்!?!?!..

அருண்மொழிவர்மன் said...

பாடகர் - யுகேந்திரன்
பவதாரணியுடன் பாடிய படம் - பூஞ்சோலை

Anonymous said...

யுகேந்திரன்

கானா பிரபா said...

‍ஆயில்ஸ், ‍நாரத முனி, சொக்கன், அரவிந்த், அருண்மொழி வர்மன், சின்ன அம்மணி
எல்லோருமே சரியான விடைதான் ;)‍

Jazeela said...

யுகேந்திரன்?

கானா பிரபா said...

ஜெஸிலா

அவரே தான் ;) வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விடையை ஈஸியா டக்குன்னு சொல்லிட்டேன்ல.. :)

நாரத முனி said...

அதான் க்ளு குடுத்து விட்டீர்களே தலைவா... கண்டுபிடிக்க முடியலன்னா தான் ஆச்சரியம்.

தங்ஸ் said...

யுகேந்திரன். படம் பூஞ்சோலை.

G.Ragavan said...

நான் விடைய இங்க சொல்லலாமா கூடாதா? :-)

Anonymous said...

யுகேந்திரனா? மலேசியா வாசுதேவன் மகன்

கானா பிரபா said...

முத்துலெட்சுமி

சாட்டில் விடை சொல்லீட்டு இங்கே உறுதிப்படுத்துறீங்களா ;0

தங்க கம்பி

ரொம்பவும் சுலபமான விடையாச்சே, இன்னொரு முறை முயற்சி செய்யுங்க

தங்ஸ்

கலக்கல்ஸ்

ராகவன்

சொல்லிடுங்களேன்;)

நல்லவரே

பின்னீட்டிங்க‌

கலைக்கோவன் said...

//வெற்றி பெறும் யோகம் இருந்தால்
இந்த யுகத்திலேயே கண்டு பிடிச்சு சொல்லுங்க//

யுகேந்திரன் ....
சரியான்னு மட்டும் சொல்லுங்க
மீதி பதிலை அப்புறம் சொல்றேன்

கானா பிரபா said...

கலைக்கோவன்

அதான் நீங்களே சொல்லீட்டீங்களே ;) வாழ்த்துக்கள்

கலைக்கோவன் said...

"சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக"..
இடைக்குரல் கொடுத்த
மலேசியா வாசுதேவன் வீட்டு பூ.
......யுகேந்திரன்
இந்த "சின்ன கானாங்குருவியின்" பாடல்
பொற்காலம் ஒலித்தட்டில் மட்டும் இடம்பெற்று
படம் பெறாமல் போயிற்று.
ஆனாலும் .....
தம்பதி சகிதமாக (துணைவி மாலினியுடன்)
தற்போது ..,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை
(சமீபத்தில்
விஜய் தொ.கா. சூப்பர் சிங்கர்)
அலங்கரிக்கின்றனர்.
.......................எப்பிடி
திரும்பவும் வந்துட்டேனே.

கானா பிரபா said...

கலைக்கோவன்

நான் புதிர் போடா நீங்க ஹைக்கூ போட்டு பின்றீங்க தல ;)

சரியான பதில் யுகேந்திரன், போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி ;)