Pages

Monday, June 9, 2008

சிறப்பு நேயர் "ஆ.கோகுலன்"

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் வாரம் கடந்த 19 வாரங்களாக வலம் வந்து கொண்டிருந்து இந்த இருபதாவது வாரத்துடன் ஒரு நிறைவை நாடவிருக்கிறது என்று தான் முதலில் போட்டிருந்தேன். ஆனால் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதால் ;-) தொடந்து இந்தத் தொடர் இன்னும் சில காலம் நீடிக்கப்படுகின்றது. முதலில் ஜீவ்ஸ் அவர்களை எதேச்சையாக தொடரின் முதல் நேயராக இணைத்துக் கொண்டு தொடர்ந்த நேயர்களின் ஒத்துழைப்பினால் இந்த இருபது வாரங்களைத் தொட்டிருக்கின்றது. இதுவரை தமது படைப்புக்களை அனுப்பாதோர் முத்தான ஐந்து பாடல்களைத் தெரிவு செய்து அவற்றின் விளக்கங்களோடு kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். பாடல்களின் audio file களை அனுப்ப்பவேண்டிய அவசியம் இல்லை.

இந்த இருபதாவது வாரத்தின் சிறப்பு நேயராக வரும் சிறப்பு நேயராக ஆ.கோகுலன் அமைகின்றார். தற்போது வேலை நிமித்தம் கொரியாவில் வாழ்ந்துவரும் கோகுலன், ஈழத்தைச் சேர்ந்தவர். ஈழத்தில் இருந்த காலத்து நினைவுகள், இசை, உலகம் என்று தன் பதிவுகளை விசாலமாக்கிக் கொண்டவர். புதுசு புதுசாக வித்தியாசமான பாடல்களைக் கேட்கவேண்டும், அவற்றைப் பகிரவேண்டும் என்ற ஆவல் கொண்டவர் இவர். அதற்கு உதாரணம் இவரது தனித்தளமான சும்மா கொஞ்ச நேரம்......

ஆ.கோகுலனின் ரசனைச் சிறப்பிற்கு உதாரணமாக அமைகின்றன இந்த வாரம் அவர் அளித்திருக்கும் முத்தான ஐந்து பாடல்களும் அவை குறித்த விளக்கங்களும்.

அன்புள்ள கானா பிரபா, தங்கள் றேடியோஸ்பதியின் வாராந்திரநேயர் பகுதி பார்வையிட்டேன். சிறப்பான முயற்சி. பங்குபற்றுபவர்களும் சிறப்பாக சோபிக்கின்றார்கள்.
நன்றி.
அன்புடன்,
ஆ.கோகுலன்.

01. பூங்கதவே தாழ் திறவாய்

கவிஞர் வைரமுத்துவை அறிமுகப்படுத்தி பெயர்பெற்றது 'நிழல்கள்' எனும் படம். இப்படத்தில் இடம்பெற்ற இன்னுமொரு அருமையான பாடல் இது.

"பூங்கதவே தாழ்திறவாய்.." என்பதை ஆரம்பமாகத்தருவது பொருத்தமானது என்று
நினைக்கிறேன். ஒரு சில பாடல்கள் பாடினாலும் காலத்தால் அழியாப்புகழ் பெற்றவர்களுள் தீபன்சக்கரவர்த்தியும் ஒருவர். இளையராஜாவின் இசையைப்பற்றிச் சொல்வது அதிகப்பிரசங்கித்தனமானது. ஏனெனில் அது உணரப்படவேண்டியது. இதோ..

படம் : நிழல்கள்
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் உமாரமணன்
இசை : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்





02. ஓ சாத்தி ரே

இசைக்கு மொழியில்லை என்பதற்கு இப்பாடல் சிறந்த உதாரணம். மிகமிக மென்மையான இசை.

இடையில் ஓரிடத்தில் மென்டலின் அருமையாக இழைகிறது.இசையமைப்பாளர் மிகவும் அனுபவித்து இசையமைத்திருக்கிறார்.
படத்தில் பாடல் காட்சி கூட பாடலிற்கு ஏற்ற Slow motion இல் அருமையாக வந்துள்ளது. பாடலில் ஒரு காட்சியில் மேல்மாடியிலிருந்து இருவரும் கீழே ஓடிவந்து வெளிவாசலினூடாக செல்லும் காட்சி ஒரே Crane Shot இல் படமாக்கியுள்ளது அபாரம். துப்பாக்கி முனையில் காதல்..!. இசையமைப்பாளர், பாடகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் அனைவரிற்கும் இடையிலான புரிந்துணர்வு இரசாயனம் கொண்ட அருமையான ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு Team work. பாடல் வரிகளும் அபாரமானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஹிந்தி தெரிந்தவர்கள் மொழிபெயர்க்கலாம். ஷ்ரேயா கோஷலின் இன்னுமொரு இனிமையான அனுபவம்.

படம் : ஓம்காரா
பாடகர்கள் : ஷ்ரேயா கோஷல், மற்றும் விஷால் பரத்வாஜ்
இசை : விஷால் பரத்வாஜ்





03. நிலாவிலே...நிலாவிலே

தமிழ் உச்சரிப்பு விமர்சிக்கப்பட்டாலும் தனது பாடல்கள் மூலம் தமிழ்மக்களை வசீகரித்துக்கொண்டவர் உதித்நாராயணன். எம்மவர்கள் சிலர் கூட தமிழை கொஞ்சம் செயற்கையாக உச்சரிப்பது ஸ்ரைல் என்று நினைத்து இன்பம் காண்பவர்கள். இந்தப்பாடலில் உதித்தின் செல்லமான தமிழ் இன்னும் மெருகு சேர்க்கிறது. ஆரம்பத்தில் பாடல் அவிழ்வதே அலாதியானது. சுஸாதா பட்டாச்சார்யாவின் அபாரமான ஹம்மிங்குடன் ஒரு விமானத்தின் மேலெழுகை போல (Take off) சட்சட்டென்று கியர்களை மாற்றி ரொப் கியருக்கு வந்து பின்
நிதானமான வேகம். பாடல் வரிகள் என்னவோ வழமையான பொய்கள் தான். ஆனால் மிக
வசீகரமான பொய்கள். இசையும் உதித் இடையிடையே தளர்ந்து போய் சொல்லும்
ஹோய்..யும் சுஜாதா பட்டாச்சார்யாவின் க.னா..விலே.. என்பதில் வரும்
சங்கதியும் ஆகா எத்தனை அழகு!!. சுனாமிக்கு முன்பு திருகோணமலை கடற்கரையில் அடிக்கடி இப்பாடல் ஒலிபரப்பாகும்.

படம் : ஆகா எத்தனை அழகு
பாடியவர்கள் : உதித் நாராயணன் மற்றும் சுஜாதா பட்டாச்சாரியார்
இசை : வித்தியாசாகர்
வரிகள் :




04. "தீண்டாய் மெய் தீண்டாய்"

துக்கம், மகிழ்ச்சி, கோபம் போல காமமும் ஒரு உணர்வே. இதை இன்னும் நாகரிகமாக 'சிருங்காரம்' என்று சொல்வார்கள். இதுவும் அருமையான ஒரு சிருங்காரரசம் நிறைந்த பாடல். துணைக்கு சங்ககால இலக்கியங்கள் வேறு வருகின்றன. இன்னோரன்ன வாத்தியங்கள் பயன்பட்டாலும் சின்னச் சின்னதாக வரும் வயலின் மோகிக்க வைக்கிறது. ரஹ்மானின் இன்னொரு உத்தியான முரணான Beat உடன் Slow ஆன இசை. பாடலை உச்சஸ்தாயிக்கு கவனமாகக்கொண்டு போவதில் பாடகரை அவசியம் பாராட்டவேண்டும். 'தீண்டாய்' ன்பதற்கு 'தீண்டு'(தீண்டாயோ) மற்றும் 'தீண்டாதே' என எதிர்எதிர் கருத்து கொள்ளமுடியும் என்பதும் சிறப்பு. பாடல் முடிவில் ஆண்குரல் பாடிக்கொண்டிருக்கும் போதேசிலவிநாடி இடைவெளியில் பெண்குரலும் இழைவது பாடலின் தேவை கருதிய.!! அருமையான உத்தி..!

படம் : என் சுவாசக் காற்றே
பாடியவர்கள் : எஸ்.பி.பி. சித்ரா
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து




05. கேட்டேனா

பின்னணி வாத்தியங்களை பெரிதாக நம்பாமல் பாடல்வரிகளை மட்டுமே பிரதானமாகக்கொண்ட பாட்டு. ஆனாலும் சின்னச்சின்னதான பின்னணி பிரமாதம்.
இசை ஏற்கனவே பாபா படத்தில் கேட்ட இசை தான். ஆனாலும் இதில் வரிகளால் இன்னும் மெருகேறுகிறது. பிரமாதமான கற்பனை. பொதுவாக சணடை பிடித்துக்கொண்டு தான் காதல் ஆரம்பிக்கிறது. இதற்கு இருபாலாரினதும் எச்சரிக்கையுணர்வும் மற்றவரின் எண்ணங்களை உளவறிய நினைப்பதுமே காரணம். இது ஆதாம் ஏவாளிலிருந்தான தொடரும் இயற்கை. இப்பாடலிலும் இது விதிவிலக்கல்ல.
''நான் கற்ற அறிவியலில்
உன்னைப்போல் அதிசயமில்லை
திக்கற்று நிற்குது கண்ணே
விஞ்ஞானம் தான்..''
- என்று கன்னாபின்னாவென்று அநியாயத்திற்கு வியந்து..
''உன்பேரை சொல்லி சொல்லி
உமிழ்நீரும் தமிழ் நீர் ஆச்சு..''
- என்று சொல்வதும்.. அதற்கு..
''பிறகென்ன என்னைப்பற்றி
கவிதை பாடு...''
- என்று ஆப்பு வைப்பதும்..
''கவிதைக்குள் சிக்காதம்மா..
கண்ணே உன் செளந்தரியம்தான்..''
என்று சமரசம் செய்வதும்.. சந்தேகமேயில்லை.. இது காதல் தாங்க..!
புத்திசாலிகள் இருவர் காதலிப்பது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். பாடல் ஆசிரியர் வாலி கூட மில்லிமீற்றர் மில்லிமீற்றராய் லவ்பண்ணித்தான் எழுதியிருப்பார் போல.. அவ்வளவு சிலாகிப்பான வரிகள் பாடலில். நெசமாலுமே ஒக்காந்து யோசிக்காம இப்டி எல்லாம் எளுத முடியாதுங்க..!!! :)

படம் : தேசம்
பாடியவர்கள் : அஸ்லாம் மற்றும் சாதனா சர்க்கம்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : வாலி




மீண்டும்
நன்றிகளுடன்
ஆ.கோகுலன்.

20 comments:

MyFriend said...

என்னது? கடைசியா? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

MyFriend said...

//01. பூங்கதவே தாழ் திறவாய் //

நல்ல பாட்டு.

//02. ஓ சாத்தி ரே //

இன்னும் கேட்கவில்லை. கேட்டுட்டு சொல்லூறேன். :-)

// 03. நிலாவிலே...நிலாவிலே //
நல்ல பாட்டுதான். இதே படத்துல சுஜாதா, ஸ்ரீநிவாஸ் பாடிய "ஆஹா எத்தனை அழகு" தூள். ::-)

//04. "தீண்டாய் மெய் தீண்டாய்" //

இது கொஞ்சம் வித்தியாசமான பாடல் ஆச்சே. :-)

// 05. கேட்டேனா ///

கேட்டேன். நல்ல பாடல். :-)

ஆ.கோகுலன் said...

வணக்கம் கானா பிரபா..!

எனது தெரிவுகளை சிறப்பாகத்தொகுத்திருக்கிறீர்கள் மிகவும் நன்றி.

பதிவுகளில் உங்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பும் ஈடுபாடும் வியக்கவைக்கிறது.

புதிய தொடர்களுடன் றேடியோஸ்பதி வெற்றிகரமாகத்தொடர எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

M.Rishan Shareef said...

நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள் கோகுலன்.

1.பூங்கதவே தாழ்திறவாய்..

மிகப்பிடித்த பாட்டு.ஏனென்று தெரியவில்லை.குறிப்பாக ஒரு காரணம் சொல்லமுடியாமல் முழுதாகப் பிடித்திருக்கிறது.

2.ஓ சாத்தி ரே...

இன்றுதான் முதன்முதல் கேட்கிறேன்.
நன்றாக இருக்கிறது.

3.நிலாவிலே நிலாவிலே...

அழகான காதல் பாடல்.
ஆனால் பாடியது சுஜாதா அல்ல.சாதனா சர்கம்.

4.தீண்டாய்...

படம் வெளிவந்த காலங்களில் மிகப்பிரபல்யம் பெற்ற பாடல்.மிக அழகான பாடல்.எஸ்.பி.பியும்,சித்ராவும் மிக நன்றாகப் பாடியிருக்கிறார்கள்.

5.கேட்டேனா...

இன்றுதான் கேட்கிறேன்.
நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் கோகுலன் அழகான தெரிவுகள்.உங்கள் புகைப்படம் காணக்கிடைத்ததில் மகிழ்ச்சி.அசத்தலாக இருக்கிறீர்கள். :)

இவ்வளவு காலமும் பொறுமையாக எல்லோருடைய தெரிவிற்கேற்ற மாதிரி பாடல்களைத் தேடித்தந்தமைக்கும் ஒவ்வொரு வலைப்பதிவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியதற்கும் நன்றி நண்பர் கானாபிரபா :)

ஆயில்யன் said...

தேசம் பாடல்கள் கேட்டதுண்டு

இந்த பாட்டும் கொஞ்சம் பாபா சாயல்தானே:)) (இதே படத்து தீம் மியுசிக் கூட அசத்தலாக இருக்கும்!)


தீண்டாய் சூப்பரு பாட்டு :))

ஆ.கோகுலன் said...

விரிவான கருத்துக்களுக்கு நன்றி மை ஃபிரணட், ரிஷான் ஷெரீப் மற்றும் ஆயில்யன்.

//மை ஃபிரண்ட் ::. said...
என்னது? கடைசியா? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?//

ரென்சனாக வேண்டாம். புதியதொடர் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறார். :)

//எம்.ரிஷான் ஷெரீப் said...
அழகான காதல் பாடல்.
ஆனால் பாடியது சுஜாதா அல்ல.சாதனா சர்கம்.//

raaga.com இல் சுஜாதா பட்டாச்சாரியார் என்றே இருக்கிறது..!. விரிவான கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ரிஷான்.

//ஆயில்யன் said...
(இதே படத்து தீம் மியுசிக் கூட அசத்தலாக இருக்கும்!)

தீண்டாய் சூப்பரு பாட்டு :))//

ஓமோம் அசத்தல்தான்.. :) நன்றி.

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
என்னது? கடைசியா? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?
\\

ரீப்பிட்டே...

@ கோகுலன்

சூப்பர் தொகுப்பு ;))

விரைவில் மீண்டும் ஒருமுறை கேட்டுவிட்டு வருகிறேன் ;)

நன்றி தல & கோகுலன்

Sanjai Gandhi said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

என்னது? கடைசியா? ஏன்? ஏன்? ஏன்? ஏன்//
அதானே.. ஏன் கானா இந்த முடிவு? ஒத்துக்கொள்ள முடியாது... இன்னும் தொடரட்டும்... நல்ல முயற்சிகள் இப்படி பாதியில் முடியக் கூடாது நண்பா... நிறுத்திட்டிங்கனா அடி இடி மாதிரி விழும். ஜாக்கிரதை. :)

தமிழன்-கறுப்பி... said...

இது கடைசியெண்டு சொன்னா சரிவராது நாங்களும் தருவம்தானே விருப்பப்பாடல் எவ்வளவு பாட்டு இருக்கு எங்களுக்கும் விருப்பமா...

தமிழன்-கறுப்பி... said...

கோகுலன் நல்ல பாடல் தெரிவுகள்...

தமிழன்-கறுப்பி... said...

காமம் என்பது அற்புதமானதொரு உணர்வு அதை முறைப்படி அணுகினால்...
அந்த வகையில் பாடல் சூப்பரு...

தமிழன்-கறுப்பி... said...

கேட்டேனா பாடலை கேட்கும் பொழுதே அதன் சுவாரஸ்யம் தெரியும்...

நெடு நாட்களுக்கு பிறகு கேட்டிருக்கிறேன் நன்றி அண்ணன் மாருக்கு:)

தமிழன்-கறுப்பி... said...

கோகுலனின் பாடல்களுக்கான அறிமுகங்களும் நன்றாகவிருக்கிறது...
தொகுத்தளித்த அண்ணனுக்கு நன்றிகள்..

தமிழன்-கறுப்பி... said...

இன்னும் கொஞ்ச நாள் தொடர்ந்து செய்யுங்க அண்ணன் இன்னமும் கசக்கவில்லை ஒருவருக்கும்...

நன்றி கோகுலனுக்கும் உங்களுக்கும்...

Anonymous said...

//ஓ சாத்தி ரே...

இன்றுதான் முதன்முதல் கேட்கிறேன்.
நன்றாக இருக்கிறது.//

அதே அதே...நல்ல பாடல். நன்றி

கனாஸ் தொடருங்கள்..:)

ஷைலஜா said...

கோகுலனின் தேர்வில் பாடல்கள் அருமை!


என்னாச்சு கானாப்ரபா ஏன் கடைசி? எவ்வளோ சிறபபாய் செய்யறீங்க தொடருங்கோ இல்லேன்னா மைபா பார்சல் வரும்! ஆமா!

ஆ.கோகுலன் said...

கோபிநாத், சஞ்சய், தமிழன், தூயா மற்றும் ஷைலஜா உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.

சஞ்சய்.. வன்முறையில் நம்பிக்கை வைக்கவேண்டாம். :)))

தமிழனின் விஸ்தாரமான பின்னூட்டங்களுக்கு அண்ணன்மார் சார்பில் மீண்டும் ஒரு விஸ்தாரமான நன்றி..!! :)))

கானா பிரபா said...

உடான்ஸ்பிறப்புக்களே அடங்குங்கள்
வன்முறை வேண்டாமப்பா, இந்தத் தொடரை நீட்டித்துவிட்டேன். இதுவரை ஆக்கம் அனுப்பாதோர் அனுப்பி வையுங்கள்.

MyFriend said...

//கானா பிரபா said...

உடான்ஸ்பிறப்புக்களே அடங்குங்கள்
வன்முறை வேண்டாமப்பா, இந்தத் தொடரை நீட்டித்துவிட்டேன். இதுவரை ஆக்கம் அனுப்பாதோர் அனுப்பி வையுங்கள்.//

இது.. இது.. இதைத்தான் எதிர்ப்ப்பார்த்தேன்..

அப்போ நாங்க அடுத்த 5 பாடல்கள் அனுப்பலாமா? ;-)

pudugaithendral said...

உடான்ஸ்பிறப்புக்களே அடங்குங்கள்
வன்முறை வேண்டாமப்பா, இந்தத் தொடரை நீட்டித்துவிட்டேன். இதுவரை ஆக்கம் அனுப்பாதோர் அனுப்பி வையுங்கள்.//

ஒன்ஸ் மோர்....

மறுபடியும் ஆக்கங்களை அனுப்பினா சேத்துக்குவீங்களா?

:)))))))))))