Pages

Saturday, July 18, 2009

இசைமேதை டி.கே.பட்டம்மாள் நினைவில்

கர்நாடக இசை உலகின் பெண் மும்மூர்த்திகளில் இறுதியாக நம்மிடையே வாழ்ந்து வந்த டி.கே.பட்டம்மாள் அவர்கள் கடந்த யூலை 16 ஆம் திகதி வியாழன், 2009 இவ்வுலகத்தை விட்டு நீங்கினார். இந்தியா கடந்து உலகெங்கும் இசை மணம் பரப்பிய அவரை பத்ம விபூஷன் விருது உட்பட பல விருதுகள் கிடைத்து அந்த விருதுகளுக்குப் பெருமை தேடித்தந்தன. கர்நாடக இசையுலகம் தவிர்ந்து தமிழ்த்திரையிசையிலும் டி.கே.பட்டம்மாள் அவர்களின் பங்களிப்பு சிறப்பானது.

சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் பண்பலை வானொலியான "தமிழ் முழக்கம்" வானொலிக்காக பட்டம்மாள் அவர்களின் சிஷ்யை திருமதி அமிர்த்தி யோகேஸ்வரன் அவர்களை பட்டம்மாள் குறித்த நினைவுப் பகிர்வினை வழங்க அழைத்திருந்தேன். பட்டம்மாள் குறித்த நினைவுகளோடு அவர் இயற்றிய பாடலான "கற்பகமே கண் பாராய்" என்ற பாடலை வழங்குகின்றார்.



ஏ.வி.எம் நிறுவனம் சுப்ரமணிய பாரதியார் பாடல்களின் உரிமத்தினை வாங்கி "நாம் இருவர்" திரைப்படத்தில் பயன்படுத்தியபோது டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிய "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என்ற பாடல்.



டி.கே.பட்டம்மாள் அவர்களும் அவர் தம் பேத்தி நித்ய சிறீ உடன் இணைந்து பாடும் "பாருக்குள்ளே நல்ல நாடு"



சுத்தானந்த பாரதியாரின் கவிவரிகளோடு டி.கே.பட்டம்மாள் பாடும் "எப்படிப் பாடினரோ" பாடலோடு நிறைவாக்குகின்றேன்.

8 comments:

அருண்மொழிவர்மன் said...

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு வானொலியில் முதன் முதலில் இவர் பாடிய பாடல்தான் (சில வேளை முதல் தமிழ் பாடலோ தெரியாது) இடம்பெற்றது என்று இந்தியாவின் பொன்விழா (சுதந்திர விழா) கொண்டாட்டங்களின்போது சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

Admin said...

நல்ல பதிவு அண்ணா... தொடரட்டும் உங்கள் பணி...

கிடுகுவேலி said...

நித்யஸ்ரீ வரவுதான் எனக்கு பட்டம்மாளை காண்பித்தது. உண்மையில் மீண்டும் அவரை ஞாபக படுத்தும்..நல்லதொரு நினைவுப்பதிவு....

யாழினி said...

நல்லதொரு பணி. தொடரட்டும் கானா...

கலைக்கோவன் said...

// கதியால் said...
நித்யஸ்ரீ வரவுதான் எனக்கு பட்டம்மாளை காண்பித்தது. உண்மையில் மீண்டும் அவரை ஞாபக படுத்தும்..நல்லதொரு நினைவுப்பதிவு...//
ரிப்பீட்டேய்...
நன்றி தல

Admin said...

அன்பின் அண்ணா...

த‌ங்க‌ளுக்கு சுவையார்வ பதிவு/பதிவர் விருது கொடுத்துள்ளேன்.

http://shanthru.blogspot.com/2009/07/blog-post_20.html


ஏற்றுக்கொள்ள‌வும்.

கானா பிரபா said...

அருண்மொழி வர்மன்

நீங்கள் சொன்ன கருத்து உண்மைதான், இந்திய வானொலியில் இவர் குரல் தான் ஒலித்தது.

சந்ரு

மிக்க நன்றி, வருகைக்கும் விருதுக்கும்

கதியால்

நித்ய சிறீ தனித்துவமான பாடகி என்பதை நிருபித்திருப்பது பாட்டியாருக்கும் பெருமை அல்லவா

மிக்க நன்றி யாழினி

கலைக்கோவன்

வருகைக்கு நன்றி

ஹேமா said...

பிரபா,பிறப்பும் வாழ்வும் இறப்பும் இயற்கையானாலும் இப்படியானவர்களின் இழப்பு மனசுக்கு வேதனையானது.அவரின் ஆத்மா சாந்திக்காக தலை வணங்குவோம்.தன்னைப்போல இன்னொருவரை அனுப்பி வைக்கட்டும்.

உங்களுக்கும் நன்றி பிரபா.