Thursday, July 16, 2009
சிறப்பு நேயர்: கலைக்கோவன்
றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் தொடர் மீண்டும் அடுத்த சுற்றில் கலைக்கோவனின் படைப்போடு ஆரம்பிக்கின்றது.
றேடியோஸ்பதியில் வாய்த்த நண்பர்களில் சற்றே வித்தியாசமாக அறிமுகமானவர் நண்பர் கலைக்கோவன். இவர் றேடியோஸ்புதிர் மூலமாகவே அறிமுகமாகி தொடர்ந்து விடாமல் போட்டிகளில் பங்கெடுப்பதோடு புதிரில் விடை சொல்லும் பாணியில் கூட ஒரு வித்தியாசத்தைக் காண்பிப்பார். உதாரணத்துக்கு, ஒரு முறை பாடகர் யுகேந்திரன் குறித்த புதிரைக் கேட்ட போது அவர் கொடுத்த பதில் பின்னூட்டம் இப்படி இருந்தது.
"சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக"..
இடைக்குரல் கொடுத்த
மலேசியா வாசுதேவன் வீட்டு பூ.
......யுகேந்திரன்
இந்த "சின்ன கானாங்குருவியின்" பாடல்
பொற்காலம் ஒலித்தட்டில் மட்டும் இடம்பெற்று
படம் பெறாமல் போயிற்று.
ஆனாலும் .....
தம்பதி சகிதமாக (துணைவி மாலினியுடன்)
தற்போது ..,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை
(சமீபத்தில்
விஜய் தொ.கா. சூப்பர் சிங்கர்)
அலங்கரிக்கின்றனர்.
பாடல் புதிர்களில் சாமர்த்தியத்தோடு பதில் சொல்வதோடு நண்பர் கலைக்கோவனின் இசை ரசனை கூட தனித்துவமானது என்பதற்குச் சான்றாக அமைகின்றது இவரின் தேர்வுகள். தொடர்ந்து கலைக்கோவன் பேசுகிறார், நான் ஒதுங்கிக் கொள்கிறேன் ;)
என்னை பற்றி..,
இசை ரசிகன்., கடந்த ஓராண்டாய் ரேடியோஸ்பதியின் வாசகன்.
தற்போது வசிப்பது ஹைதராபாத்,எப்போதும்(என் மகன் அன்பு அனுமதித்தால்) பாடல் கேட்க பிடிக்கும்.
எப்போதாவது கவிதை எழுதுவதுண்டு.
தெரிவுகள்
எனது தெரிவுகள், இளையராஜாவின் இசை கோலோச்சிய எண்பதுகளில் வெளிவந்த பாடல்கள் இடம் பெறுகின்றன.
இவற்றை,எனக்கு பிடித்த சமகால பாடகர்களை நினைவு கூறும் வகையில் தொகுத்திருக்கின்றேன்.
1. மேகமே மேகமே(பாலைவனச்சோலை)- வாணிஜெயராம்
இது எனது முதல் தெரிவு.,எப்போது கேட்டாலும் இனிக்கும் ஒரு கஜல் வடிவம்.சோகம் இழையொடும் குரலில் ”எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்,அது எதற்க்கோ?” என கேட்கும் வரிகள் கொஞ்சம் கணமானவை.
எப்போதெல்லாம் மனம் கணமாகிறதோ அப்போதெல்லாம் கேட்க தூண்டும் பாடல்.வைரமுத்துவின் ஆழமான வரிகள் மேலும் அழகை சேர்த்திருக்கும், ”புது சேலை கலையாமல் அணைப்பேன்”(ரவிவர்மன் எழுதாத) என்ற வரிகளுக்கு புது அர்த்தம் கொடுத்த கவிஞராச்சே சும்மாவா பின்ன.
இந்த பாடல் ஹிந்தியில் ஜக்ஜித் சிங் பாடிய கஜலின்(தும் நஹி.. ஹம் நஹி..) நகல் என்பது பின்னாளில் தான் தெரிந்தது.
2. செவ்வரளி தோட்டத்துல(பகவதிபுரம் ரயில்வே கேட்)-இளையராஜா, உமா ரமணன்
ராஜாவின் குரலில் ஒரு ஆனந்தமான பாடல்.ராஜாவின் இணைக்குரல் பாடல்கள் ஒரு தனி ரகம்,அனைத்து பாடல்களுமே நன்றாகவே இருக்கும்.இந்த பாடலுக்கு ஆனந்த ராகம் கேட்கும் நேரத்தில் கூவிய குயில் இணைக்குரல் கொடுத்திருப்பார்.
பாடலில் "வெட்கம் அது உங்களுக்கில்ல வெட்கம் மறந்தா பொம்பளை இல்லே" என பெண் குரல் என வினவி,
பின் ”ஆசைய சொல்ல நினைச்சேன் சொல்லமா தான் விட்டேனே” என்று முடியும் சரணம் ஒரு அழகான காதலின் உண்மை.
இந்த பாடலின் சரணங்களுக்கு இடையில் வரும் “ஐலேசா” வரிகளும் ஒரு கிக்.பாடல் சாத்தனூர் டேமில்(திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது)படமாக்கப்பட்டது என நினைக்கிறேன்.
ஆனால் இப்போதெல்லாம் சினிமாவில் சாத்தனூர் டேம் வருகிறதா என்பது சந்தேகமே.
3. தெய்வீக ராகம்(உல்லாச பறவைகள்)- ஜென்சி
இந்த பாடலை கேட்கின்ற போது ,வரிகளுக்கும் மெட்டுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாய் தோணும்.தெய்வீகராகம்- ராகம் தெய்வீகமா என்பதை அறிந்தவர்கள் சொல்லுங்கள்,ஆனால் என்னை பொறுத்தவரை, இது தெவிட்டாத பாடல் (கேட்டாலும் போதும் இளம் நெஞ்சங்கள் வாடும்).
குறைந்த எண்ணிக்கையில் பாடல் பாடி ரசிகர்களுக்கு குறை வைத்த ஜென்சி பாடிய பாடல்.
கிணற்றுக்குள் இருந்து எழும் ஹம்மிங் போன்ற ஓரு ஆரம்பமே சுண்டி இழுக்கும்,பாடல் காட்சியமைப்பும் என்னை கவர்ந்த ஒன்று.
4. சந்தன காற்றே(தனிக்காட்டு ராஜா)- எஸ்.பி.பி,ஜானகி
கேசட்டில் பாட்டு ரெக்கார்டிங் பண்ணும் போது echo, stereo வைக்கணுமான்னு கேட்பாங்க.ஆனா இந்த பாடலை(படத்தில் எல்லா பாடலும்) கேட்க அப்படி ஒரு அவசியம் இல்லை,அவ்வளவு இனிமையான ரெகார்டிங்.தன்னை மறந்து, நான் ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.பாடல் வரியெங்கும் ஸ்டீரியோ தோரணம் கட்டி.,சரணத்தின் முடிவில் தனனன..னன என echo-வில் எதிரொலிக்கும் அனுபவமே அலாதி.
5. பூவண்ணம் போல நெஞ்சம்(அழியாத கோலங்கள்) – ஜெயசந்திரன் ,சுசீலா
”பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்” என விண்ணப்பிக்கும் காதலின் மென்மை மெருகோட வரும் ஒரு அருமையான் பாடல்.வழியெங்கும் பாடல் வரிகளில் ஒரே கவிதை வாசம்.வங்காள இசையமைப்பாளர் சலீல் சவுத்திரியின் இசையில் வந்த ,இந்த பாடல் மெட்டு மலையாளம்,ஹிந்தி மற்றும் வங்காள மொழியிலும் பயன்படுத்த பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
6. ஆஷா அட்சிலொ பாலொ பாஷா அட்சிலொ (ஆனந்த ஆஷ்ரம்)- கிஷோர்குமார் (Asha Chilo Bhalobasha Chilo - Ananda Ashram )- வங்காள மொழியில் அமைந்தது.
எனக்கு பிடித்த வேற்று மொழி பாடல்களில் ஒன்று.மனைவியை இழந்த நாயகன் மனைவியை பிரிந்த தவிப்பில் பாடுவதாக அமைந்த பாடல்.மொழி கடந்து என்னை கவர்ந்த பாடகரான கிஷொர் குமாரின் குரல் ஒன்றே பொதும், பாடல் விளக்கம் கூட தேவையில்லை.
ஐந்து பாடல்கள் தான் அனுப்பவேண்டும் என்பது விதி,அது ”குறைந்த பட்சம் ஐந்து பாடல்” என்றிருக்காத என்ற நப்பாசையும் இருந்தது.எனவே ஆறாவது பாடலை வேற்று மொழி பாடலாக சேர்த்து கொள்ளுங்களேன்(ஒரு புது விதியாக சேர்த்துக்கலாமே).
கலைக்கோவனின் விதவிதமான தெரிவுகள் நிச்சயம் உங்களை வசீகரித்திருக்கும் என்று எண்ணுகின்றேன். அடுத்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்க இருக்கிறார் "பயமறியா பாவை" ராப் அவர்கள். உங்கள் படைப்புக்களும் இடம்பெற வேண்டுமானால் எழுதி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: kanapraba@gmail.com
மீண்டும் இன்னொரு பாடல் விருந்தில் சந்திப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
மிக அருமையான பாடல்தெரிவுகள்.
வாழ்த்துக்கள் கலைக்கோவன்.
1980களில் கலக்கிய பாடகர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.
மேகமே மேகமே,தெய்வீக ராகம் இரண்டும் எப்பொழுதும் எனது விருப்புக்குரியவை. யூட்யூபில் தேடி அடிக்கடி பார்ப்பவை.
மற்ற மூன்று ஜோடிப்பாடல்களையும் நள்ளிரவுகளில் மெல்லிசையில் கேட்கும்போது அருமையாக இருக்கும்.
'தெய்வீகராகம்' ரீமிக்ஸை த்ரிஷா பாடப்போவதாக பேட்டியில் கூறியிருக்கிறார்..பார்க்கலாம்.
பாராட்டுக்கள் நண்பரே !
சந்தனக்காற்றே எனக்கும் மிகவும் பிடிக்கும்
றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் தொடர் மீண்டும் ஆரம்பம்மானது ரொம்ப சந்தோசம் அண்ணா...
கலைக்கோவனின் பாடல் தெரிவுகளும், விளக்கங்களும் அருமை...
தலை
இசையாமைப்பாளர்களுக்கு இணையாக இசை ரசிகர்களை மகுடம் சூட்டி அழகு பார்க்கும் உங்கள் பாங்கே மிக அழகு..
புதுமை புகுத்தி.மனதில் நின்றீர்கள்
"சிறப்பு நேயர்: கலைக்கோவன்"
ரங்கராஜரிலேஷன்ஸ் ...(அதாவது அறிவில் மேம்பட்டவர்னு அர்த்தம்)
(congradulations)
நண்பரே உங்கள் ஆறு தேர்வும் அற்புதம்க..
நான் இரவு தூங்கும் முன் கேட்கும் இந்த முத்துக்கள்.
கேட்கும் போதே நீங்கள் தான் இவ்வுலகில் மிக சந்தோஷமான மனிதர் என்று
குதூகலிக்கும் மனது...
என்ன சரியா?
தலை...கலக்குங்கள்
பூவண்ணம் பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.
மீண்டும் சிறப்பு நேயர் தொகுப்பு வருகைக்கு ஒரு நன்றி தல ;))
அருமையான ஒரு வெள்ளிக்கிழமை கிடைச்சிருக்கு...எல்லாம் கலைக்கோவன் அவர்களால் :))
மென்மையான பாடல்கள்....கேட்டுக்கிட்டே இருக்கேன் ;))
நன்றி கலைக்கோவன் ;)
றேடியோஸ்பதி சிறப்பு நேயர் தொடர் மீண்டும் ஆரம்பமானதில் மகிழ்ச்சி.
மேகமே மேகமே,தெய்வீக ராகம் இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.
பாடல் தெரிவுகள் நன்றாக உள்ளது.
// கிணற்றுக்குள் இருந்து எழும் ஹம்மிங் போன்ற ஓரு ஆரம்பமே சுண்டி இழுக்கும்,பாடல் காட்சியமைப்பும் என்னை கவர்ந்த ஒன்று.//
எனக்கும் ரொம்ப புடிச்ச பாட்டுங்க அது
நல்ல ரசனை உங்களுக்கு :-))
சூப்பர் பாடல்கள். ஹி ஹி, நேயர் விருப்பத்தில் ஒரு முறைதான் வாய்ப்புன்னு வெச்சிருக்க விதிமுறையை தளர்த்தனும்னு எல்லாரும் ஒரு வேண்டுகோளை வெச்சா நல்லாருக்கும். அதுவும் ஆளுக்கு ஆறே ஆறு பாடல்கள்னு சொன்னவுடன், ஒரே சமயத்தில் பற்பல பாடல்கள் வந்து முட்டோ முட்டுன்னு முட்டுதே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ஓவரா கொயம்பிப் போய், சில அட்டுப் பாடல்கள் வேற நமக்கு புடிக்குமோன்னு டவுட்லாம் வருது.
ஆகா. மீண்டும் சிறப்பு நேயர் துவங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பலருடைய ரசனையும் ரசிக்கும் வாய்ப்புக் கிடைக்குமல்லவா. நன்றி பிரபா.
கலைக்கோவனுக்கு வாழ்த்துகள். நல்ல பாடல்களைத் தெரிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனை பாடல்களும் அருமை. அதிலும் பூவண்ணம் போல மின்னும்...தெய்வீக ராகம்... மேகமே மேகமே மூன்றும் அருமை.
மேகமே மேகமே நகல்தான். சங்கர் கணேஷிடம் அவ்வளவுதான் எதிர்பார்க்கலாம். ;-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே, இதுவரை சிறப்பு நேயர் பகுதிக்கு வராதவர்கள் இப்பகுதியில் பங்கு பெற நீங்களும் எழுதி அனுப்பலாம்.
வாழ்த்திய ...,
உள்ளங்களுக்கு நன்றி.
(மன்னிக்க...கொஞ்சம் லேட்டாயிடுச்சு)
Nice thalai...Like u..
Post a Comment