இந்திய இசை உலகில் ட்ரம்ஸ் வாத்தியக் கலையில் சிவமணி
ஒரு தனி அத்தியாயம்.
தன்னுடைய 13 வது வயதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களால் இசையுலகுக்குத் தத்தெடுக்கப்பட்டவர்.
உங்கள் மகனை நான் இசைச் சுற்றுலாவுக்கு
அழைத்துப் போகப் போகிறேன்
என்று சிவமணியின் தந்தையிடம் உரிமையோடு கேட்டு
அனுமதி பெற்றுத் தன் பக்கம் வைத்திருந்தவர் தான் ஒன்றல்ல இரண்டல்ல 35 வருடங்கள் சிவமணியைத் தன் பக்கமே வைத்திருந்தார் எஸ்பிபி.
சிவமணி தன் இசை உலகில் God Father ஆகச் சொல்லிக் கொள்வது எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைத் தான்.
“உங்களோடெல்லாம் இணைஞ்சு வேலை பண்ணுனது
எனக்கு ரொம்ப சந்தோஷம்
கடவுள் எப்போதும் நம்மிடம் இருப்பார்”
என்று சிவமணிக்கு எஸ்பிபி அனுப்பிய குறுஞ்செய்தி அவரின் கடைசி நாட்களில் ஆத்மார்த்தமாக அனுப்பியதில் ஒன்றாகி விட்டது.
“படமத்தி சந்தியா ராகம்" (Padamati Sandhya Ragam ) என்ற தெலுங்குப் படம் பிரபல தெலுங்கு இயக்குநர் ஜண்டியாலாவின் கை வண்ணத்தில் 1987 இல் வெளிவந்தது.
அமெரிக்க வாலிபனை, இந்திய ஆசாரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் திருமணம் முடிப்பதால் எழும் கலாசாரச் சிக்கலைப் பேசிய படம்.
இதில் நாயகியாக விஜயசாந்தியும், அவர் காதலிக்கும் அமெரிக்க வாலிபனாக ஹாலிவூட் நடிகர் Tom Jane நடித்தார். விஜயசாந்தியைக் காதலிக்கும் ஒரு கறுப்பின வாலிபராக நடித்தது வேறு யாருமல்ல ட்ரம்ஸ் சிவமணி தான். இந்தப் படத்தில் சிவமணி ஏற்றிருந்த இசைக்கலைஞர் பாத்திரமும் அத்தோடு ஒத்துப்போனது.
படத்துக்கு இசை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். அதாவது எஸ்பிபி இசையமைத்த 45 படங்களில் இதுவுமொன்று. கானா பிரபா
இந்தப் படத்தில் சிவமணியின் பாத்திரமும் முக்கியமானது, எனவே அவருக்கு ஒரு ஆங்கிலப் பாடலையும் வைத்தார்கள்.
அதுதான்
Life is Shabby
https://www.youtube.com/watch?v=Xba3RvcYD2U
தன்னுடைய இசை வளர்ப்புக்கு இப்படியொரு வாய்ப்பைத் தானாக அமைத்ததும் எஸ்பிபி சொன்னது போல,
“கடவுள் எப்போதும் நம்மோடு”
என்பதாக்கும்.
Padamati Sandhya Ragam வெளிவந்து இந்த வாரத்தோடு 35 ஆண்டுகளைத் தொடுகின்றது. படம் ஏப்ரல் 3, 1987 இல் வெளியானது.
இந்த பதிவை நான் எழுத வேண்டும் என்று மாதக் கணக்கில் காத்திருந்தது எதிர்பாராமல் அமைந்திருக்கிறது.
கானா பிரபா
06.04.2023
0 comments:
Post a Comment