Tuesday, July 7, 2009
றேடியோஸ்புதிர் 42 - மொழி மாறிய பாட்டு?
வாழைப்பழத்தையும் கொடுத்து அதை உரிச்சும் கொடுப்பது போல புதிர் ஒன்று தருகிறேன். கண்டுபிடியுங்களேன் ;0.
இங்கே இளையராஜா இசையமைத்த இரண்டு பாடல்கள் கொடுக்கப்படுகின்றன. இவ்விரு பாடல்களுமே ஒரே மெட்டில் போடப்பட்டவை.ஆனால் ஒன்று சந்தோசப் பாடலாக ஜோடிக்குரல்களிலும் இன்னொன்று ஒற்றை ஆள் பாடும் சோகராகமாக அமைகின்றது.
இந்த இரண்டு பாடல்களில் ஒன்று தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட டப்பிங் படத்தில் இருந்தும், இன்னொன்று நேரடித் தமிழ்ப்படத்தில் இருந்தும் வருகின்றன.
இதில் எது தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாறிய பாடல் என்பதே கேள்வியாகும். ஒரேயொரு உபகுறிப்பு. அந்தத் தெலுங்குப் படத்தை இயக்கியவர் பிரபல ஒளிப்பதிவாளர். ஆனால் அவர் பாலுமகேந்திரா அல்ல.
முதலில் வருவது ஜோடிப்பாடல் நிலவு சுடுவதில்லை திரைப்படத்திற்காக கிருஷ்ணச்சந்தர் , ஜானகி பாடும் "நாளும் என் மனம்"
இரண்டாவது காதல் கீதம் திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "பெண்மை என்பது அட உண்மை இல்லையா" தனிப்பாட்டு
மேற்கண்ட கேள்விக்கான சரியான பதில் காதல் கீதம் திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "பெண்மை என்பது அட உண்மை இல்லையா" தனிப்பாட்டு.
காதல் கீதம் என்ற படம் தெலுங்கில் வெளிவந்த அபி நந்தனா என்ற திரைப்படத்தின் மொழிமாற்றுப் படமாகும். ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இயக்கிய படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தப் படத்தில் கார்த்திக், ஷோபனா, சரத்பாபு போன்றோர் நடித்திருப்பார்கள். இதோ அந்த மூலப்பாடல் அபி நந்தனா படத்தில் இருந்து
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
’பெண்மை என்பது உண்மை இல்லையா’ பாட்டு ‘அபிநந்தனா’ங்கற தெலுங்குப் படத்தின் தமிழ் டப்பிங் வடிவமான ‘காதல் கீத’த்தில் வருகிறது - இந்தப் ப்டத்தின் இயக்குனர்: அசோக் குமார் (ஒளிப்பதிவாளர்)
கரீக்டா? ;)
- என். சொக்கன்,
பெங்களூர்.
சொக்கரே
அதே தான் :)
எனக்கு தெரியல!!!!!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:-(
penmai enbathu - prema ledhani.. premincha radhani.... telugula spb.
abhinandhana padathoda peru. ashokkumar direct pannathu.
manasu kurise velalo - innoru paatu. aana thamizhla jesudasa... telugula ellame spb thaan.
உருப்புடாதது_அணிமா said...
எனக்கு தெரியல!!!!!!!//
இரண்டில் ஒன்றுதானேப்பா :)
ஜி.ரா
கலக்கிட்டீங்க :)
நாளும் என் மனம் - நிலவு சுடுவதில்லை - நேரடித்தமிழ் படம். சிவகுமார்,ராதிகா நடித்தது.
பெண்மை என்பது அட உண்மை இல்லையா - காதல் கீதம், காதல் கீதம் டப்பிங் படமாக இருக்க வேண்டும். கார்த்திக், சோபனா நடித்தது.
அண்ணா,
உங்களுக்கு இந்த டப்பிங் பட அனுபவம் நிறைய இருப்பதால் ஒரு கேள்வி கேட்கிறேன்.
மம்முட்டி, சோபனா நடித்த ஒரு மலையாள டப்பிங் படம் ஊரில இருக்கேக்க பார்த்தேன்.
பெயர் மறந்துவிட்டது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
பூ என்ற சொல் அந்த படத்தில வருகிறது என்பது மட்டும் நினைவு.
ஊரில இருக்கும் போது நிறைய மம்முட்டி, சுரேஷ்கோபி நடித்த டப்பிங் படம் பார்த்திருக்கிறேன்.
கொழும்பில் கூட அந்த படங்களை காண கிடைக்காது.
ஊருக்கு போய் தான் பார்க்க வேண்டும்.
(புதிர் கேட்கிறது சுகம். விடை சொல்வது கஸ்டம். இப்ப தெரியுதா? ;))) )
வணக்கம் வாசுகி
கலக்கலான பதிலையும் சொல்லி எனக்கும் புதிரா :0 வாழ்த்துக்கள்.
நீங்கள் கேட்ட மம்முட்டி படம் பேர் பூவே பொன் பூவே அந்தப் படத்தில் சோலைப் பூந்தென்றலில் என்ற அருமையான பாட்டும் இருக்கே .
தல
ரொம்ப குஷ்டமான கேள்வி..
\\இதில் எது தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாறிய பாடல் என்பதே கேள்வியாகும்\\
ஜேசுதாஸ் ஜானகி பாடும் பாடல் என்று நினைக்கிறேன் ;)
\\கானா பிரபா said...
வணக்கம் வாசுகி
கலக்கலான பதிலையும் சொல்லி எனக்கும் புதிரா :0 வாழ்த்துக்கள்.
நீங்கள் கேட்ட மம்முட்டி படம் பேர் பூவே பொன் பூவே அந்தப் படத்தில் சோலைப் பூந்தென்றலில் என்ற அருமையான பாட்டும் இருக்கே .
\\
@ வாசுகி ;)
எங்க தல'க்கே புதிரா!!!..எப்படி பதில் சொன்னாரு பாருங்க...ஆனா இதுதான் பதில்ன்னு யாருக்கு தெரியும் ;)))
abi nandhana padam balu padina paatu than mozi matram senju vanthiruku
//முதலில் வருவது ஜோடிப்பாடல். கே.ஜே.ஜேசுதாஸ் ஜானகி பாடும் "நாளும் என் மனம்//
இந்தப் பாடலைப் பாடியவர் கிருஷ்ணச் சந்தர்
தல கோபி
நீங்க சொன்ன பாட்டு தப்பு :)
வாசுகி கேட்ட மம்முட்டி படம் பார்த்ததில்லையா?
புதுகைத்தென்றல்
அசத்திட்டீங்க :)
மரவண்டு நண்பரே
சி.டியிலும் கூட கே.ஜே.ஜேசுதாஸ் அப்படினு தான் போட்டிருக்கே.
அண்ணா,
நன்றி உங்கள் பதிலுக்கு.
இப்ப நினைவு வருகிறது.
உண்மையிலயே எனக்கு தெரியாததை தான் கேட்டேன்.
பல வருடமாக கன பேரிட்ட கேட்டிருக்கிறேன்.
இதே போல இன்னொரு படமும் பெயர் தெரியாமல் யோசிக்கிறனான். அடுத்த புதிரில கேட்கிறேன்.
புதிருக்கே புதிரா என்று கோவிக்கப்படாது.
// கோபிநாத்
எங்க தல'க்கே புதிரா!!!..எப்படி பதில் சொன்னாரு பாருங்க//
அவருக்கு தெரியாத படமே இருக்காது போல.
Naalum en manam song from NILAVU SUDUVATHILLAI. PURE TAMIL MOVIE.
Penmai enpathu ada unmai illaya song from Kadhal geetham - dubbed movie , cast - karthik, shobana
அநாமோதய நண்பரே
சரியான பதிலினை விபரமாவும் சொல்லீட்டிங்க வாழ்த்துக்கள்
இப்போதைக்கு உள்ளேன் ஐயா..,
நெக்ஸ்ட் meet பண்றேன்
உங்கள் பதிவுகளை அடிக்கடி வந்து பார்ப்பவன் எது என் முதலாவது பினூட்டம்...
உங்கள் பதிவுகள் அருமை தொடருங்கள்.... வாழ்த்துக்கள்...
தெலுங்குப்படம் அபிநந்தனா, கார்த்திக் ஷோபனா நடித்தது. பிரேம லேதனி எனத்தொடங்கும் பாடல்.
http://www.youtube.com/watch?v=6eSQaD90Sck
பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார். இவர் சில்க் சரத்பாபு வைத்து ஒரு படமும் பின் தன் மகனை வைத்து ஒரு படம் எடுத்து இருக்கிறார்.
//சி.டியிலும் கூட கே.ஜே.ஜேசுதாஸ் அப்படினு தான் போட்டிருக்கே.//
சி.டி.யில் போட்டிருப்பது தவறு
இந்தப் பாடலைப் பாடியது கிருஷ்ணச்சந்தர் தான்
தூரத்துப் பச்சை படத்தில் வரும்
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை பாடலைக் கேட்டு விட்டு நாளும் என் மனம் பாடலை
கேட்டுப் பாருங்கள் , உங்களுக்கு கொஞ்சமாவது என் மேல்
நம்பிக்கை வரலாம் :)
வணக்கம் சந்ரு
மிக்க நன்றி உங்கள் வருகைக்கு
வணக்கம் கணேஷ்
உங்களை நம்புறேன் திருத்திட்டேன் மிக்க நன்றி :)
வணக்கம் வினையூக்கி
அதே பதில் தான் :)
தெலுங்கில் இருந்து டப் செய்யப்பட்ட படம் “காதல் கீதம்”. பாடல் பெண்மை என்பது...........
இந்த படம் எனக்கு மிகப் பிடித்த கார்த்திக் படங்களில் ஒன்று. ஷோபனா, சரத் பாபு நடிப்பெல்லாம் நன்றாக இருக்கும்
அருண்மொழிவர்மன்
சரியான பதில் அதே தான்
இத்துடன் போட்டி முடிவடைகின்றது, கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
Post a Comment