Pages

Sunday, September 25, 2022

சென்றும் சேராத நம் SPB ❤️



ஆயிரமாயிரம் கூட்டத்தின் நடுவே ஆளுமைப்பட்ட ஒருவர் அந்த அரங்கத்தையேகட்டுக்குள் கொண்டு வரக் கூடிய ஒரு “கம்பீரன்” எஸ்பிபி அவர்களைத் தொலைத்துவிட்டோமோ என்றதொரு ஏக்க மனநிலையோடு கடந்தாயிற்று இரண்டுஆண்டுகள்.


இந்த நிகழ்ச்சியில் எஸ்பிபி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்” 

என்று ஒவ்வோர் இசை நிகழ்விலும் கேட்கும் அங்கலாய்ப்புகள் இன்னும்அடங்கவில்லை.


தன்னுடைய இசைப் பயணத்தின் “வரலாற்றுக் காவலன்” ஆகச் சுவை படச்சொல்லக் கூடியவர் இன்னோர் ஒருவர் உளரோ?


அவர் இருந்திருந்தால் குறைந்தது இன்னும் பத்தாண்டுகளாவது மேடைகள்தோறும்பாடல் ஒலிப்பதிவுகள் என்றும் இயங்கிக் கொண்டிருந்திருப்பார்.


இவ்வாறானதொரு ஏக்க மன நிலையை முன்னெப்பேதும் நாம் இந்தத் திரையிசைவரலாற்றில் பார்த்ததுண்டா?


இந்தியத் திரையிசையின் பொது அடையாளமாக பிராந்திய மொழிகளிலும்நம்மவர்” என்று உரிமை எடுத்துக் கொண்டாடப்படவர் எங்கள் SBP.


தன் ஒவ்வொரு பாடல்களிலும் அதே வார்த்தை பிரயோகம் வந்த போது அதைஎவ்விதம் வேறுபடுத்திக் காட்ட முடியும் என்று நிகழ்த்திக் காட்டிய “உணர்வூட்டி” அவர்.


ஒரு வெறி பிடித்த மனநிலையோடு பனிப் புகாரைக் கிழித்துக் கொண்டு

மேகம் கொட்டட்டும்

ஆட்டம் உண்டு


https://youtu.be/jkwITwW5EYk


பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

எத்தனை வாத்திய ஆர்ப்பரிப்புகள்போட்டி போடும் கூட்டுக் குரல்கள் 


யா யா யா ஹாஹ்ஹா
எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கை தட்டும்
தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்


தனி ஒருவனாக எப்பேர்ப்பட்ட அசுர சாதகத்தோடு அந்த நீண்ட பாடலின் வழியேஒரு இசை முழக்கம் கொடுத்திருக்கிறார்.


ஒரு மேற்கத்தேயத் துள்ளிசைப் பாடலில் 


மழை வந்ததாலே 

இசை நின்று போகுமா
புயல் வந்ததாலே ம் 

அலை என்ன ஓயுமா


ஒரு சாஸ்திரிய சங்கீதத்துக்குண்டான குறும்புச் சங்கதியைப் போடுவார்பாருங்கள்.

திரையிசையில் கட்டுடைப்பை நிகழ்த்திய ஒரே பாட்டுக்காரன் எங்கள் SPB என்றுஅந்த இடத்தில் எழுந்து நின்று கை தட்டலாம்.


கானங்கள் தீராது 

பாடாமல் போகாது

இந்த
வானம்பாடி ஓயாது………..


கானா பிரபா

25.09.2022

0 comments: