Pages

Thursday, July 2, 2009

பாடகர் இளையராஜா - பாகம் 1

றேடியோஸ்பதி தொடர்களில் இன்னொரு தொடராக, இசைஞானி இளையராஜாவின் குரலில் ஒலித்த தேர்ந்தெடுத்த முத்தான பாடல்களைத் தொகுப்பாகத் தரவிருக்கின்றேன். அந்த வகையில் முதல் தொகுப்பில் முழுமையான காதல் தொகுப்பாகத் தருகின்றேன். இவை தனித்தும் ஜோடி சேர்ந்தும் பாடிய பாடல்களாக அமைகின்றன.

இந்தத் தொடரை றேடியோஸ்பதியின் தூண்களில் ஒருவரான தல கோபி என்ற கோபிநாத்துக்கு நாளைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குச் சிறப்புப் பரிசாக அளிப்பதில் மகிழ்வடைகின்றேன்.

முதலில் வருவது பாலைவன ரோஜாக்கள் படத்தில் இளையராஜா தனித்துப் பாடும் "காதல் என்பது பொதுவுடமை" என்ற பாடல் இடம்பெறுகின்றது. ஜனகராஜுக்கு ராஜா கொடுத்த பாடல்களில் இதுவும் ஒன்று.தொடர்ந்து கீதாஞ்சலி திரைக்காக சித்ராவுடன் ஜோடி சேரும் பாடல் " துள்ளி எழுந்தது பாட்டு"
பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வந்த இந்தப் படத்தில் வந்த அனைத்துக் காதல் பாடல்களும் இளையராஜாவின் குரலில் வந்தன.அடுத்ததாக வருவது " படிச்ச புள்ள" படத்தில் வரும் சோகப்பாடல், இந்த மெட்டில் மனோ, சித்ரா பாடும் சந்தோஷ மெட்டும் இந்தப் படத்தில் இருக்கின்றது."பகல் நிலவு" திரைப்படத்தில் வரும் "பூமாலையே தோள் சேரவா" ராஜாவுக்கு பாட்டு ஜோடி ஜானகி தான் என்பதை நிரூபிக்கின்றது மீண்டும் ஒருமுறை.நிறைவாக வருவது தொண்ணூறுகளில் வெளிவந்த "பூந்தோட்டம்" திரையில் இருந்து "வெண்ணிலவுக்காசைப்பட்டேன்" பாடல் முத்தாய்ப்பாக நிறைக்கின்றது.

38 comments:

Anonymous said...

’வெண்ணிலவுக்காசைப்பட்டேன்’ பாடல் ஹரிஹரன் குரலில் ஒரு வெர்ஷனும் உண்டு :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

ஆயில்யன் said...

//
இந்தத் தொடரை றேடியோஸ்பதியின் தூண்களில் ஒருவரான தல கோபி என்ற கோபிநாத்துக்கு நாளைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குச் சிறப்புப் பரிசாக அளிப்பதில் மகிழ்வடைகின்றேன்.//


வாழ்த்துக்கள் :)))

தொடரில் பாடல் தேர்வுகள் சுவாரஸ்யமாக இருக்கும்!

சூப்பரூ!

சிவமணியன் said...

காதல் என்பது பொதுவுடமை பாடலை ரொம்ப நாளைக்கு அப்புறம் கேட்க முடிந்தது. பாடலுகுக்கு நன்றி...

சென்ஷி said...

இந்தத் தொடரை றேடியோஸ்பதியின் தூண்களில் ஒருவரான தல கோபி என்ற கோபிநாத்துக்கு நாளைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குச் சிறப்புப் பரிசாக அளிப்பதில் மகிழ்வடைகின்றேன்.//////


வாழ்த்துக்களில் நானும் இணைவதில் பெருமையடைகின்றேன்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபிநாத்

வந்தியத்தேவன் said...

ராஜாவின் குரலில் சில பாடல்கள் கேட்கும்போது அதற்க்கு இருக்கும் மதிப்பே தனி. பூமாலையே அவரின் சூப்பர் டூப்பர் ஹிட்களில் ஒன்று, இதே படத்தில் இன்னொரு பாடலும் இருக்கென நினைக்கிறேன்,.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபிநாத்

கலைக்கோவன் said...

உங்கள் தொடர் நல்ல கதம்பம்.
//இளையராஜா தனித்துப் பாடும் "காதல் என்பது பொதுவுடமை" என்ற பாடல் இடம்பெறுகின்றது.//
வரி இப்படி அப்படி இருந்தாலும்
இனிமையான பாடல்..,
//"பூமாலையே தோள் சேரவா" //
ஹம்மிங் ஒரு speciality

listening...
வீட்டிற்க்கு போய் கேட்கிற அளவு பொறுமை இல்ல பாஸ்.

கலைக்கோவன் said...

//இந்தத் தொடரை றேடியோஸ்பதியின் தூண்களில் ஒருவரான தல கோபி என்ற கோபிநாத்துக்கு நாளைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குச் சிறப்புப் பரிசாக அளிப்பதில் மகிழ்வடைகின்றேன்.//

வாழ்த்துக்கள் கோபி

geethappriyan said...

நண்பர் கானா பிரபா
நீங்கள் செய்து வரும் இந்த அற்புதமான பணியை பாராட்ட வார்த்தைகள் போதாது,
எந்த சுயலாபமும் இன்றி செயல்படும் உங்களின் இந்த பண்பு மிக உயர்ந்த ஒன்று.
ஒவ்வொரு பதிவிலும் கடும் உழைப்பும்,இமயத்தை எட்டும் கலாரசனையும் காண்கிறேன்.
நீங்கள் ராஜா சாரை கண்டிருக்கிறீர்களா?
இந்த முறை விடுமுறை யில் அவர் வீடு சென்றபோது அவர் ஊரில் இல்லை.
எனக்கு தூர நின்று பார்த்தாலும் போதும்.அந்த சாந்தம்,தெய்வீகம்.
அவரின் குரலை பற்றிய இந்த பதிவு மிக அவசியமான அற்புதமான பதிவும் கூட.
தொடர்ந்து எழுதுங்கள்.
எந்த உதவி தேவைபட்டளும் கேளுங்கள்.
கார்த்திகேயன்
அமீரகம்

geethappriyan said...

ஆத்தாடி பாவடை
காமாட்சி கருனாவிலாசினி
தோட்டம் கொண்ட ராசாவே
சிறுபொன்மணி அசையும்
பொன்னோவியம் கண்டேனம்மா
மணியே மணிக் குயிலே
சங்கத்தில் பாடாத கவிதை-ஆட்டோ ராஜா
அடி வாடி என் கப்ப கிழங்கே
ஜனனி ஜனனி
அறியாத வயசு-பருத்தி வீரன்
பறவையே எங்கு இருக்கிறாய்?
என அடுக்கலாம்
ஆனால் முடிக்க முடியாது
பாடல் எழுத்தில் வேண்டுவோர் என் பழைய பதிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
www.karthikeyanswamy.blogspot.com

கோபிநாத் said...

தல

அதிர்ச்சியில + மகிழ்ச்சியில ஒன்னுமே சொல்ல முடியல... !!!

உங்க அன்புக்கு "நன்றி" என்ற ஒரு வார்த்தையை தவிர வேற எதுவும் இப்போதைக்கு இல்ல தல

நெகிழ்ச்சியுடன்....!

கோபிநாத் said...

வாழ்த்திய தல சொக்கன்

அண்ணாச்சி ஆயில்யன்

மாப்பி சென்ஷி

தல வந்தியத்தேவன்

கலைக்கோவன்

அனைவருக்கும் என்னோட பணிவான நன்றிகள் ;))

கோபிநாத் said...

\\இந்தத் தொடரை றேடியோஸ்பதியின் தூண்களில் ஒருவரான தல கோபி என்ற கோபிநாத்துக்கு நாளைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குச் சிறப்புப் பரிசாக அளிப்பதில் மகிழ்வடைகின்றேன்.\\

தெய்வத்தோட முதல் குரல் தொகுப்பே எனக்கு பரிசா!!!!!!!!!!!!!!
ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கேன் போல! ;)

உங்கள் சிறப்புப் பரிசை பணிவன்புடன் ஏற்றுக்கொள்கிறேன் தல ;)

இரவு கேட்டுபுட்டு மீண்டும் வருகிறேன்..;))

thamizhparavai said...

முதலில் என் நண்பர் கோபிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ராஜாவின் இசை போல் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்...

கானா...தொகுப்பு அருமை.ராஜாவின் குரலில் ‘வெண்ணிலவுக்காசைப் பட்டேன்’ அழகு...(இப்பாடலை எழுதிய கவிஞர் வாசன் பற்றியும் பதிவிடுங்கள்.நல்ல கவிஞர்..நம்மிடம் இல்லை:-( )

‘படிச்சபுள்ள’ பாடல் என்னோட ஃபேவரைட்...
என்ன சொல்ல எல்லாமே ராஜா(வின் ராஜாங்கம்)தான்...

Anonymous said...

துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக்குயிலிசை கேட்டு

சூப்பர் பாட்டு;)

கிடுகுவேலி said...

"வாழ்த்துக்கள் கோபிநாத்"....

வணக்கம் கானாபிரபா,

இசையுலகின் நாயகனை நீங்கள் இவ்வாறு கௌரவிப்பது மிக்க மகிழ்வாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது. அத்தனை பாடல்களையும் அள்ளி வருவீர்கள் என்ற மனநிறைவோடு, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...!!!

G3 said...

//இந்தத் தொடரை றேடியோஸ்பதியின் தூண்களில் ஒருவரான தல கோபி என்ற கோபிநாத்துக்கு நாளைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குச் சிறப்புப் பரிசாக அளிப்பதில் மகிழ்வடைகின்றேன்.//

Kalakkiputteenga :))))

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபி :)))

கவிதா | Kavitha said...

நல்ல கலக்ஷன்ஸ்... உங்க பதிவுக்கு முதன் முறையாக பின்னூட்டம் இடுகிறேன் னு நினைக்கிறேன்.. அடிக்கடி. வந்து படிப்பதுண்டு..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்குள் Choco !! :)))

Raman Kutty said...

இளையராஜாவின் பாடலகள் என்னிடமும் ஒரு பெரிய கலக்சன் உள்ளது. ஆனால் அதன் ஒலித்தரம் நன்றாக இல்லாததால், கேட்கும் நேரம் மிகவும் குறைவே. மீண்டும், உங்கள் தளத்தில் பாடல்களின் ஒலித்தரம் மிகவும் நன்றாக உள்ளது. அதனாலேயே, அந்த கீதாஞ்சலி பாடலை உங்கள் தளத்தில் கேட்கும் பொழுது மனம் லயித்துப் போய்விடுகிறது. நன்றி!!

Raman Kutty said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபி.!!

Raman Kutty said...

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ - மறந்துட்டீங்களா???
மடைதிறந்து பாடும் நாதியலை நான்???

please add this too i wants to hear from your site.

shabi said...

புன்னகையில் மின்சாரம்(பரதன்),னேத்து ஒருத்தர பாத்து(புதுப் பாட்டு/சித்ராவுடம்)அம்மா பாடல்கள் அனைத்தும் (பொன்னப்போல ஆத்தா,பெத்தமனசு,அம்மான்னா சும்மா இல்லடா,தாயெனும் கோவிலை)எல்லாம் சூப்பர் ராஜ பாட்(டு)டைகள்

சந்தனமுல்லை said...

//
இந்தத் தொடரை றேடியோஸ்பதியின் தூண்களில் ஒருவரான தல கோபி என்ற கோபிநாத்துக்கு நாளைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குச் சிறப்புப் பரிசாக அளிப்பதில் மகிழ்வடைகின்றேன்.//

சூப்பர்! வாழ்த்துகள்! ஆயில்ஸ்கிட்டே பாடி பதிவிட மட்டும் சொல்லிடாதீங்க பெரிய பாண்டி! :-)

கைப்புள்ள said...

சூப்பர் தொகுப்பு :)

எனக்கு தெரிஞ்ச சில -

உன்னைப் போல ஆத்தா - என்னை விட்டுப் போகாதே
சொர்க்கமே என்றாலும் - ஊரு விட்டு ஊரு வந்து
என்ன பாட்டு பாட - சக்களத்தி

இந்நேரத்தில் கேப்டன் கோபிநாத்துக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Suddi said...

Dear Gaana Prabha,

The mesmerizing violin of Poomalaiye Thol serava from Pagal Nilavu.. and the side-by-side singing & hummuning of Mastero, nothing can be matched.. Ultimate tune, side-by-side singing..

I remember hearing this song in Vivitha bharathi in radio, some 20 years back during my childhood..

There is something about Raja, that he knows the exact mix of violin, flute, guitar, drums.. in right combinations which provided / provides superb results.

Raja raja than..

As members pointed out, some more I can tell from my side..
Song - Movie
1) Punnagaiyal Minsaram - Bharathan
2) Sorkame Enralum - Ooru vittu ooru vanthu
3) Adi yei vanchikodi- ponnumani
4) Aaloam paadi - avaram poo
5) katha kelu - MMKR
huge list.. but want to hear from ur site, with ur own descriptions.. and details..

sorkame enralum, my all time favorite, Raja wud have gone to extreme high pitch + world class violin..

I too want to convey my appreications for ur superb work, keep it up friend. I am sure, many guys reading ur blogs, will surely go to their childhoods, with vivith bharathi and oliyum oliyum.

Life was much better without the modern satellite televisions, we had limited to see and enjoy..

Now, except ayan and masilamani, we dont have choices.. Horrible I feel...

Just switch on to AIR, listen to those oldies.. enna sugamana life?.

I wont get it.. as life goes on, we grow by technology, money and career.. IPOD, MP4 players.. what not?.

But, nothing can match for me, those good old days.. when my mom used to shout at me everyday.. dont keep that transistor so close to ur ears, ur ears will spoil, tomorrow u need to go to school, sleep now.. Thanks to Raja.. :-)

Sudharsan (sudharsan.srinivasan@gmail.com)

R.Gopi said...

Muruganai Ninai Maname, Nalangal perugidum dhinam dhiname

This is another Ilayaraja song, if you listen, will take you to ARUPADAI VEEDU.

கானா பிரபா said...

சொக்கரே

ஹரிஹரனின் வெர்ஷனில் வந்த பாட்டுத் தானே திரையில் வந்தது.

ஆயில்ஸ், சிவமணியான், சென்ஷி,

வருகைக்கு மிக்க நன்றி

வந்தி

பகல் நிலவு படத்தில் மைனா மைனா மாமன் புடிச்ச மைனாவும் ராஜாவினது.

கலைக்கோவன்

மிக்க நன்றி

கானா பிரபா said...

வணக்கம் கார்த்திகேயன்

ராஜா சாரைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிட்டவில்லை, அந்தச் சந்தர்ப்பம் என் வாழ்நாள் பாக்கியங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி உங்கள் அன்புக்கு.

தல கோபி

:) நன்றி

வாங்க தமிழ்ப்பறவையாரே

வாசன் அற்ப ஆயுளில் மடிந்த அற்புதக் கலைஞன் அல்லவா, மிக்க நன்றி அவர் குறித்து ஒரு தொகுப்பு போடுறேன்

சின்ன அம்மணி, G3 , கவிதா

வாங்க வாங்க :)

கதியால், ராமன்

மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு

ஷாபி

நீங்கள் சொன்ன பாட்டுக்கள் அருமையானவை, நிச்சயம் அவற்றையும் தருவேன்.

சந்தனமுல்லை

ரிஸ்க் எடுக்குறது எங்களுக்கு ரஸ்கு சாப்பிடுறது மாதிரி, சின்ன்ப்பாண்டி பாடுவார் :0

கைப்புள்ள

நல்ல தேர்வினைச் சொன்னதுக்கும் நன்றி

கானா பிரபா said...

வணக்கம் சுதர்சன்

உங்கள் மனநிலையில் தான் நான் இருக்கிறேன் அந்த வானொலிக் காலம் தந்த நினைவுகள் சுகமானவை. சென்னை வானொலி, விவித்பாரதியின் தாக்கம் தான் எனக்கு பாடல்களில் அதீத ஈர்ப்பைத் தந்தது. கடந்த 9 வருஷங்களாக என் வானொலி நிகழ்ச்சியின் முகப்புப் பாடல் சொர்க்கமே என்றாலும் பாடல் தான். உங்களைப் போன்ற ஒத்த ரசனை கொண்ட நண்பர்களை வலைவழி சேர்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

வணக்கம் கோபி

அந்த முருகனை நினைமனமே பாடலோடு ராஜாவின் கீதாஞ்சலி தொகுப்பும் அருமை.

G.Ragavan said...

ஒன்னு சொல்றேன். நல்லாப் பாடத் தெரிஞ்சவங்கதான் இசையமைப்பாளராக இருக்க முடியும். அப்படி நல்ல இசையமைப்பாளரா இருக்குறவங்க குரல் அவ்ளோ இனிமையா இருக்காது. ஆனா அவங்க பாடுற அளவுக்குப் பாடுறது லேசு கிடையாது. ஜெயச்சந்திரன் ஒரு வாட்டி தொலைக்காட்சில சொன்னாரு. இளையராஜா சொல்லிக் குடுத்துப் பாடுனாலே போதும்... பாட்டுக்கு என்ன தேவையோ அதெல்லாம் தானா வந்துரும்.

நல்ல பாட்டுகளா எடுத்துப் போட்டிருக்கீங்க. இளையராஜாவோட எஸ்.ஜானகி பாடுன பாட்டுலயே எனக்கு ரொம்பப் பிடிச்சது மெட்டியொலி காற்றோடு எந்நெஞ்சைத் தாலாட்ட... அடேங்கப்பா....

அதே மாதிரி... தென்னமரத்துல தென்றலடிக்கு நந்தவனக்குயிலேன்னு ஒரு பாட்டு. இசையரசியும் இளையராஜாவும் கலக்கீருப்பாங்க. பாட்டுல அப்படியொரு வேகம். படபடன்னு பாடிக்கிட்டேயிருக்கனும். ஆனா உச்சரிப்பு அப்படியிருக்கும். பாவம் குறையாம ரெண்டு பேருமே அருமையா பாடியிருப்பாங்க.
http://www.thiraipaadal.com/albums/ALBIRR00320.html
இந்தச் சுட்டியில் அந்தப் பாட்டு இருக்கு.

JK said...

Hi Praba,

An awesome collection. The song "poomalaye" is one of his best compositions. Specially the saranam portion is beautiful with multi layer rendering.

Keep on posting such wonderful collections. Hope "Mettioly Kaatrodu" will come sooner rather than later :)

கானா பிரபா said...

வாங்க ராகவன்

தென்னமரத்தில தென்றலடிக்குது பாட்டும் அதே காலத்தில் வந்த கண்மலர்களின் அழைப்பிதழும் சொக்க வைக்கும் பாட்டுக்கள், நிச்சயம் வரும்

வாங்க ஜேகே

பூமாலையே பாட்டும், காதலா காதலா கண்களால் உன்னைத் தீண்ட வா பாட்டும் ஏனோ எனக்கு ஒரே அலைவரிசையில் வந்து போகும் பாட்டுக்கள், மெட்டி ஒலி காற்றோடு பாடலை விடுவோமா :)

M.Rishan Shareef said...

அருமையான பதிவு கானாபிரபா.. பகிர்வுக்கு மிகவும் நன்றி !

அன்பு நண்பர் கோபிநாத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் அனைத்துவளங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் !

M.Thevesh said...

Dear Friend Kaanapraba,
I do not know how to express in words my sincere thanks for your wonderful selection.I enjoyed all the songs in this selection.Hats off for your service to music lovers.Please accept my best blessings to you.

கானா பிரபா said...

ரிஷான்

மிக்க நன்றி

தேவேஷ்

மிக்க நன்றி உங்க அன்புக்கும் பாராட்டுக்கும்

வடுவூர் குமார் said...

"பூமாலையே தோள் சேரவா"- இப்பாடல் என் கல்யாண விசிடி யில் இருந்ததால் ஒரு தனி பிடிப்பு.

geethappriyan said...

நண்பர் கானா பிரபா ,கோபிநாத் உங்கள் மேல் ஒரு குறை சொல்வேன்.கேட்பீரோ?
அருமையான படைப்புக்களை சொக்கும் எழுத்தில்,துல்லியமான இசையில் தந்து எங்களை உங்கள் வலைபூவிற்கு அடிமை ஆக்கி விடீர்கள் என்றால் அது பொய்யில்லை.இதனால் எங்களால் வலையை விட்டு அகல முடியவில்லை.
என்ன ஒரு ரசனை..
குடத்தினில் உள்ளே உள்ள தீபங்களை குன்று மேல் வைத்து ஒளிர்விடசெய்யும் உங்கள் உழைப்பு அடடா?
மேலும் வளர வாழ்த்துகிறேன்.

M.Rishan Shareef said...

அன்பின் கானாபிரபா,

இளையராஜாவின் குரல் அருமையாக மனம் வருடிச் செல்லும். சில பாடல்களை அவரைத் தவிர்த்து யார் பாடியிருந்தாலும் எடுபட்டிருக்காது என எண்ணத் தோன்றுமளவிற்கு அருமையாகப் பாடியிருப்பார்.

எனக்கு 'பரதன்' படத்தில் வரும் ராஜாவின் 'அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே' பாடல் மிகப்பிடித்தமானது !

நல்லதொரு தொகுப்பு உங்களுடையது. தொடரட்டும் நண்பரே !

பாலராஜன்கீதா said...

நான் தேடும் செவ்வந்திப்பூவிது பாடலை எதிர்பார்க்கிறோம்.