Pages

Wednesday, July 22, 2009

சிறப்பு நேயர் "இராப் (rapp)"

சிறப்பு நேயர் தொடரின் இரண்டாம் சுற்றிலே அடுத்து ஐந்து முத்தான பாடல் தெரிவுகளோடு வந்திருப்பவர் பயமறியா பாவையர் சங்கத்தின் கெளரவ உறுப்பினரும், வருத்தப்படாத வாலிபர் சங்கத்து சிங்கியுமான "இராப் (rapp).

"வெட்டி ஆபீசர்" என்ற வலைப்பதிவு ஒன்றை மே 2008 இல் இருந்து உருவாக்கி, சொல்லிலும் பதிவிலும் காட்டி வரும் இவர் சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க என்ற தத்துவத்துக்கேற்ப நடப்பவர் என்பதை சகோதர வலைப்பதிவுகளிலும் இவர் போட்டு வச்சிருக்கும் பின்னூட்டங்களே சாட்சி. ஆனால் இங்கே அவர் கொடுத்திருக்கும் முத்தான ஐந்து பாடல்களுமே வித்தியாசமான ரசனை கொண்டு அமைந்திருக்கின்றன. கேட்டு இன்புறுங்கள். சிறப்பு நேயர் தொடரில் நீங்களும் இடம்பெற உங்கள் ஆக்கங்களை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

1) சந்தோஷம் இங்கு சந்தோஷம்
படம்: மனிதனின் மறுபக்கம்
பாடிவர்: சித்ரா


பள்ளிக்காலம், கல்லூரிக்காலம் இப்டி நாம பிரிச்சிக்கிட்டே போனாலும், அந்தந்த காலக்கட்டத்தில் நமக்கு மிகவும் விருப்பமான ஒரு கட்டம் இருக்கும்(அவ்வ்வ்வ்வ்.. சரி எனக்கிருக்கு). அப்டி, ஜாஸ்தி வீட்டுப்பாடத் தொந்தரவுகள், படிக்கிறக் கவலைகள் எதுவுமில்லாமல், வீட்டில் கொடுக்கும் செல்லத்தை டேக் இட் பார் கிராண்டட் ஆட்டிட்யூடோட அனுபவித்த காலம்னா எண்பதுகளின் இறுதி மற்றும் தொண்ணூறுகளின் ஆரம்பம். அப்பொழுது பாப் கட்டிலிருந்து, பரதநாட்டியத்திற்காக முடி வளர்க்க ஆரம்பித்தக் கட்டம்.
இந்தப் பாடல்களைக் கேக்கும்போது மட்டும் எனக்கு மனதில் தோன்றும் காட்சி, அம்மா எனக்கு தலை பின்னிவிடுகிறக் காட்சிதான். அதுவும் மிக அவசர அவசரமா அவங்க வேலைய முடிக்கணும், பட் அதுக்கு எவ்ளோ இம்சை கொடுக்க முடியுமோ நான் கொடுக்கிறது. அது காலை ஏழரயிலிருந்து எட்டுக்குள் இருக்குமாதலால் , அளவான அழகான வெயில் இருக்கும். அப்போது ரேடியோவில் இந்தப் பாடல்கள் ஒலிக்கும். இந்தக் காட்சிகள் தவிர இந்தப் பாடல்கள் கேட்கும்போது வேறெதுவுமே தோணாது.
அழகான ராதாவை இந்தப் பாடலில் பார்க்கலாம்.2) கஜ்ரா மொஹப்பத்வாலா
படம்: கிஸ்மத்
பாடியவர்: ஷம்ஷாத் பேகம் குழுவினர்


பொதுவாக ஓ.பி.நய்யார் மீதுக் கூறப்படும் பிரபலமானக் குற்றச்சாட்டுகளில் ஒன்று, சுட்டப் பழத்தின் மீதான நம்பிக்கையே அவருக்கு ஜாஸ்தி என்பது. ஆனால், அப்பொழுது இருந்த மற்ற இசையமைப்பாளர்களும் இப்டி செய்திருக்கின்றனர். இன்றையக் காலக்கட்டத்தில் மிக மிக எளிமையாக அனைத்து பாரம்பரிய இசையைக் கேட்கும் வசதியுள்ளதால், இது தெளிவாக நிரூபணமாகியுள்ளது.

இந்தக் காரணத்தைக் கூறியே அவருடைய ஜனரஞ்சகப் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பை யாரும் கண்டுகொள்ளவில்லயோவெனத் தோன்றும். பெரும்பான்மையாக இவருடையது, எளிமையான இனிமையான ஜனரஞ்சகப் பாடல்கள். குறிப்பிட்ட இந்தப்பாடலில் ஷம்ஷாத் பேகம் அவர்களின் குரலும், எளிமையான நகைச்சுவையான பாடல் வரிககளும், துள்ளும் இசையும் மிகப் பெரிய பலம். இதயெல்லாம் எதற்காக ரீமிக்ஸ் செய்தார்கள், அப்படி என்ன கொலைவெறி என்றுதான் புரியவில்லை.3) ஊரார் உறங்கையிலே உற்றாரும்
படம்: நாலு வேலி நிலம்
பாடியவர்: திருச்சி லோகநாதன்


திருச்சி லோகநாதன் குரலைப் போன்ற ஒரு குரலினைப் பார்ப்பது அபூர்வம். அநியாய எதிக்ஸ் பார்த்துப் பல நல்ல வாய்ப்புகளை உதறினார் எனக் கேள்வி. இவருடைய சொந்த வாழ்க்கை சம்பந்தமான புத்தகங்கள் படிக்கும்போது, ஆச்சர்யமாகிவிடுகிறது. இவருடைய முக்காவாசிப் பாடல்கள் மிகப் பிடிக்கும். இந்தப் பாடலின் வரிகள் மிக மிக சுவையோடு இருக்கும். அடுத்து என்ன பதில் கொடுப்பார் என்ற ஆவலைத் தூண்டும். தென்னிந்தியாவில் பிறக்காமல் வேறெங்குப் பிறந்திருந்தாலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு அவருக்குக் கிடைத்திருக்கக் கூடிய அங்கீகாரமே வேறு. இதன் வீடியோவும் பார்த்ததில்லை. யார் நடித்தார்கள் என்று கூடத் தெரியாது.4) புத்திசிகாமணி பெத்தபுள்ள
படம்: இருவர் உள்ளம்
பாடியவர்கள்: ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி


நடிகவேலை ரசிக்காதவர்கள் இருக்கமுடியுமா? ஆனால் இந்தக் குறிப்பிட்ட படத்தின் பாடல்கள்(வீடியோ) மட்டும் நெட்டில் கூட கிடைக்கவில்லை. இந்தப் பாடல் அந்தக் காலக்கட்டத்தில் வந்த பல குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமானப் பாடல்களுள் ஒன்றுதான் என்றாலும், அதில் உள்ள அழகான நகைச்சுவை, இனிமையான ஜோடிக் குரல், கலக்கலான யதார்த்தம் இந்தப் பாடலின் ரசிகயாக்கியது. இதற்கு நடிகவேலும், மனோரமா அவர்களும் நடித்திருக்கிறார்கள் எனத் தெரிந்ததில் இருந்து பார்க்க ஆவல்.5) என்னடி முனியம்மா உன் கண்ணுல
படம்: வாங்க மாப்பிள்ளை வாங்க
பாடியவர்: டி.கே.எஸ்.நடராஜன்


இந்தப் பாடலின் ரீமிக்ஸ் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒரிஜினலில் பாடியவரின் குரலும் கூட இப்பாடலின் வெற்றிக்குக் காரணமெனத் தோன்றும். இவ்வளவு பிரபலமானப் பாடலின் வீடியோவை இதுவரைப் பார்த்ததே இல்லை. பார்த்தவர்களும் விழுந்து விழுந்து சிரித்தே கொல்கிறார்கள். ஆனால், எப்படி இருக்கும் எனச் சொல்வதில்லை. இதனுடைய ஆடியோவும் தரவிறக்கம் செய்வதற்குக் கிடைக்கவில்லை. ஹி ஹி, அதனால் இப்பாடலின் எம் பி 3 தரவிறக்கம் செய்யும்படிக் கிடைத்தாலும் நன்றாக இருக்கும்.

Track 6 - T.K. Natarajanஇராப்

16 comments:

pudugaithendral said...

சந்தோஷம் இங்கு சந்தோஷம் சூப்பர் சாய்ஸ்.

கஜ்ரா முகப்பத் வாலா.. சான்சே இல்ல.

என்னடி முனியம்மா எவர் கிரீன் சாங்க்

அருமையான தெரிவு ராப்

வாழ்த்துக்கள்

Admin said...

அருமையான பாடல் தெரிவுகள் நேயருக்கும் வாழ்த்துக்கள்...

கலைக்கோவன் said...

ஒரு கலவையான தெரிவு.
எவ்வளவு மெலடி கேட்டாலும்
என்னோட பேவரைட்ஸ்-ல
புத்தி சிகாமணியும்,முனியம்மாவும்
இருக்கில்ல...

வாழ்த்துக்கள் ராப்..,

உங்களுக்கு முனியம்மா MP3
cooltoad- la இருக்கு.

KARTHIK said...

நல்ல தேர்வுங்க

4,5 அந்த ரண்டு பாட்டுமே என்க்கும் ரொம்ப புடிச்ச பாட்டு

சென்ஷி said...

ஆஹா! டிசைன் டிசைனா பாட்டு கேட்டு கலக்குறீங்களே ராப் அக்கா!

M.Rishan Shareef said...

அன்பின் ராப்,

சத்தியமா உங்க தெரிவுல 'என்னடி முனியம்மா'வைத் தவிர மற்றப்பாடல்களை இன்றுதான் கேட்கிறேன். நல்ல தெரிவு.
பாராட்டுக்கள் !

rapp said...

ஹி ஹி எல்லோருக்கும் மிக்க நன்றி:):):)

இன்னும் பற்பல குபீர் கபீர் பாடல்களை இனிவரும் காலங்களிலும் வழங்கி சிறப்பிக்க கானாசுக்கு வாழ்த்துக்கள்:):):)

கோபிநாத் said...

யக்காவின் தொகுப்பு சூப்பரு ;))

Anonymous said...

எல்லாமே நகைச்சுவை நடிகர்களோட பாட்டா இருக்கும்னு நினைச்சேன். ஆனாலும் வித்யாசமான பாடல்கள்.

கலைக்கோவன் said...

ராப்...,
என்னடி முனியம்மா Mp3 link
Link1

Link2

Enjoy maadi....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இராப் , எல்லாம் நல்லா இருக்குது.. அந்த ஊரார் உறங்கையிலே மட்டும் நான் கேட்டதில்ல ..:)

rapp said...

மறுக்கா எல்லாருக்கும் ரொம்ப நன்றி:):):) அப்டியே ஒவ்வொருத்தருக்கும் குறைந்தபட்சம் ரெண்டு வாய்ப்பு கொடுக்கணும்னு கானாஸ் கிட்ட அட்டகாசம் பண்ணனும்னு வேண்டுகோள் வெச்சுக்கிறேன்:):):) இது வெறும் பொதுநல நோக்குப் போராட்டமாக்கும்:):):)

கலைக்கோவன் ரொம்ப ரொம்ப நன்றி:):):) கிட்டத்தட்ட நான் இந்த லிங்க் கேக்காத நண்பர்களே இல்லை வலையில்னு சொல்லலாம். அவ்ளோ நாளா முயற்சிக்கிறேன். ஏன் லூசு நீயா சர்ச்சலன்னு கேட்டு என்னைய பவ்வ்வ்வ்வ்..........ஆக்காதீங்க:):):) ரொம்ப ரொம்ப நன்றி:):):)

கலைக்கோவன் said...

//Blogger rapp said...

மறுக்கா எல்லாருக்கும் ரொம்ப நன்றி:):):) அப்டியே ஒவ்வொருத்தருக்கும் குறைந்தபட்சம் ரெண்டு வாய்ப்பு கொடுக்கணும்னு கானாஸ் கிட்ட அட்டகாசம் பண்ணனும்னு வேண்டுகோள் வெச்சுக்கிறேன்:):):) இது வெறும் பொதுநல நோக்குப் போராட்டமாக்கும்:):):)//

இதை நான் வழிமொழிகிறேன்

சந்தனமுல்லை said...

ராப்....என்னதிது...கடைசிப் பாட்டுத் தவிர வேற எதையும் கேட்ட மாதிரியே இல்ல!! ஞானகொயந்தையா நீங்க!! ;-))

வாசுகி said...

// சந்தனமுல்லை said...

ராப்....என்னதிது...கடைசிப் பாட்டுத் தவிர வேற எதையும் கேட்ட மாதிரியே இல்ல!! ஞானகொயந்தையா நீங்க!! ;‍))//
:))))

எனக்கும் கடைசி பாட்டு மட்டும் தான் கேட்ட மாதிரி இருக்கிறது.
வித்தியாசமான பாடல்கள்.
வாழ்த்துக்கள்

தமிழன்-கறுப்பி... said...

என்ன இது?! கலவையான தெரிவுகள்...