Monday, February 28, 2011
குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷுடன் என் வானொலிப் பேட்டி
நான் வானொலி நிகழ்ச்சி படைக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் "முத்துமணி மாலை" என்னும் நிகழ்ச்சியை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்தேன். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகிர்வாக பல்வேறு ஆளுமைகளை வானொலி நேர்காணல் மூலம் அவர்களின் ஆரம்ப கால அனுபவங்களின் தொகுப்பாகக் கொடுக்க எண்ணியிருந்தேன். அந்த வகையில் வந்த வாய்ப்புத் தான் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுடனான பேட்டி. இந்தப் பேட்டியைச் சாத்தியப்படுத்த உதவியிருந்தவர் எனக்கும் டெல்லி கணேஷுக்கும் பொதுவான நண்பராக ரேகா ராகவன் அவர்கள். எனவே இந்த வேளை அவருக்கும் என் நன்றியைப் பகிர்கின்றேன். நண்பர் ரேகா ராகவன் சொன்னது போல எந்தவிதமான சிரமமும் இல்லாமல் பேட்டி செய்ய மகிழ்வோடு ஒப்புக்கொண்டார் டெல்லி கணேஷ்.
ஒரு நாள் காலை ஏழு மணி வாக்கில் வாக்கிங் போய் விட்டுத் திரும்பிய சூட்டோடு டெல்லி கணேஷின் பேட்டியும் ஆரம்பிக்கின்றது. எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் உடனேயே எதிர்ப்படும் கேள்விகளுக்குத் தன் ஞாபக இடுக்குகளில் இருந்து மழையாய்ப் பொழிந்தார் டெல்லி கணேஷ்.
கே.பாலசந்தரின் "பட்டினப் பிரவேசம்" திரைப்படத்தில் ஆரம்பித்து இந்த ஆண்டோடு 34 ஆண்டுகளைத் தொடும் டெல்லி கணேஷின் திரையுலக வாழ்வைக் குறிக்கும் இந்தப் பேட்டியும் 34 நிமிடங்களை நிறைக்கின்றது. நிறைவாக ரேகா ராகவன் அவர்கள் முன்னர் டெல்லி கணேஷ் ஹியூமர் கிளப்பில் பகிர்ந்த நகைச்சுவையோடு நிறைவு பெறுகின்றது.
பேட்டியைக் கேட்க
Download பண்ணிக் கேட்க
பேட்டியில் அவர் சொன்ன சுவாரஸ்யங்களில் சில
டெல்லியில் இந்திய விமானப்படையில் வேலை பார்த்தபோது தமிழ் நாடகங்களில் நடிக்க வாய்ப்புக் கிட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து தமிழகம் வந்து முழு நேர நாடக நடிகன் ஆனதும், பாலசந்தர் பட்டினப் பிரவேசம் திரைப்படத்தில் அறிமுகமானது.
பசி திரைப்படத்தில் சிறந்த நடிகராக 1980 ஆம் ஆண்டு கிட்டிய போது பரிசு நிகழ்வில் எம்.ஜி.ஆருடன் நிகழ்ந்த சந்திப்பு
சிந்துபைரவி படத்தில் குருமூர்த்தி என்ற மிருதங்க வித்துவான், அபூர்வ சகோதர்கள் படத்தில் வில்லன், அவ்வை சண்முகியில் நகைச்சுவை கலந்த வில்லத்தனப் பார்த்திரங்கள் கிட்டிய அனுபவங்கள்
டெல்லி கணேஷ் பார்வையில் பாலச்சந்தரின் ஆளுமை, தற்காலச் சினிமாவின் போக்கு என்று தொடர்கின்றது டெல்லி கணேஷின் பேட்டி. பேட்டி முடிவில் தன் 34 வருஷ அனுபவங்களைக் கொட்டித் தீர்த்த திருப்தியை அவரின் குரலில் தொனிக்கக் கண்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நடிகர் டெல்லி கணேஷின் பேட்டி அவருடன் நேரில் பேசியதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. அருமை. பகிர்வுக்கு நன்றி.
நல்ல பகிர்வு.
பேட்டியை ஒழுங்குபடுத்தியமைக்கும் கருத்தைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சார்.
தல இப்போது தான் நேரம் கிடைத்தது...அருமையான பேட்டி ;)
நடிகர் டெல்லி கணேஷின் பேட்டிஅருமை. உங்கள்
பணிதோடருட்டும்
நன்றிகள்
அன்புடன்
பிரபா (france)
கோவை2தில்லி said...
நல்ல பகிர்வு.//
நன்றி நண்பரே
தல கோபி, பிரபா
மிக்க நன்றி
Post a Comment