நேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து.
எனக்குள் இருக்கும் இசை குறித்த தீராத வேட்கையை நான் பணிபுரியும் வானொலி நிலையத்தில் ஒரு எல்லை வரை மட்டுமே கடந்த 10 ஆண்டுகள் கொண்டு வர முடிந்தது. ஆனால் இந்த வலைப்பதிவினை ஆரம்பித்தவுடன் கட்டற்ற எல்லை வரை என்னால் பயணிக்க முடிந்தது. அதற்குக் காரணம் நான் விரும்பியதை மட்டுமே கொடுப்பது என்பதை விட என்னைச் சுற்றியுள்ள நீங்கள் இசை மீது அளவு கடந்த நேசிப்போடு இருப்பது பெருங்காரணம்.
தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல எத்தனையோ பதிவுகளில் பின்னூட்டங்கள் வாயிலாக மேலதிகமான செய்திகளோடும், தகவல்களோடும் வந்து இந்தத் தளத்தை முற்றுகையிட்டுப் பிரமிக்க வைத்தீர்கள். இன்று இந்த இரண்டு ஆண்டுகளில் கடந்து விட்ட நிலையில் றேடியோஸ்பதியில் ஆரம்பித்த தொடர்களும் அதற்கு நீங்கள் தந்த வரவேற்பினையும் இரை மீட்க ஒரு வாய்ப்பு. அந்த வகையில் இந்தச் சிறப்புத் தொகுப்பு தொடந்து உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகின்றேன்.
றேடியோஸ்பதியின் முதல் தொடராக வந்து சிறப்பித்தது "நீங்கள் கேட்டவை"
இந்தத் தொடர் பல்வேறு ரசனை கொண்ட் பாடல்களை வலைப்பதிவு வாசகர்கள் கேட்க அதைப் பூர்த்தி செய்யும் வகையில் 29 தொடர் பதிவுகளாக வந்து சிறப்பித்தது.
இந்தத் நீங்கள் கேட்டவை தொடரின் மாதிரிக்கு ஒன்று:
நீங்கள் கேட்டவை - பாகம் 2
நீங்கள் கேட்டவையின் இன்னொரு பரிமாணமாக குறித்த ஒரு நேயரின் ரசனைகளை மட்டுமே தொகுத்து அமைந்த சிறப்பு நேயர் தொடரும் உங்களில் பலரை ஈர்த்தது. இந்தத் தொடர் 21 அங்கங்களாக 21 நேயர்களைகளின் தனித்துவமான ரசனைகளை அவர்களின் விளக்கங்களோடு கலந்து பரிமாறியது.
அதில் மாதிரிக்கு ஒன்று
சிறப்பு நேயர் "எம்.ரிஷான் ஷெரிப்
பாடல்கள் மட்டுமன்றி இசைத்துறையில் சாதனை படைத்தவர்களின் ஒலிப்பேட்டிகளையும் கொடுக்க எண்ணி மலர்ந்த ஒலிப்பேட்டிகள் கூட அவ்வப்போது இடம்பெற்று வந்தன. அந்த வகையில் ஒன்பது பேட்டிகள் இந்தப் பதிவில் நிரப்பின.
அந்த ஒலிப்பேட்டிகளில் மாதிரிக்கு ஒன்று
பத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டி
தமிழ்த்திரையிசையில் பழம் தின்று கொட்டை போட்ட மேதைகள் மட்டுமன்றி புதியவர்களையும் கெளரவப்பத்தும் வரிசையில் "சுப்ரமணியபுரம்" திரைப்படம் வெளிவந்த சமயம் அந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனைப் வானொலிப் பேட்டி கண்டு சமகாலத்தில் றேடியோஸ்பதி நேயர்களுக்கும் பகிர்ந்தளித்தேன்.
"சுப்ரமணியபுரம்" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப்பேட்டி
றேடியோஸ்பதி இளையராஜா புகழ் மட்டும் தான் பாடும் என்ற ஒரு சிலரின் கூற்றை மறுதலிக்கும் வண்ணம் 36 பதிவுகள் வரை ராஜா தவிந்த ஏனைய இசையமைப்பாளர்களை மட்டுமே முன்னுறுத்திய பதிவுகள் வந்திருந்தன. அதில் நான் விரும்பி ரசித்து எழுதிய பதிவுகள் இவை.
இசையமைப்பாளர் சந்திரபோஸின் முத்தான பத்து மெட்டு
இசையமைப்பாளர் கே.பாக்யராஜ்
இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலம்
இந்தப் வலைப்பதிவில் அவ்வப்போது இசைவிமர்சனங்களோடும் பதிவுகளைப் பகிர்ந்திருக்கின்றேன். அந்த வகையில் நான்கு திரைப்படம் சார்ந்த பதிவுகளும் வந்திருக்கின்றன.
அவற்றில் மாதிரிக்கு ஒன்று
Cheeni Kum - ராஜாவுக்காகப் பார்த்த படம்
தமிழ்த் திரையுலகம் சார்ந்தவர்களின் மறைவின் போது அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் நினைவுப்பதிவுகள் பலவும் வந்திருக்கின்றன, இதுவரை 13 நினைவுப்பதிவுகள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. எழுத்தாளர் சுஜாதாவின் ஒலிப்பேட்டி என்பது இதுவரை எங்கும் வெளிவராதது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நினைவப் பேட்டிகளில் மாதிரிக்கு ஒன்று
நாகேஷ் என்றதோர் நகைச்சுவைத்திலகம் ஒலிப்பேட்டி
றேடியோஸ்பதியின் நேயர்களுக்கு ஜாலியான போட்டி வைக்கலாம் என்ற எண்ணத்தோடு ஆரம்பித்த றேடியோஸ்புதிர் இந்த வாரத்தோடு 42 புதிர்களை அவிழ்த்து இருக்கின்றது. இந்தப் புதிரை நீங்கள் மிகவும் விருப்போடு ரசித்து விளையாடுவது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இந்தப் புதிர்களில் மாதிரிக்கு ஒன்று
றேடியோஸ்புதிர் 1 - பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு என்ன?
நிறைவாக, என் நேரத்தை நிறையவே எடுப்பதும் என் மனதை நிறைவடையச் செய்வதும் ஆன ஒரு அம்சம் பின்னணி இசைத் தொகுப்பு. சராசரியாக 4 - 5 மணி நேரம் வரை ஒரு படத்தைப் பார்த்து தகுந்த இடத்தில் நிறுத்தி இசை பிரித்து பின்னர் எடிட் பண்ணிச் செய்யும் பின்னணி இசைத் தொகுப்பு என்பது றேடியோஸ்பதியின் மகுடமாகத் தொடரும் தொடர் இதுவரை 22 படைப்புக்களைத் தந்து இன்னும் தொடர்கின்றது.
அந்த வகையில் நான் ரசித்துச் செய்த சில பின்னணி இசைத் தொகுப்புக்கள் சில
"குணா" பின்னணி இசைத்தொகுப்பு
முதல் மரியாதை" பின்னணி இசைத் தொகுப்பு
"கடலோரக் கவிதைகள்" - பின்னணி இசைத்தொகுப்பு
"ஆண்பாவம்" பின்னணி இசைத்தொகுப்பு
Friday, July 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
முதலில் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))
இன்னும் பல பல ஆண்டுகள் தொடர வேண்டும். (நாங்க இருக்கோம்ல்ல ;))
வாழ்த்துக்கள்.. :)
பதிவர்கள் சாய்ஸ் எனக்கு மிகப்பிடித்த தொடர்.. விதவிதமான மறந்துபோன பிடித்த பாடல்களை உங்கள் பதிவு நினைவுக்கு கொண்டுவந்திருக்கிறது.. அதற்கு நன்றிகளும் ..இனி வரும் பதிவுகளுக்கு வாழ்த்துக்களும்..
அண்ணா நான் ஓன்னேகால் வருட தொடர் வாசகன்.
3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் றேடியோஸ்பதிக்கு தமிழ்திரையிசை உலகின் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துகள்.
(நாங்களும் ரெண்டு பாட்டு பாடிட்டோம்ல!!!)
Dear Prabha Sir,
Congrats & continue this fantastic
job.
Hope to wish you again, on ur 1Kth posting.
Sudharsan
Congrats and keep going...
//கோபிநாத் said...
முதலில் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))
இன்னும் பல பல ஆண்டுகள் தொடர வேண்டும். (நாங்க இருக்கோம்ல்ல ;))
//
Repeatae :)))))
என்னோட வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கானா பிரபா
ரேடியோஸ்பதியின் வலைபக்கம் முதல் கொண்டு ஒவ்வொரு பதிவும் ரசித்த பல
ரசிகர்களின் நானும் ஒரு ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் மிக பெருமையாக நினைக்கிறேன்.
நீங்கள் கேட்டவை -
டேய் கோபி நான் ஹம் பண்றேன் இந்த பாட்டை கொஞ்சம் தேடி தரியா!?
சரி பண்ணு....
லாலாலா+++++ இந்த பாட்டுல........நடிகர் நடிச்சிருப்பாரு
ம்ஹும் எனக்கு தெரியல டா
டேய் எப்படியாச்சும் தேடி கொடுடா...நீ தான் எப்பாரு நெட்ல இருக்கீயே...
டேய் ஒன்னு செய் நேரா இந்த வலைதளத்துக்கு போ http://radiospathy.blogspot.com அங்க கானா பிரபான்னு ஒருதர் இருப்பாரு அவருக்கிட்ட கேட்டு பின்னூட்டம் போடு வரும். ஒரு ரெண்டு மூணு நாளு கழிச்சி
டேய்....பாட்டு வந்துடுச்சி டா...நான் கேட்ட பாட்டு கானா போட்டுட்டாரு டா...ரொம்ப டங்கஸ் டா.
;)))))) டேய் ராசா எங்க தலக்கிட்ட பாட்டு கேட்டு வரலைன்னா தான் டா ஆச்சிரியம் ....தலைன்னா சும்மா வா ;))
இப்படி இங்க இருக்குற எனக்கும் என்னோட நண்பர்களுக்கும் உபயோகமாக இருந்த பகுதி நீங்கள் கேட்டவை.
சிறப்பு நேயர் -
டேய் மச்சி இந்த வாரம் யாரு டா?
எதுல தமிழ்மணத்திலியா
இல்ல மச்சி ரேடியோஸ்பதியில
அட நம்ப -------------பதிவர் டா
எல்லாமே காதல் பாட்டு மச்சி
சூப்பரு டா
இப்படி தமிழ்மணத்தில் எப்படி நட்சத்திரமோ அதே போல ரேடியோஸ்பதியில் சிறப்பு
நேயராக வருதும் மகிழ்ச்சியான விஷயமாக கொண்ட வச்ச தொடர் சிறப்பு நேயர் தொடர் பகுதி. ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒவ்வொரு வாரம் மேடை அமைத்து அவனையும் அவன் ரசித்த பாடல்களையும் ஒலிக்க செய்யத தொடர் என்னென்றும் மறக்க முடியாத பகுதி. அதை மீண்டும் தொடர வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.
ஒலிப்பேட்டிகள் - ஆணி புடுங்க இடத்துல கிடைக்கிற கொஞ்ச நேரத்தில இப்படி பிரபலகள் பேட்டி
கேட்க தந்தமைக்கு நன்றி தல
ரேடியோஸ்பதியின் ஸ்பெசல் தொடர் அட்டகாசமான தொடர் எது என்றால் அது ரேடியோஸ்பதியின்
புதிர் தான்...இந்த வாரம் என்ன கேள்வி கேட்டாரு தலன்னு சேட்ல தொடங்கி பின்னூட்டத்தில் அட்டகாசம் செய்து என்ன பதில்னு அதை கண்டு பிடிச்சிட்டா மனசுல வர சந்தோஷத்துக்கு அளவேல்ல...தெரியாத விடையை நண்பர்கிட்ட கேட்ட அய்யோ தல சத்தியம் வாங்கிட்டாரு நான் சொல்லமாட்டேன்னு ஒடுவாங்க ;))) பிரபலமான தொடர் ;)
ஆணிகளில் சீக்கி தவிக்கும் எங்களுக்கு புத்துணர்ச்சி கூட்டிய தொடர் இது ;)
பின்னணி இதைத்தொகுப்பு
இந்த தொடரை பத்தி ஒரு தனி பதிவே போடலாம். பாடல்கள் பற்றிய கருத்துக்கள் சொல்வது
என்பது நிறைய இடங்களில் நடக்கிறது. எனக்கு தெரிந்து பின்னணி இசையை ஒரு முன்னணி
இசையாக எங்கள் மனதில் விதைத்தது இந்த ரேடியோஸ்பதி தான்.
"டேய் மச்சி அந்த ஹரோ அந்த பெண்ணை பார்க்கும் போது ஒரு மீயூசிக் வரும் பாரு அட
என்னம்மா இருக்கும் தெரியுமா பின்னியிருக்கிய்யா அந்த ஆளு. "
"அதை விடு மச்சி அந்த பெண்ணு காதலை ஓகே சொன்னவுடன் அப்படியே துள்ளி எழுப்புற மாதிரி
ஒரு இசை வரும் கேட்டியா மனுஷன் அனுப்பவிச்சியிருக்காய்யா..."
இப்படி எங்கோ ஒரு முலையில் இருவருக்குள் நடந்த உரையாடலை...அட வாங்க மக்கா நான் இருக்கேன்னு ஒரு மேடை போட்டு அதுல அந்த பின்னணி இசையை பிரிச்சி போட்டு படையால் போட்டு கலக்கியிருப்பாரு தல.
நிறைய தெரியாத விஷயங்கள்....முகம் தெரியாத ஒருவரை பற்றி ஒருவர் சரியாக தெரியவில்லைன்னாலும் இன்னிக்கு எனக்கு இசை மூலமாக நிறைய இசை நண்பர்கள் கிடைச்சிருக்காங்க என்றால் அதுக்கு இந்த ரேடியோஸ்பதியும் தல கானாவின் உழைப்பும் ஒரு காரணம்.
தல இந்த கடமையை எப்போதும் செய்துக்கிட்டே இருங்க.
நாங்க இருக்கோம் ;))
வாழ்த்துக்கள் தல.
வாழ்த்துகள் தல :)
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி :)
- என். சொக்கன்,
பெங்களூர்.
வாழ்த்துக்கள் பிரபா.இசையோடு கை கோர்த்த பயணம் நகைச்சுவையோடு மனதையும் இலேசாகி மகிழவைத்துக்கொண்டிருக்கிறது.என்னால் பதில் சொல்லும் மனநிலையோ தேடலோ இல்லாவிட்டாலும் இசையின் ஆர்வத்தோடு வந்து பார்த்துப் போவேன்.இன்னும் வளர வாழ்த்துக்கள் பிரபா.
வாழ்த்துகள் கானா பிரபா! வலையில் நிழல் தரும் (மிகச் சில)சோலைகளில் ஒன்று றேடியோஸ்பதி - வெங்கட்
வாழ்த்துக்கள் பிரபா!!
Keep Rocking
வாழ்த்துக்கள் பிரபா எத்தனையோ கேட்க கிடைக்காத அரிய பாடல்களை தந்த பெருமை உங்களையே சாரும்.
பிரமாதம்..... கலக்குங்க..
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்!
முதல் தடவையாக வருவதே வாழ்த்து சொல்ல பாருங்கள்:)! விகடன் குட் ப்ளாக்ஸில் இப்பதிவினைப் பார்த்து வந்தேன்.
உங்கள் லிங்க்குகள் நீங்களே தந்து விட்டிருக்கிறீர்கள். நன்றி. பார்த்து கேட்டு ரசிச்சுடுறேன்:)!
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
// சராசரியாக 4 - 5 மணி நேரம் வரை ஒரு படத்தைப் பார்த்து தகுந்த இடத்தில் நிறுத்தி இசை பிரித்து பின்னர் எடிட் பண்ணிச் செய்யும் பின்னணி இசைத் தொகுப்பு //
மிகவும் வியக்கும் அம்சம் இது!
வாழ்த்துக்கள் பிரபு / றேடியோஸ்பதி!
வாழ்த்துகள் கானா பிரபா.
இன்னும் பல இடுகைகளை எதிர்பார்க்கிறோம்.
என் மனமார்ந்த வாழ்த்துகள்!! தொடரட்டும் உங்கள் சேவை.. :)
வாழ்த்துக்கள் பிரபா...
ஒவ்வொரு பதிவின் பின்னும் உங்கள் உழைப்பு அபாரம்.
உங்கள் பதிவின் மூலம் என்னொத்த எண்ணற்ற இசைவிரும்பிகளை இனங்கண்டு கொண்டேன். நன்றி...
இன்னும் சிகரங்கள் தொட வாழ்த்துகிறேன்...
வாழ்த்துக்கள்...! தொடரட்டும்....!! இதனுடன் நின்று விடாது இதனை ஆவணப்படுத்தவும் முயற்சிக்கவும்....!
அன்பின் கானாபிரபா,
வலைப்பதிய வந்த ஆரம்பநாட்களிலிருந்து இன்று வரை உங்கள் பதிவுகளில் மட்டும் அப்படியொரு மோகம்.இசை கேட்டு வளர்ந்த பால்யவயதுக் காலங்களை இடைக்காலப் பாட்டுக்களின் மூலம் மீட்டுத்தருகிறீர்கள். அந்தக் காலங்களுக்குள் மீண்டும் போய் உலாவிவருகிறது மனது.
வலையுலகில் எல்லோருமே உங்கள் வாசகர்களாக இருக்கிறார்கள். நீங்கள் சிறப்பு நேயராக அறிமுகப்படுத்தியதில் அதிகளவான வாசகர்களுக்கு என்னைத் தெரிய வந்தது. இப் பதிவில் மீண்டும் என்னை நினைவூட்டியமைக்கு நன்றி நண்பரே !
அத்தோடு மூன்றாம் ஆண்டில் தடம்பதிக்கும் றேடியோஸ்பதிக்கும், அதில் தொடர்ந்து சிறந்த பதிவுகளைத் தந்துவரும் உங்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
உங்கள் சேவைகள் தொடரட்டும் !
என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்
பல்லாண்டுகள் தொடர வாழ்த்துக்கள் கானா. உங்க முயற்சிகளுக்கு பாராட்டுகள் பல.
வா(வ்)ழ்த்துக்கள் கானா..
உண்மையிலேயே மிகவும் சந்தோசமான தருணம் இது. மனதிற்கு இனிய பாடல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வது மட்டுமின்றி அது குறித்த புதிய தகவல்களையும் சிரத்தையெடுத்து கொடுத்தல் என்பது சாதாரணம் இல்லை.
அந்த வகையில் மிகவும் சுவாரஸ்யமாக எந்த ஒரு பதிவினையும் சுவை குன்றாதவாறு பெரும் ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்துள்ள உங்கள் பாங்கு நிச்சயம் சிறப்புக்குரியது.
எனக்கு மிகவும் பிடித்த தொடரான பதிவர்களின் சாய்ஸ். நடுவில் நின்றது சற்று உறுத்தல்தான். மீண்டும் தொடர்ந்தால் சந்தோசப்படுவேன். நான் இன்னும் அதில் கலந்து கொள்ளாதது காரணமாய் இருக்கக்கூடும்.
என்னை மிகவும் நெகிழ வைத்த குருவின் வானொலிப்பேட்டி பகிர்ந்தமைக்கு நான் எந்நாளும் கடன் பட்டுள்ளதாகக்கருதுகிறேன்.
இன்னும் பல நூறாயிரம் பதிவுகளோடு றேடியோஸ்பதி வெற்றி நடைபோட எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் இறைவனிடம் ஆசிகளும்..
நன்றி கானா!
நண்பர் கானா பிரபா ,கோபிநாத் உங்கள் மேல் ஒரு குறை சொல்வேன்.கேட்பீரோ?
அருமையான படைப்புக்களை சொக்கும் எழுத்தில்,துல்லியமான இசையில் தந்து எங்களை உங்கள் வலைபூவிற்கு அடிமை ஆக்கி விடீர்கள் என்றால் அது பொய்யில்லை.இதனால் எங்களால் வலையை விட்டு அகல முடியவில்லை.
என்ன ஒரு ரசனை..
குடத்தினில் உள்ளே உள்ள தீபங்களை குன்று மேல் வைத்து ஒளிர்விடசெய்யும் உங்கள் உழைப்பு அடடா?
மேலும் வளர வாழ்த்துகிறேன்.
உங்கள் இசைபயணம் இன்னும் பல பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.
உங்கள் 225 பதிவுகளையும் ஒன்று விடாமல் படிக்க கேட்க ஆசை கொண்டுள்ளேன்.
விரைவில் ராகதேவனை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டட்டும்.
உங்கள் திரைப்பட,இசை ரசனை உண்மையிலேயே எங்களை வியக்க வைக்கிறது.
நாடு வேறானாலும் நீங்கள் எமக்கு சகோதரனே..
வாழ்த்துக்கள் பிரபா..,
இந்த இனிய பயணம்
மேன்மேலும் தொடரட்டும்.
வாழ்த்துகள் கானாபிரபா! நீண்ட நாட்கள் மௌனமாக ரசித்திருக்கிறேன்! :-) நன்றிகள் கானாபிரபா! பாடல்களை, அதன் பின்னனியோடும், சுவையான தகவல்களுடனும் தரும் உங்கள் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும்! புதிர்களும், சாய்ஸூம் ரேடியோஸ்பதியிலே எனக்குப் பிடித்தம்! தொடருங்கள் கானாஸ்..உங்கள் இசைப்பயணத்தை!
//நேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது,//
வாழ்த்துகள் கானா பிரபா!
உங்கள் உழைப்பு அபாரம்
இந்த இனிய பயணம்
தொடரட்டும்.
கலக்கிறீங்க அண்ணே.. நான் தொடர்ந்து வந்த வாசித்த பதிவுப் பக்கங்களில் இதுவும் ஒன்று..
எத்தனை எத்தனை இசை விஷயங்கள்.. அற்புதம்.. வாழ்த்துக்கள்..
பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
தொடர்ந்து களை கட்டட்டும்
பிரபா, உங்களுடைய ரேடியோஸ்பதி வலைப்பூவிற்கு நாங்களெல்லாம் ரசிகர்கள். தொடர்ந்து ரசித்துக்கொண்டிருக்கிறோம். பலப்பலப் புதுமைகளைப் புகுத்தி எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் உங்களது நற்பணிக்கு நன்றி பல. இது இன்னும் பலப்பவாகப் பெருகி புகழ் பெற எனது வாழ்த்துகள்.
பிரபா அண்ணா,
ஒவ்வொரு பதிவையும் மிகவும் கவனம் எடுத்து அழகாக தொகுத்து தருகிறீர்கள்.
பல சாதனைகளை படைத்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அண்ணாச்சி!
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணன்...
நான் இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன் இனி தொடர்ந்து நடக்கும்.
:)
சீக்கிரமே...
அண்ணிக்கு, மகனுக்கு, மகளுக்கு, பிடிச்ச பாட்டுகள்ன்னு எல்லாம் வரிசையா பதிவெழுத வாழ்த்துக்கள்.
;)
(யாராவது கட்டாயமா ரிப்பீட்டு போடுங்கப்பா)
வாழ்த்துக்கள் நண்பரே!!
225 பதிவு மூன்று வருடத்தில்!! மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!!
\\தமிழன்-கறுப்பி... said...
சீக்கிரமே...
அண்ணிக்கு, மகனுக்கு, மகளுக்கு, பிடிச்ச பாட்டுகள்ன்னு எல்லாம் வரிசையா பதிவெழுத வாழ்த்துக்கள்.
;)
(யாராவது கட்டாயமா ரிப்பீட்டு போடுங்கப்பா)
\\
நீங்க சொல்லவில்லை என்றாலும் கண்டிப்பாக ரீப்பிட்டோ போடுவோம்ல...;))
வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள்...... அரிய பல விடயங்களையும் பல பாடல்களையும் தந்தமைக்கு நன்றி.....
இன்னும் பல விடயங்களையும் பாடல்களையும் எதிர் பார்க்கிறேன்.....
வாழ்துக்கள் தல :-))
Post a Comment