இன்றைய நீங்கள் கேட்டவை பதிவும் பல்வேறு காலகட்டத்துப் பாடல்களோடு மலர்கின்றது. சரி, உடனேயே இன்றைய பாடல் பகுதிக்குப் போகலாம்.முதலில் வெயிலான் விரும்பிக் கேட்ட "பெண்ணல்ல நீ ஒரு பொம்மை" என்ற பாடல் வி.குமாரின் இசையில் "சொந்தமடி நீ எனக்கு" திரைப்படத்திற்காக ஜெயச்சந்திரன், சுசீலா பாடும் பாடலாக மலர்கின்றது.
அடுத்ததாக மாயாவின் விருப்பமாக "நெஞ்சில் ஓர் ஆலயம்" திரையில் இருந்து P.B.ஸ்ரீநிவாஸ் குரலில் "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்" என்ற பாடல் வருகின்றது.
பாடல் இசை எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்கள்
கோபிநாத் விருப்பமாக "புதிய பறவை" திரையில் இருந்து "பார்த்த ஞாபகம் இல்லையோ" பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடுகின்றார்.
நட்பு திரையில் இருந்து நக்கீரன், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் இளையராஜா இசையில் வரும் "அதிகாலை சுபவேளை" பாடலைக் கேட்கலாம்.
நிறைவாக சர்வேசனின் விருப்பமாக "ராஜா சின்ன ராஜா" என்ற இனிய பாடலை பூந்தளிர் படத்திற்காக பி.சுசீலா, இளையராஜா இசையில் பாடுகின்றார்.
| Powered by eSnips.com |
