வழக்கம் போல் உங்கள் தெரிவுப் பாடல்களோடு இன்னொரு இசைவிருந்தாக மலர்கின்றது நீங்கள் கேட்டவை 22.
இன்றைய பாடற் தொகுப்பில் இடம்பெறும் பாடல்களைப் பார்ப்போம்.
முதலில் வி.எஸ்.கே விரும்பிக் கேட்டிருக்கும் பாடலை பி.சுசீலா மற்றும் உமா ரமணன் பாட, இளையராஜா இசையில் "அமுதே தமிழே எனதுயிரே" என்ற பாடல் "கோயில் புறா" திரைக்காக ஒலிக்கின்றது.
அடுத்ததாக சந்தன முல்லை, "பயணங்கள் முடிவதில்லை" திரையில் இருந்து "சாலையோரம் சோலை" என்ற பாடலை இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடக் கேட்கின்றார்.
தொடர்ந்து சார்ஜாவில் இருந்து Backi கேட்டிருக்கும் பாடல் "கிழக்குக் கரை" திரையில் இருந்து சித்ரா பாடும் "சிலு சிலுவெனக் காத்து" தேவாவின் இசையில் மலர்கின்றது.
நிறைவாக ஐயப்பன் கிருஷ்ணன் கேட்டிருக்கும் பாடல் "மணிச்சித்ர தாளு" என்ற மலையாளத் திரையில் இருந்து "ஒருமுறை வந்து பார்ப்பாயா" என்ற பாடலை சுஜாதா பாட எம்.ஜி ராதாகிருஷ்ணன் இசையமைத்திருக்கின்றார்.
இப்பாடலின் வீடியோ வடிவைக் காண உடனே நாடுங்கள் வீடியோஸ்பதி ;))
Powered by eSnips.com |
19 comments:
ரொம்பவும் அருமையான பாட்டுகள்.
1. கோயில் புறா. ஒரு இசைச்சித்திரம். ஆனால் படம் ஓடவில்லை. ஆனால் பாடல்கள் ஒவ்வொன்றும் தேன். தேன். இசையரசியும் உமாரமணனும் "ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்" என்று பாடுகையில் உண்மையிலேயே நமது ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும். இதே படத்தில் வேதம் நீ என்ற பாடலும் மிக இனிமையானது. போன வாரந்தான் இந்தப் படத்தை என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒரிஜினில் விசிடியில் பார்த்தார்கள்.
2. பயணங்கள் முடிவதில்லை. மிகமிகப் பெரிய வெற்றி பெற்ற படம். புதிதாக நான் எதுவும் சொல்லித்தான் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று இல்லை. அவ்வளவு பிரபலம். சாலையோரம் பாடல் மிக அருமையானது. இளமையானது. இதே படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு பாடல் "தோகை இளமயில் ஆடி வருகுது"
3. கிழக்குக்கரை...எங்கள் மாவட்டத்தில் தூத்துக்குடிக்குப் பக்கத்தில் உள்ள ஊரில் எடுத்தது. சட்டென்று பெயர் நினைவிற்கு வர மாட்டேன் என்கிறது. திருச்செந்தூருக்கு ரெண்டு ஸ்டாப் முன்னாடி...ஆஆஆ...எப்படி மறந்தேன்.
4. மணிசித்ரதாழு. மிக அருமையான படம். படத்தைப் பார்த்தவர்களுக்கு...அது சந்திரமுகியை விடக் காட்டிய உளப்பூர்வ பிரம்மாண்டம் புரியும். ஷோபனா நடிப்பு மிகச் சிறப்பு. தேசிய விருது கிடைத்ததே. இந்தப் பாடலை எந்த ராகத்தில் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் இசையமைத்தாரோ..அந்த ராகத்தில் பாடினால் நம்மிடமுள்ள ஒன்று காணாமல் போகுமாம். இதை எம்.ஜி.ராதாகிருஷ்ணன் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னதாக மலையாள நண்பன் கூறினான். நமக்குத்தான் ராகமும் தாளமும் தெரியாதே. என்ன ராகமாம் அது?
பாடலுக்கு நன்றி :-)!!
எனது அடுத்த விருப்பமாக "பனி விழும் மலர் வனம்..."
வாங்க ராகவன்
1. கோயில் புறா படம் நீங்கள் குறிப்பிட்டது போல் தோல்வி, ஆனால் ராஜா நன்றாக உழைத்திருக்கின்றார். வி.எஸ்.கேயின் அடுத்த தெரிவான வேதம் நீ பாட்டும் வர இருக்கின்றது.
2. பயணங்கள் முடிவதில்லை, ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் ஒருவருஷம் ஓடிய படமாச்சே. இருபது ஆண்டுகள் கடந்தும் இன்னும் புத்தெழில் தரும் பாடல்கள் அவை.
3. கிழக்குக் கரை, பி.வாசுவின் சின்னத்தம்பி கூட்டணியில் ராஜாவை மட்டும் விலக்கிவைத்து எடுத்த படம், சின்னத்தம்பிக்கு திருஷ்டி கழிப்பாக ஆயிற்று, என்ன தான் தேவா சொந்தமாக டியூன் போட்டும் என்ன பயன்? ;))
4. ஒரு முறை வந்து பார்ப்பாயா பாட்டு படம் பார்த்தபோதே பச்சக்கென்று மனசில் ஒட்டிக்கொண்டது. ஷோபனாவின் நடிப்புக்கு முன் ஜோதிகா வெறும் "கா" தான்.
எனக்கும் ராகங்களுக்கும் எட்டாப் பொருத்தம், யாராவது சங்கேத மேதைகள் ரேடியோஸ்பதி பக்கம் வந்தால் இந்தப் பாட்டின் ராகம் என்ன என்று எங்களுக்கும் சொல்லுங்களேன்.
//சந்தனமுல்லை said...
பாடலுக்கு நன்றி :-)!!
எனது அடுத்த விருப்பமாக "பனி விழும் மலர் வனம்..."//
சந்தனமுல்லை
உங்க பாட்டு கட்டாயம் வரும்.
தல அட்டகாசமான பாடல்கள்...
அமுதே தமிழே எனதுயிரே....ஆஹா கேட்டுக்கிட்டே இருக்காலம் போல இருக்கு... ;))
வாங்க தல
பாட்டுக் கேட்டு உங்கள் கருத்தை அறியத் தந்தமைக்கு என் நன்றிகள்
அமுதே தமிழே சூப்பர்.
சொல்லத்தான் நினைக்கிறேன் எம்.எஸ்.வி பாடிய பாடல் இருக்கா?
வாங்க சர்வேசரே
சொல்லத்தான் நினைகிறேன் பாட்டு ஏற்கனவே றேடியோஸ்பதியின் வந்திருச்சு, இதோ இணைப்பு
http://radiospathy.blogspot.com/2007/05/5.html
waha..uv !!! praba.......
u know after the sevan years i heard this song really thanks and one more thanks for ur earlier dedication,
have a good day
Backiyaraj
கா.பி,
"அமுதே தமிழே" எனும் பாடல் மிகவும் அருமை. இப்பதான் முதன்முறையாகக் கேட்டேன். இதுவரை அப்பாடலைத் திரும்பத் திரும்ப ஒரு 25 முறைக்கு மேலை கேட்டிருப்பேன். மிக்க நன்றி.
//Backiyaraj (sharjha) said...
waha..uv !!! praba.......
u know after the sevan years i heard this song really thanks and one more thanks for ur earlier dedication,//
வாங்க பாக்யராஜ்
நீண்ட நாளைக்குப் பின் இந்தப் பாடலைக் கேட்க நான் உதவி செய்தேன் என்று நினைக்கையில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். தொடர்ந்தும் ஏதாவது விருப்பப் பாடல் இருந்தால் அறியத் தாருங்கள்.
//வெற்றி said...
கா.பி,
"அமுதே தமிழே" எனும் பாடல் மிகவும் அருமை. இப்பதான் முதன்முறையாகக் கேட்டேன். இதுவரை அப்பாடலைத் திரும்பத் திரும்ப ஒரு 25 முறைக்கு மேலை கேட்டிருப்பேன். மிக்க நன்றி.//
ஆகா அருமை, தொடர்ந்து கேளுங்கோ, பிளேயரை உடைச்சுப் போடாதேங்கோ ;)
ஜூலி கணபதியும் சுந்தர புருஷனும் என்ன ஆச்சுங்க அண்ணாத்தே??
அதுவரைக்கும்ம் உங்களுக்கு வெளியே இருந்து தான் ஆதரவு தரப்போறேன் ;-)
அண்ணாத்தே
ஜீலி கணபதி சீக்கிரமே வரும், சுந்தரபுருஷனை எங்கோ தவற விட்டு விட்டேன், தேடுகிறேன்
பாலைவனச் சோலையில் வரும் 'பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி' பாடல் கிடைக்குமா?
காலில் உள்ளது புதுசு என்பாள் அந்தப்பாட்டு தானே பாபா ;) நிச்சயம் வரும்.
தேவாவின் இசையில் வந்த "ஓ சொர்ணமுகி வருவேன் சொன்னபடி" என்ற பாடல் எந்த காலப்பகுதியில் எந்த திரைப்படத்தில் வந்தது என கூறமுடியுமா?
வணக்கம் கோசலன்
கருப்பு வெள்ளை படத்தில் தான் ஓ சொர்ணமுகி பாட்டு வந்தது. 1993 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் ரகுமான், சுகன்யா நடித்தார்கள். அருமையான பாட்டு அது. காதல் துளிர்விட்ட காலங்களில் வந்தது என்பதால் மறக்கமுடியவில்லை. மண்ணெண்ணையில் ஜெனறேட்டரிற்கு விட்டு பார்த்தது. பாட்டு நீண்ட நாளைக்கு பின் சீடியாக போன 2 மாதம் முன் கிடைத்தது.
"தங்கப்புதையல்" என்று ஒரு பகுதி றேடியோஸ்பதியில் விரைவில் வரவிருக்கின்ரது. அதில் இப்பாடலும் கட்டாயம் வரும்.
மிக்க நன்றி கானாப்பிரபா உங்களின் உதவியால் அந்தப்பாடலை இணையத்தளமொன்றில் தேடிக் கண்டுபிடித்து ரசித்துக்கொண்டு இருக்கின்றேன்.
Post a Comment