Tuesday, June 17, 2008
மண்ணில் இந்தக் காதல் இன்றி....!
கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது தங்கை எஸ்.பி.சைலஜா, எஸ்.பி.சரண் மற்றும் மல்லிகார்ஜினன், கோபிகா பூர்ணிமா ஆகியோர் சிட்னி வந்து இசை நிகழ்ச்சியொன்றைப் படைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வேலையையும் எஸ்.பி.பி அவர்களே செய்யவேண்டும் என்பதால் சுவாரஸ்யமான பல விடயங்களைச் சொல்லி அந்த நிகழ்ச்சியைக் கொடுத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் சொன்ன ஒரு சம்பவத்தை வைத்து, மேலதிக தகவல்களைச் சேர்த்து இன்றைய றேடியோஸ்புதிரைக் கொடுத்திருந்தேன். இன்றைய றேடியோஸ்புதிர் 9 மிக சுலபமாக இருந்த காரணத்தால் பலர் சரியான விடையைச் சொல்லியிருக்கீங்க. அந்தப் புதிர் விடை இதுதான்
இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின் கேளடி கண்மணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வஸந்த். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் வரும் "எல்லோரும் மாவாட்டக் கத்துக்கணும்" பாடலில் ஓட்டல் சிப்பந்தியாகக் கூட நடித்திருப்பார். இந்த கேளடி கண்மணி படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமே நாயகனாக நடித்திருப்பார். இவருக்கு ஒரு பாடல் வைக்கும் போது புதுமை ஏதாவது செய்யலாமே என்று நினைத்து மூச்சு விடாமல் பாடும் பாட்டு என்று விளம்பரப்படுத்தினால் நன்றாக இருக்குமே என்று வஸந்த் தன் குருநாதர் கே.பாலசந்தரிடம் சொல்லவும், அதுக்கு அவர்
"என்னது பாலுவா இதைப் பாடப்போறான்? அவனால இந்த ஒடம்பை வச்சு ஒரு எட்டு நடக்கவே முடியாது, மூச்சு வாங்கிடும், மூச்சு விடாம எப்படி அவன் பாடுவான்" என்றாராம்.
ராஜா ஒரு வழியாக டெக்னிக்கல் ஒட்டுவேலைகளால் மூச்சு விடாமல் பாடும் பாடலான "மண்ணில் இந்தக் காதலின்றி" பாடலை எஸ்.பி.பாலா பாட இசையமைத்து விட்டார். அந்தப் பாடல் இதோ:
கேளடி கண்மணி திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்ட போது அந்தத் தெலுங்குப் படத்தின் தலைப்பு கூட ஒரு பாடலின் முதலாவது அடிதான். அந்தப் படத்தலைப்பு "ஓ பாப்பா லாலி" , இந்த அடியில் தெலுங்கில் கீதாஞ்சலி (தமிழில்: இதயத்தைத் திருடாதே)படப்பாடல் இருக்கின்றது. இதோ ஒ பாப்பா லாலி படத்தில் இருந்து மண்ணில் இந்தக் காதலின்றி பாடலின் தெலுங்கு வடிவம்:
இந்தப் பாடல் இளையராஜாவின் அண்ணாவின் பாவலர் வரதராசன் என்றே பாடல் இசைத்தட்டுக்களிலும் குறிப்பிட்டுப் பிரபலப்படுத்தியிருந்தார்கள். ஆனால் இதை எழுதியவர் கங்கை அமரன் அவர்கள். அதை அவரே பரத்வாஜின் இசை நிகழ்ச்சி ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
மூலப்பாட்டைப் பார்க்க
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
:-)
/இவருக்கு ஒரு பாடல் வைக்கும் போது புதுமை ஏதாவது செய்யலாமே என்று நினைத்து மூச்சு விடாமல் பாடும் பாட்டு என்று விளம்பரப்படுத்தினால் நன்றாக இருக்குமே என்று வஸந்த் தன் குருநாதர் கே.பாலசந்தரிடம் சொல்லவும், அதுக்கு அவர்
"என்னது பாலுவா இதைப் பாடப்போறான்? அவனால இந்த ஒடம்பை வச்சு ஒரு எட்டு நடக்கவே முடியாது, மூச்சு வாங்கிடும், மூச்சு விடாம எப்படி அவன் பாடுவான்" என்றாராம்.
ராஜா ஒரு வழியாக டெக்னிக்கல் ஒட்டுவேலைகளால் மூச்சு விடாமல் பாடும் பாடலான "மண்ணில் இந்தக் காதலின்றி" பாடலை எஸ்.பி.பாலா பாட இசையமைத்து விட்டார். //
இசை தொடர்பான பின்னணி தகவல்களை வெளியிட்டு வருவதற்கு நன்றி. மேலும் இந்த ஆக்கங்கள் ஊடாக இசை மற்றும் படக்காட்சிகளையும் சேர்த்து சுவையூட்டுகிறீர். நன்றி.
இசை தொடர்பான தகவல்களை பதிவு செய்து வரும் கானா பிரபாவிற்கு நெல்லை பதிவர்கள் சார்பாக ஒரு ஓ... போடுகிறோம்.
வாங்க விக்னேஸ்வரன்
பாலசந்தர் தான் சிரிப்பு காரணமா ;-)
நெல்லை நண்பர்களே
மிக்க நன்றி உங்கள் உற்சாகப்படுத்தலுக்கு.
இந்த பாட்டை ரொம்ப நன்றாக தான் ஆராய்ச்சி செய்து வழங்கியிருக்கிறீர்கள் உங்கள் உழைப்பு நன்றாக தெரிகிறது. பதிவிற்க்கு மிக்க நன்றி பிரபா சார்.
தல
உள்ளேன் ஐயா ;)
பிரபா !!
பாலு அண்ணனே சில நிகழ்ச்சிகளில் தான் மூச்சு பிடித்து பாடவில்லை என்று சொல்லி இருக்கிறார்..
ஆயினும் மேடை இசை நிகழ்ச்சிகள் நடத்தும் நம் இசைக்குழு பாடகர்கள் பாவம்.. உண்மையிலேயே மூச்சு பிடித்து பாடுவதை பார்த்திருக்கிறோம்..அவர்களுக்கு ஒரு ஓ போடுவோம் !!
உள்ளேன் ஐயா ;)
//Covai Ravee said...
இந்த பாட்டை ரொம்ப நன்றாக தான் ஆராய்ச்சி செய்து வழங்கியிருக்கிறீர்கள் //
நன்றி ரவி சார்
தல கோபி, நிஜமா நல்லவன்
அது ;-))
//கீ - வென் said...
பிரபா !!
பாலு அண்ணனே சில நிகழ்ச்சிகளில் தான் மூச்சு பிடித்து பாடவில்லை என்று சொல்லி இருக்கிறார்..
ஆயினும் மேடை இசை நிகழ்ச்சிகள் நடத்தும் நம் இசைக்குழு பாடகர்கள் பாவம்.. உண்மையிலேயே மூச்சு பிடித்து பாடுவதை பார்த்திருக்கிறோம்..அவர்களுக்கு ஒரு ஓ போடுவோம் !!///
சரியா சொன்னீங்க கீ-வென் ;-)
அது சரி நீங்க நம்ம கங்காரு நாட்டில் இருப்பது இன்றைக்குத் தான் தெரியும்.
நன்றி பிரபா !! அப்படியே நம்ம பதிவுக்கும் வந்துட்டு போங்க..
http://keysven.blogspot.com/
சமீபத்துல தான் இந்தியா சென்று வந்தேன்.. எல்லோரையும் (தமிழ் திரை இசை உலகில்) சந்தித்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு தான் வந்தேன்..(ஏன்னா நான் பழைய ஆள் இல்லையா :)))
சிட்னியில் நீங்க செட்டில் ஆகியிருந்தா நமக்கு ஒரு செட் கிடைச்சிருக்குமே ;-) உங்க பதிவுக்கு வரேன்.
எனக்கு மிகவும் பிடித்த படம்..கற்பூர முல்லை ஒன்று,நீ பாதி நான் பாதி என மற்ற பாடல்களிலும் ராஜா கலக்கியிருப்பார்..
Post a Comment