Pages

Sunday, October 14, 2007

பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு

முந்திய பதிவிலே கீழ்க்கண்ட விஷயத்தைக் குறிப்பிட்டு ஒரு பாடல் போட்டி வைத்திருந்தேன்.

இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.

குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.
இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.

சரியான விடை: கீதாஞ்சலி என்று தெலுங்கிலும் இதயத்தைத் திருடாதே என்று தமிழிலும் வந்த படத்தில் "ஜல்லந்த" என்று தெலுங்கு பாடி தமிழில் "ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டு தான்" என்றும் வந்த பாட்டு.

சரியான விடையளித்த நண்பர்கள்: சி.வி.ஆர், அநாமோதய அன்பர், முத்துவேல், சர்வேசன், பெத்தராயுடு, சின்ன அம்மணி, ஸ்ரூசல்
உங்களுக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்கள் ;-))

தோல்வி பெற்றவர்களே துவளாதீர்கள், உங்களுக்கு இன்னொரு வெற்றி காத்திருக்கு.
இதில் புதுமை என்னவென்றால் சிலர் ஓஹோ மேகம் வந்ததோ (மெளனராகம்), வான் மேகம் பூப்பூவாய் தூவும் (புன்னகை மன்னன்) என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்தப் பாடல்களும் ஒரே தீமில் மழைப்பாட்டுக்கள் தான், அதுவும் ராஜாவின் மெட்டும் இந்த மூன்று பாடல்களிலும் அண்மித்துப் போகின்றது. ஒரு நண்பர் "ரோஜா பூ தோடி வந்தது" (அக்னி நட்சத்திரம்) என்று குறிப்பிட்டார். ஆக மேலதிகமாக இரண்டு மணிரத்னம் படங்களும் விடையாக வந்திருக்கின்றன.

இதோ புதிருக்கான விடையாக மலரும் பாடல்களைக் கீழே தருகின்றேன்.

பாடலின்ஒளிப்படம் காண




4 comments:

CVR said...

என்ன இனிமையான பாடல்!!
பதிவிட்டதற்கு நன்றி அண்ணா!! :-)

கோபிநாத் said...

தல..

முழுப்பாடலையும் போட்டு கலக்கிட்டிங்க...;))

\\தோல்வி பெற்றவர்களே துவளாதீர்கள், உங்களுக்கு இன்னொரு வெற்றி காத்திருக்கு.\\

நான் ரெடி ;))

கானா பிரபா said...

//CVR said...
என்ன இனிமையான பாடல்!!
பதிவிட்டதற்கு நன்றி அண்ணா!! :-)//

வாங்க சீவிஆர்

என்னங்க இது ரெண்டு பாட்டு போட்டதுக்கு (அறிஞர்) அண்ணா ரேஞ்சுக்கு கொண்டு
போயிட்டீங்களே ;-)

கானா பிரபா said...

//கோபிநாத் said...
\\தோல்வி பெற்றவர்களே துவளாதீர்கள், உங்களுக்கு இன்னொரு வெற்றி காத்திருக்கு.\\

நான் ரெடி ;))//

அடுத்த முறை தோத்தீங்கன்னா உங்க பதவிக்கே ஆபத்து ;-)