Sunday, February 13, 2011
"இதயம்" இசைத் தொகுப்பு @@@ காதலர் தின ஸ்பெஷல் @@@
கடந்த வருஷங்களின் காதலர் தினச் சிறப்புப்பதிவாகப் போடவிருந்து காத்திருந்து இந்த வருஷத்துக்கு கொடுப்பினையாக "இதயம்" பின்னணி இசைத் தொகுப்போடு சந்திக்கின்றேன். இதயம் படம் அந்தக் காலகட்டத்தின் இளசுகளின் நாடித்துடிப்புப் போல, படத்தில் வந்த இதயமே இதயமே, பூங்கொடி தான் பூத்ததம்மா, பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாடல்கள் ஒற்றைக் காதலில் விழுந்த பையன்களுக்குத் தேவாரம், திருவாசகம். இதைப் பற்றி இன்னொரு கதை இருக்கு அதைச் சாவகாசமாகச் சொல்கிறேன் ;-)
1991 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் காதல் கதைகளில் வெள்ளிவிழாக் கண்ட காவியங்களில் ஒன்றாக அமைந்து விட்டது. முரளியோடு அறிமுக நாயகி ஹீரா, சின்னி ஜெயந்த், ஜனகராஜ், விஜயகுமார் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் இது.
கதிர் அறிமுக இயக்குனராக சத்யஜோதி ஃபிலிம்ஸ் இற்காக இயக்கிய படம் இதயம். எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது இந்தப் படம் தயாரிப்பில் இருந்த வேளை,ஒரு சஞ்சிகையில் கதிர் பேட்டியின் போது இப்படத்தின் காட்சிகளைத் தான் ஓவியமாக வரைந்தே படம் பிடித்ததாக. இதயம் படத்தின் அழகான ஒளிப்பதிவை அளித்தவர் அந்த நாளில் ஆர்.வி.உதயகுமார் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த திரைப்படக்கல்லூரி மாணவர் அப்துல் ரகுமான். ஹீரா அறிமுகமாக வந்த படம், இப்படத்தின் வெற்றியில் ஒரு நல்ல புதுமுகமாக அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒரு பங்கு எனலாம். ஆனா; முரளி , ஹீரா தொடந்து ஜோடி போட்ட இதே சத்யஜோதி ஃபிலிம்ஸின் "என்றும் அன்புடன்" படம் தோல்வியைக் கண்டதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வெற்றிப்படத்தின் ஜோடியை இன்னொரு கதையம்சத்தோடு பொருத்திப்பார்க்க முடியாத ரசிகர் உலகத்தில் இப்படியான நிகழ்வு இது முதல் தடவை அல்ல. இந்தப் படத்தின் எழுத்தோட்டத்தில் பிரபு(தேவா), ராஜீ(சுந்தரம்) அறிமுகம் என்றும் காணக்கிடைக்கின்றது.
ஒரு வரியில் எழுதிவிடக்கூடிய கதைக்குப் பெரும் பலமாக இருந்தது இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை, சக பாடல்கள். கற்பகம் படத்தில் முழுமையாகப் பெண் குரலில் அமைந்த பாடல்களும் ஒருதலை ராகம் படத்தில் முழுமையாக ஆண்குரல்களில் அமைந்த பாடல்களும் இருந்தது போல இதயம் படத்திலும் முழுமையாக ஆண் குரல்களே பயன்படுத்தப்பட்டிருகின்றன (கோரஸ் விதிவிலக்கு). இதயமே இதயமே என்ற பாடலைப் பிறைசூடன் எழுத, மற்றைய அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பது கவிஞர் வாலி. கூடவே படத்தின் முக்கிய காட்சிகளுக்கு கவிஞர் மு.மேத்தாவின் கவிவரிகள், நாயகன் முரளி குரலில் ஒலிக்கின்றன. தனது அறிமுகப்படத்தை வெள்ளிவிழாப் படமாக்கிய இசைஞானி இளையராஜாவை இயக்குனர் கதிர் கண்டு கொள்ளவே இல்லை. தொடர்ந்த அவரின் படுதோல்வி கண்ட உழவன், காதல் தேசம் (வெற்றி), காதலர் தினம், காதல் வைரஸ் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை.
இதயம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இல்லாவிட்டால் படம் படுதோல்வி கண்டிருக்கும் என்பதை படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புக்கு முன்னதாக இயக்குனர் கதிர் கண்டிப்பாக உணர்ந்திருப்பார். படத்தின் எழுத்தோட்டம் முதல் இறுதிப்புள்ளி வரை இளையராஜாவின் இசையோட்டமே அடி நாதமாய் அமைந்திருக்கின்றது. தொடந்து "இதயம்" படத்தில் நான் பெயர்த்தெடுத்த இருபத்தியொன்று இசைக் குளிகைகளைச் சாப்பிடுங்கள் உங்கள் இதயத்துக்கும் இதமாக இருக்கும் ;-)
படத்தின் முகப்பு இசை இதயக் கண்காணிப்புக் கருவியின் ஓட்டமாக
ரயிலில் பயணிக்கும் நாயகன் தன் பழைய நினைவில் மூழ்கும் வேளை
இதோ என் இதயத்தாள்களைப் புரட்டிப்பார்க்கிறேன்
அந்த வெள்ளைத் தாள்களில் கொள்ளை கொள்ளையாய்க் காதல்"
நாயகன் தன் காதலி முகத்தை முதன்முதலில் வெள்ளக்குவியலில் பிரதிபிம்பமாய்க் காணும் போது
"உனக்கென்ன ஒரு பார்வையை வீசிவிட்டாய்
நானல்லவோ வைக்கோற்போராய்ப் பற்றி எரிகிறேன்"
வகுப்பில் இருக்கையில் முன்னே இருக்கும் அவள் திருமுகம் காணக் கண்ணாடிக்குவளையை அவன் போட்டுடைக்க, மெல்லத் திரும்புகிறாள்
அவளின் நினைப்பை இதயத்தில் இருத்தி அவன் காதலில் திளைத்தவேளை
இந்தப்பாதங்கள் மண் மீது
நடக்கவேண்டியவை இல்லை
மலர்கள் மீது
"மூச்சு நின்றுவிட்டது என்பதற்காக
காற்று இறந்து விடுவதில்லை
அது போல என் காதலும்"
காதலி இன்னொருவனை நேசிக்கின்றாள் என்று தப்பபிப்பிராயம் கற்பிக்கும் அவனின் மன உணர்வில்
அவளின் தந்தை பியோனா வாசிப்பில்
காதலைச் சொல்ல அவன் தருணம் பார்த்துத் தடுமாறும் வேளை
ஒருவழியாக நான்கு வருஷங்களாய் அவன் இதயத்தில் புதைத்திருந்த அவளைப் பற்றி அவள் முன்னே கொட்டும் வேளை
அவனின் காதல் டயறியை அவள் புரட்டுகிறாள்
"ராஜா, நீ உச்சரித்த போது தான் தெரிந்தது
என் பெயரே இத்தனை அழகானது என்று"
அவனின் காதல் டயரியை வாசித்த அவளின் உணர்வைப் புரிந்து கொள்ளத் தடுமாறும் அடுத்த நாள் கல்லூரியில்
பேசா மடந்தையாக அவள் பின்னாலே அவன் துரத்தும் காதலோடு (படத்தின் முக்கியமான இசைவேள்வி இது)
மருத்துவக்கல்லூரி ஆண்டுவிழாவில் இயக்குனர் பாரதிராஜா முன்னிலையில் அவன் காதல் தேவதை அரங்கில் இருக்க, அவனோ மேடை நடிப்பில் வரித்துக்கொண்ட காதல் தேவதைக்குக் கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றான்
தன் காதலிக்கு இன்னொருவனுடன் நிச்சயதார்த்தம் என்று அவன் அறியும் வேளை இதயத்துடிப்பு இடி போல அந்த அதிர்ச்சியே அவன் இதயத்துக்கு வினையாக
அவன் இதயத்தில் கோளாறு என்றுணரா அவளின் இதயத்தில் இப்போது அவன் இடம்பிடிக்க
காதல் அலைவரிசையில் ஒன்றான அவள் அவனைத் தேடியோடும் கணம்
அவன் இதய நெருப்பை
அந்தக் கண்ணீர் அணைத்து விடும் (நிறைவுப்பகுதி இசையாக)
இதயம் படத்தில் இடம்பெற்ற முக்கிய பாடல்கள்
"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா" - கே.ஜே.ஜேசுதாஸ்
"இதயமே இதயமே" - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
"பூங்கொடி தான் பூத்ததம்மா" - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
இதுநாள் வரைக்கும் உமக்கு பாட்டு மேலதான் காதல் இருக்கும்ன்னு நினைச்சேன் ம்ஹும் ராசா உமக்கு காதல் மேலேய கடும் காதல் இருக்குடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)))
லவ்வர்ஸு டே வாழ்த்துகள் :)
இதயத்ல இடி
கண்ல மழை...
ரொம்ப நாளா எல்லாப் பயபுள்ளைகளும் சொல்லிக்கிட்டு திரிந்தது.. இது..
இதயத்தின் இசையை அக்கக்கா பிரிச்சு மேஞ்சுரிக்கீங்க.. நன்றி... ;-)
இதக்கேட்டவொடனே இன்னும் இதயம் வீக் ஆயிடுச்சி நண்பா..! :-)
////////"இதயம்" படத்தில் நான் பெயர்த்தெடுத்த இருபத்தியொன்று இசைக் குளிகைகளைச் சாப்பிடுங்கள் உங்கள் இதயத்துக்கும் இதமாக இருக்கும் ;-)//////
காதலர் தினத்துக்கு இதை விட
அருமையான பதிவை கொடுக்க முடியாது
super தல!!!
கேட்க கேட்க இனிக்குதுடா.. பிரபா...(”சொல்ல சொல்ல இனிக்குதுடா.. குமரா” மாதிரி படிக்கவும்)
காதலர் தின வாழ்த்துக்கள் காதல் இளவரசன் கானா.
இதயம் படம் மட்டுமல்ல பாடல்களும் இதயத்தைத் தொட்டவை. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாடலும் வரிகளும் மறக்கவே முடியாது.
ராஜா என்றைக்குமே ராஜா தான்.
ஆயில்ஸ் எமக்கு இசைஞானியின் இருப்பது பக்தி.
அந்த (இசை வேள்வி ) BGM.. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ..
@ ஆயில்யன்..\\ காதல் மேலயே கடும் காதல்//
..சரியாச்சொன்னீங்க.
கானா நல்ல தொகுப்பு..நன்றி.
தல கலக்கிட்டிங்க...ரசித்தேன் ;)
Super..Ivlo details ah? A complete narration of the maestro's magic...
ஆயில்ஸ்
நீரும் நம்ம செட்டுத் தானே ;)
RVS said...
இதயத்ல இடி
கண்ல மழை...//
வாங்க நண்பா ;) மிக்க நன்றி
சின்னப்பயல்
இன்னொரு வாட்டி கேட்டுப்பாருங்க வீக்கான இதயம் பழையபடி வந்திடும் ;-)
காதலாகிக் கசிந்துருகினோம்! நன்றி பாஸ்!
S Maharajan said...
காதலர் தினத்துக்கு இதை விட
அருமையான பதிவை கொடுக்க முடியாது
super தல!!/
நன்றி தல ;-)
ILA(@)இளா said...
கேட்க கேட்க இனிக்குதுடா.. பிரபா.//
ஆஹா ஆஹா ;-)
வந்தியத்தேவன் said...
காதலர் தின வாழ்த்துக்கள் காதல் இளவரசன் கானா.//
வந்தி, உங்களுக்கும் அதே பட்டத்தை அளிக்கிறேன் வாழ்த்துக்களோடு ;-)
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலாவுக்கு பின்னால் ஒரு கதை இருக்கு பிறகு சொல்றன் ;)
இசைத் தொகுப்பு அருமை.
வாழ்த்துக்கள் அய்யா! ரொம்பதான் லவுஸ் பண்ணுறீங்க... நடத்துங்க நடத்துங்க..
வருகைக்கு நன்றி கிருஷ்குமார்
மிக்க நன்றி முத்துலெட்சுமி
தல கோபி
மிக்க நன்றி
மிக்க நன்றி டகால்டி, கிரி, நண்பர் கோவை2தில்லி, விசரன் அண்ணை
கலக்கல் பிரபு! :)
பின்னிட்டீங்....
பார்த்து பார்த்து உருகின படமாச்சே.
காதலர் தினம்-வாழ்த்துக்கள்.
நண்றிமறந்தால்தான் சினிமாவில் நிற்கலாம் என்பதை புரிந்தவர் கதிர்.இன்று கதிர் எங்கே என்று தெரியாது.நம் ராஜா இன்னும் அய்யன் என தன்வேலையில் போகிறார் இந்தப்படம் என் பள்ளிக்காலத்துடன் இரண்ரக்கலந்தது.நீங்கள் எப்போது பிரான்ஸ் உலாத்த திட்டம் காத்திருக்கிரேன் சந்திக்க
வருகைக்கு நன்றி வெயிலான் பாஸ்
நன்றி கலைக்கோவரே
வாங்கோ நேசன்
நன்றி மறந்தவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை தான் அவருக்கும். பிரான்ஸுக்கு இந்த ஆண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறேன் கண்டிப்பாகச் சந்திக்கும் ஆவலோடு இருக்கிறேன்.
சூப்பர் பிரபா...
Right time
Right choice
Right movie
Right music
Right songs
Right legend for
Valentine's day celebration.
***murali***
Post a Comment