Monday, June 23, 2008
அபூர்வ சகோதரர்கள் பின்னணி இசைத் தொகுப்பு
றேடியோஸ்புதிர் 10 இல் ஒரு பின்னணி இசை கொடுத்து அப்படத்தைக் கேட்டிருந்தேன். அபூர்வ சகோதரர்கள் என்று சரியான விடையை ஒரு சில நேயர்கள் தவிரப் பலர் அளித்திருந்தீர்கள். அப்படத்தின் வசனகர்த்தா கிரேசி மோகன். அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் (கெளரவ தோற்றம்) , சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், தசாவதாரம் ஆகிய கமல் படங்களுக்கு கிரேசி மோகன் வசனம் எழுதியிருக்கிறார்.
நான் கொடுத்த இன்னொரு க்ளூவில் இருந்து பலர் விடைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அது இப்படத்தில் இன்ஸ்பெக்டர் ஜனகராஜிடம் கான்ஸ்டபிள் சிவாஜி பேசும் " எங்கேயோ போயிட்டீங்க" என்ற பிரபல வசனம்.
கதை பஞ்சு அருணாசலம். இயக்கம் சிங்கிதம் சீனிவாசராவ்.
ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம் (கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள் அவரின் ஒளிப்பதிவின் ஒரு சாம்பிள்)
முன்னர் இதே பெயரில் ஜெமினி நிறுவனம் தயாரித்த தமிழ்ப்படத்தில் எம்.கே.ராதா மற்றும் இதே கதை ஹிந்தியில் படமான போது ரஞ்சன் ஆகியோர் நடித்திருப்பார்கள்.
சரி இனி கலைஞானி கமல்ஹாசனின் "அபூர்வ சகோதரர்கள்" படத்திலிருந்து இசைஞானி இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான பின்னணி இசையைத் தொகுத்து இங்கே தருகின்றேன்.
எழுத்தோட்டத்தின் பின்னணியில் கமல், ஸ்ரீவித்யா வில்லன்களிடமிருந்து தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (ட்ரம்ஸ் மற்றும் பல வாத்தியக் கலவை)
எழுத்தோட்டத்தில் வரும் பின்னணியில் கமல் கொல்லப்பட, ஸ்ரீவித்யா மட்டும் தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (புல்லாங்குழல், பல வயலின்கள், தனி வயலின் என்று மாறும்)
குழந்தைகள் ஆளுக்கொரு பக்கம் பிரிதல் (வயலின்)
அப்பு சர்க்கஸில் தோன்றும் முதற்காட்சி (வயலின்)
ரூபணியின் அறிமுகக் காட்சிக்கு சர்க்கஸ் குழு வாசிக்கும் பாண்ட் வாத்தியம்
அப்பு கமலின் கல்யாண சந்தோஷம் (பாண்ட் இசை)
அப்பு கமலின் காதல் தோல்வி (முகப்பு இசையின் வயலின் மீண்டும் ஒன்றிலிருந்து பல வயலின்களாக)
அப்பு தற்கொலை முயற்சி ( பல வயலின்களின் கூட்டு ஆவர்த்தனம்)
அப்புவின் பழிவாங்கும் காட்சி ஒன்று (பல வாத்தியக் கூட்டு)
அப்புவின் பழிவாங்கும் காட்சி இரண்டு
இறுதிக்காட்சியில் மீண்டும் வயலின் மற்றும் புல்லாங்குழல் இசை கலக்கின்றது
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
ஆஹா,
என்ன அருமையா பிச்சி பிச்சி எங்களுக்கு பலாப்பழத்தை கொடுத்திருக்கீங்க. ரொம்ப அருமை.
சுளை இனித்தது ....
//சரியான விடையை ஒரு சில நேயர்கள் தவிரப் பலர் அளித்திருந்தீர்கள்.//
இது தேவையா எனக்கு..!!?? :)
படத்தின் பின்னணி இசை குறித்தான விவரணத்தின் மூலம் நீங்க எங்கேயோ போயிட்டிங்க..
வாழ்த்துக்கள்..!
ஆஹா!ஆஹா! அருமை!அருமை
// புதுகைத் தென்றல் said...
ஆஹா,
என்ன அருமையா பிச்சி பிச்சி எங்களுக்கு பலாப்பழத்தை கொடுத்திருக்கீங்க.//
வாங்க புதுகைத் தென்றல்
எல்லாப் புகழும் அந்த ராஜாதி ராஜாவுக்கே,
//ஆ.கோகுலன் said...
//சரியான விடையை ஒரு சில நேயர்கள் தவிரப் பலர் அளித்திருந்தீர்கள்.//
இது தேவையா எனக்கு..!!?? :)//
நீங்களே உங்களைக் காட்டிக் கொடுத்திட்டீங்கள் ;-)
பின்னணி இசை எப்படியிருக்கு?
பல்வேறு காட்சிகளில் வரும் இசையில் அப்பு கமலின் சோகக்காட்சிக்கான இசை மற்றும் ஸ்ரீவித்யா தப்பிக்கும் காட்சி இசை என்னை வெகுவாக கவர்ந்தது!
தல....!
நீங்க எங்கேயோ போயீட்டீங்க!
// புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ஆஹா!ஆஹா! அருமை!அருமை//
வருகைக்கு நன்றி நண்பரே
// ஆயில்யன் said...
பல்வேறு காட்சிகளில் வரும் இசையில் அப்பு கமலின் சோகக்காட்சிக்கான இசை மற்றும் ஸ்ரீவித்யா தப்பிக்கும் காட்சி இசை என்னை வெகுவாக கவர்ந்தது!//
வாங்க ஆயில்யன்
வயிலினை வச்சுக் கொண்டு என்னமாய் விதவிதமாய் பின்னணி இசை, அதுதான் ராஜா
தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டிங்க...;))
மிக்க நன்றி ;)
அப்பு கமலின் சோகக்காட்சிக்கான இசை என்னை வெகுவாக கவர்ந்தது!
Thanks for posting. Expecting more!!
//கோபிநாத் said...
தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டிங்க...;))
மிக்க நன்றி ;)//
தல
ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க எல்லாப் புகழும் நம்ம ராகதேவனுக்கே ;-)
வாங்க ஞானராஜா
வார இறுதியில் போட்டுட்டேன், நிச்சயமாக அடுத்த முறை திங்களே போட்டு விடுகின்றேன்.
ஜெமினி தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் எம்.கே.ராதா இரட்டை வேடங்களிலும் பி.பானுமதியும் நடித்தனர். அதே கதையை ஹிந்தியில் எடுத்த போதுதான் ரஞ்சன் நடித்தார்.
சும்மா தகவல்தான்.
சகாதேவன்
தகவலுக்கு நன்றி சகாதேவன், பதிவில் இதனைத் திருத்திக் கொடுத்திருக்கின்றேன்.
Post a Comment