தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவலாசிரியர் வைரமுத்து இன்று தனது 56 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். தமிழ்த் திரையுலகில் கண்ணதாசனுக்குப் பின்னர் ஒரு புதிய பாங்கில் திரையிசைப்பாடல்களை அள்ளி வழங்கிய வைரமுத்து அவர்கள் எத்தனையோ சிறந்த பாடல்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கின்றார். பிரபலமான இசையமைப்பாளரில் இருந்து பெயர் தெரியாத இசையமைப்பாளர் வரை வைரமுத்துவின் வரிகள் தனித்துவமாக நிற்கும் சிறப்பு வாய்ந்தவை. இந்த வேளை வைரமுத்து அவர்களுக்கு அவர் "யுத்" திரைப்படத்தில் எழுதிய தன்னம்பிக்கை தரும் பாடலை பிறந்த நாள் பாடற் பரிசாக வழங்குகின்றேன்.
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
விளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணிப் பண்ணித்
திருந்திய பிறகு தான் நாகரீகம் பிறந்ததடி
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல
பாடம் படி பவழக்கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும்
குப்பைத் தொட்டியில்லை
உள்ளம் என்பது பூந்தொட்டியானால்
நாளை துன்பமில்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
ஆதியிலாண்டவன் இந்த பூமியை படைத்தானே
அவனாசையைப் போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவனாசையே இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மையென்றும் தீமையென்றும் நாலுபேர்கள் சொல்லுவது
நம்முடைய பிழையில்லையே
துன்பமென்ற சிப்பிக்குள் தான் இன்பமென்ற முத்து வரும்
துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டு கொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
00000000000000000000000000000000000000000000000
றேடியோஸ்பதியின் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிறப்பு நேயர் தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். இந்தத் தொடரில் வலைப்பதிவர் மட்டுமன்றி வலையுலக வாசகர்களும் பங்கெடுத்துக் கொள்ள முடியும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
1. உங்கள் விருப்பத் தேர்வில் ஐந்து பாடல்களைத் தெரிவு செய்யுங்கள், அவை தமிழ் மட்டுமன்றி பிறமொழிப் பாடல்களாகவும் இருக்கலாம். பாட்ல்களை நீங்கள் அனுப்ப வேண்டிய அவசியமில்லை.
2. நீங்கள் தேர்வு செய்த இந்த ஐந்து பாடல்கள் ஏன் உங்களைக் கவர்ந்தன என்பது குறித்த உங்கள் ரசனையை இவை ஒவ்வொன்றுக்கும் உங்கள் பாணியில் எழுதுங்கள். வெறுமனே பாடலையோ பாடல் வரிகளையோ தருவதை தவிர்க்க வேண்டும். உங்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களோடு தொடர்பு படுத்தியும் இவற்றை நீங்கள் விரும்பினால் தரலாம்.
3. உங்கள் தொகுப்பை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
4. அனுப்பிவைக்கப்பட்ட ஆக்கங்கள் வந்து சேர்ந்த ஒழுங்கில் இவை இடம்பெற இருக்கின்றன
தொடர்ந்து வரும் வாரங்களில் வர இருப்போரில் இதுவரை ஆக்கங்களை அனுப்பியோர்
1. கலைக்கோவன் - யூலை 17 பதிவு வர இருக்கின்றது
2. ராப் - யூலை 24 பதிவு வர இருக்கின்றது
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
//றேடியோஸ்பதியின் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிறப்பு நேயர் தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்//
வாவ்...சூப்பர்!! :-)
2 in 1 ஆ
1. கவியரசு நீடுழி வாழ வாழ்த்துக்கள்
2. சிறப்பு நேயர் ஆ........ரம்பம்
நன்றிகள்// choo sweet//
கள்ளிக்காட்டு இதிகாசத்தின் கதநாயகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
\\றேடியோஸ்பதியின் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிறப்பு நேயர் தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது \\
அடி தூள் தல...இதுல ஏற்கனவே வந்த பதிவர்களும் வரலமா!!?? ;))
நான் வைர முத்துவின் வைர வரிகளில் அடிக்கடி தொலைபவன். எனது அபிமானத்துக்குரிய கவிஞர் வைரமுத்து அவர்கள். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
\\றேடியோஸ்பதியின் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிறப்பு நேயர் தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது \\
நன்றிகள் அண்ணா... தொடருங்கள்...
கள்ளிக்காட்டு இதிகாசத்தின் கதநாயகரை vaazhtha vayadhillai adhanaal vanangikkaren :)))
Regarding neyar viruppam.. jooperu.. koodiya seekiram ennoda top 5 listoda varren :D
My fav song lyrics pottirukkeenga :)))) Thank u :D
//ஆண்டவனாசையே இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா//
Rightu :D
நல்ல நல்ல பாடல்களால் நம்மை மகிழ்வித்து வரும் வைரமுத்து அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பகிர்ந்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்காகவே நான் விரும்பிக் கேட்பது.
சிறப்பு நேயர் தொடரில் பங்கு பெற நானும் முயற்சிக்கிறேன்:)!
நண்பர் கான பிரபா நல்ல பதிவு
கள்ளிகாட்டு நாயகருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
மீண்டும் ராகதேவனுடன் ,இசைப்புயளுடன் சேர்ந்து சிகரங்களை தொடவேண்டும்.எங்களை
சங்கீத கடலில் முத்தெடுக்க வைக்க வேண்டும்
கலைவாணி அருளால் இவை நடக்க வேண்டும்
valthukkal viramuthu sir.ok anna u aricals very nice keep it up
சந்தனமுல்லை
நீங்களும் அனுப்புங்க
கலைக்கோவன்
உங்க விருப்பத்தை நிறைவு செய்வேன்
தல கோபி
முதல் சுற்றில் புது ஆளுங்களுக்குத் தான் முன்னுரிமை
வருகைக்கு நன்றி சந்ரு
உங்கள் பதிவையும் எதிர்பார்க்கின்றேன்.
G3
பாட்டை அனுப்புங்க, வரிகள் போட்டதுக்கு நன்றியா :)
வருகைக்கு மிக்க நன்றி ராமலஷ்மி, உங்கள் ஆக்கத்தையும் எதிர்பார்க்கின்றேன்.
வாங்க கார்த்திகேயன், இளையராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்த அந்தப் பொற்காலம் மறக்க முடியுமா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹம்ஷி
super thala!
என்னோட விருப்பப் பாடல்கள் லிஸ்ட் அனுப்பியாச்சு. வெயிட்டிங் பார் மை டர்ன்:):):)
Post a Comment