Pages

Saturday, June 20, 2009

"பாக்ய தேவதா" என்னும் இளையராஜா

ஒரு Time Machine இப்போது கிடைத்தால் 80களுக்குப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டே அதில் ஏறியிருப்பேன். அப்போது தானே இளையராஜாவின் அந்தப் பொற்காலத்தில் வந்த பாடல்களையும், படங்களையும் சம நேரத்தில் புதிதாய் அனுபவிப்பது போல அனுபவம் பெறலாம். அப்படி ஒரு Time Machine அனுபவங்கள் தான் மலையாளத்தின் சத்யன் அந்திக்காடுவின் படங்கள்.

இளையராஜா இல்லாது தனித்து வெற்றி பெற்ற ஒரு இயக்குனராக இருந்த இவர் பின்னர் ராஜாவோடு கைகோர்த்து மனசினக்கரே, அச்சுவிண்டே அம்மா, ரசதந்திரம் என்று தொடர்ந்து இசை மழை பொழிய வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார். அந்த வரிசையில் தற்போது வந்திருக்கின்றது "பாக்ய தேவதா"

மதியம் மூன்று மணி காட்சிக்கெல்லாம் சேட்டன்களும், சேச்சிகளும் வருவார்களா? சீட் மேலே கால் போட்டு ஹாயாய் படம் பார்க்கலாம் என்ற நினைப்பில் போன எனக்கு வாய்த்தது இரண்டாவது வரிசை இருக்கை. அதாவது பல்கனியில் கொடுக்கும் காசில் காலரியில் :(. பாக்ய தேவதா ஆரம்பிக்கிறது, படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலை விட ராஜா எப்படியெல்லாம் பின்னணி இசையிலும் பின்னியிருக்கிறார், பாடல்கள் எப்படிக் காட்சிகளோடு பொருந்துகின்றன என்ற ஆவலே மேலோங்குகின்றது.

கதைச் சுருக்கம் இதுதான். குத்தநாட்டில் வசிக்கும் பென்னி என்ற கேபிள் டிவி கனெக்க்ஷன் கொடுப்பவருக்கு (ஜெயராம்) பணம் வந்தால் தானும் ஒரு மதிப்புள்ள மனுஷனாகத் திரியலாம், கூட இருக்கும் தங்கச்சிகளையும் ஒப்பேற்றிவிடலாம் என்று மனக்கணக்கு போட அவருக்கு கல்யாணம் என்ற திரி வைக்கிறார் அவரில் நேசம் கொண்ட நெடுமுடிவேணு. ஒரு மீன்பிடிப்படகு வாங்கலாம், அதன் மூலம் நிறைய உழைக்கலாம், அதுக்கு ஐந்து லட்சம் வரை தேவை, அதை நீ கட்டும் பெண்ணிடமிருந்து சீதனமாகவே வாங்கிவிடலாம் என்று திரி கிள்ள பென்னி (ஜெயராம்) மீன் பிடிப்படகுக்காரரிடம் அட்வான்சைக் கொடுத்துவிட்டு டெய்சி (கனிகா)வைக் கைப்பிடிக்கிறார், ஐந்து லட்சம் சீதனம் தரவேண்டும் என்ற ஒப்பந்தத்தில்.

ஆனால் மூன்றுமாதமாகியும் பெண்ணின் தந்தையின் வாக்குறுதியில் சொன்ன சீதனம் வராமல் போகவே கனிகாவை பெட்டியும் கையுமாக பிறந்தகத்துக்கு விரட்டி விடுகிறார் ஜெயராம். ஆனால் விதி வேரு ரூபத்தில் விளையாடுகிறது அவருக்கு. எந்தச் சீதனத்துக்காக அவர் போரிட்டாரோ அதே மாதிரி ஒரு சிக்கல் அவருக்கும் வந்து சேர்கின்றது. இடையில் முளைக்கும் வங்கி அதிகாரி (நரேன்) யார்? அவருக்கும் டெய்சிக்கும் கல்யாணம் நடக்கிறதா என்பது மீதிக்கதை.

நயமாகக் காதலித்து பழகும் பாத்திரம் இத்தனை வயசாகியும் ஜெயராமுக்கு அதைப் பார்க்கும் போது அல்வாவாக இனிக்கிறது, உறுத்தல் இல்லாமல். காதல், கோபம், விரக்தி என்று எல்லாப் பரிமாணங்களிலும் சேட்டன் பின்னுகிறார். கனிகாவின் பின்னால் அலையும் போது, பின்னர் துரத்தும் போது உறுத்தவில்லை அவர் நடிப்பு. இவரின் வயதொத்த தமிழ் ஹீரோக்கள் ஹீரோயினின் எடுபிடி கணக்காக அண்ணன், தகப்பன், தா(த்)தாவாக நடிக்கும் போது கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக நடித்து ரசிக்க வைக்கிறார் "ஜெய"ராம்.

கே.பி.சி.லலிதாவுக்கு ஜெயராமின் அம்மாவாக வந்து வழக்கம் போது மனோரமா கணக்காக மூக்குச் சிந்தும் பாத்திரம். நெடுமுடி வேணு டூரிஸ்ட் கைடாக வந்து, ஒரு கைடு செய்யும் தொழில் ரகசியங்களைக் காட்டிக் கலக்குகிறார். கனிகாவை ஏனோ மலையாள ஹீரோயினாகப் பார்க்க இடம் கொடுக்கவில்லை. அவர் சென்னை சில்க்ஸ் பொம்மை கணக்காய் இருக்கிறார். ஆனால் "அல்லிப்பூவே" பாடலில் மட்டும் நளினமாக இருக்கிறார்.

மம்முக்கோயா போன்ற துணை நடிகர்களையும் செதுக்கிச் சிறப்பானதொரு பாத்திரம் கொடுத்து மின்ன வைப்பதில் சத்யன் அந்திக்காடு கைதேர்ந்தவர், அதை இங்கேயும் செய்திருக்கின்றார். இன்னசென்ட் ஜெயராமின் சித்தப்புவாக வந்து நாடக நடிகராகவும் வழக்கம் போல நிறைவாக செய்திருக்கின்றார்.

"பாக்யதேவதா" படம் சமீப காலத்து சத்யன் அந்திக்காடுவின் படங்களைப் போலவே ஒன்றும் பிரமாதமான வித்தியாசமான கதை இல்லை. ஆனால் இதே போல் 80 களில் வெளிவந்த நூற்றுச் சொச்சம் படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாமல் படம் முழுதும் தொய்யவைக்காமல் ரசிக்க வைக்கும் இயக்கம் அனுபவம் மூலம் கை கூடியிருக்கின்றது.

நல்ல சுபாவமுள்ள பென்னி (ஜெயராம்) பணத்தாசை மூலம் மூர்க்கம் கொண்டவனாக மாறுவது போலவும், டெய்சி (கனிகா ) திடீரெனத் துரத்துவதும் பிறகு ஒட்டிக் கொல்வதும் போலவும் வரும் காட்சிகளில் ஆழமில்லை. படத்த்தின் இறுதிக் காட்சியில் கூட ஜெயராம் திருந்துவது போல வரும் காட்சியில் அழுத்தமில்லை. ஆனால் அந்தக் கடைசிக் காட்சி இருக்கிறதே ஆஆஆஆகாஆஆஆ அனுபவிக்க வேண்டிய ஒரு ஹைக்கூ கவிதை அது. (சொல்ல மாட்டேன் பார்த்துட்டு சொல்லுங்கோ)

பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல சத்யன் அந்திக்காடு - இளையராஜா கூட்டணி மலையாளத்தின் பாரதிராஜா - இளையராஜா கூட்டணி போலச் சிறப்பாகவே இருக்கிறது, அது குறித்து இன்னொரு தனிப்பதிவு விலாவாரியாகப் போடவேண்டும். பாக்யதேவதாவிலும் அதை மெய்ப்பித்திருக்கின்றது. படத்தின் இடைவேளை வரை இரண்டு பாடல்களோடு மகா திருப்திப்பட வைத்து பின்னணி இசையில் அடக்கி வாசித்த ராஜா, இடைவேளைக்குப் பின்னர் ராஜசபை விருந்தே வைத்திருக்கிறார்.

பிரிவு, பரிவு, மகிழ்ச்சி, ஆர்ப்பரிப்பு, நகைச்சுவை எல்லாவற்றுக்கும் விதவிதமான பின்னணி இசைப் பரிமாறல் போட்டு அம்பானி வீட்டுக் கல்யாணம் போல அமர்க்களமாக்கியிருக்கிறார் நம்ம ராஜா.

சமீபத்தில் இசையமைப்பாளர் தேவி சிறீ பிரசாத்தின் பேட்டியில் "ஏன் நீங்கள் தெலுங்கில் போட்ட மெட்டை தமிழில் உபயோகிக்கின்றீர்கள்?" என்று கேட்ட போது "அடுத்தவன் சுடுறதுக்கு முன்னல நாமே நம்ம மெட்டை சுட்டுப் போட்ட சேப்டி இல்லையா" என்று அவர் சொன்னதை ராஜாவுக்கு வழிமொழிகிறேன். 80 களில் அவர் போட்ட மெட்டில் சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்து மீண்டும் எங்களுக்குத் தந்தாலே மகிழ்வோம், அந்தத் திருப்தி தான் "பாக்யதேவதா"விலும் கிடைக்கின்றது.

நான் கடவுள் போன்ற படங்களில் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய பின்னணி இசை போலல்லாது இந்தப் படத்தில் தன் உழைப்பைக் கொட்டியதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கின்றது. படம் டிவிடியில் வரட்டும் ஒரு பின்னணி இசைத்தொகுப்பையும் போட்டு விடுகின்றேன்.

கனிகா மீது மையல் கொண்டு ஜெயராம் பாடும் "ஸ்வப்னங்கள் கண்ணெழுதிய" (பாடியவர்கள் சித்ரா, ராகுல் நம்பியார்) பாடலைக் வெறும் கேட்கும் போது இருந்த சுகம் பார்க்கும் போது இரட்டிப்பாகின்றது காட்சியோடு அளவாகப் பொருந்தி.
இளம் பாடகர் கார்த்திக் பின்னணி பாடியிருக்கும் திரை தள்ளிப் போனாலும் என்ற பாடலை இன்னசென்ட் பாடுவது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது ரொம்பவே ரசிக்க வைக்கின்றது. சோகக் காட்சிப் பின்னணியில் வித்தியாசமான பாடலாகக் கலக்கின்றது இது.

நிறைவாக கனிகா, நரேன் தொடர்பில் ஜெயராமுக்கு வரும் சந்தேகங்களுக்கு ராஜாவின் "அல்லிப் பூவே மல்லிப்பூவே" (விஜய் ஜேசுதாஸ், ஸ்வேதா குரல்களில்) துணையாக வாய்க்கின்றது.

youtube: sherinmail123

ஆக மொத்தத்தில் "பாக்ய தேவதா" வில் இளையராஜா தான் ஹீரோ.

40 comments:

MyFriend said...

me the first....

MyFriend said...

நல்லா இருக்கு. நானும் படம் பார்க்கணும். :-)

ஆயில்யன் said...

மீ த செகண்ட்டு??!!!

ஆயில்யன் said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

நல்லா இருக்கு. நானும் படம் பார்க்கணும். :-)///


நானும்!

நானும்!!

ஆயில்யன் said...

//ஒரு Time Machine இப்போது கிடைத்தால் 80களுக்குப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டே அதில் ஏறியிருப்பேன்.//


ம்ம் டைம் மிஷின் எல்லாம் எங்களை மாதிரி சின்ன்ன்ன பசங்களுக்குத்தான் பாஸ் நீங்க மோட்டுவளையை பார்த்துக்கிட்டு உக்காந்தாலே உங்க காலத்துக்கு சர்ர்ன்னு போயிடலாமே!?

ஆயில்யன் said...

//மதியம் மூன்று மணி காட்சிக்கெல்லாம் சேட்டன்களும், சேச்சிகளும் வருவார்களா? //


இங்க கேள்வி கேட்டா???

போய் பார்த்தாதானே தெரியும்!!!

வாசுகி said...

அண்ணே நல்லா இருக்கு.
இப்பவெல்லாம் தமிழை விட மலையாளப்படத்தில் தான் இசைஞானியை நன்றாக‌
பயன்படுத்துகிறார்கள் போல.

இசைஞானி இசையமைத்த ஏதாவது தமிழ் படம் வர இருக்கிறதா?

தமிழன்-கறுப்பி... said...

அண்ணன் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் ஒரு மலையாள நண்பர் இந்த படம் வாங்கி வரும்படி சொன்னார் அனேகமாய் வருகிற வியாழக்கிழமை படம் கைக்கு வந்து விடும் என்று நினைக்கிறேன் பார்க்கலாம் பகிர்வுக்கு நன்றி..

ஆமா கனிஹா இப்ப மலையாளத்துல பிஸியாமே-ஆயில்யன்தான் கேட்கச்சொன்னாரு )

:))

Thamiz Priyan said...

கானா அண்ணே! சொல்லிட்டீங்க.. பார்த்துடலாம்.

கோபிநாத் said...

ஆகா தல

பார்த்திட்டிங்களா!!...கொடுத்துவச்சவாருநீங்க ;)))

அனுபவிச்சிட்டிங்க ;))

\\ஒப்பிட்டுப் பார்க்க முடியாமல் படம் முழுதும் தொய்யவைக்காமல் ரசிக்க வைக்கும் இயக்கம் அனுபவம் மூலம் கை கூடியிருக்கின்றது.\\

இதுதான் அவரோட ஸ்பெசல் தல..எனக்கு அவருக்கிட்ட பிடிச்ச விஷயமே மூணு மணிநேரம் நம்மளை உட்காரவச்சுடுவாரு. நான் போன வாரம் அச்சுவிண்டே அம்மா டிவிடி வாங்கிளோன் ரூம்ல இப்ப அதான். ;)

பாடல்கள் டியூடுயில தந்தமைக்கு நன்றி தல ;)

விரைவில் டிவி வந்தவுடன் பின்ணனியை போடுங்கள் ;)

கோபிநாத் said...

\\ஆக மொத்தத்தில் "பாக்ய தேவதா" வில் இளையராஜா தான் ஹீரோ\\

ஆயிரம் ஆயிரம் பல்லாயிரம் முறை ஒரு ரீப்பிட்டே ;))))

ஆயில்யன் said...

/ஆமா கனிஹா இப்ப மலையாளத்துல பிஸியாமே-ஆயில்யன்தான் கேட்கச்சொன்னாரு )

:))//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


ராசா முதல்ல போட்டோவை ஏத்திப்புட்டுத்தாம்ல மறுவேலை!

Arun Kumar said...

Hi good review..thanks for the information.
have you seen the movie Aa thinagalu a kannada movie..music by rajaraja..
raja's back ground score is excellent in that movie.

வந்தியத்தேவன் said...

இசைஞானியை தமிழர்கள் மறந்துவிட்டார்கள். வாசுகி இசைஞானியின் புதிய தமிழ்ப்படம் வான்மீகி விகடன் வெளியீடு. மற்றும் நந்தலாலா இன்னொரு படம் அந்தப்படத்தில் ஞானி பாடி நடித்தும் இருக்கின்றார்.

பிரபா இங்கே மலையாளப்படம் என்றால் ஷகீலா சேச்சியின் படம் தான் டிவிடியில் இருக்கு. நல்ல படம் தேடினாலும் கிடைக்காது.

thamizhparavai said...

தல பின்னிட்டீங்க....நான் இப்போத்தான் பதிவிறக்கம் பண்ணிட்டேன்... இனிமே பார்க்கணும்., இன்னிக்குத்தான் யூ ட்யூப்ல பாடல்கள் கேட்டேன். சுக ராகம்... காட்சியோடு பார்க்கையில் இன்னும் அழகு..’அல்லிப்பூவு’ பாடல் அள்ளிக்கொண்டது நெஞ்சை...

thamizhparavai said...

சத்யன் அந்திக்காடு-ராஜா கூட்டணியில் இன்னும் ‘அச்சுவிண்டே அம்மா ‘ பார்க்கவில்லை. ‘மனசினிக்கரே’,ரசதந்திரம்’,இன்னாதே சிந்தாவிஷயம்,வினோத யாத்ரா பார்த்துவிட்டேன்... பாடல்கள் பின்னியிருக்கிறார்.
‘ரசதந்திரம்’ படத்தில் ‘தாவாரம்’,’பூ குங்குமப் பூ’,’ஆற்றின் கரைஓரத்தில்’ பாடல்கள் இசையும், படமாக்கமும் சூப்பர்.
இதெல்லாம் நான் சொன்னா நல்லாருக்காது கானா அங்கிள்...
இவங்களோட கூட்டணியைப் பத்தி தனியா எழுதுங்க.. அதெல்லாம் உங்க எழுத்தில படிக்கிற சுகமே சுகம்.அம்மா மடியில கதை கேட்கிறமாதிரி...

thamizhparavai said...

இப்போத்தான் நீங்க கொடுத்திருந்த லின்க் எல்லாம் பார்த்தேன்... படிச்சிட்டு வர்றேன்...

கிடுகுவேலி said...

வணக்கம், படம் பார்த்த திருப்தி பதிவிலேயே உள்ளது. பாடல்களையும் இணைத்து விட்டீர்கள்.அருமை. உங்கள் இசைக்கான தேடல் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

thamizhparavai said...

தலைப்பை இப்போதான் நல்லாக் கவனிச்சேன். தலைப்பிலேயே அசத்திட்டிங்க...

G.Ragavan said...

ஒரு சாதாரண இசை ரசிகனா இருக்கின்ற காரணம் மட்டுமே நான் இளையராஜாவின் இசை ரசிகன் என்று சொல்லிக்கொள்ளப் போதும்.

என்ன... இன்னும் சினிமாவுலயே இருக்குறது வருத்தமா இருக்கு. திரையிசையில் பிரபலமாக இருந்த மெல்லிசை மன்னரும் சரி... இசைஞானியும் சரி... இரண்டு ஆன்மீக இசைக்கோர்வைகளை நமக்குக் கொடுத்தார்கள். ஒன்று கிருஷ்ணகானம். மற்றொன்று திருவாசகம். இரண்டும் தமிழ்த்தேன். கவியரசர் கலக்கியது கிருஷ்ணகானம் என்றால்.... மாணிக்கவாசகர்... அதாவது ஐந்தாம் நூற்றாண்டுத் தமிழ் மேல்நாட்டு இசையோடு இணைந்தது மற்றொன்றில்.

ஆனால் ஏனோ தெரியவில்லை.. இருவருமே... திரையை விட்டு வெளியே வரவில்லை என்றே தோன்றுகிறது. மெல்லிசைமன்னரின் வயதும் உடல்நிலையும் புரிகிறது. இளையராஜா முனைப்பெடுக்க வேண்டும் என்று இந்த ரசிகன் கேட்டுக் கொள்கிறேன்.

மூன்று பாடல்களையும் கேட்டேன். நல்ல இசையமைப்பு. பாடல்களைக் கொடுத்தமைக்கு நன்றி பல.

கானா பிரபா said...

வாங்க மைபிரண்ட்

படத்தை தேடிப்பிடிச்சு நல்ல பிரிண்டில் பாருங்க, அப்பதான் ரசிக்க முடியும்.

யோவ் சின்னப்பாண்டி

மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதியிருக்கேன், கும்மி அடிச்சிட்டீரே :), உம்மை விட நான் யுத்துப்பா

வணக்கம் வாசுகி

உண்மைதான் மலையாளத்தில் தான் ராஜாவின் இசையை ரொம்பவே ரசிக்க முடிகிறது, வந்தியத் தேவன் குறிப்பிட்ட பட்டியல் தான் தமிழில் வரவிருக்கும் படங்கள்.

கறுப்பி

உம்மட்ட மலையாளக்காரர் டிவிடி வாங்கித் தர சொன்னாரா :0, படத்தைப் பாருங்கோ, பார்த்துட்டு சொல்லுங்கோ

தமிழ்பிரியன்

நீங்க எங்கே பாப்பீங்கன்னு தெரியுமே :)

தென்றல் said...

பார்க்கணும்! DVDயில (பாதி) மலையாள படங்களுக்கு subtitle இருக்க மாட்டேங்குது... இப்பதான் 'Veruthe Oru Bharya' வேயே எடுத்துவந்துருக்கேன்..!!

பகிர்வு, பாட்டு (ஒலி&ஒளி) அனைத்துக்கும் நன்றி!

/80 களில் அவர் போட்ட மெட்டில் சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்து மீண்டும் எங்களுக்குத் தந்தாலே மகிழ்வோம், /
உண்மைதான்...ஆனா அவரோட 'சீனி கம்' எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம். ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டாரோ என்ற ஆதங்கமும்கூட....

தென்றல் said...

அப்புறம்..

கேக்க மறந்தது...

இன்னசன்ட் பத்தி ஒரு ஒண்ணும் காணோமே..?

சொல்ல மறந்தது..

(பாடல்களில்)கனிகா ரொம்பவே அழகு!!

கானா பிரபா said...

தல கோபி

ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :)

வாங்க அருண்குமார்

இங்கே புதிய கன்னடப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை, நீங்கள் சொன்ன படத்தை தேடுகிறேன், மிக்க நன்றி

வந்தி

வெள்ளவத்தையில் ஒரு சில கடைகளில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்,பெயர் மறந்து விட்டது.

கானா பிரபா said...

தமிழ்ப்பறவை said...

தல பின்னிட்டீங்க....நான் இப்போத்தான் பதிவிறக்கம் பண்ணிட்டேன்.//

வாங்க பாஸ்,

சைக்கிள் கேப்பிள் அங்கிள் போட்டுட்டீங்களே, உங்களைப் போன்ற ஒரே ரசனை கொண்ட உள்ளங்களோடு இவற்றையெல்லாம் பரிமாறுவது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? நிச்சயம் அச்சுவிண்டே அம்மா வரும்.

கதியால் said...

வணக்கம், படம் பார்த்த திருப்தி பதிவிலேயே உள்ளது. பாடல்களையும் இணைத்து விட்டீர்கள்.//

மிக்க நன்றி நண்பா, வருகைக்கும் தொடர்ந்த ஆதரவுக்கும்

//G.Ragavan said...

ஒரு சாதாரண இசை ரசிகனா இருக்கின்ற காரணம் மட்டுமே நான் இளையராஜாவின் இசை ரசிகன் என்று சொல்லிக்கொள்ளப் போதும்.//

வாங்க ராகவன்

நீங்க சொல்றது போல ராஜா திரையிசையைக் கடந்து இன்னும் நிறையச் செய்யணும், அதில் தான் அவரின் இன்னும் வெளிப்படாத பரிமாணம் வரும்.

//தென்றல் said...

அப்புறம்..

கேக்க மறந்தது...

இன்னசன்ட் பத்தி ஒரு ஒண்ணும் காணோமே..?//

வாங்க தென்றல்

இன்னசெண்ட் பத்தி சொல்லியிருக்கேனே, அவரை எல்லாம் சொல்லாம விடுவோமா :)'Veruthe Oru Bharya' இன்னும் நான் பார்க்கல, அரபிக்கதா தேடிப்பாருங்கள் நல்ல படம்னு சொன்னாங்க.

Suddi said...

Dear Sir,

Thanks for the post.

Raja Raja Than.. The soft melodious music of IR is still unmatched and unbeatable.

Allipoove song is damn good, but dont you think it resembles Senthoora Poove of Pathinaru vayathinilae?. Not the music, only the tune part of the song..

Sudharsan

கானா பிரபா said...

வணக்கம் நண்பர் சுதர்சன்

நீங்கள் சொன்னது போல செந்தூரப்பூவே வாடை அல்லிப்பூவேயில் வருகின்றது, அதனால் தான் சொன்னேன் இப்படியான இசை விருந்தை வைத்தாலே போதும் ராஜா ரசிகர்கள் எங்களுக்கு அது பெரு விருந்து.

kavi said...

அருமையான பதிவுகள் அனைத்தையும் உடனே படிக்க ஆசை, ஆனால் பொறுமையாகப் படி என்கிறது மனசு, நன்றி

கானா பிரபா said...

மிக்க நன்றி கவி

Sinthu said...

"தங்கச்சிகளையும்"
அனயத்தியும் என்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், பிரபா அண்ணா

கானா பிரபா said...

வாங்கோ சிந்து

அனியத்தி என்றும் போடலாம் தான் :)

Raman Kutty said...

பாடல்கள் நல்ல தரமான ரெக்கார்டிங்.. யப்பா.. எனது சாதாரண டெஸ்க்டாப் ஸ்பீக்கரில் கேட்கவும் நன்றாக உள்ளது...சுமார் 2 மணிநேரமாக இதே பாடல்களை திரும்ப திரும்ப கேட்டுகொண்டிருக்கிறேன். மனதிற்கு இதமாக உள்ளது.. நன்றி

Raman Kutty said...

அட போங்க சார், ரொம்ப நாளைக்கப்புரம், உங்க வானொலி பதிவுகளை( ரெக்கார்டிங்ஸ்) கேட்டு.. நான் எனது சிறுவயதில் கேட்ட கோவை வானொலியில் வரும் சிறுவர் நிகழ்ச்சிகள்( அந்த வயதில்), நாடகங்கள் நினைவுக்கு வந்து அங்கேயே போய்விட்டேன். வானொலியிலும், புத்தகங்களிலும் வார்த்தைகளின், இசையின் சேர்க்கை( காம்பினேஷன் ) சரியாக இருக்கும் பட்சத்தில் நாம் நமக்கான் ஒரு காட்சியை உருவாக்கி கொள்ளும் வசதி உள்ளது. திரை காட்சிகளில் இந்த அனுபவம் கிடைப்பதில்லை.. இன்னும் என்ன்னவோ தோன்றுகிறது.. தட்டச்சு செய்ய முடியவில்லை.. நன்றி (அவ்ளோதான்)

Raman Kutty said...

முடிந்தால், இதுபோல வானொலி பதிவுகளில் நாடகங்கள், செய்திகோவை, பிரபல நிகழ்ச்சிகள் போன்றவற்றை வெளியிடுங்கள்..

கானா பிரபா said...

வணக்கம் ராமன்

உங்களைப் போன்ற இசைரசிகர்கள்/வானொலிப்பிரியர்கள் இந்தத் தளத்திற்கு வருவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன், நீங்கள் கேட்ட அம்சங்களை நிச்சயம் தருவேன்.

Anonymous said...

"நான் கடவுள் போன்ற படங்களில் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய பின்னணி இசை போலல்லாது" - Good joke! Surprising that you were disappointed with 'Naan Kadavul'!

கானா பிரபா said...

Anonymous Anonymous said...

"நான் கடவுள் போன்ற படங்களில் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய பின்னணி இசை போலல்லாது" - Good joke! Surprising that you were disappointed with 'Naan Kadavul'!//

வாங்க :)

தமிழில் ராஜா பாராமுகமாகத் தான் இருக்காரே :(

sss saravanan said...

nanba nankadavul patreya thangal varthagalai nichayam thangal therumba pera vendum.raja endrume raja than,avar oru vemarsanangalai kadantha vedhi vilakku.

Anonymous said...

கானா பிரபா,

தமிழில் ராஜா பாராமுகமாகத் தான் இருக்கிறார் - யாரும் பாரா முகமாக! பின்னே, வேறெப்படி 'நான் கடவுள்' இசையை நீங்கள் ரசிக்கவில்லை என்பதற்கு பதிலளிப்பது?

பாக்ய தேவதாவில் இரு இடங்களில் வேறு யாருடைய இசையோ எடுத்து ஒட்டப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை (ஜெயராமும் நெடுமுடி வேணுவும் படகுச் சவாரி செய்யும் காட்சியும் நெடுமுடி வேணு படகிலிருந்தபடியே ஜெயராமின் தங்கையும் இன்னொரு வாலிபனும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் காட்சியும்). இது ராஜாவின் பின்னணி இசை சேர்ப்புக்குப் பின்னர் தான் நடந்திருக்க வேண்டும்!

இதையெல்லாம் யோசிக்காமல், முழுக்க முழுக்க அவருடைய கைவண்ணமாய் படத்துடன் நுணுக்கமாய் முதலில் இருந்து கடைசி வரை கூடவே வரக்கூடிய இசையைக் கொண்ட 'நான் கடவுள்' இல் நீங்கள் குறை கண்டுபிடிக்கிறீர்கள் என்றால் நான் என் தலையை சுவற்றில் தான் முட்டிக் கொள்ள வேண்டும்! ஹ்ம்ம்ம்ம்...

கானா பிரபா said...

வணக்கம் சரவணன் மற்றும் அநாமோதய நண்பருக்கு

உங்களைப் போன்று தான் நானும் ராஜாவின் தீவிர ரசிகன் என்பதை இந்தப் பதிவுக்கு முன்னும் பின்னும் போட்ட பதிவுகள் சான்றாக இருக்கும். நான் கடவுள் படத்தில் ராஜாவால் இன்னும் மிகச் சிறப்பாகப் பின்னணி இசை கொடுத்துக் கலக்கியிருக்க முடியும் என்பதற்கு அவரின் ஏராளம் பழைய திரைப்படங்களே உதாரணமாக இருக்கின்றன. அந்த ஆதங்கத்தில் தான் அவரின் தீவிர ரசிகனாக அந்தக் கருத்தைத் தெரிவித்தேன்.

பாக்யதேவதாவில் ராஜாவுக்குத் தெரியாமல் ஒட்டு வேலை செய்திருக்கலாம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

இன்னொரு விஷயம் இந்த இரண்டு படங்களையுமே திரையரங்கில் நான் பார்த்ததால் அவற்றின் ஒலித்துல்லியம் கூட கவனிக்கத்தக்க அளவில் இருந்ததால் தான் என் விமர்சனமும் அமைந்திருந்தது.