Pages

Saturday, April 1, 2023

ஷெனாய் மேஸ்ட்ரோ பண்டிட் பாலேஷ்


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஸகரி ம கரிஸநி

ஸநிப ம பநி ஸகரி

https://www.youtube.com/watch?v=lrdErxdLQek

“எந்தன் நெஞ்சில் நீங்காத 

 தென்றல் நீதானா” பாடலின் 3.03 வது நிமிடத் துளியில் மிதக்கும் 

ஆலாபனையைக் கேட்டு விட்டு, அப்படியே ஓடிப் போய்

https://www.youtube.com/watch?v=4NIgHgQmpus

2.50 வது நிமிடத்தில் துள்ளிப் பாயும் “மகாநதி" ஷெனாய் என்ற இசை என்ற இன்ப ஊற்று “ஶ்ரீரங்க ரங்க நாதன்" ஐக் கண்ட புளகாங்கிதத்தில் கொட்டுவதை அப்படியே அள்ளிப் பருகவும்.

முன் சொன்ன அந்த ஆலாபனை குரலும், பின்னால் வந்த அந்த இசைப் பொழியலும் ஒருவரே, அவரே பண்டிட் பாலேஷ் அவர்கள்.

இசைஞானி இளையராஜாவின் இரண்டாவது காலகட்டத்து வாத்திய விற்பன்னர் கூட்டில் எண்பதுகளின் இறுதியில் தொடங்கித் தொண்ணூறுகளிள் ஷெனாய் மழை பொழிந்த பாடல்களின் வாசிப்பாளராகவும், பாடல்களின் இடையே ஒலித்த ஆலாபனைக் குரலாகவும் விளங்கியவர் பாலேஷ் அவர்கள். அதுமட்டுமல்ல பின்னணி இசைத் துணுக்குகளின் அடுக்குகளிலும் அவரின் அடையாளத்தை இனிமேல் தேடிக் கேட்டுக் கொள்ளுங்கள்.

ரமேஷ் நாயுடு, ஷியாம், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் - கணேஷ், இளையராஜா, கங்கை அமரன், ஏ.ஆ.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், எம்.எம்.கீரவாணி என்று இந்தியாவின் ஆகக் கூடிய இசையமைப்பாளர்களிடம் வாசித்த பெருமையும் பாலேஷ் அவர்களைச் சாரும்.


தன் பிள்ளை தகவல் தொழில் நுட்பத் துறையில் கற்றுத் தேர்ந்தாலும், தன்னுடைய தாய்த் துறையான ஷெனாய் ஐ கிருஷ்ணா பாலேஷ் ஐ இசை மேதை உஸ்தான் பிஸ்மில்லா கான் அவர்களிடம் கற்க வைத்து அந்தத் துறையிலேயே கலை படைக்கவும், இசைக் கற்கை கொடுக்கவும் வழி காட்டியிருக்கிறார்.

இந்த இசைக் கூட்டை நீங்களும் பருக

https://www.youtube.com/watch?v=y-5EdjZrX1k

தென்னிந்திய மொழிகளில் எஸ்பிபியும், இளையராஜாவும் கோலோச்சுவது போல, இசைத்துறையில் இன்றும் பெருமதிப்புடன் பார்க்கப்படும் ஒரு ஆளுமை பாலேஷ் அவர்கள்.

அதனால் தான் ராவணனில் ஏ.ஆர்.ரஹ்மானும், பாகுபலியில் கீரவாணியும் என்று விடாமல் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

பத்மஶ்ரீ விருது உட்பட ஆந்திரா, கர்னாடகம் எல்லாம் அவருக்கு விருதுகளாகக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

நாகசுரம் ஒரு தேவ வாத்தியம், அது கொடுக்கும் இசையின் கனதி மிக அதிகம் என்று வாயாப் போற்றியவர் இசைஞானி இளையராஜா. அதனால் தான் நாகசுர வாத்தியப் பாவனைக்கு மாற்றீடாக இந்த ஷெனாய் ஐ அவர் அதிகம் உள்வாங்கி, திரைப்படத்தின் மங்கலக் காட்சிகளிலும் பயனபடுத்தியிருக்கிறார்.



தொண்ணூறுகளில் நூற்றுக்கணக்காக இளையராஜாவின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இசைத் திறமை கொண்டோர் பலர் இருக்கலாம், ஆனால் அந்த Tone கைவரப்பெற்றவர்களே பாலேஷ் போல இசையமைப்பாளரின் அபிமானம் பெற்றவராய் இருக்க முடியும்.

பாலேஷ் ஐ மனதோடு மனோ, ஆதன் பேட்டி தவிர சுகாவும் விரிவாக சொல்வனம் இதழில் பேட்டியாகப் பகிர்ந்துள்ளார்

அதைத் தவறாமல் படியுங்கள்.

https://solvanam.com/2011/03/24/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE/


இன்னொரு வேடிக்கையான நிகழ்வு

“மதுரை மரிக்கொழுந்து வாசம்” பாடலில் https://www.youtube.com/watch?v=EJmyGS5RW8Q

1.29 வது நிமிடத்தில் ஒலிக்கும் ஷெனாய் வாத்தியக் கீற்றை பாலேஷ் இற்கு முன்னவர் இளையராஜாவின் வாத்தியக் குழுக் கலைஞர் சுபான் வாசித்ததை, பின்னர் தெலுங்கில் 

Jagadeka Veerudu Atiloka Sundari படத்தில் “யமஹோ நீ”

https://www.youtube.com/watch?v=1ssBzlc4fWE

பாடலில் பாலேஷ் ஐ வைத்து இன்னொரு வித்தியாசமான இசைக் கோவையாகக் கொடுத்திருப்பார் ராஜா.

“ஆலப் போல் வேலப் போல்”

https://www.youtube.com/watch?v=1Bmpg3s46L8

பாடலில் “தும்தும் தத் தும் தும்தும்” கூட்டுக் குரல்களைத் தொடர்ந்து பாலேஷ் இன் ஷெனாய் கல்யாண வீட்டுப் பன்னீர் தெளித்தல் போல வஞ்சனை இல்லாமல் வாரியிறைக்கும்.

கல்யாணக் காட்சியையும்,  இறுக்கமான மன நிலையையும் கலந்த சூழலில் கள்ளப்பார்ட் நடராஜன் (ரேவதியின் தந்தை) ஐயா என்று நெகிழ்வோடு கைகூப்பப் பிறக்கும்

https://www.youtube.com/watch?v=iIYSpTO3Ev8

அந்த இசையைக் கேட்டாலேயே மெய் சிலிர்த்துப் போய் கண்கள் குளமாகும். அப்பேர்ப்பட்ட இசையின் ஆக்க கர்த்தா 

பாலேஷ் அவர்கள் பல்லாண்டு காலம் இசையோடு வாழ

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

0 comments: